டில்லி முதல் கஜுராஹோ வரை பகுதி 1
ஆண்டு 2001
அடியேன் commercial யாத்திரை அழைத்துச்செல்வோரை தவிர்த்து பள்ளியில் பணியாற்றும் நண்பர் செல்வத்தை அழைத்துக்கொண்டு மனம் போன போக்கில் வட இந்திய பயணம் மேற்கொள்ள திட்டமிட்டோம்...
நண்பர் தமிழ் நாட்டைத்தாண்டியவரல்ல. நான் ஏற்கனவே அண்ணாமலைப்பல்கலைக்கழக பி எட் தேர்வாளராக வட நாடு போன அனுபவம் உண்டு. நான் மேனிலை பள்ளி ஆசிரியராக இருந்தாலும் MEd முடித்தவர்களை கடைசி நிமிடத்தில் விரிவுரையாளர் கிடைக்காமல் டில்லி பம்பாய் கல்கத்தா என்று இரண்டு நாள் முன்னாடி தேர்வாளராக போகச்சொல்வார்கள்.ஊர் சுற்றும் ஆசையில் டிக்கட் கிடைக்காமல் un reserved ல் கூட பயணம் செய்திருக்கேன். ஒரு தடவை reserve செய்த டிக்கட்டுடன் நண்பர் சென்ட்ரலில் இருக்க நான் பஸ் ட்ராபிக்ஜாமில் மாட்ட ட்ரெய்னை தவற விட்டு மறுநாள் unreserved ல் விசாகப்பட்டினம் போக என express ticket எடுத்து coromandel express ல் ஏறி super fast என டிக்கெட்டில் இல்லை என்று (ஐந்து ரூபாய் வித்தியாசம்) 50 ரூபாய் ஃபைன் கட்டி ஊர்போய் சேர்ந்த அனுபவம்..ஒரு தடவை டிக்கட் நண்பரிடம் இருக்க அவசரத்தில் விஜயவாடாவில் எதோ ட்ரெயினில் ஏறி அடுத்த ஸ்டேஷனில் இறங்கி கிருஷ்ணா நதி bridge வழியே நடந்து விஜயவாடா வந்து நண்பரை பிடித்தேன். மும்பை ட்ரெயினில் துண்டு போட்டு போர்ட்டர் பிடித்த இடத்தை விலைக்கு வாங்கி ஒரு நாள் முழுதும் பாத்ரூம் போகாமல் arrest ஆன அனுபவமும் உண்டு...
இவ்வாறான அனுபவங்களையும் சொற்ப இந்தி அறிவையும் கொண்டு நண்பர் செல்வத்துக்கு வட இந்தியாவை காட்டியே தீருவது என உறுதியுடன் நாங்கள் செய்த ஒரே ஏற்பாடு டில்லிக்கு இருவரும் போக ரிசர்வ் செய்தது?திரும்பி வர? நாள் கணக்கு தெரியாததால் அப்படியே எல்லா ஊரையும் மனம் போன படி பார்த்துக்கொண்டே பத்து பதினைந்து நாளில் இந்தியா மேப்பார்த்துக்கொண்டே ஒவ்வொரு ஊராக பஸ்ஸோ ட்ரெய்னோ பிடித்து வந்து விடலாம் என்ற குருட்டாம் போக்கு திட்டம்…
தங்குவதற்கு பயணத்திற்கு எந்த ஏற்பாடும் இல்லை என்பதால் 15 நாள் பயணத்திற்கும் அவரவர் எளிதாக சுமக்க தோளில் ஒரே ஒரு bag ..அதில் மூன்று செட் மாற்று உடைகள்.இந்தியா மேப்..toilet சாமான்கள்...கொஞ்சம் பணம் அதில் பாதியை பாண்ட் உள்ளே வைத்து தைத்துக்கொண்டேன்(அப்பல்லாம் ATM card இல்லையே)செல்போனும் கூட இல்லை.வீட்டு டெலிபோனுக்கு STD booth ல் விவரம் சொல்வதாக சொல்லி மாமி பசங்கள் தொல்லையிலிருந்து விடுபட்டு நண்பருடன் கிளம்பினேன்.
முதலில் டில்லியில் போய் காலையில் இறங்கினோம். ஹரித்வார் போக இரவுதான் ட்ரெய்ன். எனவே 150 ரூபாய் டிக்கட் எடுத்து (2002ல்)இப்ப 300/- ஒரு நாள் டூர் பஸ்ஸில் டில்லியை பார்க்க கிளம்பனோம்..அதற்கான புக்கிங் டில்லி ஸ்டேஷன் பக்கத்திலேயே...காலைக்கடன்களை ட்ரெயினிலேயே முடித்துக்கொண்டதால் எதையோ டிபனாக கொறித்து விட்டு 9.00 மணிக்கு பஸ் ஏறினோம். முதலில் பழைய டில்லி ..இங்கு வரலாற்று முக்கியம் வாய்ந்த இடங்கள் நிறைய...
