Tuesday, November 23, 2021

ஓமம் கலந்த தண்ணீர்

 

ஓமம் கலந்த தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

ஓமத்தில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. அதோடு ஓமத்தில் மருத்துவ குணங்கள் நிறைய உள்ளது.

இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கரோட்டின், தயாமின், ரிபோபிளவின், நியாசின் போன்ற பல வகையான சத்துக்கள் நிறைந்துள்ளது.  

இதனை தண்ணீரில் கலந்து குடிப்பதனால் உடலுக்கு நல்ல பயன்களை அள்ளித்தருகின்றது. 

அந்தவகையில் தற்போது ஓமம் கலந்த தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.  

சளி மற்றும் இருமலால் நாம் அவதிப்படும் நேரத்தில், ஓமத்தை எடுத்துக்கொள்ளும் பட்சத்தில், அது ரத்தச்சேர்க்கை நீக்கும் மருந்தாக செயல்படுகிறது.

சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் 100 கிராம் ஓமத்தை 1 லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அது பாதியாக வந்தவுடன் எடுத்து அருந்தினால் மேற்கண்ட அனைத்தும் தீரும். 

 ஓமம், மிளகு வகைக்கு 35 கிராம் எடுத்து நன்கு இடித்து பொடியாக்கி அதனுடன் 35 கிராம் பனைவெல்லம் சேர்த்து அரைத்து காலை, மாலை என இருவேளையும் 5 கிராம் அளவு எடுத்து சாப்பிட்டு வந்தால் கழிச்சல், வயிற்றுக் கடுப்பு நீங்கும்.  

ஓமம், கடுக்காய் தோல், முக்கடுகு, சித்தரத்தை, அக்கிரகாரம், திப்பிலி வேர் இவைகளின் பொடியை சம அளவு எடுத்து அதனுடன் சரிபாதி பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை கொடுத்து வந்தால் தொண்டை புகைச்சல் மற்றும் இருமல் நீங்கும்.

 மந்தத்தைப் போக்க ஓமம், சுக்கு, சித்திரமூல வேர்ப்பட்டை, இம்மூன்றும் சமபங்கு எடுத்து ஒன்றாக சேர்த்து பொடித்து அதனுடன் கடுக்காய் பொடி சேர்த்து அதில் சிறிதளவு எடுத்து மோரில் கலந்து கொடுத்தால் மந்தம் நீங்கும்.  

பசியைத் தூண்டி உண்ட உணவு எளிதில் சீரணமாகவும், வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகள் தீரவும், ஓமத்தை கஷாயமாக்கி அருந்திவருவது நல்லது. 

சிறிது தண்ணீரில் ஒரு கரண்டி ஓமம் போட்டு கொதிக்க வைத்து, அதில் 100 மில்லி தேங்காய் எண்ணெயை விட்டு மீண்டும் கொதிக்க விட்டு வடிகட்டி கற்பூரப் பொடியைக் கலந்து இளஞ்சூட்டுடன் இடுப்பில் நன்றாகத் தேய்த்து வர இடுப்பு வலி நீங்கும்.

#நாட்டு மருத்துவ குறிப்பு (traditionnelle)




No comments:

Post a Comment