🆎உடலுக்கு குளிர்ச்சி தரும் மருதாணியின் மருத்துவப் பயன்கள் !!
1️⃣பெண்கள் கைகளின் அழகுக்காக வைத்துக்கொள்ளும் மருதாணியில் பல மருத்துவக் குணங்களும் நிறைந்துள்ளது. அதைப் பற்றி இங்கு காண்போம்.
👉 உள்ளங்காலில் ஆணி ஏற்பட்டிருந்தால் மருதாணி இலையுடன் சிறிது வசம்பு, மஞ்சள், கற்பூரம் சேர்த்து அரைத்து, ஆணி உள்ள இடத்தில் பூசினால் கட்டி ஒரு வாரத்தில் குணமாகும்.
👉 மருதாணி இலையை அரைத்து கைகளுக்கு வைத்தால் உடல் வெப்பம் தணியும்.
👉 கைகளுக்கு அடிக்கடி மருதாணி வைத்து வந்தால் மனநோய் ஏற்படுவது குணமாகும்.
👉 மருதாணி இலை மிகச்சிறந்த கிருமி நாசினி. இது கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை அழிக்க வல்லது. நகசுத்தி வராமல் தடுக்கும்.
👉 மருதாணி இலை பித்தத்தை அதிகமாக்கும். இலைகள் கை, கால்களில் தோன்றும் சேற்றுப் புண்கள், அழுக்குப்படை, கட்டி, பித்த வெடிப்புகள் ஆகியவற்றை குணமாக்கும்.
👉 மருதாணி இலைகளை அரைத்து பற்றுப் போட்டால் தலைவலி குணமாகும்.
👉 தோல் பற்றிய அரிப்பு, படை ஆகிய நோய்களுக்கு மருதாணி மிகவும் சிறந்தது.
👉 இதன் இலையை அரைத்து அம்மைப் புண்களுக்குப் பூசினால் 3-5 நாளில் குணமாகும். கட்டிகளுக்கும் அரைத்துப் பூசலாம்.
👉 இது இளநரையை அகற்றுவதற்கு பயன்படுகிறது. இரும்பு வாணலியில் தேங்காய் எண்ணெய் 500 மி.லி. விட்டு இதன் இலை 100 கிராம் போட்டு பொரித்து எடுக்கவும். இலையின் சாறு எண்ணெயில் சேர்த்து சிவப்பாக மாறிவிடும். இந்த தைலத்தை நாள்தோறும் தலைக்குத் தேய்க்க முடி வளரும், நரை மறையும்.
👉 மருதாணிப் பூவினை ஒரு துணியில் சுற்றி, தலைமாட்டில் வைத்துப் படுத்தால் தூக்கம் வரும். பூவின் மணம் தூக்கத்தை வரவழைக்கும்.
👉 மருதாணி இலையை நன்கு நீர்விட்டு அரைத்து அதனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து கை, கால்களிலும், உள்ளங்கால்களிலும் தேய்த்து வந்தால் கை, கால் எரிச்சல் உடனே நீங்கும்.
👉 மருதாணியை அரைத்து நகத்தின் மீது பூசினால் நகம் பாதுகாக்கப்படும்.
👉 மருதாணி நகக்கண்களில் ஏற்படும் நகச்சுற்று, புண், சொத்தை இவற்றைப் போக்கும் குணமுடையது. மேலும் நகங்களைப் பாதுகாக்கும் அரணாக விளங்குகிறது.
👉 நகக்கண்ணில் புண் அல்லது நகச்சுற்று ஏற்பட்டவர்கள் மருதாணி இலையை அரைத்து நகத்தின் மீது பற்று போட்டால் நகக்கண்ணில் ஏற்பட்ட புண்கள் குணமாகும்.
🆎உடலுக்கு குளிர்ச்சி தரும் பனங்கற்கண்டு!!
2️⃣மருத்துவக்குணம் நிறைந்த பொருட்களில் ஒன்றான பனங்கற்கண்டு, நிறைய சர்க்கரை படிகக்கற்கள் கலந்த, சுத்திகரிக்கப்படாத சர்க்கரை ஆகும்.
👉 கரும்பு மற்றும் பனை மரத்திலிருந்து தயாரிக்கப்படும் இந்த பனங்கற்கண்டில் அதிகளவு வைட்டமின்கள், தாது உப்புகள் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளது.
🆎பனங்கற்கண்டில் உள்ள அற்புதமான மருத்துவக் குணங்கள் :
👉 தினமும் பனங்கற்கண்டை வாயில் போட்டு அந்த உமிழ் நீரை முழுங்க வேண்டும். இதனால் சளி, இருமல் மற்றும் தொண்டைக் கரகரப்பு போன்ற பிரச்சனைகளுக்கு உடனடி பலன் கிடைக்கும்.
👉 சிறிதளவு சீரகம் மற்றும் பனங்கற்கண்டை வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால், வாய் துர்நாற்றம் நீங்கும்.
👉 1 டேபிள்ஸ்பூன் பசு மாட்டு நெய்யுடன், சிறிதளவு பனங்கற்கண்டு மற்றும் நிலக்கடலை சேர்த்து சாப்பிட்டு வந்தால், உடல் சோர்வுகள் நீங்கி, சுறுசுறுப்பு அதிகரிக்கும்.
👉 4 பாதாம் பருப்பு, 1 டேபிள்ஸ்பூன் பனங்கற்கண்டு, 1 டேபிள் ஸ்பூன் மிளகுத் தூள் ஆகியவற்றை பொடி செய்து, அதை பாலுடன் கலந்து குடித்து வந்தால், தீராத சளி பிரச்சனைகள் உடனே குணமாகும்.