1)குதுப்மினார்,
இது மட்டுமல்ல அங்குள்ள அனைத்து கட்டிடங்களுமே முகலாயர்கள் வாழ்க்கையின் மிச்சங்கள். எங்கும் எதிலும் பிரமாண்டம். மன்னர்கள் வாழ்க்கையின், சுகம், வீரம், போட்டி, அழிவு, காதல், வாழ்க்கை முறை, சதி, தோல்வி, எல்லாவற்றையும் கூறும் வரலாற்று சான்றுகள். கண்டிப்பாக எல்லோரும் ஒரு முறை ஏனும் காண வேண்டிய இடங்கள்.
இண்டியா கேட் : போரில் மரணம் அடைந்த வீரர்களுக்கு உள்ள நினைவு ஜோதி. அங்கு நின்று அந்த நாட்களை நினைவு கூறும் போது தியாகத்தின் வீரியம் உணரமுடியும்.
பஹாய் லோட்டஸ் டெம்பிள் : ஒரு அழகிய கட்டிட கலை மற்றும் தியான மண்டபம்,
இந்திராகாந்தி இல்லம் : ஒரு இறுக்கமான மனநிலையுடன் மட்டுமே இங்கிருந்து வெளி வர முடியும். அவர் பயன்படுத்திய அறைகள், புத்தகங்கள், பதக்கங்கள், விருதுகள், முக்கியமான நிகழ்வுகளின் புகைபடம், திருமண புடவை என்று எல்லாமே காட்சிக்கு. அதிலும் அவர் கொலை செய்யப்பட அன்று அணிந்திருந்த புடவை, செருப்பு ரத்த கரையின் மிச்சத்துடன்....
அடுத்தது ராஜீவ்காந்தியின் நினைவு இல்லம், அவரும் சோனியா காந்தியும் குழந்தைகளுமான புகைப்படங்கள், அவரின் படுகொலை நடந்த போது அணிந்திருந்த ஆடைகள்.... ஒரு குடும்ப தலைவனாக அவரை இழந்த குடும்பத்தாரின் வலி.... எது எப்படி இருந்தாலும் இந்திரா காந்தியின் குடும்பத்தினரின் தியாகம் வேறு எதை கொண்டும் நிரப்ப முடியாதது. அதே போல் நேரு நினைவு இல்லமும் பாரமரிக்க படுகிறது. அங்கே இந்த மூவருக்கும் அணையா விளக்கு உள்ளது.
செங்கோட்டை : பாதிக்கும் மேல் ராணுவ கட்டுபாட்டில், இதே போல் தான் ஆக்ரா கோட்டையும் உள்ளதாம். அக்பர் அவர் தலைநகரை ஆக்ராவில் இருந்து டெல்லிக்கு மாற்றிய போது கட்டியதால், இரண்டும் ஒன்று போல் இருக்கிறது.
காந்தி சமாதி : மலர் அலங்காரத்துடன் எப்போதும் எரியும் ஜோதியுடன் அந்த இடமே பார்க்க ஒரு தியான மண்டபம் மாதிரி இருந்தது. அந்த தனிமையும், இருட்டும், குளிரும், காந்தி சமாதியும் அமைதியும் வாழ்நாளில் மறக்க முடியாத நினைவானது.
வரலாற்று சிறப்பு மிக்க டில்லியை ஒரு நாளில் பார்த்து விட முடியுமா?
கல்காஜி ஆலயம்,
ஜந்தர் மந்தர் ,
நேஷனல் ஜூவலஜிக்கல் பார்க்,
அக்சர்தாம் கோவில்,
குருத்வாரா,
பதேஹ்புரி,
இஸ்கான்,
லோடி கார்டன்,
பழைய கோட்டை,
துக்ளக்காபாத்,
கார்டன் ஆப் பைவ் சயின்ஸ்,
சத்தர்புத்தர் மந்திர்,
சௌசட் கம்பா உள்ளிட்ட பல இடங்கள் நாம் காண வேண்டியவை..
எனினும் ஒரு நாள் பொழுதை காஸ்ட்லி ஓட்டலில்
ரூம் எடுத்து வீணாக்காமல் தில்லி சுற்றி பார்த்த திருப்தியுடன் இரவு ஹரித்வார் ட்ரெயின் ஏறினோம்
அன்றைய இரவும் ட்ரெயினில் கழிந்து காலையில் கங்கையில் குளித்து ரிஷி கேஷ் புறப்பட்டோம் ..ரிஷிகேஷிலிருந்து பத்ரிநாத் போய் மீண்டும் இமய மலை முழுதும் சுற்றி வட இந்தியாவிலும் மதுரா,தாஜ்மகால் ,கஜுராஹோ வந்து சம்பல் பள்ளத்தாக்கு வழியே நாக்பூர் அங்கிருந்து சென்னைக்கு ட்ரெய்ன் எனது திட்டம். பார்த்த இடங்களும் அனுபவங்களும் உங்கள் பார்வைக்கு….
தொடரும்
தில்லியில் இந்தியா கேட்,குதுப்மினார்,ஜந்தர் மந்தர் லோட்டஸ் டெம்பிள்,செங்கோட்டை
No comments:
Post a Comment