Saturday, March 6, 2021

பட்டாணி சுண்டல்,தயிர் வடை

 இன்று இரு வகையான சமையல் குறிப்பு நீங்களும் இன்று நாளை செய்து குடும்பத்துடன் நலமாக சுவைத்து மகிழுங்கள்

1)

பட்டாணி சுண்டல்.:

தேவையான பொருட்கள்.: பட்டாணி - 200 கிராம், 

பொடியாக நறுக்கிய மாங்காய் - ஒரு கப், 

துருவிய கேரட் - 4 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய மல்லித்தழை - சிறிதளவு, 

தேங்காய்த்துருவல் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

தாளிக்க.: 

கடுகு - ஒரு டீஸ்பூன், 

எண்ணெய் - தேவையான அளவு.

'வறுத்துப் பொடிக்க.: 

தனியா (மல்லி) - ஒரு டேபிள்ஸ்பூன், 

கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், 

காய்ந்த மிளகாய் - 2.

செய்முறை.: 

வறுத்துப்பொடிக்க கொடுத்துள்ளவற்றை வெறும் வாணலியில் வறுத்து பொடித்துக்கொள்ளவும். 

பட்டாணியை மூன்று மணி நேரம் ஊறவைத்து, உப்பு சேர்த்து குக்கரில்வைத்து அடுப்பில் ஏற்றி மூன்று விசில் வந்ததும் இறக்கவும். 

வாணலியில் எண்ணெய்விட்டு, கடுகு தாளித்து துருவிய கேரட், பொடியாக நறுக்கிய மாங்காய், நறுக்கிய மல்லித்தழை, தேங்காய்த்துருவல் சேர்த்து, வேகவைத்த பட்டாணியும் சேர்த்து, வறுத்துப்பொடித்ததையும் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.

குறிப்பு.: 

தேங்காயைப் பொடியாகவும் நறுக்கிப் போடலாம். 

வெள்ளரித் துண்டுகள் சேர்த்தாலும் சுவையாக இருக்கும்

======

 2) 

தயிர் வடை.;

தேவையான பொருட்கள்.: உளுத்தம்பருப்பு - 200 கிராம், மிளகு - ஒரு டேபிள்ஸ்பூன், 

இஞ்சி - ஒரு துண்டு, 

பச்சை மிளகாய் - 4, பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 300 மில்லி, புளிப்பில்லாத தயிர் - 200 மில்லி, கடுகு - ஒரு டீஸ்பூன், 

துருவிய கேரட் - 2 டேபிள்ஸ்பூன், மல்லித்தழை, உப்பு - தேவையான அளவு.

செய்முறை.: 

உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து தண்ணீர் வடித்து மிளகு, தோல் சீவி நறுக்கிய இஞ்சி, பெருங்காயத்தூள், பச்சை மிளகாய், உப்பு சேர்த்துக் கெட்டியாக அரைத்துக்கொள்ளவும். 

வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் மாவை நன்கு பிசைந்து சிறிதாக உருட்டி ஒரு வாழையிலையில் வைத்து வடைகளாகத் தட்டி, எண்ணெயில் பொரித்தெடுக்கவும். 

தண்ணீரை லேசாக சூடாக்கி வடைகளைப் போட்டு உடனே எடுத்து, தயிரில் சேர்க்கவும். 

தயிரில் சேர்த்து ஒரு தட்டில்வைத்து வடைகளின் மேல் கடுகு தாளித்து, பரவலாக கேரட் துருவல் தூவி, மல்லித்தழையைப் பொடியாக நறுக்கி தூவிப் பரிமாறவும்.

வடைகளின் மேல் காராபூந்தி சேர்த்து வழங்கினால் சுவை மேலும் அதிகரிக்கும்.

No comments:

Post a Comment