Monday, May 25, 2020

டில்லி முதல் கஜுராஹோ வரை பகுதி 8


டில்லி முதல் கஜுராஹோ வரை நண்பருடன் ஒரு சாகசப்பயணம்...

(வெங்கடேசன் 6381369319)

பகுதி 6  குவாலியர் செல்ல நேரடி பஸ் இல்லாததால் ரயில் பிடித்து போய் சேர்ந்தோம். ..நள்ளிரவில் எப்படியோ ஒரு விடுதியைப்பிடித்தோம் (55/-)  வட இந்திய ஓட்டலில் நான் ஸாகாஹாரி  தாலி 25/-ம் நண்பர் மாம்சாஹாரி 40/- க்கும்  சாப்பிட்டோம். ஏழு நாட்களுக்கு பின் மனைவி நினைவு வந்து STD பேசினேன். 

மறு நாள் குவாலியர் சுற்றிப்பார்க்க கிளம்பினோம். ஃபட்ஃபட் பிடித்து போகச்சொன்னார்கள். அது ஒன்றுமில்லை பட்பட் என சத்தமிடும் ஆட்டோதான் 

இந்தியாவின் புகழ்பெற்ற பெருமைமிக்க நினைவுச்சின்னங்களில் ஒன்றாகக் கருதப்படும், குவாலியர் கோட்டை குவாலியர் நகரத்தின் மையத்தில் அமைந்துள்ளது. ஒரு குன்றின் உச்சியில் அமைந்திருப்பதால், மலையடிவாரத்திலுள்ள குவாலியர் நகரம் மற்றும் அழகிய பள்ளத்தாக்கின் கவின் மிகு காட்சியைக் கண்டு இன்புற முடியும்.

கோட்டைக்குச் செல்வதற்கான குறுக்கும் நெடுக்குமான பாதை நெடுகிலும், ஜைன தீர்த்தங்கரர்களால் பிரம்மாண்டமான பாறைகளில் செதுக்கப்பட்ட  கல்வெட்டுக்கள் உள்ளன.
தோமார் வம்சத்தினைச் சேர்ந்த ராஜா மான்சிங் தோமார் என்பவரால் இப்போதுள்ள குவாலியர் கோட்டை கட்டப்பட்டது.  இந்திய கட்டிடக்கலை நுணுக்கத்தில், சீன கட்டிடக்கலையின் தாக்கம்  ஏற்பட்டிருப்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குவது, இக்கோட்டையின் தனித்தன்மை வாய்ந்த கட்டிடக் கலைநுணுக்கமாகும்.

குவாலியர் கோட்டையின் தூண்களில் செதுக்கப்பட்டுள்ள சீன டிராகன் உருவங்கள் அக்காலத்தில் நிலவிய  இந்திய சீன உறவுக்கு சான்றாக விளங்குகின்றன. மத்திய கால இந்திய கட்டிடக்கலைக்கு சிறப்பான எடுத்துக்காட்டாக இக்கோட்டை விளங்குகிறது.

இக்கோட்டை, "இந்தியாவின் ஜிப்ரால்டர்" என்று அழைக்கப் படுகிறது. பல நூற்றாண்டுகளாக இக்கோட்டை பல ராஜ வம்சங்களின் அரசாட்சியைக் கண்டு நிற்கிறது. ஆங்கிலேயர் காலத்தில், ஜான்ஸியின் ராணி லட்சுமி பாய்க்கும், தாந்தியா தோபேக்கும் ஆங்கிலேயருக்கு எதிரான போர்க்களமாக குவாலியர் கோட்டை விளங்கியது

.சூரஜ் சென் என்னும் மன்னரால் கி.பி.8 ஆவது நூற்றாண்டில் குவாலியர் நகரம் உருவாக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. மன்னரது தொழுநோயைக் குணப்படுத்திய ‘குவாலிபா’ என்னும் முனிவரின் நினைவாக இந்நகருக்குப் பெயரிடப்பட்டது. குவாலியர் நகருக்கு கி.பி. 6 ஆம் நூற்றாண்டிலிருந்து எழுதப்பட்ட சரித்திரம் உள்ளது…
குவாலியர் பார்த்த திருப்தியில் மதிய உணவை முடித்துக்கொண்டு ஜான்ஸி கிளம்ப ஆயத்தமானோம்

