*******
🌹💫
உடல்(மன) நலம்:
🌹💫
*******
உடல் கழிவுகளையும், மனக் கழிவுகளையும் வெளியேற்றாமல் அடக்குவதே பெரும்பாலான உடல் நலக் குறைவுகளுக்கும், உடல் நோய்கள் உண்டாவதற்கும் காரணமாகின்றன
உடல் மற்றும் மனக் கழிவுகள் பற்றியும், மீறி அடக்குவதால் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் நோய்கள் பற்றிய ஒருசில அவசியமானத் தகவல்களை மட்டும் நண்பர்களின் நலனுக்காக இந்தப் பதிவில் ....,
அடக்கக்கூடாதவை:
*******
* பசி
* தாகம்
*தூக்கம் ஆகிய மூன்றையும் அடக்காமல் உடனே நிறைவு செய்ய வேண்டும்.
*சிறுநீர்
*மலம்
*வாந்தி
*தும்மல்
*சுக்கில சுரோணிதம் (விந்து & நாதம்) ஆகியவற்றையும் அடக்காமல், பாதுகாப்பாக வெளியேற்றிவிட வேண்டும்.
நோய் என்பது தவிர்க்க முடியாத விபத்து அன்று:
நோய் வருவதற்கானக் காரணங்களை அறிந்து கொண்டால், நோய் வராமல் தடுக்கவும், வந்த நோய்களை எளிதில் போக்கவும் முடியும்.
மனிதன் வாழும் காலத்தே,
* உணவு
* உழைப்பு
* உறக்கம்
* உடலுறவு
* எண்ணம்
என்ற ஐந்தையும் அவசியமான அளவிற்கு (required limit) முறையோடு (method) மேற்கொள்வதன்மூலம் பெரும்பான்மையான உடல் நோய்களை வருமுன் தவிர்க்கவும், வந்த நோய்களைப் படிப்படியாக குறைத்து, முழுமையாகப் போக்கவும் இயலும்.
உணவு:
****
உடல் வளர்ச்சிக்கும், உடலியக்கம் மற்றும் உழைப்பால் வீணாகும் ஆற்றலை மீட்டுக் கொள்வதற்கும் தேவையான ஆற்றல் உணவிலிருந்தேக் கிடைக்கிறது.
உணவை தேவையான அளவிற்கும் குறைவாக சாப்பிடுவதால் உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைக்காது.
உணவை தேவையான அளவிற்கும் அதிகமாக சாப்பிட்டாலும், உடலுக்கு ஒவ்வாத உணவை சாப்பிட்டாலும் உணவு செரிக்காமல், நொதித்து, வாயு உற்பத்தியாகி, காற்றோட்டம், வெப்ப ஓட்டம், இரத்த ஓட்டம் இவற்றில் பாதப்புகள் ஏற்பட்டு அதன் காணமாக செரிமான உறுப்புகளில், மின் குறுக்கு ஏற்பட்டு வலி, நோய்கள் உண்டாகின்றன.
உழைப்பு:
****
அளவான உழைப்பு ஒவ்வொருவருக்குமே அவசியமானது.
அளவுக்கு மீறிய உழைப்பு, உடலாற்றலை வீணாக்கும். அளவுக்கு மீறிய உடலுழைப்பால்
பாதிக்கப்பட்ட உடலுறுப்புகளில் வலிகளுக்கும், ஒருசில நோய்களுக்கும் வழிவகுக்கும்.
உழைப்பின்மை சோம்பலை வளர்த்து, உடற் செயல் திறனைக் குறைத்து, இரத்த ஓட்டத்தைத் தாமதப் படுத்தும். இதனால் ஏற்படும் இரசாயன மாற்றங்களால் விளைகின்ற கழிவுப் பொருட்கள் உடலைவிட்டு வெளியேறாமல், உடலில் தங்கி, பலவகை நோய்களை உண்டுபண்ணும்.
உறக்கம்:
****
உடலுக்கு ஓய்வைத் தருவதே உறக்கமாகும்.
இயற்கை நமக்கு உறக்கத்தைக் கொடுத்து, அதன்மூலம் உடலைப் பழுது பார்த்து, உடல் ஆற்றலைப் புதுப்பிக்கின்றது. உடற் களைப்பை நீக்குகின்றது.
அதிக உறக்கத்தால் உடல் இயக்கங்கள் குறைந்து, கழிவுப் பொருட்கள் முறையாக அகற்றப் படாத நிலை ஏற்படும்.
