Wednesday, May 20, 2020

குடை பயன்

அந்த காலத்தில் பெரியவர்கள் பலர் கையில் குடை இல்லாமல் வெளியே போக மாட்டார்கள். மழை வெயில் இவற்றிடமிருந்து நம்மை காப்பாற்றி கொள்வதற்கு மட்டும் குடை பயன்படுவது கிடையாது. 

அதன் பயன் எல்லைகளை கடந்தது. வெகு நாட்களாக முடிவுக்கே வராமல் ஒருகாரியம் இழுத்தடித்துக் கொண்டே போகிறது என்றால் அந்த காரியத்தை முடிக்க செல்லும் போது இடது கக்கத்தில் குடையை நன்றாக அழுத்தி கொண்டு செல்வார்கள் 

அப்படி அழுத்தும் போது வலது மூக்கில் மட்டுமே சுவாசம் ஓடும். இது சூரிய சக்தியை நமக்குள் இழுத்து தருவதனால் நமது பேச்சை மற்றவர்கள் மந்திரம் போல கேட்பார்கள். முடியாத காரியம் சுபமாக முடியும்.

நாள் கணக்காக படிக்கிறேன், மணிக்கணக்காக விழித்திருந்தும் படித்து பார்க்கிறேன். உறக்கம் கெடுகிறதே தவிர, படித்தது எதுவும் மனதில் தங்குவதில்லை என்று பலருக்கும் குறையுண்டு. 

இவர்கள் மிகச்சுலபமான பயிற்சியின் மூலம் வலதுநாசி வழியாக சுவாசத்தை நடத்துவதற்கு கற்றுக் கொண்டால் படித்தது அனைத்தும் பச்சைமரத்தில் ஆணி அடித்தது போல மனதில் ஒட்டிக்கொள்ளும். 

இந்த பயிற்சி ஒன்றும் கடினமான பயிற்சி இல்லை. நாற்காலியில் அமர்ந்த நிலையிலோ, படுக்கையில் சாய்ந்த நிலையிலோ செய்யலாம். இடதுபகுதி பிருஷ்டத்தை (அக்குள்) நன்றாக அழுத்திக் கொண்டு உட்கார்ந்தால் வலது சுவாசம் சுகமாக நடக்கும். 

இப்படி சுவாசத்தில் எத்தனையோ சாதனைகளை செய்யலாம். சித்தர்களின் தலைவரான திருமூலர், தமது திருமந்திரத்தில் சுவாசத்தை மாற்றி அமைத்துக்கொண்டு தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபட்டால் என்ன குழந்தை வேண்டுமென்று விரும்புகிறோமோ அதை பெறலாம் என்று வழிவகை சொல்லி இருக்கிறார். இப்படி சுவாசத்தின் பயன்கள் விரிந்து கொண்டே செல்கிறது...

No comments:

Post a Comment