ராம் ராம் ராம்.
மும்பை டோம்பிவில்லியில் இந்த மகான் பெயரில் அமைந்த " சந்த் நாம்தேவ் பத்" என்ற பகுதியில் என் வாழ்க்கையில் கால் நூற்றாண்டைக் கழித்த சந்தோஷம் மனதில் நிறைந்துள்ளது.
மராட்டிய பூமி மஹனீயர்கள் நிறைந்தது. அங்கு ஜீஜாயி நகர், விட்டல்வாடி , நாம்தேவ் பத், கோக்ராஸ்வாடி என்று தான் பெயர் வைப்பார்கள்.
கருணாநிதி நகர்,ஈவேராநகர் , அண்ணாநகர், ராஜீவ் நகர், இந்திரா நகர் என்று தமிழ்நாட்டைப் போல் மனிதத்துதி பாடுவது குறைவு.
பாரத் மாதா கி ஜெய்.
பக்த விஜயம்
ஸந்த் ஏகநாதர்
ஏக்நாத் என்ற பேரே ஏன் தெரியுமா அவரைத்தவிர அவர் குடும்பத்தில் யாருமே பிழைக்கவில்லை எங்கே வம்சமே அழியுமோ என்ற பயத்தில் விட்டலன் அருளால் கிடைத்தவர் "ஒரே ஆள்" என்ற இந்தி சொல் தான் ஏக் நாத். அப்பா அம்மா இன்றி தாத்தாவிடம் வளர்ந்தவர்.
சம்ச்க்ரிதம் வேதம் எல்லாம் சொல்லிக்கொடுத்து 12 வயசிலே பாகவதம் பூரா தெரியும்.
அந்த காலத்தில் எல்லோருமே நல்ல பலசாலிகள். திடகாத்ர மான வர்கள். மின்சார வசதி இல்லாத காலம்.
எங்கும் இருட்டு. கொள்ளை க்காரர்கள் உலவுவார்கள். திடீரென்று ஒரு கொள்ளைக்கார கும்பல் ஆயுதங்களோடு ஆஸ்ரமத்தை சூழ்ந்துகொண்டுவிட்டது ஜனார்தன பந்த் உள்ளே நிஷ்டையில் இருக்கிறார். ஏக்நாத் குருவை தியானத்திலிருந்து எழுப்ப விரும்ப வில்லை .
வியாழக்கிழமையாச்சே! குரு தத்தாத்ரேயரை வணங்கி குரு நிஷ்டையிலி ருக்கிறாரே! என்ன செய்வது ? தைர்யமாக கதவை பூட்டிக்கொண்டு வெளியே வந்துவிட்டார் ஏக்நாத். கையிலே கேடயம் கத்தி எடுத்த்துகொண்டு தன்னந்தனியனாக கொள்ளைக்கார கும்பலை சந்திக்க வந்துவிட்டார். அடுத்த சில மணித்துளிகளில் சூராவளியாக சுழன்று அத்தனை கொள்ளைக்காரர்களையும் முறியடித்து விரட்டிவிட்டு சத்தம்போடாமல் உள்ளே திரும்பினார்.
தியானம் கலைந்து குரு ஏக்நாத்தை பார்த்த பார்வையிலேயே அவருக்கு என்ன நடந்தது என்று தெரிந்துவிட்டது. " தத்தாத்ரேயர் உனக்கு உதவியது தெரிந்து கொண்டேன். உனக்கு அவர் ஆசீர்வாதம் என்றும் உண்டு"
ஏக்நாத் தத்தாத்ரேயரை உபாசித்து தரிசனம் பெற்றார்.
" நீ பாண்டுரங்கனான கிருஷ்ண பக்தன். போய் கிருஷ்ணனை நோக்கி தவம் செய். நீ செய்யவேண்டிய கடமைகள் நிறைய இருக்கிறது" என்றார் ஜனார்தன பந்த். ஒரு குன்றின் மேல் அமர்ந்து எகாக்ர மாக ஏக்நாத் கிருஷ்ணனை எண்ணி தவம் புரிந்தார் . அன்ன ஆகாரமின்றி இரவும் பகலும் தவமிருக்கும் அவரைக்கண்டு ஒரு மாடு மேய்க்கும் சிறுவன் தினமும் பால் கறந்து அவர் வாயில் ஊற்றுவான் அது கூட அவருக்கு தெரியாது.