👉 தொண்டை வலி இருந்தால் 1 டேபிள்ஸ்பூன் மிளகுத்தூள், 1 டேபிள் ஸ்பூன் நெய் மற்றும் 1 டேபிள்ஸ்பூன் பனங்கற்கண்டு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து சாப்பிட்டு வர விரைவில் குணமாகும்.
👉 தினமும் சிறிதளவு பனங்கற்கண்டு, பாதாம் பருப்பு மற்றும் சீரகம் ஆகிய அனைத்தையும் சேர்த்து, இரவில் படுப்பதற்கு முன் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் மற்றும் கண்பார்வை அதிகரிக்கும்.
👉 உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க பனங்கற்கண்டை பாதாம் மற்றும் மிளகுத் தூளுடன் சேர்த்து வாரத்திற்கு 3 முறை சாப்பிட வேண்டும். இதனால் நோய்களின் தாக்கத்தையும் தடுக்கலாம்.
👉 சிறுநீரகக் கற்கள் பிரச்சனை விரைவில் குணமாக, 3 டேபிள் ஸ்பூன் வெங்காய ஜூஸ் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டு ஆகியவற்றைச் சேர்த்து வாரத்திற்கு 2 முறை சாப்பிட வேண்டும்.
🆎செரிமானத்திற்கு உதவும் உணவுகள் !!
3️⃣நெஞ்செரிச்சல், புளிப்பு ஏப்பம், வயிற்று எரிச்சல், மலம் கழிக்கும் உணர்வு, வயிற்று வலி, வாயுத் தொல்லை இந்த பிரச்சனைகள் எல்லாம் சாதாரணமாகப் பலருக்கும் ஏற்படுகிறது. இவை ஏற்படுவதற்கான முக்கியமான மற்றும் அடிப்படை காரணம், செரிமானக் கோளாறு ஆகும். சில இயற்கை உணவுகளை நாம் சாப்பிடும் உணவோடு சேர்த்துக்கொள்வதன் மூலம் இந்தப் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். எனவே செரிமானத்திற்கு உதவும் இயற்கை உணவுகளையும் அவற்றின் மருத்துவப் பலன்களையும் பற்றி இங்கு காண்போம்.
🆎ஓட்ஸ் :
👉 ஓட்ஸில் வளமையான நார்ச்சத்து அடங்கியுள்ளதால் உடல் எடை குறைக்க மட்டுமல்லாமல் செரிமானத்திற்கும் உதவுகிறது. உடல் அமைப்பின் ஒழுங்கான செயல்பாட்டிற்கு தேவையான அரியக் கனிமங்களான ஜிங்க், காப்பர், பாஸ்பரஸ், செலீனியம் மற்றும் தியாமின் போன்றவற்றையும் ஓட்ஸ் அளிக்கிறது.
🆎வெந்நீர் :
👉 சாப்பிட்டு முடித்தவுடன் குளிர்ச்சியான தண்ணீர் பருகுவதால், உணவில் கலந்துள்ள எண்ணெய் பசை உடலில் தங்குகிறது. இதனால் செரிமானம் தடைப்படுகிறது. இதைத் தவிர்த்துவிட்டு சாப்பிட்டவுடன், சிறிதளவு மிதமான சூடுள்ள நீர் பருகினால், உணவு எளிதில் செரிமானம் ஆகிவிடும்.
👉 வெந்நீர் பருகுவதால், சிறுகுடல் மற்றும் பெருங்குடல் செயல்பாடு தூண்டப்படும். அதனால் மலம் இளகி, மலச்சிக்கல் நீங்கும். மேலும் வயிற்று வலி, உப்புசத்தைத் தடுக்கிறது.
🆎சீரகம் :
👉 கால்சியம், இரும்புச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்டுகள் உள்ள மூலிகைச் செடி சீரகம். இது இரைப்பையில் ஏற்படும் அலர்ஜியை குணமாக்குகிறது. மேலும் நாள்பட்ட செரிமானக் கோளாறால், மலக்குடலில் ஏற்படும் ரத்தக்குழாய் வீக்கத்தைத் தடுக்கிறது.
🆎பீட்ரூட் :
👉 பீட்ரூட் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், வயிற்று வலி, வயிற்றுப் பொருமல் மற்றும் உணவு சகிப்பின்மை போன்ற செரிமான பிரச்சனைகள் நீங்கும். பீட்ரூட்டில் உள்ள நார்ச்சத்து, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் ஆரோக்கியமான செரிமான அமைப்பை மேம்படுத்த உறுதி செய்யும். பீட்ரூட்டில் உள்ள பீடைன் பொருள் வயிற்றில் உண்டாகும் அசிடிட்டியை குறைக்கிறது.
🆎புதினா :
👉 புதினாவை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் வாயுபிடிப்பு, வயிற்று வலி, வயிறு எரிச்சல், புளிப்பு ஏப்பம் உள்ளிட்ட பிரச்சனைகள் இல்லாமல் நாம் சாப்பிடும் உணவு எளிதில் செரிமானமாகிவிடும்.
🆎ஓமம் :
👉 ஓமத்தில் உள்ள தைமோல் பீனால், செரிமான நொதிகள் தயாரிப்பை ஊக்குவிக்கிறது. அரை டீஸ்பூன் ஓமத்தை, ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்கவைத்து, அதை அரை டம்ளராக ஆகும் வரை கொதிக்க விட்டு தினமும் காலை, மாலை பருகிவந்தால் வயிற்று மந்தம், வயிற்று வலி, வாயுபிடிப்பு போன்றப் பிரச்சனைகள் சரியாகும்.
🆎நீங்கள் மருந்துக்கு அடிமையானவரா?