போதிய தூக்கமின்மையால் உடல் களைப்பு முழுவதும் நீங்காமல், உடலாற்றலைப் புதுப்பிக்கப்படாது. இதனால் நரம்பு மண்டலமும், அறிவுத் திறனும் பாதிக்கப்படக் கூடும்.
குறைந்தப் பட்சம் 6 மணி நேரமும், அதிகப்பட்சமாக 8 மணி நேரமும் தூங்குவது மிக்க நலம்.
உடலுறவு:
*****
உடலுறவு, உடல் நலனுக்கும், மன நலனுக்கும் இன்றியமையாத ஒன்று.
கணவன் மனைவி உடலுறவை தேவைக்குக் குறைவாக அலட்சியப் படுத்தாமலும், அளவுக்கு மீறாமலும் அனுபவிக்க வேண்டும்.
அளவுக்கு மீறி, உடலுறவு மேற்கொள்ளும்போது கண் எரிச்சல், உடற் சோர்வு போன்ற பாதிப்புகள் வெளிப்படுகின்றன.
தேவைக்குக் குறைவாக உடலுறவு அமையும்போது, உடலின் நோய் எதிர்ப்பு சக்தி படிப்படியாகக் குறைய ஆரம்பித்து, நோய்களுக்கு வழிவகுக்கிறது.
மனக் கவலை, மனச் சோர்வு, தன்னம்பிக்கையின்மை ஆகியவற்றையும் தோற்றுவிக்கின்றது.
பெரும்பாலும் குடும்பத்தில் பிரச்சனைகள் தோன்றுவதற்கு பாலுறவில் நிறைவின்மையே முக்கிய காரணமாக அமைகிறது.
தவிப்பும், ஏமாற்றமும் தோன்றாத வகையில் தம்பதிகள், ஒருவர் மற்றவரின் மனப் போக்கிற்கும், உடல் தேவைக்கும் மதிப்பளித்து, தனது பாலியல் தேவைகள் மற்றும் விருப்பங்களை நிறைவு செய்துக்கொள்ள வேண்டும்.
பாலுறவு வேட்கை தேவைக்குக் குறைவாகவோ, அதிகமாகவோ இருக்கும்பட்சத்தில், உரிய
* குண்டலினி யோகம்,
* காயகல்பப் பயிற்சி,
* உளவியல் சிகிச்சை
* பாலியல் சிகிச்சை
மேற்கொள்வதன் மூலம் சீரமைத்து, வாழ்வை இனிமையாக்க வேண்டும்
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""''''""""""""""""""
எண்ணம்:
*****
மனதை வலுப் படுத்துவதிலும், வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதிலும், உடலில் இரசாயன மாற்றங்களை ஏற்படுத்துவதிலும், உடல் நோய்களை ஊக்குவிப்பதிலும் எண்ணங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன.
* Anger - கோபம்,
* Sadness - சோகம்,
* Fear - பயம்,
* Surprise - ஆச்சரியம்,
* Disgust - வெறுப்பு,
* Happiness - மகிழ்ச்சி போன்ற அடிப்டை எண்ண உணர்வுகளை வௌப்படுத்தாமல் அடக்குவதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும், அதன் காரணமாக வரும் உடல் நோய்கள் பற்றியும், மேற்படி எண்ண உணர்வுகளைப் பாதுக்காப்பாக எவ்வாறு வெளியேற்றி, உடல் நோய்களைத் தவிர்ப்பது என்பது பற்றியும், ஏற்கனவே வந்த நோய்களிலிருந்து எவ்வாறு விடுதலைப் பெற்று நலம் பெறுவது என்பது பற்றியும் அடுத்தப் பதிவில்.....
நமது உடலை, உடல் இயக்கங்களை, உடல் நலனை கட்டுப்படுத்துவதும், இயக்குவதும் மனமே..!
மனம், சிந்தனைகள், உணர்வுகள் அனைத்தும் மூளை சார்ந்ததே.
ஓர் அதிர்ச்சியான, கடினமான உண்மை என்னவென்றால், செயற்கைக் காரணிகள் மற்றும் விபத்துப் போன்றவற்றால் ஏற்படும் உடல் பிரச்சனைகளன்றி, மற்ற அனைத்து உடல் நலப் பிரச்சனைகளுக்கும், உடல் நோய்களுக்கும், மனமே அடிப்படைக் காரணமாகின்றது.
No comments:
Post a Comment