ஒருநாள் வழக்கம்போல் அந்த பையன் பால் கொண்டு அவரிடம் வந்தபோது ஒரு பெரிய கருநாகம் அவர்மேல் ஏறி அவர் கழுத்தைச் சுற்றிக்கொண்டிருந்தது கூட அவருக்கு தெரியாமல் நிஷ்டையில் இருந்தார். கடும் வெயிலில் அவருக்கு தனது படம் விரித்து குடை போல் அவரை காத்துகொண்டிருந்தது அந்த பெரிய கருநாகம்.!! பையன் வீ ல் என்று கத்தியதில் ஏக்நாத் தவம் கலைந்தது.
நாகமும் மெல்ல அவரை விட்டு விலகி காட்டில் சென்று மறைந்தது. ஜனார்தன பந்த் இதை பார்த்து கொண்டிருந்தவர் ஏகநாத்தைக் கட்டி அணைத்து "என் மகனே, உனக்கு இனி குரு உபதேசம் தேவையில்லை. நீ இனி ஒரு குரு.
என்னோடு க்ஷேத்ராடனம் புறப்படு."
இருவரும் பல க்ஷேத்ரங்களை தரிசித்து, கோதாவரி நதிக்கரையில் ஒரு நாள் சந்த்ரபோதா என்ற ஸம்ஸ்க்ரித பண்டிதரை சந்தித்தனர். அவர் ரொம்ப சந்தோஷத்தோடு இருவரையும் தன வீட்டுக்கு அழைத்து உணவளித்தார். அவர்கள் பேச்சு பாகவதத்துக்கு திரும்பியது.
பண்டிதர் உணர்ச்சி வசத்தோடு பாகவதத்தின் 4 வது அத்தியாய ச்லோகங்களை உச்சரித்தபோது ஜனார்தன்
"ஏக் நாத், நீ இதை மராத்தியில் மொழி பெயர்த்தால் எத்தனைபேர் நம் ஊரில் இதை ரசிக்க இயலும்" என்று அபிப்ராயபட்ட அடுத்த கணமே ஏக நாதர் கட கட என்று கடல் மடை போல் மராத்தியில் அந்த ஸ்லோகங்களை அமிர்த சாகரமாக வழிய விட்டார்." குரு "விட்டலா விட்டலா" என்று ஏக் நாத்தை கட்டி அணைத்தார். பண்டிதரோ ஸ்தம்பித்து போய்விட்டார்.
"என்ன திறமை என்னே கிருஷ்ணன் அருள் " அவர் வாய் விடாமல் முணு முணுத்தது.
எல்லோரும் ஊர் திரும்பினார்கள் ஏக் நாத்தின் வயதான தாத்தா பாட்டிக்கு "அவருக்கு என்ன ஆச்சு" என்றே தெரியாத கவலை. இதை உணர்ந்த ஜனார்தன் வடக்கே பத்ரி வரை சென்றுள்ள அவரைப்பற்றி விஷயம் சொல்லி விரைவில் அவர் ஊர் திரும்புவார் என்று கவலையை நீக்கினார்.
ஜனார்தன பந்த் தனது உத்தம சிஷ்யன் ஏக்நாத் கிருஷ்ணனின் ஜென்மாஷ்டமி கொண்டாடப்போகிறதை அறிந்து தேவகிரியிலிருந்து வந்தார். ஏக் நாத்துடைய கிருஷ்ண சரித்ரம் மிக பிரமாதமாக சொல்லப்பட்டதை கேட்டார்.