4️⃣பொதுவாக மது, புகைப்பழக்கம், கஞ்ஜா, பிரவுன் சுகர் போன்றவற்றை தொடர்ந்து பயன்படுத்துபவர்களைத்தான் இவ்ற்றிற்கு அடிமையானவர்கள் என்று கூறுவோம். ஆனால், தவறான விஷயம் என்று தெரியாமலேயே பலரும் மருந்துகளுக்கு அடிமையாக உள்ளனர்.
🆎ஒவ்வொரு நாளும் தேவையற்ற மருந்துகளை உடலுக்குள் செலுத்திக் கொள்வோரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பலரும் இது நல்ல மருந்து, இதனால் உடலுக்கு பலன் உண்டு, தலை வலிக்கு இந்த மருந்து சிறந்தது என்று எண்ணி பல மருந்துகளை மருத்துவரின் ஆலோசனை இன்றி எடுத்துக் கொள்கிறார்கள்.
🆎மேலும் சிலர், தலைவலி, காய்ச்சல், வயிற்று வலி என்றால் உடனடியாக ஏதாவது ஒரு மருந்துக் கடைக்குச் சென்று அதற்கான மருந்தை வாங்கி போட்டுக் கொள்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், அந்த மருந்தை போட்டதும் தலைவலியோ, காய்ச்சலோ, வயிற்றுவலியோ சரியாகிவிட்டால், அந்த மாத்திரையை பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டு, எப்போது இந்த பிரச்சினைகள் வந்தாலும் உடனடியாக அதனைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
🆎உண்மையிலேயே அவர்களுக்கு என்ன பிரச்சினை, இந்த மருந்து எப்படி செயல்புரிகிறது என்று தெரிந்து கொள்ளாமல் உடலுக்கு ஒவ்வாத மருந்தினை தொடர்ந்து பயன்படுத்துவதும் மருந்திற்கு அடிமையானவராகத்தான் கொள்ள வேண்டும்.
🆎மருத்துவர்கள் எழுதித் தரும் மருந்துகளை குறிப்பிட்ட காலத்திற்கும் மேலாக பலரும் பயன்படுத்துகிறார்கள். நோய் வருவதற்கான அறிகுறி தெரிந்ததுமே மருந்துகளை பயன்படுத்தத் துவங்கிவிடுகிறார்கள். சிலர் தலைவலி என்றதும் உடனடியாக ஒரு மாத்திரையை வாங்கிப் போட்டுக் கொள்கிறார்கள். இதெல்லாம் அவர்களது உடல் நலனைக் கருத்தில் கொண்டு செய்யும் செயல்கள் அல்ல. அவர்கள் மருந்து மாத்திரைகளுக்கு அடிமையாக இருப்பதைத்தான் காட்டுகிறது.
🆎மருத்துவர் குறிப்பிடும் கால அளவு வரை ஒரு மாத்திரையை சாப்பிட வேண்டியது எந்த அளவிற்கு அவசியமோ அதே அளவிற்கு அதற்கு மேலும் சாப்பிடாமல் நிறுத்த வேண்டியதும் அவசியமாகிறது.
🆎சில மருத்துவர்கள் வலி நிவாரணிகளையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் அளவிற்கு அதிகமாக நோயாளிகளுக்கு வழங்குவார்கள். ஏன் எனில், அந்த மருத்துவரிடம் சென்றதும் வலி நின்றுவிட்டது, நோய் குணமாகிவிட்டது என்று பெயர் வாங்க வேண்டும் என்ற ஒரு நோக்கத்தில் சில மருத்துவர்கள் இதனைச் செய்கிறார்கள். இது நோயாளியின் உடல் நலனை பாதுகாக்கும் சக்திகளை வேரோடு பிடுங்கும் செயலாகும். இதுபோன்ற மருத்துவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதும் அவசியம்.
🆎பலரும், அந்த மருத்துவரிடம் செல்லுங்கள், உடனடியாக நோய் குணமாகும் என்று வலியுறுத்துவார்கள். உடலில் ஏற்படும் எந்த நோயும் உடனடியாக குணமாகாது. படிப்படியாகவே குணமாகும், குணமாக வேண்டும். அதுதான் இயல்பு. மாறாக உடனடியாக குணப்படுத்தப்படும் என்று ஒரு மருத்துவர் கூறினால், அவர் நமது நோயைக் குணப்படுத்தவில்லை, நோயை உடனடியாக செயலிழக்க வைக்கிறார் அவ்வளவே, செயலிழக்க வைக்கப்பட்ட கிருமி அதிவிரைவில் பலம்பெற்று பல்வேறு வகைகளில் உடலைத் தாக்க ஆரம்பிக்கும்.
🆎நோயாளிகள் பலரும், காய்ச்சலுக்காக மருத்துவரிடம் சென்றால், ஊசி போடுங்கள் என்று கேட்டு போட்டுக் கொள்கிறார்கள். ஆனால், மருத்துவத்தில் பல நோய்களுக்கு மருந்து, மாத்திரைகள் மூலமாகவே குணம் பெறலாம். ஊசி என்பது அவசியமல்ல. ஊசியைப் போட்டு காய்ச்சலை குணப்படுத்தலாம். ஆனால், அந்த காய்ச்சல் எதனால் வந்ததோ அதனை என்ன செய்வது,
🆎சமீபத்தில் மைக்கேல் ஜாக்சன் மரணமடைந்தார். அவரது மரணத்திற்கு, வலி நிவாரணி மருந்துகளை அதிக அளவில் எடுத்துக் கொண்டே காரணமாகக் கூறப்படுகிறது. எனவே, எந்த மருந்தையும் எடுத்து கொள்ளும் முன், அதன் செயல் என்ன என்பதை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
🆎தேவையில்லாமல் எந்த மருந்தையும் தொடர்ந்து பயன்படுத்தாதீர்கள். மருந்துக்கு அடிமையாகாதீர்கள்.
