சந்திர பகவான்
சந்திரன்
நவகிரகங்களில் ஒருவர்.
பராசக்தியின் அம்சம்.
மூலிகைக்கு அதிபதி சந்திரன்.
செல்வத்தை தருபவன் என யஜுர் வேதம் சந்திரனைப் புகழ்கிறது.
சந்திரனின் வேறு பெயர்கள்
நிலவு, சோமன், களங்கன், நிசாபதி, பிறை, கலையினன், உடுவின்வேந்தன், கலாநிதி, குபேரன், அலவன், சசி, திங்கள், அம்புலி, நிசாகரன், இமகிரணன், தண்ணவன், குரங்கி, மதி, இராக்கதிர், இந்து, தானவன், அல்லோன், விது, குமுதநண்பன், சுதாகரன், வேந்தன், ஆலோன், முயிலன்கூடு, பசுங்கதிர்த்தே, ரஜனிபதி, சுகுபராக, இந்து, மதி ஆகியவை.
சந்திரன். பரம்பொருளின் மனதிலிருந்து வெளிவந்தவன் என்கிறது வேதம்
சந்திரமா மனஸோஜாத:
பரம்பொருளானது பிரபஞ்சாகாரமாகத் தோற்றம் அளிக்கிறது.
திருமால் மார்பிலே தோன்றியவன் என்பதை சந்திரமா மனஸோ ஜாத என்று புருஷ சுத்தம் கூறுகிறது.
பிரம்மா ஒரு முறை சகல ஒளஷதங்களுக்கும் நட்சத்திரங்களுக்கும் பிராமணர்களுக்கம் அரசனாக சந்திரனை மகுடாபிஷேகம செய்தார்.
மனித இனத்தை இயக்குபவன் என்று சந்திரனைக் குறிப்பிடுகிறது ஜோதிடம்
மனஸ்துஹினகு...
ஈசனின் சிரசில் சந்திரன் வீற்றிருப்பதால், சந்திரசூடன் என சிவனாருக்குத் திருநாமம் உண்டு.
அதேபோல், அம்பாளின் சிரசிலும் ஸ்ரீவிநாயகரின் சிரசிலும்கூட சந்திரன் வீற்றிருக்கிறார்.
சந்திரன் நீரைக் குறிக்கும் ‘ஜல கிரகம்’.
அவருடைய ராசியான கடகம், ‘நீர் ராசி’.
சூரியனோடு கோச்சார ரீதியாக சேரும் பொழுது அமாவாசை ஆகின்றது. சூரியனும், சந்திரனும் ஓன்றுக்கொன்று பார்வையிடும் பொழுது பௌர்ணமி ஆகின்றது.
சந்திரனுக்கும் மனித மனங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. பெண்களின் மனதளவில் மட்டுமல்லாது உடல் அளவில் ஏற்படும் மாற்றங்களுக்கும் சந்திரனே காரணமாக இருக்கிறார்.
பெண்களின் மாதவிடாய் பிரச்னைகள், கர்ப்ப விஷயங்கள் எல்லாம் சந்திரனின் கட்டுப்பாட்டுக்குள்தான் இருக்கின்றன.
இதைத்தான் மாணிக்கவாசகர், திருவாசகத்தில் ‘உருத்தெறியா காலத்தே என் உட்புகுந்து உளம் மன்னி' என்று குறிப்பிடுகிறார்.
அந்தக் கரு உருவாகும்போதே சந்திரனின் செயல்பாடுகள் தொடங்கிவிடுகின்றன.
தேவர்களும் அசுரர்களும் அமிர்தத்திற்காகவும் இன்னும் பல செல்வங்களுக்காகவும் திருப்பாற்கடலைக் கடைந்தனர்,
அதிலிருந்து பல அரிய பொருட்கள் தோன்றின. ஆலகாலம், மூதேவி, ஸ்ரீதேவி, காமதேனு, நவநிதி புஷ்பகவிமானம், வெள்ளையானை, வெள்ளைக்குதிரை, நீலமணி பாரிஜாதம், காமதேனு, அமிர்தம் இவைகளுடன் சந்திரன் மிகவும் பிரகாசத்துடன் தோன்றினான்.
சந்திரனின் பிரகாசம் தேவர்களின் கண்களைக் கூச வைத்தது.
அதீத தவத்தின் பலனாக சந்திரனை ஒரு கிரகமாக அறிவித்து அவரை சிவன் தன் தலையில் சூடிக்கொண்டு சந்திரசேகரானார் .
சந்திரன் மிகவும் இளமையானவன் அழகானவன். சந்திரனுக்கு 27 மனைவிகள் 27 நட்சத்திரமும் அவர் மனைவிகளாவா்.
ஸ்ரீ விஷ்ணுவின் கண்ணாக கருதப்படுகிறாா்.
சிவபெருமானது இடது கண்ணாகவும் இருப்பவர்.
