# அமெரிக்க வாழ்க்கை பெருமைக்குரியது தானா
ஆமாம் நண்பர்களே கண்டிப்பாக என்னை பொறுத்தவரை மிகவும் பெருமைக்குரியது. ஏன்னு கேட்டீங்கன்னா நம் குழந்தைகள் இந்தியாவில் படித்து அவர்கள் இளங்கலை பட்டம் வரை இங்கு படித்துவிட்டு, அமெரிக்கா, ஐரோப்பா... என்று மேல்படிப்புக்கு செல்வது நிறையபேர் சொல்வதுபோல் சுலபம் கிடையாது. அது அவர்களுக்கு வேண்டிப் பெற்ற வரம் என்றே சொல்லலாம். அதற்காக அவர்கள் நிறைய மெனக்கெட வேண்டி இருக்கிறது.
அவர்கள் மட்டுமல்லாமல் அவர்களது பெற்றோர்களும், அதன் பலனாக கிடைத்த இந்த அமெரிக்க வாழ்க்கையை பற்றி பெருமை படுவதில் வியப்பென்ன இருக்க போகிறது. என்னை பொருத்தவரை மிகவும் பெருமை தான்.
என் மகன் மகாராஷ்டிரா மும்பையில் BE படிப்பை முடித்துவிட்டு சுமார் இரண்டரை வருடங்கள் இங்கு வேலை செய்துவிட்டு MS படிப்பதற்கு அவன் எடுத்துக்கொண்ட முயற்சிகள் கொஞ்ச நஞ்சமில்லை. முதலில் நல்ல காலேஜ் ஆக செலக்ட் பண்ணனும்; அது நம் பட்ஜெட்டுக்கு ஏத்த மாதிரி இருக்கணும்; Education Loan கிடைக்கணும்; அதன்பிறகு அந்த காலேஜில் படித்து, அதற்கு ஏற்றார் போல் வேலை கிடைக்க வேண்டும். அந்த காலேஜ் இருக்கும் இடம் சரியாக அமைய வேண்டும்; எல்லாவற்றிற்கும் மேலாக ஸ்டூடன்ட் விசா என்று ஒன்று இருக்கிறது; அதற்கு தயார் செய்வது என்பது நாமெல்லாம் சொல்வதுபோல் பிரம்ம பிரயத்தனம் தான்.
GRE testku prepare பண்ணனும்; அதுல நல்ல மார்க் எடுக்கணும். இதையெல்லாம் கடந்து ஒரு மாணவனோ மாணவியோ வெளிநாடு சென்று நல்ல முறையில் படித்து நல்ல வேலையில் இருந்து, பெற்றோர்களுக்கு பணத் தேவை இருந்தால் பணம் அனுப்பி அவர்கள் வாங்கிய கல்விக் கடனை அடைத்து என்று லிஸ்ட் நீண்டு கொண்டே போகும்.
இந்தியாவில் இருந்துகொண்டு அமெரிக்காவைப் பற்றிப் பேசுவது அவ்வளவு நல்லதல்ல. அவர்களுடைய கலாச்சாரம் வேறு; நமது கலாச்சாரம் வேறு. அதை நாம் எப்போதுமே இணைக்க கூடாது. நாம் இங்கு எப்படி இருக்கிறோமோ அதுபோலவேதான் அங்கேயும் இருக்கணும். என்ன கொஞ்சம் சாப்பாட்டு முறை, பூஜை முறை இதையெல்லாம் நாம் அவர்களுக்கு தகுந்தார்போல் தான் கடைப்பிடிக்க வேண்டும். இதை வைத்து நாம் அவர்கள் படாடோபமாக இருக்கிறார்கள் என்று பொத்தாம் பொதுவாக பேசக்கூடாது.
என் மகன் அமெரிக்காவில் இருப்பதினால் நான்கு முறை நான் அமெரிக்கா சென்று வந்திருக்கிறேன் அதிகபட்சம் நான்கு மாதங்கள்தான் இருந்தாலும் நான் பார்த்தவரை இங்கு இருப்பதை விட அமெரிக்காவில் நம்மவர்கள் நன்றாகவே மிகவும் சந்தோஷமாகவே இருக்கிறார்கள். பெற்றோர்கள் இந்தியாவிலிருந்து சென்றாலும் அவர்களுக்கு இப்பொழுதெல்லாம் கஷ்டமே இருப்பது இல்லை. ஏனெனில் டிவி பார்ப்பதற்கு இப்பொழுது சாட்டிலைட் டெலிவிஷன் இருப்பதினால் எல்லா சேனல்களும் வந்துவிடுகிறது. Weekend கோவில், அவுட்டிங், பார்க், பீச் என்று டைம் பாஸ் ஆகிறது. எல்லார் வீட்டு பக்கத்தில் வாக்கிங் போக என்று தனி இடம் இருக்கிறது. நினைத்த போது வெளியில் போக முடியாது என்பது உண்மைதான். டிரைவிங் problem என்பதனால் அவர்களுடன் சேர்ந்து தான் போக வேண்டும். அதுவும் உண்மைதான்.