🆎சில நோய்களுக்கு வீட்டு மருத்துவம்
5️⃣வயிற்றுக்கடுப்பு
🆎மாமரத்தின் வேர்ப்பட்டயை 50 கிராம் எடுத்து, இடித்து, ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் நீ விட்டு 200 மில்லியாக சுண்டக்காய்ச்சி வடி கட்டி வேளைக்கு ஒன்று அல்லது ஒன்றரை அவுன்ஸ் வீதம் பருக வேண்டும், இதனால் வயிற்றுக்கடுப்பு விலகும்.மற்றும் ரத்த பேதி, பித்த வாந்தி, பெரும்பாடு ஆகியவை குணமாகும்.
🆎காசம்
🆎கரிசாலை சாறு அரை லிட்டர், நல்லெண்ணெய் அரை லிட்டர் ஆகிய இரண்டையும் சேர்த்து தைலப்பக்குவத்தில் வடித்து வைத்துக் கொள்ள வேண்டும். வேளைக்கு அரை அல்லது ஒரு தேக்கரண்டி வீதம் இரண்டு வேளை உட்கொள்ள குணம் தெரியும். வாரத்தில் ஒரு நாள் தலையில் தேய்த்தும் குளிக்கலாம்.
🆎ஒழுகும் ரணங்கள்
🆎ஊமத்தன் இலைச்சாறு 500கிராம், தேங்கய் எண்ணெய் 200கிராம், மயில் துத்தம் 20 கிராம் எடுத்துக் கொள்ளவேண்டும். ஊமத்தன் இலைச் சாற்றை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்துக் காய்ச்சி, ஓரளவு சாறு சுண்டியவுடன் துத்தத்தை பொடித்துச் சேர்த்து தைலத்தை பக்குவமாக வடித்துக் கொள்ளவும். இதை வெளிப்பூச்சாக மட்டும் உபயோகிக்கலாம், காது நோய்க்கு காதில் சில துளிகள் விடலாம்.
🆎குழந்தைகளின் கபம், மாந்தம்
🆎ஆமணக்கு எண்ணெய் அரை லிட்டர், இளங்கொழுந்து சாறு 1 லிட்டர், கருஞ்சீரகத்தூள் 15 கிராம், கோரோசனை ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவேண்டும். இதில் கோரோசனை நீங்கலாக மற்றவற்றை ஒன்று சேர்த்து காய்ச்சி தைலப்பக்குவத்தில் வடித்துக் கொண்டு கடைசியாக கோரோசனத்தை பொடித்துப் போட்டு நன்றாக கலக்கிக்கொள்ளவும், தாய்ப்பாலுடன் 8 மிலி தைலைம் சேர்த்து ஒரு வேளை கொடுக்கவும்.
🆎மண்டைக்குத்தல் உடல் வலி:
மிளகாய் 750கிராம், தண்ணீர் 12 லிட்டர், மிளகு 8 கிராம், நல்லெண்ணெய் 175 கிராம், ஆகியவற்றில் மிளகாயைத் தண்ணீரில் சேர்த்து, அடுப்பிலேற்றி ஒன்றரை லிட்டராக சுண்டக்காய்ச்சிக் கொள்ளவேண்டும். தூள் செய்த மிளகுடன் நல்லெண்ணெயைக் கலந்து தைலம் போன்று வடித்து வெளி உபயோகத்திற்கு மட்டும் பயன்படுத்தவும்.
🆎கீல்வாயு
🆎மெருகன் கிழங்கு 200 கிராம், வெள்ளைப்பூண்டு 200 கிராம், ஆமணக்கு எண்ணெய் 200 கிராம், ஆகியவற்றில் மெருகன் கிழங்கின் தோலைச்சீவி, சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். வெள்ளைப்பூண்டின் தோலை உரித்து, சுத்தம் செய்து கொள்ளவேண்டும். பிறகு இரண்டையும் ஆமணக்கு எண்ணெயுடன் சேர்த்து தைலப்பதத்தில் வடித்து மூன்று நாட்களுக்குப் பிறகு உபயோகிக்க வேண்டும், 8லிருந்து 15மிலி வரை காலையில் மட்டும் சாப்பிட வேண்டும்.
🆎குடல் கிருமிகள்
🆎குப்பை மேனி இலை 100 கிராம், ஆமணக்கு எண்ணெய் 400 கிராம் எடுத்துக் கொண்டு எண்ணெயில் இலையைச் சேர்த்துக் காய்ச்ச வேண்டும். எண்ணெய் மிதக்கும் போது இறக்கி, இலைகளை அரைத்து எண்ணெயில் கலந்து கொள்ளவேண்டும், வேளைக்கு ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி வீதம் இரண்டு வேளைகள் சாப்பிட குணமாகும்.
🆎சர்க்கரை நோயால் சிறுநீரகம் பாதிப்பும், செயலிழப்பும்
6️⃣சர்க்கரை வியாதி ஏற்பட்டால் பாதிப்பிற்கு உள்ளாகிற முதல் உறுப்பு சிறுநீரகம்தான். எப்படியென்றால், முதலாவதாக இரத்தம் சுத்திகரிக்கப்படும் போது சிறுநீரகத்தில் இருந்து மிகக் குறைந்த அளவே புரதச்சத்து வெளியேறும். இதனால் உடல் சமச்சீர் நிலை குறையும். இதை துவக்க நிலையில் கண்டறிந்தால் மைக்ரோ ஆல்புமின் பரிசோதனையில் கண்டறிந்து குணப்படுத்திவிடலாம்.
🆎சிறுநீரில் புரதச்சத்து அதிகமாக வெளியேறுவதால் அடிக்கடி சிறுநீர் பிரியும். மிகை இரத்த அழுத்தம் ஏற்பட்டு பிற உறுப்புகளும் பாதிக்கப்படலாம். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு ஏழு ஆண்டுகளில் இந்த நிலை வெளியே தெரியவரும். இதைத் தொடர்ந்து சிறுநீரில் அதிகமான புரதம் வெளியேறிவிடுவதால் உடல் பருத்தும், கைகால்கள் வீங்கியும் காணப்படும்.
