Friday, May 29, 2020

அங்கோர்வார்ட் ஆலயம்

இந்த சைலேந்திர, ஶ்ரீவிஜய சாம்ராஜ்ஜிய மன்னர்கள் தமிழ் வணிகர்களுக்கும், கடலோடிகளுக்கும் செய்த கொடுமை கணக்கிடவியலாது.. ஆரம்பத்தில் சைலேந்திரர்கள் இந்து மதத்தவர்களாக இருந்து பின்னர் பௌத்த மதத்தை தழுவினார்கள்.. அதனால் இந்துக்களை, குறிப்பாக தமிழர்களை அளவுக்கதிமாக கொடுமை படுத்த துவங்கினர்..!

அதன் நீட்சியாக தமிழக வணிகர்கள்,கடலோடிகள் ஶ்ரீவிஜயத்திற்கு வியாபாரத்திற்கு சென்ற போதெல்லாம், அவர்களின் மரக்கலங்களை உடைத்தனர்.. அவர்களை சிறைபிடித்தனர்.. சிறைக் கைதிகளின் இரு உள்ளங் கைகளின் மேலடுக்கு சதைகளை உரித்து, பின் இரு கைகளையுன் ஒன்றாக இணைத்து கட்டி, அது ஒட்டியதும்," சிவனை கும்பிட்ட கைகள் இப்படியே இருக்கட்டும்..

இணைத்த கைகளுக்கு பதில் சிவன் உங்களுக்கு உணவளிக்கட்டும்" என எகத்தாளமிட்டு அவர்களை தமிழகம் அனுப்பினர்.. இதன் தொடர்ச்சி நீள, வெகுண்டெழுந்த இராஜேந்திரசோழன், கடாரம் மீது படையெடுத்து, சாவகம், சைலந்திரம், ஶ்ரீவிஜயம் ஆகிய நாடுகளை சூறையாடி, தமிழர்களுக்கிழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு பழி வாங்கினான்..கொடுமை புரிந்த புத்த பிக்குகளை கடுமையாக தண்டித்தான்..பொன்னாலான ஶ்ரீவிஜய தோரணவாயிலை அறுத்தெடுத்து அவர்களின் கர்வமழித்தான்.. அதனால் தான் அவன் கடாரம்கொண்டான் என அழைக்கப் பட்டான்...அங்கு திரட்டிய செல்வ வளத்தால் சிவனை பழித்தவர்களுக்கு பாடம் சொல்லும் விதமாக கங்கை கொண்டசோழபுரத்தில் மாபெரும் சிவாலயத்தை எழுப்பினான்.. தனை எதிர்த்த வடஇந்திய வங்க மகிபாலனை வென்று, கங்கை கரை வரை சென்று தமிழரின் வீரத்தை நிலைநாட்டி, கங்கை நீரால் கங்கைகொண்ட சோழீச்வரத்தை குடமுழுக்காட்டினான்.. அங்கிருந்து கொணர்ந்த நீரால் ஒரு ஏரியை உருவாக்கினான்...

இவன் காலத்திற்கு பிறகு இவனது தயாதி உறவுகளான கீழைசாளுக்கிய மரபில் வந்த முதலாம் குலோத்துங்க சோழன், தனது படைத்தளபதி கருணாகர தொண்டைமான் எனும் இளைய பல்லவன் உதவி கொண்டு கலிங்கத்தை வென்றெடுக்க, கலிங்கத்துபரணி பாடினார் செயங்கொண்டார்...இவனது ஆட்சி காலத்தில் ஶ்ரீவிஜயம் மீண்டும் வாலாட்ட.. பின்னாளில் வீரராஜேந்திரர் ஆட்சியில் கருணாகர தொண்டைமான் தலைமையில் மீண்டும் ஶ்ரீவிஜய படையெடுத்து, அங்கே சோழர்களின் ஆட்சியை நிலைநிறுத்தினான்... அவனுக்கு பின்னால் வந்த சோழர்களின் வாரிசுகளான இரண்டாம் சூரியவர்மன் ஆட்சியின் போது தான் இன்றைய கம்போடியாவில் இருக்கும் அங்கோர்வார்ட் ஆலயம் கட்டப்பட்டது.. உலகின் மிகப் பெரிய இந்துக்கோவில் அது என்பது கூடுதலான விஷயம்... இத்தகைய பெருமைகளை கொண்ட தமிழர்களின் இன்றைய நிலை எண்ணி பார்க்கவே மனம் மறுக்கிறது.. தன் சுய அடையாளங்களை தொலைத்த ஒரு சமூகமாக, அனாதையான நிலையில் தவித்துக் கொண்டிருக்கிறது... காலம் மாறுமா.. விதி தான் விடையளிக்க வேண்டும்...!

No comments:

Post a Comment