ஆனால் அதுதான் வாழ்க்கை என்றான பிறகு அதை சார்ந்து வாழ வேண்டியது தான். இங்கேயே இந்தியாவிலேயே நாம் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இடம் மாற்றும் பொழுது நமக்கு சிறிது காலம் அட்ஜஸ்ட் செய்துகொள்ள வேண்டியிருக்கும். அப்படி இருக்கும் பொழுது வெளிநாட்டில் அவர்களது சட்டதிட்டங்களை பின்பற்றுவது சிறிது கஷ்டமாக தான் இருக்கும். ஆனால் கொஞ்சம் பழகிவிட்டால் நன்றாகத்தான் இருக்கிறது.
இந்தியாவில் இருந்தால் பணம் கொடுத்து வேலைக்கு ஆள் வைத்துக் கொள்ளலாம். சமையலுக்கு ஆள் வைத்துக் கொள்ளலாம், அது எல்லாம் கரெக்டு தான். ஏன் அமெரிக்காவில் கூட வைத்துக் கொள்ளலாம் தான்,🤪 என்ன ஒரு மணிக்கு 20 டாலர் கொடுக்க வேண்டி இருக்கும். அதை கொடுக்கும் அளவுக்கு பணம் இருந்தால் அதையும் செய்து கொள்ள வேண்டியதுதானே.
நம் குழந்தைகளை நாமே கவனித்துக் கொள்வது, நம் வீட்டு வேலைகளை நாமே செய்வது, நம் குடும்பத்திற்கு நாம் சமைப்பது இதெல்லாம் நல்லது தானே? என்ன டைம் மேனேஜ்மென்ட் கரெக்டாக செய்தா சரியாக வரப்போகிறது.
அமெரிக்காவிலிருந்து கொண்டு என் மகன் அவனுடைய வீட்டு வேலை அவன் செய்வது பார்ப்பது சந்தோஷமாகவே இருந்தது.😇 அவனுக்கு கிடைத்த அவனது மனைவியும் அதுபோலவேதான்.🥰🥰 எங்கள் வீட்டு கதை மட்டுமல்ல நிறைய பேர் அங்கு சென்ற அங்கு அங்கு இருக்கும் இளவயது மக்கள் ஒருவருக்கொருவர் அனுசரித்து செய்து கொள்வது தான்.
ஏதோ ஓரிருவர் செய்யும் தவறுக்காக எல்லோரையும் சொல்லக்கூடாது. யாரும் உங்களை இங்கே அமெரிக்காவில் வேலை செய்ய வற்புறுத்துவது கிடையாது. பொழுது போவதற்காக நமக்கு தெரிந்த சமையல் வேலையை மற்றும் வீட்டு வேலைகளை செய்து கொண்டிருப்போம்.
நாம் இந்தியா வந்தது பிறகு அவர்கள் தானே செய்ய வேண்டும். நான் நிறைய பேர் அமெரிக்க வாழ்க்கை பெருமை படு படுகிற விஷயம்( மா) என்று பதிவிட்டது படித்துவிட்டு இதைக் கூறுகிறேன். அமெரிக்காவில் கிடைக்கும் டாலர் பணம் இந்தியாவில் ஒரு காலத்திலும் கிடைக்கப் போவதில்லை என்பது தெரிந்த பிறகு இளவயது காரர்கள் எப்படி இந்தியா வந்து செட்டில் ஆவதை பற்றி யோசிப்பார்கள். அவர்கள் இங்கு வந்து செட்டில் ஆனா சரி வராது.
இங்கு பள்ளிகள், குழந்தைகளுக்கு பாடத்திட்டம் எல்லாமே அமெரிக்காவில் இருந்து வேறுபடுகிறது. இங்கு தேர்வு முறைப்படிதான் பள்ளிக் குழந்தைகளை எடை போடுகிறார்கள். அங்கு அவர்கள் project-methid படி தான் கற்கிறார்கள்.
நான் அங்கு இருந்த பொழுது என் பேத்தியின் ஸ்கூல் மற்றும் அவளுடைய பாடம் கற்கும் முறை எல்லாம் பார்த்து வியந்து போனேன்.😳 அவள் வயதிற்கு ஒத்த இங்கு உள்ள குழந்தைக்கு அதுபோல் இருக்குமா என்பது சந்தேகம் தான்; சந்தேகமில்லை, இங்கு கிடையாது என்பதுதான் உறுதி. ஏனெனில், நானும் ஒரு ஆசிரியையாக இருந்தவ தான். விளையாட்டு முறையில் கல்வி கற்பதால் குழந்தைகளுக்கு பள்ளி செல்வது ரொம்ப பிடித்திருக்கிறது தானாகவே எல்லாம் செய்துகொள்வது, எப்பொழுதாவது உதவி தேவை என்றால் மட்டுமே பெற்றோர்களை கேட்பது என்பது எல்லாம் ஆச்சரியத்தைத் தருகிறது.