🆎கடைசி நிலையாக சிறுநீரகம் செயலிழந்துவிடும். சர்க்கரையால் பாதிக்கப்பட்ட நபர், இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு, சிறுநீரகத்திற்கும் சரியான சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் அடுத்த பத்து ஆண்டுகளில் அவரது சிறுநீரகம் செயலிழந்துவிடும்.
🆎சிறுநீரகம் எப்படி செயலிழக்கிறது?
🆎சிறுநீரகம் இரத்தத்தை சுத்திகரிக்கும் வேலையைச் செய்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். சர்க்கரை நோயின் காரணமாக கூடுதல் பணியைச் செய்ய வேண்டியிருப்பதால் நாளடைவில் சிறுநீரகம் தளர்வடைந்து சரியாக சுத்திகரிப்புப் பணியைச் செய்ய இயலாது.
🆎தவிர, இரத்தத்தில் யூரியாவின் அளவு அதிகரிக்கும் போது சிறுநீர்ப் பிரித்திகள் அல்லது சிறுநீர் வடிகட்டிகள் அதை சரியாக சுத்திகரிக்காமல் விட்டுவிடுகின்றன. இதனால் கழிவுப் பொருட்கள் இரத்தத்தில் கலந்துவிடுகின்றன. இந்த நிலையில்தான் நிறைய பேருக்கு டயாலிஸ் செய்ய வேண்டியிருக்கிறது.
40 விழுக்காடு பேருக்கு சர்க்கரை வியாதியாலும், 20 விழுக்காடு பேருக்கு மிகை இரத்த அழுத்தம் காரணமாகவும் நிரந்தமாக சிறுநீரகம் செயலிழப்பு ஏற்படுகிறது.
🆎லெப்டோஸ்பைரோசிஸ் – மழைக்கால அச்சுறுத்தல்
7️⃣சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கிவிட்டது. ஏற்கனவே பெய்த மழையால் குடியிருப்புப் பகுதிகளில் மழை நீர் தேங்கியிருக்கும் நிலையில், இப்போது பெய்யத் தொடங்கியுள்ள மழையால் மேலும் நீர் தேங்கும், சராசரி மக்களுக்கும் அன்றாட வாழ்க்கை அல்லாடல் ஆகிவிடும். இப்படிப்பட்ட நிலையில்தான் மேலும் ஒரு அச்சுறுத்தல் உருவாகிறது.
🆎அது லெப்டோஸ்பைரோசிஸ் என்றழைக்கப்படும் ஒரு தொற்று நோயாகும். லெப்டோஸ்பைரா அல்லது ஸ்பைரோகீட் எனும் கிருமியால் (பாக்டீரியா) இந்நோய் ஏற்படுகிறது. எலி, பெருச்சாளி, பன்றி போன்ற கழிவு நீர் தேக்கங்களில் வாழும் பிராணிகள் கழிக்கும் சிறுநீரில் கலந்து இந்தக் கிருமி வெளியேறி, கழிவு நீரில் கலக்கிறது. மழைக்காலத்தில், குறிப்பாக நகரங்களில் ஆங்காங்கு தேங்கும் மழை நீருடன், கழிவு நீர், சாக்கடை நீர் கலக்கும்போது, அதில் இந்த பாக்டீரியாவும் கலந்துவிடுகிறது.
🆎இந்த நீரில் நாம் நடக்கும்போது, நமது காலில் உள்ள தோல் வெடிப்புகள் அல்லது சிறு காயங்கள் மூலமாக நமது இரத்த நாளங்களிலும் இந்த பாக்டீரியா நுழைகிறது. இந்த பாக்டீரியா இரத்தத்தில் கலந்து பெருகி, ஒரு வாரம் முதல் 10 நாட்கள் கடந்த பிறகு நமக்கு காய்ச்சல் ஏற்படும். அதனை வெறும் காய்ச்சல்தானே என்று அதற்காக ஒரு மாத்திரை வாங்கி போட்டுக்கொண்டு அல்லது ஒரு ஊசியைப் போட்டுக்கொண்டு மறந்துவிட்டோமானால் அதுவே விபரீதமாகிவிடும்.
🆎ஆரம்பத்தில் சாதாரண காய்ச்சலாக இருந்து நிலை மாறி, தலை வலி, கண் பாதிப்பு (கண்கள் இரத்தத்தால் தோய்ந்ததுபோல் சிவந்துவிடும்), உடம்பு வலி, களைப்பு, வாந்தி வருவது போன்ற உணர்வு, 102 டிகிரியைத் தாண்டும் காய்ச்சல் என்று ஏற்பட்டால், அது லெப்டோஸ்பைரோசிஸ் ஆக இருக்கலாம் என்று நீங்கள் முடிவு செய்ய மருத்துவரை அணுக வேண்டும்.
🆎இதைச் செய்யத் தவறும்போது இந்த நோய் உயிரைக் குடிக்கும் நோயாக ஆகிவிடும் அபாயம் ஏற்படுகிறது. கடுமையான மூச்சடைப்பு, சிறுநீரக செயலிழப்பு, காமாலை ஆகியன ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இந்த நோய் தாக்கிய 10 நாளில் வாய், மூக்கின் வழியாக இரத்தம் வெளியேறுதல், இதய இயக்கம் பாதிப்பு, உள் இரத்தக் கசிவு ஆகியன ஏற்படும் அபாயம் உள்ளதென லெப்டோஸ்பைரோசிஸ் நோய் தொடர்பான விழுப்புணர்வை ஏற்படுத்தும் மருத்துவ இணையத் தளம் எச்சரிக்கிறது.
