💫🌹கோயில் பிரஹாரங்களில் கருங்கல் தரையை அமைத்ததன் அறிவியல் காரணம்...!!!????💫🌹
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
நம் முன்னோர்களின் அறிவை பாருங்கள், வியப்பீர்கள் ...
மெல்ல மெல்ல கோயில் பிரஹாரங்களில் கருங்கல் தரையை மறைத்து அதன் மேல் சிமெண்ட் தரையைப் போட ஆரம்பித்திருக்கிறார்கள்.
இதைச் செய்வது அறநிலையத் துறையா அல்லது மக்களுக்கு நல்லது செய்வதாக நினைக்கும் அமைப்புக்களோ, தனிநபர்களோவா தெரியாது.
ஆனால் இது முட்டாள்தனம்.
ஆயிரம் ரூபாய் கொடுத்து அக்யூபிரஷர் செருப்பு வாங்குவதை விட, சில நூறு ரூபாய்கள் கொடுத்து அக்யூபிரஷர் உபகரணங்கள் வாங்குவதை விட, டோக்கன் வாங்கிக் கொண்டு அக்யூபிரஷர் தெரப்பிஸ்ட்டுகளைப் பார்க்க காத்திருப்பதை விட, எளிய, காஸ்ட் எஃபெக்டிவ் பிராஸஸ் கருங்கல் தரையில் நடப்பது. கோயிலை ஐம்பது சுற்று சுற்றுகிறேன், நூறு சுற்று சுற்றுகிறேன் என்றெல்லாம் வேண்டிக் கொண்டு சுற்றிவிட்டு உடலும் மனமும் ஆரோக்யமாக இருப்பதை வியப்பார்கள். அந்தப் பலனை ஆண்டவனுக்கு அட்ரிப்யுட் செய்வார்கள்.
மலைகளில் கோயில்கள் அமைத்ததற்கும், பிரஹாரங்களைக் கருங்கல் கொண்டு அமைத்ததற்கும் காரணம் அக்யூபிரஷர் என்பதை அறிக. வாரம் ஒரு முறையாவது மலையில் அமைந்த கோயில் ஒன்றுக்குப் போய் வாருங்கள், உடலும் மனமும் ஆரோக்யமாக இருக்கும்.
மருந்தில்லா மருத்துவம்..!
***********
முடிந்தவரை நடைபயிற்சி செய்யுங்கள் , உடல் நிறையை சீராக வைத்திருப்பதற்கு நடைப்பயிற்சி வெளிப்படையான காரணமாக இருந்தாலும் பாதத்தில் உடலின் நரம்புகள் ஓன்று சேரும் புள்ளிகள் காணப்படுகின்றன.
இவற்றை மசாஜ் செய்வதன் மூலம் அத்தகைய நரம்புகளை தூண்டி புத்துணர்வு பெறலாம்.
இடது காலில் இதயத்திற்கான புள்ளியும் ஏனையை பகுதிகளுக்குமான புள்ளிகளும் காணப்படுகின்றன.
சீனரின் அக்குபஞ்சர் சிகிச்சை முறையில் இத்தகைய புள்ளிகளிலேயே ஊசி குத்தப்படுகிறது, சிறிய கற்கள் நிறைந்த தரையில் வெறுங்காலுடன் நடப்பதும் நல்ல பலனைத் தரும்.
சுடரான சுழுமுனையில் சந்திரன் சேர்ந்தால் பஞ்சபூதமும், அறிவும் ஒடுங்கும். சூரியன் சேர்ந்தால் ஐம்புலன்களும், அறிவும் ஒடுங்கும். சந்திரனும், சூரியனும் சேர்ந்து. ஒடுங்கில் அறிவும், தசவாயுவும் ஒடுங்கும்.
இந்த வாயுவை நடுநிலையிலும், மூலத்திலும், நாபியிலும், கண்டத்திலும்,சுழியிடத்திலும் சதா நிற்கப் பெற்றவர்களே மெய்ஞானியர்கள் என்பது சித்தர்கள் கூற்று.
சமாதியில் கூடிய சாதகன் இடகலையை பிங்கலையிலும், பிங்கலையை இடகலையிலும் மாற்றக் கற்றுக் கொண்ட பின், பகல் முழுவதும் இடகலையிலும், இரவில் பிங்கலையிலும் நடத்தப்படுவான்.
இந்த யோகத்தின் போது முதல் தீட்சையாக.ரோமத் துவாரங்கள் வழியாக கெட்ட நீர்கள் வியர்வையாகக் கசியும்.
இரண்டாவது கட்டத்தில் வாத, பித்த, சிலேத்தும தோஷங்கள் நீங்கும்.
மூன்றாவது கட்டத்தில் பழைய கெட்ட உதிரங்கள் கசியும்.
நான்காவது நிலையில் சர்ப்பத்தின் தோல் உரிவது போல் சரீரத்தின் தோல் உரியும்.
ஐந்தாம் கட்டத்தில் சட்டை
கழன்று தேகம் சிவந்த நிறமாக விளங்கும். பஞ்ச மூர்த்திகள் கேட்டதைத் தருவார்கள்.
ஆறாவது நிலையில் சட்டை கழன்று சுழுமுனை வாசல் திறந்து தூரதிருஷ்டி ஏற்படும்.
ஏழாம் கட்டத்தில் சட்டை வெறுப்பாய் கழன்று தீபம் போல் பிரகாசிக்கும்.
எட்டாவது நிலையில் இலாகிரியுமாகும்.
ஒன்பதாவதில் தேகம் சூரியனைப் போல பிரகாசிக்கும். அட்டமா சித்திகளும் ஏற்படும். தேவர்களும் ஏவல் புரிவர்.
பத்தாவது நிலையில் தேகம் சுடரொளிபோல் பிரகாசிக்கும்.
பதினொன்றாவது நிலையில்
கத்தியால் வெட்ட முடியாத படிக்கு தேகம் கல்போல் இருகும்.
பன்னிரண்டாவது கட்டத்தில் சொரூபசித்தி, அண்டத்தில் மௌனம், நரை, திரை, மூப்பு, பிணி, மரணம் ஏற்படாது.

No comments:
Post a Comment