சஞ்சீவினி இரகசியம் ( Secret of Sanjeevini )
ஸ்வாமி ரிஷியோகி அவர்களோடு நாங்கள் பயணித்த இனிய காலகட்டத்தில் பல அற்புதங்களை காணும் பாக்கியங்களை பெற்றோம். அதில் ஒன்றுதான் 'சஞ்சீவினி இரகசியம்'
தமிழகத்தில் மூலிகைகளுக்கு பெயர்பெற்ற பகுதியது. அங்கு எங்களை அழைத்து சென்ற ஸ்வாமி ரிஷியோகி அவர்கள், எங்களுக்கு அந்த பெரியவரை அறிமுகம் செய்து வைத்தபோது யாரோ ஒரு அம்பாள் உபாசகர் அல்லது பக்தர் என்றுதான் நாங்கள் நினைத்தோம்.
ஸ்வாமிஜி, 'உங்களை வெளிப்படுத்திக் கொள்ளுங்கள்' என்று தனது பார்வையாலேயே அவருக்கு குறிப்பை தர எங்கள் முன்னால் ஒரு எலுமிச்சை கனியையும் கூர்மையான ஒரு அரிவாளையும் எடுத்து வைத்தார்.
எங்களை எலுமிச்சையின் மீது அரிவாளின் கூர்மையான பக்கத்தை வைக்கக்கூறினார். எலுமிச்சையின் மீது அரிவாளை வைத்ததுதான் மாயம் எலுமிச்சை இரண்டாக பிளந்தது. அந்த அரிவாளின் கூர்மை அந்தளவு இருந்தது.
அந்த அரிவாளை எடுத்து தனது வயிற்றை அவர் சரசரவென்று வெட்டிக் கொண்டார். ஆனால், வயிற்றில் வெட்டியதன் அடையாளமாக கோடுமட்டும் உருவாகியிருந்தது. சிறு காயமில்லை. துளி இரத்தம் இல்லை.
ஆச்சரியத்தோடு நாங்கள் அதை பார்த்து கொண்டிருந்தோம்.
பிறகு திருநீற்றைக் கொண்டு சில விந்தைகளை நிகழ்த்தி எங்களது எதிர்காலம் எப்படியிருக்கும் என்பதையும் கூறினார்.
'நீங்கள் மிகப் பெரிய விஷயங்களை அடையப் போகிறீர்கள். உலகத்தில் நல்லவர்களுக்கு கவசமாக நீங்கள் இருப்பீர்கள். தர்மத்தை ஸ்தாபிப்பீர்கள்' என்றார். ஸ்வாமிஜியைப் பார்த்து இப்படிக் கூறியவர். எங்களது மனதில் இருந்த பல ஐயங்களுக்கும் விடைகூறினார். 'இதையெல்லாம் நானா சொல்லல இங்கிருக்கிறவ காட்டித்தர்றா..' என்று தனது தொடைப் பகுதியை காட்டினார்.
எங்களுக்கு புரியவில்லை. விளக்கம் தந்தார் ரிஷி யோகி, "அங்குதான் அவர் சஞ்சீவி மூலிகையை தைத்து வைத்திருக்கிறார். சஞ்சீவினி காளியம்சம் என்பதால் அப்படி கூறுகிறார்." என்றார். (மேலும் நடந்த பல நிகழ்வுகளை வேறொரு சந்தர்ப்பத்தில் கூறுகிறோம்.)
நாங்கள் அவரிடம் விடைபெற்றுத் திரும்பினோம்.
சஞ்சீவினியை வைத்திருக்கும் ஒருவரை அறிந்துகொண்ட மகிழ்ச்சியும் பிரமிப்பும் எங்களுக்குள் வெகுகாலம் இருந்தது.
திரும்பி வரும்போது ஸ்வாமிஜி என்னிடம் கூறினார். "குருவின் அருள் இருந்தால் சஞ்சீவினி மூலிகையை விட சக்தி வாய்ந்ததை அடைய இயலும்"
இந்த நிகழ்வு நடந்து சுமார் மூன்று வருடங்களுக்கு பிறகு, ஒருநாள் அடியேனுக்கும் இன்னும் இருவருக்கும் 'யோக சஞ்சீவினி' வழங்கப்பட்டது.
அந்த அனுபவத்தை வெறும் வார்த்தையால் விவரிக்க இயலாது.
சஞ்சீவினி சதாசிவனின் கருணையால் யோகசஞ்சீவினியாக வழங்கப்படுகிறது. அதைப்பற்றி இந்த காணொளியில் விவரித்துள்ளேன். காணுங்கள். யோக சஞ்சீவினியை பெற தொடர்பு கொள்ளுங்கள்..
கிருஷ்ணதாசர்,
(குரு சேவகர்)
சிவன் இராஜ யோகம்
9361062620
No comments:
Post a Comment