🆎அயல் நாடுகளில் லெப்டோஸ்பைரோசிஸ் நோயை நகர்ப்புறம் சார்ந்த ஒரு நோயாகவே பேசுகின்றனர். அங்குள்ள தாழ்வான குடியிருப்புப் பகுதிகளில் மழை நீருடன், கழிவு நீர் கலக்கும்போது இந்நோய் பாதிப்பு ஏற்படுகிறது என்கின்றனர். இதற்காக பல ஆய்வுகள் நடத்தப்பட்டு உறுதி செய்யப்பட்டும் உள்ளது.
🆎நமது நாட்டைப் பொறுத்தவரை எலிகளும், பெருச்சாளிகளும் மனிதர் வாழும் எல்லா இடங்களிலும் வாழ்கின்றன. எனவே, மழைக்காலத்தில் தேங்கும் நீரில் இவைகளின் சிறுநீர் கலப்பதும், அவைகளில் இருந்து வெளியேறும் பாக்டீரியா மழை நீரில் கலந்திருக்கும் சாத்தியமும் மிக அதிகமாகும். ஒரு நேரத்தில் சென்னையில் காலை நேரத்தில் வீட்டுக்கு வீடு சென்று பால் கரந்து கொடுக்கும் பால்காரர்களுக்கு இந்நோய் அதிகம் தாக்கியதாக கண்டறியப்பட்டுள்ளது. ஏனெனில் மழைக் காலங்களில் அவர்கள் மழை நீரில் நடந்து செல்லும் போது அவர்களின் கால்களில் உள்ள காயங்கள் அல்லது தோல் வெடிப்புகளில் இந்த பாக்டீரியா மிக எளிதாக உடலிற்குள் நுழைந்துவிடும். அவர்களில் பொதுவாக கண் சிவக்கும் நோய் வந்து சிகிச்சை பெற்று குணமாகியுள்ளனர்.
🆎காத்துக்கொள்வது எப்படி?
1) மிக முக்கியமான பாதுகாப்பு நடவடிக்கை: மழைக்காலத்தில் தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் நடப்பதைத் தவிர்ப்பது.
2) பள்ளிக் குழந்தைகளை தண்ணீரில் நடக்க விடாமல் பாதுகாப்பாக அழைத்து வருவது.
3) கால்களில் காயமோ, ஆறாத புண் ஏதேனும் இருந்தால், காயத்தை மருந்துடன் மூடிய நிலையில் பணிக்கு, பள்ளிக்குச் செல்லுதல்.
4) வீட்டிற்குத் திரும்பியதும் வெண்ணீரால் கால்களை முழுமையாக கழுவிய பின் துடைத்திட வேண்டும்.
5) நீச்சல் குளம் சென்று பயிற்சி செய்வதாக இருந்தால், அதன் சூழலை நன்கு கவனித்தப் பிறகு குளத்தில் இறங்க வேண்டும்.
6) மழைக்காலத்தில் நல்ல சூட்டுடன் வெண்ணீரில் குளித்தல்.
7) இயன்ற அளவிற்கு சுற்றுப்புறத்தில் எலி, பெருச்சாளி வலை இல்லாமல் பார்த்துக்கொள்வது.
🆎மருத்துவரை அணுகவும்!
🆎லெப்டோஸ்பைரோசிஸ் - மழைக்கால அச்சுறுத்தல்
லெப்டோஸ்பைரோசிஸ் ஆரம்ப நிலையில் எந்த விதத்திலும் ஒரு அச்சுறுத்தல் இல்லை. எனவே, மேற்கூறப்பட்ட அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி, உரிய சிகிச்சைப் பெற வேண்டும்.
🆎கண்ணிற்காக 20 – 20 – 20
8️⃣கணினித் தொடர்பான பணியில் ஈடுபட்டிருக்கும் மென்பொருள் நெறிஞர்கள், இதழியலாளர்கள், அலுவலக ஊழியர்கள் ஆகியோருக்குத் தங்கள் கண்ணைப் பற்றிய கவலை இல்லாமல் இருக்காது. அந்தக் கவலைக்கு விடையளிக்க இந்த எளிய பயிற்சியைச் செய்யுங்கள்.
🆎இதனை கண் மருத்துவர் ஒருவர் தனக்கு ஆலோசனையாக வழங்கினார் என்று நமது வாசகர் ஒருவர் நமக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அதை உங்களுக்கு அளிக்கின்றோம்.
பயிற்சி 1
20 நிமிட நேரம் தொடர்ந்து கணினியைப் பார்த்து பணி செய்தீர்களா? ஒரு சிறிய ஓய்வெளி தாருங்கள். கணினியில் இருந்து உங்கள் பார்வைச் சற்றே திருப்பி, உங்களிடமிருந்து 20 அடி தூரத்திலுள்ள ஒரு பொருளைப் பாருங்கள். அவ்வாறு பார்ப்பதன் மூலம் பார்வையின் தூர நிலைப்பு மாறுவதால் கண்ணிற்கு ஒரு மாற்றம் கிடைக்கிறது. களைப்புற்ற கண்களுக்கும் இது நல்ல மாற்றாகும்.
பயிற்சி 2
கண்களை கண்ணிமைகளால் தொடர்ந்து வேகமாக மூடி மூடித் திறவுங்கள். கண்ணில் ஈரம் சுரக்கும். மிக நுன்னிய தூசுகள் கண் பாவைகளில் படிந்திருந்தால் அவைகள் அந்த ஈரத்தில் சிக்கி ஓரத்திற்கு வந்துவிடும்.
