Tuesday, November 23, 2021

தக்காளி, வெங்காயம் இல்லாமல் குழம்பு

 தக்காளி, வெங்காயம் இல்லாமல் இப்படி கூட சுவையான குழம்பு செய்ய முடியுமா ...

 தேவையான பொருட்கள்: 

தனியா – 3 ஸ்பூன், 
மிளகு – 2 ஸ்பூன், 
சீரகம் – அரை ஸ்பூன், 
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், 
புளி – எலுமிச்சை பழ அளவு, 
உப்பு – ஒரு ஸ்பூன், 
எண்ணெய் – ஒன்றரை ஸ்பூன், 
நல்லெண்ணெய் – 3 ஸ்பூன், 
வெந்தயம் – கால் ஸ்பூன், 
மிளகு – கால் ஸ்பூன், 
மிளகாய்த் தூள் – ஒன்றரை ஸ்பூன், 
வர மிளகாய் – 6, 
பூண்டு – 20 பல், 
கருவேப்பிலை – ஒரு கொத்து, 
கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.


 செய்முறை: 

முதலில் எலுமிச்சைப்பழ அளவு புளியை கொட்டைகள் இல்லாமல் சுத்தம் செய்து அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவேண்டும். 

அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, ஒன்றரை ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவேண்டும். 

எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து, 3 ஸ்பூன் தனியா, 2 ஸ்பூன் மிளகு, ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும்.


பிறகு 20 பல் பூண்டை தோலுரித்து சேர்க்க வேண்டும். 


பின்னர் ஆறு வரமிளகாய் சேர்த்து சிறிது நேரம் நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும். 

பிறகு இவற்றை நன்றாக ஆறவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். 

அதன் பின் ஊற வைத்த புளியை அதில் இருக்கும் தண்ணீருடன் இந்த மசாலாக்களோடு சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு மீண்டும் அடுப்பை பற்ற வைத்து, கடாயை வைத்து, 3 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றவேண்டும். 

எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அரை ஸ்பூன் வெந்தயம், அரை ஸ்பூன் மிளகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். 

பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலாவை எண்ணெயில் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். 

பிறகு இவற்றுடன் அரை ஸ்பூன் மஞ்சள் தூள், ஒன்றரை ஸ்பூன் மிளகாய்தூள், ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.

குழம்பு மிகவும் கெட்டியாக இருந்தால் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி கலந்து விட்டு, மூடி போட்டு நன்றாக கொதிக்க விட வேண்டும். 

குழம்பில் மிளகாய் தூள் வாசனை சென்றதும் ஒரு கொத்து கொத்தமல்லி தழையை தூவி அடுப்பை அனைத்துவிட வேண்டும். 

அவ்வளவுதான் சுவையான மிளகு குழம்பு தயாராகிவிட்டது. ஒரு முறை இந்த குழம்புடன் சுடச்சுட சாதம் சேர்த்து சாப்பிட்டுப் பாருங்கள். 

உங்கள் உடம்பில் இருக்கும் அனைத்து சளி பிரச்சனையும் அடியோடு தீர்ந்துவிடும்





🌷🌷

No comments:

Post a Comment