Wednesday, May 27, 2020

ஒருவன் எப்படி இருப்பது 'நார்மல்'

"என் கணவர் சரியில்லை.. வாழ்க்கை நரகம்." என்று சொல்லி எனக்குத் தெரிந்த ஒருவரின் இளம் பெண்  தன்  அப்பா வீட்டிற்கு வந்து விட்டார்..

நான் கேட்டேன்: “என்ன பிரச்சனைமா உன் ஹஸ்பெண்ட்கிட்ட..? கெட்ட பழக்கங்கள் இருக்கா..? ஓவரா குடிக்கிறாரா..? ஸ்மோக்கிங்கா..?”

பெண்: “அட.. நீங்க வேற சார்…. அவரு…… How can I say this…? சாப்பாட்ல வெங்காயம் பூண்டு கூட போடக் கூடாதுன்னு அடம் பிடிக்கிறார்..! டெய்லி என்ன சமைக்கணும் எப்படி சமைக்கணும்னு அவரே சொல்றார் சார்..!”

“வெளிய தெருவ அழைச்சிக்கிட்டு போறாரா..? entertainment..?”

“அயோத்தியா மண்டபத்துல உபன்யாசம், கர்னாடிக் கச்சேரி, கோயில் இதுக்கு போவோம் சார்.. சினிமா, ஹோட்டல், ஊஹீம்...! டிவி சீரியல் பாக்கவே கூடாதுன்னு தலைமேல அடிச்சி சத்தியம் கேக்கறார் சார்..! வீட்ல பொதிகை சேனல் மட்டும்தான்..! Can you believe it..?”

“அன்பா இருக்காரா..? புடவை நகையெல்லாம் வாங்கித் தராரா..?”

“அதெல்லாம் நிறையாத்தான் வாங்கித் தராரு.. ஆனா என்ன பிரயோசனம்..? வெளில போனா, தலைமுடியை தேங்காண்ணை போட்டு அழுத்தி வாரி, நெத்தில விபூதிகுங்குமம் வெச்சிகிட்டு போணும்கிறாரு..! Gold நகைகள்தான் போடணும், Accessories போடக் கூடாதுங்கிறாரு..! இதனால நான் வெளிய போறதே இல்லை சார் இப்போ.. ரொம்பக் கூச்சமா இருக்கு..!"

"இது ஒரு பெரிய விஷயமாம்மா..?"

"இன்னும் கேளுங்க..! ஒரு நாள் எங்க வீட்டுக்கு என் ஃப்ரெண்ட்ஸ் சிலர் வந்தாங்க.. நான் இனட்ரொடுயூஸ் பண்ணதும் அந்த பெண்கள் 'ஹாய்..'னு இவருக்கு கைகொடுத்தா, இவரு "நீங்கள் எல்லோரும் அம்மன், சக்தியின் ஸ்வரூபங்கள்..! உங்களுக்கு நமஸ்காரம்..!” ன்னு சொன்னார் பாருங்க, அவங்க அலறி அடிச்சிகிட்டு ஓடிட்டாங்க சார்..! இப்ப என் வீட்டு பக்கமே வரமாட்டேங்கிறாங்க..!“

“எல்லாம் நல்ல விஷயங்கள்தானம்மா சொல்றாரு..?"

அவள் சொன்னாள் : “இப்படி எல்லாத்லேயும் நல்லது  நல்லதுன்னே பாத்து ஓவர் கட்டுப்பாடா  வாழற வாழ்க்கை ரொம்ப drabபா இருக்கு சார்..! எனக்குத்  தேவை எல்லோரையும் போல ஒரு நார்மல் வாழ்க்கை..!'
===============

ஒருவன் எப்படி  இருப்பது  'நார்மல்'  என்பது காலத்தோடு மாறிக்கொண்டே வருகிறது  இல்லையா..? 

இந்த காலத்தில் ஒருவன் ரொம்ப நல்லவனாய் இருப்பதும் கூட 'அப்னார்மல்'  தானோ..?  

சொல்லுங்கள் :  இந்தப் பெண்ணின் எரிச்சல் நியாயம்தானா...?

No comments:

Post a Comment