Tuesday, May 5, 2020

பவித்ர உற்சவம்.

வைஷ்ணவ ஆலயங்களில் பூஜைகளில் ஏற்படும் சில தவிர்க்க முடியாத தவறுகளைக் களைவதற்காக குறைகள் நீங்கிப் புதுப்பொலிவு பெற பவித்ர உற்சவம் ஆண்டுதோறும் நடைபெறுகிறது. 

பவித்ர உற்சவத்தில் பவித்ர மாலைகளுக்கு விசேஷ ஜபங்கள் செய்து பெருமாளுக்கு சானித்தியம் ஏற்படுத்தக் கூடிய வேத மந்திரங்களால் ஹோமம் செய்வதாலும் பூஜைகள் நடத்தப்படுவதாலும் ஒரு வருடத்தில் அன்றாடம் ஏற்படக்கூடிய தோஷங்கள் விலகுகின்றன. 

பவித்ர உற்சவத்தில் இருவித ஹோமங்கள் செய்யப் படுகின்றன. பெருமாளுக்கு சானித்தியம் ஏற்படக்கூடிய ஹோமம், மற்றொன்று மகாசாந்தி ஹோமம்.  நாள்தோறும் காலையில் சுப்ரபாதமும் தொடர்ந்து விஸ்வரூபம், பெருமாளுக்குத் திருமஞ்சனம் நடைபெற்றன. மாலையில் மகாசாந்தி ஹோமம் சிறப்பாக நடைபெறுகின்றன பவித்ர உற்சவமாகும்.

பட்டு, பருத்தி நூல்களில் செய்யப்பட்ட மாலைகளுக்கு பவித்ரம் என்று பெயர். அதாவது புனிதமான என்று பொருள். பூஜை குறைவினால் உண்டாகும் பாவத்தில் இருந்து தடுத்து, நிறைவு செய்து புனிதமாக்குவதால் இது பவித்ரம் என்னும் பெயரை அடைவதாக ஆகமங்கள் கூறுகின்றன. நொடி, நிமிடம், மணி, யாகம், நாள், பக்ஷம், மாஸம், ருது, அயனம், வருடம் என்ற வரிசையில் காலமானது ஓடிக்கொண்டிருக்கிறது

No comments:

Post a Comment