1980 லிருந்து அந்த ஆங்கில தினசரியில் - அதை வாங்குவதை நான் நிறுத்தும் வரை- நான் ரசித்துப் படித்தது ஞாயிறு MATRIMONIAL பகுதியை!
"ADVERTISEMENT GIVEN FOR WIDER CHOICE"- என்று போடுவார்கள்.
அதாவது - "என் பெண் ஒன்றும் விலைபோகாத சரக்கு இல்லை - பரந்த அளவிலான மணமகன் தேர்வுக்காகவே விளம்பரம் தருகிறோம்!"- என்று அர்த்தம்!
"INNOCENT DIVORCEE SEEKS BRIDEGROOM"-
அது என்ன "இன்னொசென்ட்" டைவோர்ஸி? யோசித்துப் புரிந்து கொள்ளவே சில காலம் ஆனது!
அதாவது ஆண்கள் டைவோர்ஸ் ஆன பெண்களை மணக்க முன் வந்த காலம் - ஆனால் கன்னி கழியாதவளாக இருக்கணும்! "க்ளீன் ஸ்லேட்" ஆக இருக்கணும்! எனவே அந்த விவாகரத்து ஆன பெண் தன்னை "INNOCENT" DIVORCEE என்று பிரகடனப்படுத்திக் கொள்வாள்!
அடுத்த கட்டம் - WIDOW WITH MALE CHILD SEEKING ALLIANCE... - ஆண் குழந்தை இருக்கும் விதவைகள் தைரியமாக மறுமணத்தை நாடிய காலம்!
பெண் குழந்தை உள்ள விதவைகள் - அதிலும் GROWN UP DAUGHTER - உள்ள விதவை மறுமணத்தை நாடத் தயங்கிய காலம்! வருபவனுடைய 'பார்வை' தனது வயசுப் பொண்ணு மீதும் படிந்துவிட்டால் என்னாகுமோ என்ற பயம்!
மாப்பிள்ளையைத் தேடும் டைவோர்ஸ் ஆன பெண் கேட்பாள்:- "WIDOWER WITH NO ENCUMBRANCE PREFERRED" - நான் ஏதோ வெளியில் கடன் கிடன் இல்லாத ஆம்பளைனு நினைச்சேன்! அதாவது குழந்தைகள் இல்லாத WIDOWER வேண்டுமாம்! அதாவது அவனுடைய முன்னாள் மனைவி மூலம் பிறந்த குழந்தை இவளுக்கு சுமை! எனவே WIDOWER WITHOUT ENCUMBRANCE!
பிறகு நவீனமயம் - தாராளமயம் - உலகமயம் எல்லாம் வந்தவுடன்...
PROFESSION - SALARY - STATUS முக்கியமானது!
"AFFLUENT FAMILY - DAUGHTER WORKING AS GROUP LEADER IN LEADING SOFTWARE COMPANY - GROOMS WILLING TO SETTLE ABROAD ONLY NEED APPLY - SUBSECT NO BAR...
பிறகு அதே வசதி, சம்பளம், அந்தஸ்து இவற்றில் சமநிலை நாடி மேலே சொன்ன அதே வாக்கியங்கள்...
கடைசி வாக்கியம் மட்டும் மாற்றம் - ஒரே ஜாதியில் SUBSECT NO BAR - மாறிப்போய் CASTE NO BAR...
அதற்கு அடுத்த கட்டம் SETTLED ABROAD, HAVING OWN HOUSE AT USA, DAUGHTER SOFTWARE CEO, SEEKING ALLIANCE FROM SIMILARLY SETTLED GROOMS - CASTE NEGOTIABLE!
அதென்ன CASTE NEGOTIABLE?
வேறு ஜாதி பரவாயில்லை - ஆனால் தனது ஜாதிக்கு 'ரொம்ப' கீழே போய்விடக் கூடாது!
ஒழுக்க நியதிகளும் காலப்போக்கில் மாற்றங்கள்!
"35 YEAR OLD BRIDE SEEKING ALLIANCE WITH BROAD MINDED GROOMS"!- "முப்பந்தைந்து வயசு வரைக்கும் நான் என்ன கன்னியாகவா இருந்திருக்கப் போகிறேன் - புரிந்து கொள் - BROAD MIND இருந்தால் வா! சிலர் இன்னும் வெளிப்படையாக - "BROAD MINDED GROOMS WITH LIBERAL SOCIAL VALUES!"
"நான் கிறிஸ்தவன் ஆனால் பாதிரியார் ஆகலாம் - முஸ்லீமானால் மேதினார் ஆகலாம் - இந்துவாக இருந்தால் சங்கராச்சாரியார் ஆக முடியுமா?"- மதமாற்ற புரட்சி கோஷங்கள் சுவர் சுவராகக் கருப்பு எழுத்தில் முழங்கிய காலங்கள் உண்டு!
இப்போது MATRIMONIAL விளம்பரங்கள் மேற்கண்ட கோஷத்துக்கு விடையாக உள்ளன!
"CSI NADAR/ PILLAI/ VELLALAR GIRL SEEKING ALLIANCE FROM CHRISTIAN GROOMS OF ANY DENOMINATION. RECENT CONVERTS PLEASE EXCUSE"- சமீபத்தில் மதம் மாறியவர்கள் என்று அவர்கள் நாசுக்காகச் சொல்வது SC/ST பிரிவினரை!
சிலர் - "ANY DENOMOINATION OF CHRISTIAN GROOMS CSI/RC/ PENTHA COASTE WELCOME FOR CHRISTIAN GIRL.... SC/ST PLEASE EXCUSE"- என்று வெளிப்படையாகவே போட்டு விடுகின்றனர்!
ஈ.வே.ராவும் அம்பேத்கரும் கட்டிப் பிடித்துக்கொண்டு ஒன்றாகக் குப்புற விழும் தருணங்கள்!
காலமாற்றம், சமுதாய மாற்றம், சமூகத்தின் மனமாற்றம், எண்ணப் போக்குகள் இவற்றின் கண்ணாடி MATRIMONIAL விளம்பரங்கள்!
(தற்செயலாக முகநூலில் கண்ணில் பட்ட பதிவு)
No comments:
Post a Comment