சந்திரன் நிற்கும் வீட்டை ராசி வீடாகக் கொண்டு இதன் முன் பின் வீடுகளை சனி கடக்கும் போது ஏற்படும் ஏழரை ஆண்டுகள் ‘ஏழரை நாட்டுச் சனி’ என்று கூறப்படுகிறது.
தட்சணின் சாபம்
பிரஜாபதி தட்சனுக்கு மொத்தம் அறுபது பெண்கள்.
அவர்களில் பத்துபேரை தருமனுக்கும்
பதின்மூன்று பேரை காசிபருக்கும்
இருபத்தேழு நட்சத்திரப்பென்களை சந்திரனுக்கும் ,
மீதிப் பெண்களை ஆங்கீசர் ,அரிஷ்டநேமி ,கிரிஷஷ்வர் வாஹுபுத்திரர்க்கு திருமணம் செய்துகொடுத்தாா்.
இருபத்தியேழு நட்சத்திரப் பெண்களை (அஷ்வினி முதல் ரேவதி வரை )சந்திரனுக்கு திருமணம் செய்கையில் சந்திரனைப் பார்த்து தன் இருபத்தியேழு பெண்களையும் சமமாக அன்பு செலுத்தி குறையில்லாமல் பார்த்துக்கொள்ளச் சொன்னாா்.
திருமணம் ஆன புதிதில் சமமாக நடத்தியவர் பின்னர் ரோகிணியிடம் மட்டும் அதிக ஈடுபாடு காட்ட தொடங்கினாா்.
26 பெண்களும் தந்தையிடம் முறையிட கோபம் கொண்ட தட்சன், சந்திரனுடைய கலைகள் படிப்படியாய் தேய்ந்து போகும் என்று சாபம் இட்டான் சந்திரன் தனது தவறுகள் காரணமாகவும்,தனது வாக்குறுதியை மீறியதனாலும்,
தனது மகள்களை சமமாக நடத்தாதமையினால் சந்திரன் அழகு நாளொன்றுக்கு ஒன்று என அழிந்து மறைந்து போகும்படி தட்சன் சாபமிட்டார்.
சந்திரன் என்ற சொல்லுக்கு பொருள் இல்லாமல் தனது பிரகாசத்தை இழக்கத் தொடங்கிய சந்திரன் பிரம்மாவிடம் கேட்டவுடன் பிரபாசத்திற்குப் போய் பரமசிவனை வணங்கினால் அவர் அவனது குறையை நீக்குவார் என்று கூறினாா் .
சந்திரனும் உடன் பிரபாசத்திற்கு சென்று சிவலிங்கத்தை பிரதிஸ்டை செய்து மிருத்யுஞ்ச மந்திரத்தை சொல்லி பூஜைகள் செய்தார்,
சிவபெருமான் சந்திரனுக்கு காட்சி தந்து ஒரு மாதத்தில் பதினைந்து நாட்கள் சந்திரனின் கலைகள் குறைந்து(தட்சனின் சாபப்படி ) மீதிப் பதினைந்து நாட்களில் அது மீண்டும் வளர பரமன் அருள் புரிந்தார்.
குரு சாபம்
யாராக இருந்தாலும் தவறு செய்யும் பட்சத்தில் தண்டனை உண்டு
அது கடவுளானாலும் மனிதரானாலும்........
ஒரு பெரும் யாகம் செய்ய சந்திரன் விரும்பி குருவை அழைத்து இருந்தாா்.
குரு வரமுடியாமல் போகவே அவரின் மனைவி தாரையை அனுப்பி வைத்து இருந்தாா்.
யாகம் நல்லபடியாக முடிந்ததும் தாரை ஊா் செல்ல மறுத்து சந்திரனுடன் அவன் அழகில் மயங்கி இருந்துவிட்டாள். சந்திரனுடன் ஒரு குழந்தைக்கு தாயாகியும் விட்டால, ் குரு பிரகஸ்பதி வந்து கூப்பிட்டும் போகாமல் இருந்து விடுகிறாள்.
சந்திரன் குருவை அலட்சியம் செய்து தாரையை போகக்கூட சொல்லாமல் இருக்கிறாா்.
குரு உன் சக்தி உன் அழகு அனைத்தும் அழியப்பட்டும் என்று சாபம் இடுகிறார்.
சந்திரன் நடக்க கூட திரானியில்லாமல் வியாதி வந்து
27 மனைவிகளை அழைத்துக் கொண்டு ஊா் ஊராக கோவில் அனைத்திற்கும் செல்கிறார். குருவின் சாபத்திற்கு
பயந்து எந்த தெய்வமும் அவரை மன்னிப்பதாய் இல்லை.
நம் கும்பகோணத்தில் சோமேச்வரரை சந்திரபுஷ்கரனி
வெட்டி தொழுதும் பயன் இல்லை.
சந்திரசேகரபுரத்தில் சந்திரசேகரரை
பூஜை செய்தும் பயன் இல்லை
வாடி வதங்கிய சந்திரனை விசுவாமித்திரா் பார்த்து திருவிடைமருதூர் சென்று இறைவனை் பாா் என்று சொல்கிறார்.