பயிற்சி 3
20 நிமிட நேர தொடர்ந்த பணிக்குப் பிறகு உங்கள் இருக்கையில் இருந்து சற்றே எழுந்து, ஒரு 20 அடி நடந்துவிட்டு வாருங்கள். ஒரே இடத்தில் அமர்ந்திருந்ததால் ஏற்பட்டிருக்கும் பிடிப்புகள் விலகும், இரத்த ஓட்டம் முழுமை பெறும்.
இதையும் தாண்டி...
மிக அதிகமான நேரம் கணினியைப் பார்த்தே பணி செய்வோர், வாய்ப்புக் கிடைக்கும் நேரங்களில் இயற்கையான சூழலை கண்ணால் பார்த்துக் களியுங்கள்.
இந்த வசதி உங்கள் அலுவலகத்தில் இல்லையென்றால், உங்கள் இல்லத்தில் ஒரு சில பூச்செடிகளை வைத்து அவைகள் வளரும்போது அவற்றைப் பார்த்து ரசியுங்கள்.
வெட்ட வெளியில் இரவு உணவிற்குப் பின்னரோ அல்லது காலைக் கடன்களை முடித்த பின்னரோ வேகமாக நடந்து பயிற்சி செய்யுங்கள். இரவு உணவிற்குப் பின் மொட்டை மாடிக்குச் சென்று நட்சத்திரங்களை பார்த்து ரசியுங்கள்.
மனதில் இருந்து கண் வரை எல்லாம் ஒற்றை லயிப்பில் ஈடுபட முயற்சியுங்கள்.
🆎மொபைல் போனால் மூளைக் கட்டி ஏற்படும் ஆபத்து!
9️⃣மொபைல் போனை அதிகமாக பயன்படுத்துவதினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து ஏற்கனவே பல ஆராய்ச்சிகள் மற்றும் செய்திகள் வெளியாகி உள்ள நிலையில், தற்போது மூளைக்கட்டி ஏற்படும் ஆபத்து உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை மணி அடித்துள்ளனர்.
🆎மொபைல் போன் அல்லது கார்ட்லெஸ் போனை அதிகமாக பயன்படுத்துவதினால் ஏற்படக் கூடிய விளைவுகள் குறித்து ஏராளமான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு, ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பாக நீண்டகாலமாகவே பலவிதமான சர்ச்சைகள் நிலவி வருகின்றன.
🆎இந்நிலையில்,தற்போது இந்தியாவின் குர்காவ் நகரில் உள்ள ஏபிஜே பொறியியல் கல்லூரியை சேர்ந்த விஞ்ஞானி ஆர்.பி. துபே மற்றும் அவரது குழுவை சேர்ந்தவர்கள், மொபைல் போனை அதிகமாக பயன்படுத்துவதினால், அதிலிருந்து வெளிப்படக்கூடிய கதிரியக்க அலைகளால் ஏற்படக்கூடிய உடல் நல பாதிப்புகள் குறித்து மிக ஆழமாக ஆராய்ச்சி செய்துள்ளனர்.
🆎இந்த ஆராய்ச்சியில்,மொபைல் போனை நீண்ட நேரம் பயன்படுத்தும்போது வெளிப்படும் கதிரியக்க அலைகளின் அளவு, உடல் நலத்திற்கு தீங்கு ஏற்படுத்துவதாக உள்ளது தெரியவந்துள்ளதாக துபே தெரிவித்துள்ளார்.
🆎மலிவான வாழையின் மகத்துவம்
🔟பழங்களில் மலிவான பழம் என்றால் வாழைப் பழத்தைக் கூறலாம். சீசன் நேரத்தில் சில பழங்கள் வாழைப் பழத்தை விட விலை குறைவது உண்டு. ஆனால் எப்போதுமே கிடைக்கக் கூடிய, ஏழைகள் வாங்கி சாப்பிடக் கூடிய விலையில் இருக்கும் வாழைப் பழத்தில் அடங்கியிருக்கும் மகத்துவமோ ஏராளமானது.
🆎வாழைப் பழத்தில் பல வகைகள் உண்டு. ஒவ்வொன்றுக்கும் ஒரு சிறப்பு பலன் இருக்கிறது. கிடைப்பதற்கு அரிய பழங்களில் இருக்கும் சத்து கூட வாழைப்பழத்தில் உள்ளது. ஆனால் அதனை பலரும் அறிந்திராமல் உள்ளனர். வயிற்று வலிக்கிறதா, மலச்சிக்கலா உடனே வாழைப் பழத்தை வாங்கி சாப்பிடுகிறோம்.
🆎உண்மையில் வாழைப்பழம் ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டிருக்கிறது. அதனை அறிந்தால், நாம் தினமும் வாழைப்பழத்தை சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுவோம். நீரிழிவு நோயாளிகள் மட்டுமே வாழைப் பழத்தை சாப்பிடக் கூடாது. அவர்களும் உணவுக் கட்டுப்பாட்டுடன் இருந்து, மிகவும் கனியாத வாழைப் பழத்தை கால் பங்கு சாப்பிடலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
🆎நமக்கு எப்போதுமே, எளிதாகக் கிடைப்பது பூவன் வாழைப்பழம். இதனை சாப்பிட்டால் மலச்சிக்கல் குறையும். வயிறு சுத்தமாகும். மலச்சிக்கலால் உண்டான மூலநோய் குறையும்.
🆎ரஸ்தாளி சாப்பிட்டால் பித்த நோய்கள் கட்டுப்படும். பேயன் பழம் சாப்பிட்டால் வயிற்றுப் புண்ணை ஆற்றும். நேந்திரன் பழம் ரத்த சோகையை குணமாக்கும். மொந்தன் பழம் சாப்பிட்டால் குளிர்ச்சி கிடைக்கும். மலைவாழையை சாப்பிட்டால் உடல் சூட்டை தணித்து பித்தத்தைப் போக்கும்.
