டில்லி முதல் கஜுராஹோ வரை நண்பருடன் ஒரு சாகசப்பயணம் இறுதிப்பகுதி
சம்பல் பள்ளத்தாக்கை கடந்து செல்ல ஒரு காலத்தில்
ஒட்டக சபாரிதான் உதவியது ...
சம்பல் சரணாலயத்தின் உட்பகுதிகளையும் காட்டுயிர்களையும் பார்த்து ரசிக்க இந்த ஒட்டகச் சவாரிப் பயணம் உதவியாக உள்ளது. மிக நீண்ட காட்டுப்பாதைகள், ஆற்றங்கரையை ஒட்டிய நடைபாதைகள், பள்ளத்தாக்குகள், கிராமங்கள் வழியாக இந்த ஒட்டகப்பயணத்தை மேற்கொள்ளலாம். இந்த பயணத்தின்போது இந்தியன் ஸ்கிம்மர், காமன் போச்சார்ட், ரட்டி ஷெல்டக், லெஸ்ஸர் விசிலிங் டீல், மஞ்சள் லாப்விங், சீப்பு வாத்து போன்ற பறவைகளையும் பார்த்து ரசிக்கலாம். யமுனை நதிக்கரையில் அமைந்திருக்கும் பாடேஷ்வர் எனும் புராதானமான கோவிலுக்கு இந்த ஒட்டகச்சவாரி மூலமாக பயணம் மேற்கொள்ளலாம்.
ஆற்று மிதவைப்படகு சவாரி
சம்பல் சரணாலயத்தில் மிதவைப்படகு போக்குவரத்து முக்கியமான சுற்றுலா அம்சமாக உள்ளது. ஆற்றங்கரையில் காணப்படும் பறவைகள் மற்றும் விலங்குகள் போன்றவற்றை மிக அருகில் பார்க்க வசதியாக இந்த படகுகளை கையாளுவதில் படகோட்டிகள் திறமை பெற்றவர்களாக உள்ளனர். அனுபவமிக்க இயற்கை வழிகாட்டிகளும் உடனிருந்து காட்டு விலங்குகள் மற்றும் தாவரங்கள் பற்றி பயணிகளுக்கு தேவையான தகவல்களை அளிக்கின்றனர்.
சம்பல் சஃபாரி
சம்பல் சஃபாரி எனும் இந்த காட்டுப்பயணம் உங்களுக்கு சம்பல் சரணாலயத்தின் உட்பகுதியை தரிசிக்க உதவுகிறது. இந்த சரணாலயம் ராஜஸ்தான், மத்தியப்பிரதேஷ் மற்றும் உத்தரப்பிரதேசம் போன்ற மூன்று மாநிலங்களால் நிர்வகிக்கப்படுகிறது.
பாடேஷ்வர் கோவில்
சம்பல் சரணாலயப்பகுதியில் விலங்குகள் மற்றும் பறவைகள் மட்டுமல்லாது யமுனை நதிக்கரையில் அமைந்துள்ள பாடேஷ்வர் கோவிலையும் பயணிகள் தரிசிக்கலாம். இந்த தொகுப்பு கோவில் வளாகத்தில் சிவபெருக்கான 100க்கும் மேற்பட்ட கோவில்கள் அமைந்துள்ளன. இந்த பாடேஷ்வர் தலம் கிருஷ்ணர் அவதரித்த ஸ்தலமாகவும் கருதப்படுவதால் இந்த கோவில் ஒரு முக்கியமான ஆன்மீகத் தலமாக பிரசித்தி பெற்றிருக்கிறது.
நாங்கள் ஒட்டக்சவாரி எல்லாம் செய்து கடக்க நேரமோ பணமோ உடலில் பலமோ இல்லை… எனது இந்தியா மேப் காட்டிய அடுத்தடுத்த ஊர்களுக்கு டவுன் பஸ் போன்ற எதிலாவது தொற்றி சம்பலை கடப்பது என்ற உறுதியுடன் பன்னா, கட்னி
என்று வேகாத வெயிலில் பகல் முழுதும் ஊர்வலம் சென்று இரவு ஜபல்பூர் வந்து சேர்ந்தோம்.
இனி சென்னை செல்ல தமிழ் நாடு எக்ஸ்பிரஸை பிடிக்க நாக்பூர் தான் ஒரே வழி அது 543 கிமீ ஓட்டலில் இரவு உணவை முடித்து நாக்பூர் பஸ் பிடித்தோம்..இரவு முழுதும் பயணித்து மறு நாள் 12 மணிக்கு நாக்பூர் வந்தோம். தமிழ்நாடு எக்ஸ் பிரஸில் அன் ரிசர்வ்ட் பெட்டியில் நரகத்தை தரிசித்து சென்னை வந்தோம்.
(திட்டமிட்ட படி அன்றைய (2003)செலவு each 2000/-
இதே கஜுராஹாவை மட்டும் எளிதாகவும் கண்டு களிக்க சென்னை போபால் விமானத்தில் சென்று அங்கிருந்து கஜுராஹோ போய் வர வாடகைக்கார் மற்றும் ஆன் லைன் மூலமாக ரூம் புக் செய்தும் சுமார் 20,000 ல் போய்வரலாம். ஆனால் எங்களுக்கு கிடைத்த த்ரில்லும் விரிவாக பயணக்கட்டுரை எழுத
அனுபவமும் கிட்டாது... இதை சாகசப்பயணம் என எழுதினாலும் புலம் பெயர்ந்த வட இந்திய தொழிலாளர்களின் இன்றைய பரிதாப நிலையில் நடந்தே ஆயிரக்கணக்கான தூரத்தை கடந்ததை ஒப்பிடுகையில் இது ஒன்றுமில்லைதான். எனினும் ஒரே மாதிரி வாழ்க்கையின் நடை முறை மாற்றி துணிவுடன் முயன்றால் எதையும் சாதிக்கலாம்.
அடுத்து 2005 ல் மனைவியுடன் மேற் கொண்ட நைமி சாரண்யம் அயோத்தி ,அலகாபாத்,மதுரா யாத்திரையில் சந்திப்போம்
வெங்கடேசன் (6381369319)
No comments:
Post a Comment