மேலும் உமாதேவி ஒரு முறை சிவனின் கண்ணை மூடும் போது உலகமே இருட்டாக ஆனபோது திருவிடைமருதூர் ஸ்ரீ ஜோதி மகாலிங்கம் மட்டும் ஜோதி ருூபமாய் காட்சி தந்து அந்த ஊா் மட்டும் இருட்டு இல்லாமல் செய்தார். ஆகையால் அங்கு சென்று இறைவனை வழிபட சொன்னார்.
27 நட்சத்திரமும் சந்திரனும் திருவிடைமருதூர் வந்து சந்திர புஷ்கரனி வெட்டி 27 நட்சத்திரமும் 27 சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டனா்
சந்திரன் தனது ஆத்மாவை ஆத்மலிங்கமாக ஆக்கி சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து இறைவனை வழிபட சிவன் மனம் குளிர்ந்து சந்திரனுக்கு இழந்த சக்தியை கொடுத்து மீண்டும் நவகிரகங்களில் ஒருவர் ஆக்கினார்.
தாரைமேல் தவறு இருப்பதால் சந்திரனை மட்டும் குற்றம் சொல்லிப் பயனில்லை என குரு பிரகஸ்பதி சந்திரனை மன்னித்தார்
திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்க சுவாமி கோவிலில்் நவகிரகங்களில் சந்திரன் மட்டும் உயரம் கூடுதலாகவும் மற்றவர்கள் உயரம் குறைவாகவும் காணலாம்.
திருப்பதியும் சந்திரனும்
இன்றும் திருப்பதி வெங்கடாஜலபதி காலடியில் சந்திரன் குடி கொண்டுள்ளதாக ஐதீகம்.
உலகிலேயே சந்திரனை முதலில் பார்ப்பவர்கள் ஜப்பானியர்கள்தான் சந்திரன் கதிர்கள் அதிகளவில் ஈர்த்து கொள்வதால்தான் அவர்கள் அறிவாற்றல், நுண்ணறிவு, பொருளாதார வளர்ச்சியுடன் உள்ளார்கள் .
அதுபோல இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம் திருப்பதி ஆகும்.
சந்திரன் சக்தி மிகுந்த கோயில் என்பதால் மனம் நிம்மதி உண்டாகிறது.
மூலிகைகள் அதிகம் இருப்பதால் ஆரோக்கியம் உண்டாகிறது. மகான்கள் நிறைந்த பூமி என்பதால் அருளாசியும் நிறைந்துள்ளது.
விஷ்ணுவின் அம்சமான சந்திரனின் நற்பலன்களைப் பெற பெளர்ணமியன்று திருப்பதி சென்று தரிசனம் செய்து தங்கி வழிபடுவது நலம் பயக்கும்.
சந்திரனால்....
சூரியனிடம் இருந்து சூடான கிரணத்தைப் பெற்று, தன்னிடம் இருக்கிற தண்ணீருடன் இணைத்துக் குளிரச் செய்து, வெப்பத்தால் வாடும் உலகைக் குளிர்வித்து மகிழச் செய்கிறான்.
சந்திர கிரகம் இரவினை ஏற்படுத்துதின்றது. மனத்தை வலுவடையச் செய்கிறது. ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. அமிர்தத்தை பரப்பும் தாயென கருதப்படுகிறது.
எல்லா கவலைகளிலும் இருந்து விடுபட இந்த கிரகத்தை வழிபட வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது. மனநல பாதிப்புகளையும் குணப்படுத்தும். க்ஷயரோகம் போன்ற கொடிய வியாதியையும் குணப்படுத்தும். இவரின் குளிர்ந்த கிரணங்கள் சுற்றிலும் மகிழ்ச்சியை பரப்பும்.
திங்கட்கிழமைகளில் சந்திரனை வழிபடுவது அவரவர் விருப்பங்களையும் பிரார்த்தனைகளையும் நிறைவேற்றும் என கருதப்படுகிறது.
ராசி மண்டலத்தில் இவர் கர்கட ராசிக்கு அதிபதி. இவர் ஒரு ராசியில் 2 1/4 நாட்கள் தங்கி 12 ராசிகளையும் கடந்து வர 27 நாட்கள் எடுத்துக் கொள்கிறார்.
உரிய மலர்: வெள்ளரளி
உரிய மரம்: வேப்ப மரம்
தானியம்: பச்சரிசி
வாகனம்: வெள்ளை குதிரை
ரத்தினம்: முத்து
கிழமை: திங்கள் கிழமை
திசை: தென்கிழக்கு
உலோகம்: ஈயம்
நிறம்: வெள்ளை
சமித்து: முருங்கை
வழிபடும் பலன்கள்: தடங்கள்கள் நீங்கி முன்னேற்றம்
சந்திர பகவானுக்கு உரிய காயத்ரி
ஓம் பத்மவத்வஜாய வித்மஹே ஹேம ரூபாய தீமஹி
தன்னஸ் சந்திரஹ் ப்ரசோதயாத்
No comments:
Post a Comment