50 கிமீ தூரத்தில் உள்ள ஜான்சியை அடைந்து அங்கு வேறு பஸ் பிடிக்க வேண்டும்..ஜான்சி என்பது நாம் வரலாற்றில் படித்த ஜான்சி ராணி லட்சுமி பாய் ஆண்ட ஊர். அங்கும் கோட்டைகளும் பார்க்க வேண்டிய இடங்களும் ஏராளம்

காணத் தூண்டும் இடங்கள்
ஜான்சி கோட்டை

ராணி மஹால் (அரசியின் அரண்மனை)
உத்திர பிரதேச அரசு அருங்காட்சியகம்
மஹாலக்ஷ்மி கோவில்
லெஹர் கி தேவி கோவில்
பஞ்ச்குய்யன் கோவில் - பாரம்பரியமிக்க கோவில், (லக்ஷ்மி பாய் இங்கு இறைவழிபாடு செய்வதுண்டு)
கணேஷ் மந்திர்
சித்தேஷ்வர் கோயில் (GIC இண்டர் காலேஜ் அருகில்) - பண்டிட் ரகுநாத் விநாயக் துலேகார் அவர்களால் கட்டப்பட்டது
பஞ்சதந்தரா பூங்கா (மிக அதிகமான கூட்டங்களைக் கவர்கிறது)
(கண்டோன்மெண்ட் பகுதியில் இருக்கும் பொதுமக்கள் பூங்கா காண்பதற்கு உரியது)
"ஷௌர்யா ஸ்தம்பா" சுதந்திர இந்தியாவின் 21 பரம்வீர் சக்ரா விருதுகளை வென்றவர்களின் தனித்தன்மைவாய்ந்த நினைவுச்சின்னம்

உல்லாசப் பயணங்கள்    
சுக்மா-டுக்மா அணைக்கட்டு: பெட்வா ஆற்றின் மீதிருக்கும் மிகப் பழமையான, நீளமான மற்றும் மிகவும் அழகான அணைக்கட்டு, தோராயமாக ஜான்சியிலிருந்து 45 கிமீ தூரத்தில், பபினா நகருக்கு அருகில் இருக்கும் இது பருவக்காற்று முடிந்தபிறகு குளிர் காலத்தில் மிகுந்த கண்ணுக்கினிய இடமாக இருக்கும்.
மாடா டிலா அணைக்கட்டு: ஜான்சி நகரின் தெற்கே தோராயமாக 55 கி.மீ. தொலைவில் இருக்கிறது, இது ஒரு அழகான உல்லாசப் பயண இடம். இந்த அணைக்கட்டு பெட்வா நதியின் மீது கட்டப்பட்டுள்ளது. அணைக்கட்டின் அருகில் ஒரு தாவரவியல் பூங்கா இருக்கிறது.

ஆனால் இதையெல்லாம் பார்க்க ஏது நேரம் ?பஸ் வழியே எட்டிப்பார்த்து விட்டு சதார்பூர் போக பஸ் ஏறினோம். பஸ்ஸில் மூன்று மணி நேரம் நின்றவாறே பயணித்தாலும் வட இந்தியர்களை கவனித்தவாறு பொழுதை போக்கி சதார்பூர் வந்து சேர்ந்தோம்...அங்கிருந்து ஒரு ஷேர் ஆட்டோ பிடித்து கஜுராஹோ அடைந்தோம்.(அன்று முழுதும் 250 கிமீ எட்டு மணிநேரப்பயணம் மே மாத வெயிலில் )கஷ்டப்பட்டதற்கு ஈடாக 220/- க்கு வெளிநாட்டவர் தங்கும் விடுதியில் (சீசன் இல்லாததால்)அருமையான ரூம் கிடைத்தது.....
             நாளை...



1)ஜான்சி கோட்டை2,3,)குவாலியர் கோட்டை4)கோட்டையிலுள்ள புத்தர் (?)சிற்பம்

No comments:

Post a Comment