Monday, May 25, 2020

டில்லி முதல் கஜுராஹோ வரை பகுதி 10

டில்லி முதல் கஜுரஹோ வரை பகுதி 8

'கடவுளை நாம் அடைய வேண்டுமானால் காம குரோதங்கள் அனைத்தையும் வெளியே விட்டுவிட்டு உள்ளே செல்ல வேண்டும்' என்பதைக் காட்டுவதற்காகவே இவை செதுக்கப்பட்டுள்ளன என்கிறார்கள் ஒரு தரப்பினர்.ஆண் பெண் தாம்பத்தியம் புனிதமானது என்பதை உலகத்தினருக்கு உணர்த்தவே இந்தக் காமசூத்திரக் கலைகளை சிற்பங்களாக வடித்து   நிறுவியிருக்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள்.'கஜுர்' என்றால் பேரீச்சம்பழம் என்றும் 'ரஹோ' என்றால் தங்கம் என்றும் அர்த்தம். இந்தப் பகுதியில் விளைந்த பேரீச்சம் பழங்கள் தங்கம் போல்  இருந்ததால் இப்பிரதேசத்துக்கு கஜுராஹோ என்று பெயர் வந்ததாம்.உலகத்தின் ஏழு அதிசயங்களில் ஒன்றாக தாஜ்மகால் bமதிக்கப்படுவதைப் போல, இந்தியாவின் ஏழு அதிசயங்களில் ஒன்றாக கஜுராஹோ போற்றப்படுகிறது.

ஆலயங்களில் இன்றளவும்  பூஜைகள்  வழிபாடுகள் நடந்த வண்ணம் உள்ளன.  இங்குள்ள கோபுரங்களை, கைலாச மலையுடன்  ஒப்பிடுகின்றனர்.சில கோயில்கள் தென்னிந்திய ஆலயங்களைப் போலவும் காணப்படுகின்றன.. 
கஜுராஹோ கோயில்கள் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய நினைவுச்சின்னங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஆண்டு தோறும் பிப்ரவரியில் இந்த ஆலயத்தின் வளாகத்தில் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்படுகிறது.தினமும் மாலைவேளையில் நடத்தப்படும் ஒலி ஒளி நிகழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை ஈர்க்கின்றன. கஜுராஹோவின் சிறப்புகளையும், வளமையையும் இந்நிகழ்ச்சி குறிக்கிறது. கஜுராஹோ கோயில்களை கண்டு களிக்க, தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் அங்கே குவிகின்றனர்..

எப்படியோ இவ்வளவு கஷ்டப்பட்டு காண வந்த கஜுராஹோவை இரண்டு மணி நேரம் கூட இருந்து பார்க்க கொடுத்து வைக்க வில்லை..எந்த ரிசர்வேஷனும் செய்யாமல் இன்னும் 1654 கிமீக்கு மேல் பயணம் செய்து எப்படி சென்னையை அடைவது என்ற கவலையில் உடன் மனதில்லாமல் விடுதியை காலி செய்து புறப்பட்டோம்

ஆனால் கடக்க வேண்டியது சம்பல் பள்ளத்தாக்கு...
நாட்டிலேயே மிகவும் ஆபத்தான பள்ளத்தாக்கு.. போனா என்னவாகும் தெரியுமா?

உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான மாநிலங்களை மும்முனைப்பகுதியாகக் கொண்டுள்ளதுதான் சம்மல் பள்ளத்தாக்கு. 1070ம் ஆண்டு இப்பகுதியில் சம்பல் தேசிய சரணாலயம் ஒன்றும் உருவாக்கப்பட்டது. இந்த வனப்பகுதியை ஊடறுத்துக்கொண்டு ஆழமான பள்ளத்தாக்குகள், மலைகள், மணற்கரைப்பகுதிகள் வழியாக சம்பல் ஆறு ஓடுகிறது. சம்பல் ஆறு முழுவதும் கரியல் முதலைகள் ஏராளமாக காணப்படுகின்றன. கங்கை டால்பின்கள் மற்றும் ஆலிகேட்டர் முதலைகளும் இதில் வசிக்கின்றன.

