வீட்டுத் தோட்டம் டிப்ஸ் 1:-
வீட்டு தோட்டம் பராமரிப்பு மண் தொட்டியில் உருவாகும் உப்புப்படுவை நீக்க, வெள்ளை வினிகர், ரப்பிங் ஆல்கஹால் மற்றும் தண்ணீரை சரிசமமான அளவில் ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றவும்.
இந்த கலவையை தொட்டியின் மீது தெளித்து, பிளாஸ்டிக் பிரஷை கொண்டு நன்றாக தேய்க்கவும். அதில் செடியை நடுவதற்கு முன், நன்றாக காய விடுங்கள்.
வீட்டுத் தோட்டம் டிப்ஸ் 2:
நீங்கள் தோட்டவேலை பார்க்கும் பொது கண்டிப்பாக கால்களில் செருப்பு அணிந்து கொள்ளவேண்டும் மற்றும் கைகளில் கிளவுஸ் அணிந்து கொள்வது மிகவும் நல்லது.
ஏன் என்றால் தோட்டத்தை பராமரித்து கொண்டிருக்கும்போது ஏதாவது கால்களில் குத்திவிடலாம், கைகளில் கிளவுஸ் அணியாமல் தோட்டத்தை பராமரிக்கும்போது நகங்களில் மண் புகுந்துவிடும்.
இதன் காரணமாக கூட உங்களுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே கவனமாக இருக்கவேண்டும்.
வீட்டுத் தோட்டம் டிப்ஸ் 3:-
வீட்டு தோட்டம் பராமரிப்பு செடிகளை ட்ரிம் செய்யும் கருவி பழுதடையாமலும் உடையாமலும் பாதுகாக்க, அதனை பயன்படுத்துவதற்கு முன், அதன் மீது காய்கறி எண்ணெய்யை தெளித்திடுங்கள்.
வீட்டுத் தோட்டம் டிப்ஸ் 4:-
அதாவது சிலரது தோட்டத்தில் செடிகளில் பஞ்சி பூச்சிகள் தாக்குதல் இருக்கும் அவற்றை கண்டறிந்தது பாதுகாப்பு நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
இப்பூச்சி தாக்குதலில் இருந்து இச்செடிகளைக் காக்க ரோகர் அல்லது மாலத்தியான் ரசாயனப் பூச்சிக் கொல்லி மருந்துடன் வேப்ப எண்ணையைச் சரி சமமாக எடுத்துக் கொண்டு, ஒரு லிட்டர் தண்ணீருடன் கலந்து பூந்தூரலாய் ஸ்பிரே செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment