காலையில் ஆட்டோவில் ஏறி, "கிருஷ்ணா நகர் போப்பா" என்றாள். திரும்பி பார்த்த ஆட்டோ டிரைவர் தாஸ், "அடச்சீ..நீயா? இறங்கு. காலங்காத்தால சாவுகிராக்கி" என்றான். அவள் கலங்கிய கண்களுடன் இறங்கி நடந்தாள். காரணம் அவள் ஒரு திருநங்கை.
தாஸ் தன் மகளின் அட்மிஷனுக்காக பெண்கள் கல்லூரி சென்றான். "மேடம், நான் மிகவும் ஏழை. தயவுசெய்து என் மகளுக்கு அட்மிஷன் கொடுங்க" என்று கெஞ்சினான்.
"நிச்சயம் இந்த சாவுகிராக்கி உன் மகளுக்கு அட்மிஷன் கொடுக்கும்" என்று திரும்பினாள். அதிர்ந்து போனான் தாஸ். அன்று ஆட்டோவில் ஏறிய அதே திருநங்கை பிரின்ஸிபால் சீட்டில் அமர்ந்திருந்தாள்.
"என்னை மன்னிச்சிடுங்க மேடம்" என்று கையெடுத்து கும்பிட்டான்.
டாக்டர் மானபி பந்தோபாத்யாயா PhD இந்தியாவின் முதல் திருநங்கை பிரின்ஸிபால் கல்கத்தாவில் இருக்கிறார்.
பிறரின் இகழ்ச்சி ஒரு உத்வேகம். அது வாழ்க்கையில் வெற்றியை தீர்மானிக்கிறது.
வாழ்த்துக்கள் மேடம்.
No comments:
Post a Comment