ஜெயந்தி ராம்
#சண்டே_ஸ்பெஷல்
சென்றுவந்தஆன்மிகஸ்தலங்கள்
திருமணத்திற்கு முன் அவ்வளவாக ஆன்மிக ஸ்தலங்கள் சென்றதில்லை..
தஞ்சையிலே வசித்ததால் பெரிய கோயில்,புன்னை நல்லூர் மாரியம்மன்,பங்காரு காமாட்சி கோயில் மற்றும் தஞ்சையை சுற்றியுள்ள சில கோயில்கள் நிறையப் பார்த்தாச்சு..
திருவையாறு அடிக்கடி சென்றிருக்கிறேன்..அப்பா ஒரு முறை இராமேஸ்வரம் அழைத்துச் சென்றார்..
*திருமணமானதும் முதலில் சென்றது க்ஷேத்ராடனம் தான். மதுரை,திருநெல்வேலி,திருச்செந்தூர்,சுசீந்திரம்,தென்காசி,கன்யாகுமரி முதலிய இடங்கள் போனோம்..
சுசீந்திரம் சென்று தரிசனம் முடித்து ஆஞ்சி சன்னதிக்கு வந்து நின்ற போது ஒரு பெரியவர் சட்டென்று எங்கள் அருகில் வந்து அடுத்த வருடம் உங்களுக்கு மகன் பிறப்பான்..மூர்த்தி என்று பெயர் வையுங்கள் என்று சொல்லிச் சென்றார்..திகைத்து நின்றோம்..அவர் வாக்கு பலித்தது..
மறக்க முடியாத அனுபவம்..
புதுக்கோட்டையில் இருந்த போது திருக்கோகர்ணம், புவனேஸ்வரி, பிள்ளையார்ப்பட்டி,ஆவுடையார் கோயில்,குன்றக்குடி சென்று வந்தோம்.. ஆவுடையார் கோயில் கருங்கல் சிற்பங்கள் தனிச்சிறப்பு வாய்ந்தவை. .மாணிக்கவாசகர் திருவாசகம் எழுதியது இங்கு தான் என்பதும்,அவரால் இக்கோயில் வடிவமைக்கப்பட்டது என்பதும் இதன் தனிச்சிறப்பு..
திருப்பதி சென்று பலமணி காத்திருந்து குழந்தைக்கு இரண்டாவது முடியிறக்கி பெருமாளை தரிசித்தது தனிக்கதை..
அடுத்து திருச்சி..மலைக்கோட்டை,அகிலாண்டேஸ்வரி,ஸ்ரீரங்கநாதர்,குணசீலம்,வயலூர்,திருப்பட்டூர் ப்ரம்மா,சமயபுரம்,உறையூர் வெக்காளி,இப்படி பல கோயில்கள் தரிசனம் கிடைத்தது..
*திருச்சியில் இருந்தபோது திடீரென்று நினைத்து குருவாயூர், சோட்டாணிக் கரை,வடக்குநாதர்,மீன்குளத்தி பகவதி அம்மன் கோவில்கள் சென்று வந்தோம்..குருவாயூரப்பன் தரிசனம் கொடுக்க எட்டுமணி நேரம் காத்திருக்க வைத்தது மறக்க முடியாத அனுபவம்
*அடுத்து மேட்டுப் பாளையம்...
பவானி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள வனபத்ரகாளியம்மன் வெகு பிரசித்தம்..இங்கு குண்டம் இறங்குதல் விமர்சையாக நடைபெறும்..
காரமடை ரங்கநாதர் ..பழமையான கோயில் ..தேர்த்திருவிழா பிரமாதமாக நடைபெறும்..தேர் வரும்போது வாழைப்பழத்தை அதன்மீது வீசுவார்கள்..
அங்குள்ள தென்திருப்பதி கோயில் பிரமாதமாக இருக்கும்..அமைதியை நாடுவோர் தைரியமாக செல்லலாம்..
*மே.பா இருந்தபோது பத்து நாள் பயணமாக கர்நாடகா டூர் சென்று வந்தோம்..
ஹலிபேடு சிற்பங்கள்,ச்ரவணபெலகுளா,தலைக்காவேரி,ச்ருங்கேரி,மூகாம்பிகை,ஸ்ரீரங்கப்பட்டிணம்,தர்மஸ்தலா,குக்கே சுப்ரமணண்யன் ஆலயங்கள் தரிசனம் செய்தோம்..
ச்ரவணபெலகுளா சென்ற போது உச்சி வெயில்..குழந்தைகளை மாமியாரோடு காரில் இருத்திவிட்டு நானும் கணவரும் சூடுபறந்த கருங்கல்படிகளில் ஏறி தரிசனம் முடித்து அதே வேகத்தில் கீழே இறங்கினோம்..இரவு கால் பாதம் கொப்பளித்து எண்ணெய் தடவி மறுநாளே நார்மலானது மறக்க முடியாத அனுபவம்..