நிதானமாக கல்வி கற்கிறார்கள்; ஆனால் எல்லாமே தெரிந்திருக்கிறது.
இது எல்லாம் விட்டு அவர்கள் இந்தியாவில் இருந்தால் அவர்களுக்கு தகுந்தாற்போல் வேலை கிடைக்க வேண்டும்; கணவன் மனைவி இருவருக்கும் ஒரே இடத்தில் வேலை, அதே இடத்தில் குழந்தைகளுக்கு பள்ளி, அதுமட்டுமல்லாமல் எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டி, பலதும் இருக்கிறது இன்னுமொரு ஆச்சரியத்தக்க விஷயம் என்னவென்றால் இந்தியாவில் எல்லோரும் கலாச்சாரத்தை கடைப்பிடிக்கிறார்கள் என்று சொல்லமுடியாது
ஆனால் அமெரிக்காவில் நான் பார்த்த வரை நம் இந்தியர்கள் எல்லா வகுப்புகளுக்கும் தனது குழந்தைகளை அனுப்புகிறார்கள். தவறாமல் கோவிலுக்கு செல்கிறார்கள். என் பேத்தி கர்நாடக சங்கீதம், பாலவிகாஸ் கிளாஸ், ஆர்ட் கிளாஸ், சமஸ்கிருத கிளாஸ் மற்றும் வயலின் கற்றுக் கொண்டிருக்கிறாள். (இது நான் கர்வத்தில் சொல்லவில்லை பெருமையாக சொல்லிக் கொள்கிறேன்)
இங்கு எல்லாம் கிடைத்தாலும் குழந்தைகளுக்கு அதில் ஆர்வம் இருக்குமாறு தெரியவில்லை. மிகக்குறைந்த மக்கள் தான் அமெரிக்கா சென்று அவர்கள் இஷ்டம் போல் வாழத் தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.😡 ஆனால் மிடில் கிளாஸ் பேக்ரவுண்ட் இருந்து படிக்க போனவர்கள் அங்கு வேலை பார்ப்பவர்கள், முக்கால்வாசிப் பேர் மிக நன்றாக வாழ்க்கை வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
அங்கு நமது பண்டிகைகளை விடாது செய்து கொண்டிருக்கிறார்கள். முதலில் உடை உடுத்தும் விதம் ஆகட்டும், எனக்கு தெரிந்தவரை நமது கலாச்சாரத்தை அங்கு போய்தான் அவர்கள் உணர்ந்து கடைப்பிடிக்கிறார்கள் இதை 7 வயதான என் பேத்தி மியூசிக் கிளாஸ் என்றால் பொட்டு வைத்துக்கொண்டு ரொம்ப அழகாக இருக்கும். நமது பண்பாடு கலாச்சாரம் எல்லாம் அவர்கள் அமெரிக்கா சென்று கடைபிடிக்கும் பொழுது பார்க்க ரொம்ப நன்றாக இருக்கும். கோவில் போக வேண்டும் என்றால் எனது மருமகள் புடவை, பேத்தி பட்டுப்பாவாடை சட்டை, எனது மகனும் ஜிப்பா என்று கிளம்பி விடுவார்கள்.🤩
இங்கு இந்தியாவில் இந்த பெண் பிள்ளைகள் ஜீன்ஸ் டாப் என்று போகும்பொழுது பார்க்க கோபம் கோபமாக வரும். அம்மாதிரி சமயங்களில் தான் நாம் ஒப்பிட்டுப் பார்க்கிறோம், அமெரிக்கா அப்படி இந்தியா எப்படி என்று.
ஆகையால் நண்பர்களே அமெரிக்கா என்பது என்னை பொருத்தவரை பெருமைக்குரிய விஷயம்.
கீழே படத்தில் (1&2) என் மகன் தனது பெற்றோர்களை (எங்களை) தான் படித்த யுனிவர்சிட்டி காண்பிப்பதற்கு அழைத்து சென்ற பொழுது எடுத்த படம்.👏👏👌🥰
3)ஹ்யூஸ்டன் நகரத்தில் சிவாலயத்தில் எடுத்த படம்.
4) விடுமுறை நாட்களில் பேத்தியுடன் அவள் சைக்கிள் ஓட்டுவதை பார்த்து மகிழும் படம்.
படித்ததற்கு நன்றி மத்தியமர்களே.🙏
No comments:
Post a Comment