🆎செவ்வாழை சாப்பிடுவது ஆண்களுக்கு நல்லது. ஆண்மை பெருகும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மலட்டுத் தன்மையைப் போக்கும் சக்தி செவ்வாழைக்கு உள்ளது. குழந்தை இல்லாத தம்பதிகள் செவ்வாழையை சாப்பிட்டு வரலாம்.
🆎கருந்துளுவன் வாழைப்பழத்தில் அதிகளவு அமிலச்சத்து உள்ளது. உடலுக்கு வலு சேர்க்கும். மட்டி ரக வாழைப்பழத்தில் குழந்தைகளுக்குத் தேவையான சத்துக்கள் அதிகம் உள்ளன. மூளையின் நரம்பு வேதியல் கடத்தியான ஹசெரடோனின்' என்னும் ரசாயனப் பொருள், வாழைப்படும் சாப்பிடுவதால் சுரக்கிறது. இதனால் தூக்கம் நன்றாக வரும்.
🆎இரவில் அமைதியான தூக்கம் வருவதற்கு இரவில் உணவு சாப்பிட்ட பிறகு ஒரு வாழைப் பாமும், ஒரு டம்ளர் பாலும் அருந்தினால் உடலுக்கும் நல்லது. உறக்கத்திற்கும் நல்லது.
🆎உடலைத் தேவையான எடையில் வைத்துக் கொள்ள வாழைப்பழம் உதவுகிறது. அதாவது, உடல் மெலிந்தவர்கள் தினமும் இரண்டு வாழைப்பழம் என தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நிச்சயம் உடல் பெருக்கும்.
🆎அதே சமயம், பிற உணவுகளை நீக்கிவிட்டு தினமும் ஆறு வாழைப்பழமும், ஆறு டம்ளர் கொழுப்பு நீக்கிய பால் அல்லது மோர் தொடர்ந்து 20 நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடல் எடையை குறைத்து விடலாம். பத்து நாட்களுக்குப் பின்னர், படிப்படியாக பாலின் அளவை குறைத்துக் கொண்டு, பச்சைக் காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். வாழைப்பழத்தில் உடலின் எடையை அதிகரிக்கும் சோடியம் அதிகமாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
🆎வாழை மரம், வாழைப்பழம், காய், பூ, இலை மற்றும் தண்டு என அனைத்து பாகங்களிலும் மருத்துவ குணங்கள் இருப்பதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் வியக்கின்றனர்.
🆎வாழையில் பல வகைகள் இருந்தாலும் மொந்தன் ரகத்தைத்தான் பலரும் சமைத்து சாப்பிடுவது வழக்கம். மொந்தன் வாழைக்காயில் இரும்புச்சத்துடன் நிறைய மாவுச்சத்து காணப்படுகிறது. மெலிந்தவர்கள் இதை அதிகமாக சாப்பிட்டால் உடல் பருக்கும். உடலுக்கும் நல்ல வளர்ச்சி ஏற்படும். அதிக பசியாக இருப்பவர்கள் இதை சாப்பிட்டால் உடனேயே பசி அடங்கும். மொந்தன் வாழைக்காயுடன் மிளகு, சீரகம் சேர்த்து சமைப்பது மிகவும் நல்லது.
🆎வாழைக்காயை சமைப்பதற்காக மேல் தோலை அழுத்தி சீவாமல், மெலியதாக சீவினால் போதும். உள்தோலுடன் சமைத்து சாப்பிடுவது நல்லது. கேரளாவில் சீவி எடுத்த தோலையும் நறுக்கி, வதக்கி, புளி மற்றும் மிளகாய் சேர்த்து துவையலாகச் செய்து உண்பார்கள். இதுவும் உடலுக்கு நல்லது.
மலச்சிக்கல் சரியாக
*இயற்கை வைத்தியம் *
*சகோதரி உமாமகேஸ்வரி *
இயற்கை மருத்துவ ஆலோசகர்,சென்னை.
9940515353 ,9941280891.
1 . சூடான ஒரு டம்ளர் நீரில் 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து சிறிது நாட்டு சர்க்கரை சேர்த்து குடிக்கலாம்.
2. முழு நெல்லிக்காய் அரைத்து சாறு எடுத்து சிறிது உப்பு, 2 டம்ளர் வெது வெதுப்பான நீரில் கலந்து குடிக்கலாம்
3 . மிக முக்கியமாக ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை 2 டம்ளர் (400 மி.லி) தண்ணீர் குடிப்பது நல்லது. இதனால் ஜீரணம் எளிதாக நடக்கும், சிறுநீரக பிரச்சினை வராமல் உடல் ஆரோக்கியம் பெற வழி வகுக்கும்.
நன்றி
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்
வாழ்க நலமுடன்
மலச்சிக்கல் சரியாக
*இயற்கை வைத்தியம் *
*சகோதரி உமாமகேஸ்வரி *
இயற்கை மருத்துவ ஆலோசகர்,சென்னை.
9940515353 ,9941280891.
1 . சூடான ஒரு டம்ளர் நீரில் 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து சிறிது நாட்டு சர்க்கரை சேர்த்து குடிக்கலாம்.
2. முழு நெல்லிக்காய் அரைத்து சாறு எடுத்து சிறிது உப்பு, 2 டம்ளர் வெது வெதுப்பான நீரில் கலந்து குடிக்கலாம்
3 . மிக முக்கியமாக ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை 2 டம்ளர் (400 மி.லி) தண்ணீர் குடிப்பது நல்லது. இதனால் ஜீரணம் எளிதாக நடக்கும், சிறுநீரக பிரச்சினை வராமல் உடல் ஆரோக்கியம் பெற வழி வகுக்கும்.
நன்றி
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்
வாழ்க நலமுடன்
No comments:
Post a Comment