அலர்ஜி
எந்த ஒவ்வாமையினாலும் சரி (தோல், தடிப்பு,அரிப்பு போன்றவை) பனை வெல்லத்துடன் சமபங்கு புளி ஒரே ஒரு மிளகு பிசைந்து உள்ளுக்குச் சாப்பிடுங்கள்.சில நிமிடங்களில் தடிப்பு மறையும்,ஒவ்வாமை கட்டுப்படும்.
உணவு உட்கொள்ளும் மருந்து வகைகள் ,கிருமிதாக்குதல், பூச்சிக்கடி ,சுற்றுப்புற சூழல், டென்ஷன் ,அதிக வெப்பம், தண்ணீர் மாறுதல், சுகாதாரமின்மை இதில் உணவு அலர்ஜி என்பது மீன், கொட்டை வகைகள், முட்டை, கோதுமை, சோயா போன்றவற்றால் ஏற்படுபவை.
வெறும் வயிற்றில் ஒரு கைப்பிடி அருகம்புல் சாறு எடுத்து குடித்தால் அலர்ஜியால் ஏற்படும் சளித்தொல்லையில் இருந்து விடுபடலாம்.
எலுமிச்சம் பழத்தைக் கண்களில் அடிக்கடி ஒற்றிக் கொண்டால் கண் எரிச்சல் குணமாகும்.
அலர்ஜியால் கண்ணில் நீர்வடிதலும் நிற்கும்.
அலர்ஜிக்கு ஒத்துக்கொள்ளாத உணவு வகைகளைத் தவிர்ப்பதன் மூலம் அதனால் உண்டாகும் தொல்லைகளைத் தவிர்க்க முடியும்.
சீரகத்தை வறுத்து பொடியாக்கி தினமும் தண்ணீரில் போட்டுக் காய்ச்சி குடித்து வருவதன் மூலம் அலர்ஜி ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.
புதினாவை வாரத்தில் 3 முறை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.
மோரில் உப்பு கலந்து வெள்ளரிக்காயை சிறிய துண்டுகளாக வெட்டிப் போட்டு சாப்பிடுவதன் மூலம் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.
சீரகத்தை வறுத்து பொடியாக்கி தினமும் தண்ணீரில் போட்டு காய்ச்சி குடித்து வருவதன் மூலம் அலர்ஜி ஏற்படுவதைத் தவிர்க்கலாம். மேலும் புதினாவை வாரத்தில் 3 முறை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். மோரில் உப்பு கலந்து வெள்ளரிக்காயை சிறிய துண்டுகளாக வெட்டிப் போட்டு சாப்பிடுவதன் மூலம் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.
தோலில் ஏற்படும் அலர்ஜியால் உண்டாகும் அரிப்பு, தடிப்புகளுக்கு மணத்தக்காளி இலைகளின் சாற்றை பாதிக்கப்பட்ட இடங்களில் தடவலாம்.
No comments:
Post a Comment