Tuesday, May 5, 2020

தாம்பத்யத்தில் தோசையின் பங்கு

தாம்பத்யத்தில் தோசையின் பங்கு
——————————————-
நான் திருநெல்வேலி. எங்க ஆத்துக்காரி திருச்சி. தஞ்சாவூர்னு சொன்னா அவுளுக்கு கோபம் வரும். ஏன்னு தெரியலை. இத திருச்சிக்காராள்ட விட்டுடலாம். Comments please!

அம்மாக்கு தோசை மாவ ஆட்டுக் கல்லுலயே அரைக்கணும், அப்பத்தான் அரைக்கும் போது வர heat வெளீல போய் உளுந்து வாடை வராம மாவு நிறைய காணும்னு சொல்லுவா. What a chemistry! இது grinderல difficult. Mixieல impossible, அதுனால தோசை ருசீல இப்போ கொஞ்சம் compromise.

தோசைக் கல்லுல தான் தோசை வாப்பா. Non stick panக்கும் இரும்பு கல்லுக்கும் calculus தெரியாமலே heat transmission expert எங்க அம்மா. தோசை உடம்பை இது எந்த அளவுக்கு பாதிக்கும்னு அம்மாக்கு தோசை மேல அவ்வளோ அன்பு. 

திருநெல்வேலி அல்வா ருசிக்கு தாம்பிரபரணி ஜலம் முக்கியமான காரணம்னா, திருநெல்வேலி தோசைக்கும் அதுவே காரணம். “திருச்சி மண்டு, இத தெரிஞ்சுக்கோன்”னு நான் சொல்ல, என் தலை வழியா காவேரி ஸ்நானம் நடந்த கதை தனி.

தொட்டுக்க மொளகாய் பொடி அல்லது தேங்காய் சட்ணி. தோசை கொஞ்சம் தடியா இருந்தாலும் திவ்யமா இருக்கும். பஞ்சா இருக்கும்.

தோசைய மடிக்க மாட்டா. Roundஆ தட்டுல போட்டுடுவா. 

மேல் பக்கம் கொஞ்சம் வெளுப்பும் அடிப்பக்கம் பொன் கலர்லயும்... நன்றாக கவனிக்கவும், brown இல்ல, பொன் கலர்லயும் இருக்கும். இந்த கலர்கள பாத்தே எனக்கு தோசை எந்த ருசீல இருக்கும்னு கணிக்க முடியும். 

தோசைல இருக்கற number of small holes வெச்சே தோசை எந்த அளவுக்கு புளிச்சுண்டு இருக்கும்னு என்னால guess பண்ண முடியும். 

தோசை நுணீல பிசிர வெச்சே தோசை வெந்த பதத்த என்னால சொல்ல முடியும். 

தோசை texture எனக்கு சொல்லும், இது மாவ அரச்ச அன்னிக்கே வாத்த தோசையா (புளியாத் தோசை என்பர்), அல்லது ferment ஆயி அடுத்த நாள் வாத்ததா அல்லது மூனா நாள் கொஞ்சம் சோடா உப்பு கலந்து வாத்ததான்னு. 

எல்லா தோசைக்கும் மொளகாப் பொடி common. But புளியாத் தோசைக்கு கொஞ்சம் புளிச்ச மோரை பக்கத்துல ஒரு கப்புல வெச்சுண்டு அதுல தோசைய மொளகாப் பொடீல தேச்சுண்டு மோர்ல முக்கி முக்கி சாப்பிடணும். இதவிட best புளியாத் தோசைக்கு வண்டிக்காரன் தொகையல் ரொம்ப பிரமாதமா போகும். வண்டிக்காரன் தொகையல் recipe வேணும்னா கேளுங்கோ, அனுப்பறேன். 

சில சமயம் மூனா நாள் மாவுல இலுப்புச் சட்டி தோசை அம்மா பண்ணுவா. அத plainஆ பண்ணுவா, நல்ல நல்லெண்ணை விட்டு.

இலுப்பு சட்டி disco தோசய எங்க ஆத்துக்காரி பண்ணுவா. திருச்சிக் காராளுக்கு இலுப்புச்சட்டி தோசை தெரியாது. எங்கம்மாட்ட இவ கத்துண்டுட்டு இப்ப மாமியாருக்கே சவால். இலுப்புச்சட்டி, ஒழிக!😀 

திருநெல்வேலி தோசயவே சாப்பிட்டு பழகின எனக்கு திருச்சி தோசை ஒரு புது அனுபவம். முதல் அனுபவம் 33 வருஷத்துக்கு முன்னால. என் மாமியார் கையால. அதுவும் புது மாப்ள ஸ்தானத்துல. கேக்கணுமா உபசாரம்.

முதல் ஆச்சர்யம். ஆத்துலயும் hotel தோசை மாதிரி முருகலா, லேசா, பெருசா, நல்ல brown colourல, தோசைய மடிச்சு போட்டு serve பண்ணலாம், என்ன தப்பு?

ரெண்டாம் ஆச்சர்யம். ஆத்துலயும் சட்ணி தவிர தோசைக்கு சாம்பார் அல்லது கொத்ஸும் வெக்கலாம். சாம்பாரையும் கொத்ஸுயையும் hotel  தான் உரிமை கொண்டாடலாமா என்ன? மொளகாப் பொடி அவசியம் இல்ல, முருகன் இட்லிக்கடைல மொளகாப்பொடி வேணும்னா extra குடுத்து வாங்கற மாதிரி, கேட்டா மாமியார் freeஆ கொடுக்கப்போறா, அவ்வளோ தானே?

மூனாம் ஆச்சர்யம். வெண்ணை நோம்படைக்கு மத்தரம் இல்ல. தோசைக்கும் வெண்ணையும் போட்டுண்டு சாப்பிடலாம்.

கடைசி ஆச்சரியம். அம்மா தாம்பிரபரணி, நீ அல்வாக்கே சொந்தம். காவேரீட்ட தோசைக்கு மல்லு கட்டி நிக்காதே, இத அவள்ட விட்டுடுன்னு கெஞ்சி கூத்தாடி அவள திருநெல்வெலிக்கு ரயில் அனுப்பி வெச்சது. 

“மாமி, தோசை ரொம்ப பிரமாதம். என்ன trick”னு மாமியார்ட கேட்டேன். புன் சிரிப்பே பதில்.

33 வருஷத்துக்கு அப்புறம் என் ஆத்துக்காரி மூலம் அந்த ரகசியம் வெளீல.

“எங்கம்மா தோச மாவோட வெந்தயமும் போட்டு அரைப்பா. ஒங்க அம்மா போட மாட்டா”. வெந்தய ரகசியம் ஒடஞ்சது. ஆனா பிரிஞ்ச திருநெல்வேலியும் திருச்சியும் எப்ப ஒட்டும்னு மனசுல துளீயூண்டு கவலை தான்.

“அம்மா, முன்னாடி விட நம்மாத்து தோசை இன்னும் பிரமாதமா tasteஆ இருக்கே. புதுசா என்ன பண்ணினா?” Last time திருநெல்வேலி போயிறந்தப்போ அம்மாகிட்ட ஆச்சர்யமா கேள்வி.

“அதுவா, ஒன் ஆத்துக்காரி வாங்கிக் குடுத்த திருச்சி ஶ்ரீரங்கம் தோசக் கல். Super அம்பி. அவள்ட thanks சொல்லு”. அம்மா திருச்சிக்கு கொடுத்த certificate.

இப்ப எங்க ரெண்டு பேருக்கள்ள மனஸ்தாபமே இல்ல. சேத்து வெச்ச தோசக் கல்லுக்கு ஜேய்!

No comments:

Post a Comment