ஓமக் குழம்பு
தேவையானவை: ஓமம் - இரண்டு டீஸ்பூன், புளி - எலுமிச்சைப் பழ அளவு, சாம்பார் பொடி - 4 டீஸ்பூன், கடுகு, கடலைபருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: ஓமத்தை சிறிதளவு எண்ணெயில் வறுக்கவும். மீதமுள்ள எண்ணெயை வாணலியில் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து, சாம்பார் பொடி சேர்த்து வறுக்கவும். இதில் புளியைக் கரைத்து ஊற்றி... உப்பு, ஓமம் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.
குறிப்பு: ஓமம் ஜீரண சக்தி தரும். வயிறு உபாதைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும்

No comments:
Post a Comment