*அடுத்து கல்கத்தா..
கல்கத்தா காளி..ஆஹா அது ஒரு சுக அனுபவம்..
பூரி செல்ல நினைத்து முடியாமல் போனது..
*டெல்லி சென்றபோது மதுரா சென்று வந்தோம்..
*அடுத்து கோவை..
மருதமலை,பேரூர் பட்டீஸ்வரர்,ஆனைமலை மாசாணியம்மன், கோணியம்மன் இங்கும் தேர் பிரசித்தம்..கோட்டைமேடு சங்கமேஸ்வரர், காமாட்சியம்மன்,சாரதாம்பாள்,அஷ்டாம்ச ஆஞ்சநேயர், ஈச்சனாரி,பழநி என பல காேயில்கள் தரிசனம்..
*இரண்டு வருடங்களுக்கு முன்பு கல்யாணம் ஆனவுடனே சென்ற அதே கோயில்களுக்கு சென்று வந்தோம்..
சுசீந்திரம் சென்ற போது ஆஞ்சநேயர் சன்னதி சென்றதும் அந்தப் பெரியவர் தந்த ஆசீர்வாதம் ஞாபகம் வர என்னையே அறியாமல் என் கண்கள் அந்தப் பெரியவரைத் தேடியது..
இதோடு சேர்த்து திருப்புல்லாணி, தேவிப்பட்ணம், உத்தரகோசமங்கை, ஸ்ரீவில்லிப்புத்தூர், இராமேஸ்வரம் சென்றதும் அங்கிருந்து தனுஷ்கோடி சென்றதும் இனிமையான அனுபவங்கள்..
*சுவாமி நாதஸ்வாமி குலதெய்வம் ஆதலால் கும்பகோண கோயில்களுக்கு அடிக்கடி செல்வதுண்டு..
*என் அப்பாவின் ஊர் சிதம்பரம்..வைத்தீஸ்வரன் கோயில் பிறந்த வீட்டு குலதெய்வம்..எனவே வைத்தீஸ்வரன் கோயில், சீர்காழி, சிதம்பரம், திருவாலங்காடு என பலகாேயில்கள் சென்று வந்தோம்..சிதம்பரம் சென்றபோது என் அப்பா அவரது படித்த பள்ளி வளர்ந்த இடம் இவற்றையெல்லாம் பார்த்து வந்தது நெகிழ்வான தருணங்கள்..
*அதே போல 2010ல் சிங்கப்பூர் ட்ரிப் செல்வதற்கு முன் காசியும் ..முடித்து வரும்போது திருப்பதி சென்று மணிக்கணக்காய் மூச்சுத் திணற க்யூவில் நின்று ஏழுமலையானை தரிசனம் செய்த அனுபவமும் மறக்க முடியாது..
*2016 ல் ,திரிவேணி சங்கமம் பயணம் குறுகிய பயணமாக கிடைத்தது..
*2018ல் ஸ்ரீலங்கா சென்றபோது இராவணன் சீதையை சிறைவைத்த நுவரேலியா சென்று வந்ததும் அங்கு தங்கியபோது ஏற்பட்ட அனுபவமும் சிலிர்ப்பூட்டுபவை..கண்டி கதிர்காமமும் சென்று வந்தோம்..
போனவருடம் திருக்கடையூர்,கூத்தனூர்,ஸ்ரீவாஞ்சியம்,சிக்கல்,திருநள்ளாறு,அன்னை வேளாங்கண்ணி நாகூர் தர்கா என பல இடங்கள் சென்று வந்தோம்..
அதன் பிறகு தஞ்சையை சுற்றியுள்ள சில 108 திவ்ய தேசங்கள்,நவக்ரஹ ஸ்தலங்கள் ,வடுவூர் ராமர்,மன்னார்குடி ராஜகோபாலஸ்வாமி கோயில்கள் சென்று வந்தோம்..
*லாக்டவுனுக்கு முன்னால் காஞ்சியைச் சுற்றியுள்ள 108 திவ்ய தேசங்களில் சில சென்று வந்தோம்..
ஆக..பற்பல தரிசனங்கள்,விதவித அனுபவங்கள்..
மிகப் பிரமாதமாக ப்ளான் போட்டு செய்யும் வேலைகள் பிரயாணங்களை விட டக்கென்று முடிவெடுத்து பகவான் மேல் பாரத்தைப் போட்டு தொடரப்படும் செயல்கள் எனக்கு மிகுந்த திருப்தியை அளித்திருக்கின்றது..
எனவே நான் எப்போதுமே மிகப் பெரிய திட்டங்களோ எதிர்பார்ப்புகளோ வைப்பதில்லை..
நடப்பது நாராயணன் செயல் என நினைத்து நடைபோடுகிறேன்..
ஆட்டுவிப்பவன் அவனே🙏🙏
No comments:
Post a Comment