அவல் வடை
தேவையான பொருட்கள்:
வெள்ளை அவல் – ஒரு கப், பெரிய வெங்காயம் – 3, பச்சை மிளகாய் – 3, இஞ்சி சிறிய துண்டு – ஒன்று, ரவை – 2 ஸ்பூன், அரிசி மாவு – 2 ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து, எண்ணெய் – கால் லிட்டர். -
செய்முறை:
முதலில் ஒரு கப் அவலை ஒரு கிண்ணத்தில் சேர்த்துக் கொண்டு, அதனுடன் தண்ணீர் ஊற்றி, இரண்டு முறை நன்றாக அலசிக் கொள்ள வேண்டும். பிறகு மீண்டும் தண்ணீர் ஊற்றி 5 நிமிடத்திற்கு ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அவல் ஊறுகின்ற இதே நேரத்தில் வடைக்கு தேவையான அனைத்து பொருட்களையும் தயார் செய்து கொள்ள வேண்டும். முதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு பச்சை மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவேண்டும். அதேபோல் இஞ்சியைத் தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்க வேண்டும். பின்னர் கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தழையையும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். -
பின்னர் ஊறிய அவலை தண்ணீர் இல்லாமல் நன்றாக பிழிந்து மற்றொரு கிண்ணத்தில் மாற்றி கொள்ள வேண்டும். பிறகு இதனுடன் 2 ஸ்பூன் ரவை, 2 ஸ்பூன் அரிசி மாவு மற்றும் உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்துக் கொள்ள வேண்டும். பிறகு பிறகு இவற்றுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைக்க வேண்டும்.
பின்னர் இதில் வடை பொறிக்க தேவையான எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் சிறு சிறு உருண்டைகளாக எடுத்து, வடை தட்டி, எண்ணெயில் சேர்க்க வேண்டும். சிறிது நேரத்தில் வடை சிவந்ததும் திருப்பிப் போட்டு, இருபுறமும் சிவந்தத உடன் எண்ணெயில் இருந்து வெளியே எடுத்து விட வேண்டும்.

No comments:
Post a Comment