Friday, November 26, 2021

நேர்மை

 #பொது#


இன்று காலையில் நான் கண்ட இரண்டு காட்சிகள் என மனதில் ஒரு பெரிய  தாக்கம் ஏற்படுத்தியது.


காலையில் சிற்றுண்டி சாப்பிட ஒரு கடைக்கு சென்றேன். அந்த கடை சுய உதவி குழுக்கள் மூலம் சில சகோதரிகள் சேர்ந்து நடத்துகிறார்கள்.

நான் கடைக்குள் செல்லும் முன் ஒரு இளைஞர் தோராயமாக 35 வயது இருக்கலாம், சார்......பசிக்குது...டிபன் வேண்டும் என்றார்.

பார்த்த போதே புரிந்தது அவர் ஒரு மாற்று திறனாளி.. சுயமாக நடக்க முடியாது என்பது.

அவர் கேட்டது என் காதில் டிபனா...அல்லது டீ யா.. சற்று குழப்பமாக இருந்ததால் திரும்பவும் கேட்டேன்.. டிபன் அல்லது டீ. பசியாக உள்ளது. டிபன் தான் வேணும் என்றார்.

நானும் கடையின் உள் சென்றவுடன் அங்கிருந்த அம்மாவிடம் வெளியில் ஒருவர் மாற்று திறனாளி டிபன் கேட்கிறார். தேவையானதை தாருங்கள் என்று கூறிவிட்டு நான் சிற்றுண்டி எடுத்து கொண்டேன்.

சாப்பிட்டு முடித்ததும் பணம் தரும் போது வெளியில் கொடுத்த நபருக்கும் எடுத்து கொள்ளுங்கள் என்றேன். 

 அந்த அம்மா  ......

பார்சல் கொடுத்ததும் அவரே காசு கொடுத்து விட்டார்  சார்  என்று கூறினார்.

எனக்கு மிகுந்த வெட்கம் ஆகிவிட்டது. நான் அவரது தோற்றத்தை பார்த்து (தாடி வைத்திருந்தார், மேலும் வண்டியில் உட்கார்ந்து இருந்ததை பார்த்து) அவரிடம் பணமில்லையோ என நினைத்து விட்டேன்.

அவர் கொஞ்ச நேரமாகவே யாராவது வருவார்களா.. என காத்திருந்து இருந்திருப்பார் போலிருக்கு. டிபன் சொல்வதற்காக....

மற்றொன்று.....ஶ்ரீ

சாப்பிட்டு கொண்டிருந்த நேரம், ஒரு பெரியவர் 70 வயது இருக்கலாம். நடக்க கஷ்டப்பட்டு வந்தார்.

வந்து இரண்டு இட்லி மட்டுமே சாப்பிட்டு அதற்குரிய பணம் தந்தார்.

பிறகு தன் பையிலிருந்து ஒரு பாட்டில் எடுத்து அந்த டிபன் கடை நடத்தும் பெண்களிடம்... இது வேண்டுமா... வாங்கி கொள்ளுங்கள் என்று..

என்ன என்று பார்த்தால்... மலையிலிருந்து கொண்டு வந்த தேன் பாட்டில் இரண்டு. 

அதை விற்பனை செய்து பணம் கொண்டு போகலாம் என வந்திருப்பார் என்பது பார்க்கும் போதே புரிந்தது.

இருவரின் செயலில் இருந்து எனக்கு கிடைத்த அனுபவம்...

பார்த்த உடனே...தோற்றத்தை வைத்து ஒருவரை மதிப்பிட கூடாது. 

மேலும் மாற்று திறனாளியாக இருந்தாலும், சொந்த காலில் நிற்க வேண்டும் என்ற வைராக்கியம் உள்ள வர்.. தவறாக எண்ணிவிட்டேனே என்று.

இரண்டாவது , வயதான காலத்திலும் கூட எதாவது  வேலை செய்து பொருள் ஈட்ட வேண்டும் என்ற எண்ணம் உள்ளதை பார்த்து...

மனதில் ஒரு தாக்கம்.

ஒவ்வொருவர் உள்ளத்திலும் இறைவன் வாழ்ந்து கொண்டு உள்ளான்.

மனிதர்கள் கஷ்டமான சூழலில் எப்படியெல்லாம் கூட நேர்மையாக வாழலாம்.... வாழ்ந்து கொண்டு உள்ளனர் என்று இன்றும் ஒருமுறை புரிந்தது.

மனதில் தோன்றியதன் விளைவு

இந்த சிறு பதிவு.

No comments:

Post a Comment