ஆழமான பள்ளத்தாக்கு
பல நூற்றாண்டுகளாக மழை மற்றும் வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட மண் அரிப்பின் மூலம் சம்பல் பகுதியில் காணப்படும் ஆழமான பிளவுப் பள்ளத்தாக்குகள் உருவாகியுள்ளன. சம்பல் தேசிய சரணாலயம் 400 கிலோ மீட்டர் தூரத்தை உள்ளடக்கியதாக 400 கிலோ மீட்டருக்கு ஓடும் சம்பல் ஆற்றுடன் மொத்தம் 1235 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.
சம்பல் என்னும் சர்மான்யவதி
புராதாண நூல்களின்படி இந்த சம்பல் ஆறு ஒரு காலத்தில் சர்மான்யவதி எனும் பெயரால் அறியப்பட்டிருக்கிறது. இது ரந்திதேவர் எனும் அரசர் ஆயிரக்கணக்கான பசுக்களை பலி கொடுத்தபோது பெருகிய ரத்தத்தினால் உருவானதாக சொல்லப்படுகிறது. இது போன்ற கதைகள் இப்பகுதிக்கு அதிக மக்கள் பயணம் செய்யாமல் தடுத்து விட்டன. இருப்பினும் இந்தியாவில் ஓடும் மாசுபடாத தூய்மையான ஆறுகளில் இந்த சம்பல் ஆறும் ஒன்று என்பதே மறுக்க முடியாத உண்மையாகும்.

கொடூரமான பள்ளத்தாக்கு
இயற்கையின் காரணமாக சம்பல் பள்ளத்தாக்கு ஆபத்தானது அல்ல. உண்மையில் அது கொள்ளையர்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் மிகுந்த பகுதியாக உள்ளது. சம்பல் பள்ளத்தாக்கின் கீழ் வரும் நிலப்பரப்பு, செங்குத்தான பள்ளத்தாக்குகள், பெரிய நதி, மர்ம குகைகள் போன்ற இயற்கை அழகுகளால் நிறைந்திருக்கிறது. ஆனால், அதே நேரத்தில் இந்த பள்ளத்தாக்கு சாமானிய மக்களை அச்சத்தின் உச்சத்திற்கே அழைத்துச் செல்கிறது. டகோஸ் என்று அழைக்கப்படும் மக்களால் சட்டவிரோத நடவடிக்கைகளால் பொதுமக்கள் அத்தகைய உயர் எச்சரிக்கைப் பகுதிகளில் செல்ல பரிந்துரைக்கப்படவில்லை.

1950-70ம் ஆண்டுகளில் மத்திய பிரதேச மாநிலம் சம்பல் பள்ளத்தாக்கில் பூலான் தேவியைப் போன்றவர்கள் பலர் வாழ்ந்து வந்தனர். கொலை கொள்ளை போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்த அவர்களை சம்பல்காட்டு கொள்ளைக்காரர்கள் என மக்கள் அழைத்தனர்.

பல்வேறு சம்பவங்களால் அவர்கள் எல்லாம் அழிந்து விட இன்னமும் அவர்களது பெயர்களை தங்களது பிள்ளைகளுக்குச் சூட்டி வருகின்றனராம் அப்பகுதி மக்கள்.

சம்பல் கொள்ளையர்கள்....
குதிரையில் துப்பாக்கியுடன் வந்து கிராமங்களை சூறையாடுவது, வனவிலங்குகளை வேட்டையாடி கடத்துவது, காட்டில் பதுங்கி வாழ்வது என நாடு முழுவதும் சம்பல் கொள்ளையர்கள் பற்றிய பீதி கிளப்பும் கதைகள் சொல்லப் பட்டு வருகின்றன.

பூலான் தேவி....
இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் பூலான்தெவி, மல்கான் சிங், கப்பர் சிங், தாகாய்ட் மன்சிங், தாத்வூ ஆகியோர் ஆவர்.

தெய்வமாகக் கொண்டாடும் மக்கள்...

சந்தனக்கடத்தல் வீரப்பனைப்போல இவர்கள் கொள்ளை, கொலையில் ஈடுபட்டாலும், சம்பல் கொள்ளையர்கள் தங்கள் சாதி, மதத்தை சேர்ந்தவர்களுக்கு பல்வேறு நன்மைகளையும் செய்துள்ளனர் என்பது இன்றும் அவர்களை தெய்வமாக மதிக்கும் மக்களால் அறிந்து கொள்ள முடிகிறது.

இந்த பள்ளத்தாக்கை கடந்துதான் நாங்கள் செல்ல வேண்டும்.  ஆனாலும் ஆபத்தை விலைக்கு வாங்கி பார்த்து ரசிக்க காட்சிகளும் உள்ளன..அவை என்ன 
பார்ப்போமா?
                தொடரும்


No comments:

Post a Comment