ஹரிகதா ப்ரவசனமும் ஜாம் ஜாம் என்று நாம சந்கீர்த்தனமும் நடைபெற்றது. கண்களில் ஆனந்த கண்ணீர் வழிந்தது கூட்டத்தில் ஸ்ரீ தத்தாத்ரேயர் அமர்ந்து ரசிப்பதை பார்த்து குரு மிக ஆனந்தபட்டார். ஏக்நாதரை ஆசிர்வதித்து புறப்படும் சமயத்தில் தான் அந்த தாத்தா பாட்டி " சுவாமி உங்களால் தான் எங்கள் பேரன் ஏக்நாத் நல்வழியில் செலுத்தபட்டான்.
எங்களுக்கோ வயதாகிவிட்டது மரணம் எந்த சமயத்திலும் எங்களை வெளியேற்றிவிடும் இவனுக்கு பிறகு இந்த பானுதாசர் குடும்பம் அழியுமோ என்ற பயம் பிடுங்கி தின்கிறது நீங்கள் தான் அவனை குடும்பத்தில் ஈடுபடுத்தி புத்திர சந்தன பாக்கியம் ஏற்பட அருள வேண்டும்" என்று வேண்டினார்கள்.
அவ்வாறே குருவும் புத்திமதி சொல்லி ஏகநாதர் கல்யாணம் நடைபெற்றது. கிரிஜா பாய் அமைதியானவள். பதி சொல் தவறாத பாவை. கிட்டத்தட்ட 40 வருஷ காலம் தம்பதியர் விட்டல நாம பஜனையில் வாழ்ந்தனர் .
ஒரு வருஷம், வழக்கம்போல் ஜன்மாஷ்டமி கொண்டாட “கையில் காசில்லையே, என்ன பண்ணுவது?” ஏக்நாதருக்கு ஒரு சிஷ்யன். உத்தவன். அவன் எங்கோ ஒரு லேவாதேவி ஆளிடம் கடன் வாங்கினான்.
அவனுக்கு பணம் தரமுடியாது என்று சொன்னதால் தன குருநாதர் ஏக்நாத் பெயரில் கடன் வாங்கினான். மறுநாள் தருவதாக வாக்களித்த உத்தவன் பணம் திருப்பி கொடுக்க வழியில்லாமல் திணறினான்.
பொறுத்து பார்த்த கடன் கொடுத்தவன் ஏகநாதர் வீட்டுக்கு வந்துவிட்டான் அன்று பாண்டுரங்கனுக்கு பூஜை செய்து சமாராதனை நடந்துகொண்டிருந்தது. வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் நடந்து முடிந்தபிறகு தான் ஏகநாதர் குடும்பம் கடைசியில் மீந்து இருப்பதை உண்ண வேண்டும்.
இந்தநேரம் வந்துவிட்டான் அந்த மனிதன் கடன் வசூலிக்க. உத்தவன் எவ்வளவோ கெஞ்சியும் அவன் நேராக ஏகநாத்திடம் வந்து விட்டான். ஏக் நாத்துக்கு இந்த விஷயம் தெரியாது. அவனை உபசரித்து அன்னதானம் செய்வித்தார். அவன் இவரை நெருக்கினால் தான் பணம் பெயரும் என்று அறிந்து ஏக் நாத்திடம் சொன்னான். "சுவாமி நீங்கள் நல்லவராக தெரிகிறீர்கள். சொன்ன கெடுவில் பணம் திரும்பாததால் எனக்கு நஷ்டம். நானும் பிழைக்க வேண்டுமே இந்த பணத்தை திருப்பாமல் நீங்கள் உண்ணக்கூடாது."
அவன் கண்டிப்புக்காக இப்படி சொன்னான்.ஏக் நாத்தோ " அவ்வாறே செய்கிறேன் இது விட்டலன் மேல் சத்யம். பணத்தை எப்பாடு பட்டாவது திருப்புவதற்கு முயற்சிக்கிறேன். பிறகே எனக்கு இனி உணவு" என்று பாவம் பட்டினி கிடக்க ஆரம்பித்தார் அவர். எங்கே போவார் பணத்துக்கு? "விட்டலா நீயே கதி" என்றார்.
அன்று இரவு நடு நிசி நேரம். கடன் கொடுத்தவன் வீட்டு கதவை யாரோ தட்டினார்கள் விளக்கை ஏற்றி கையில் எடுத்துக்கொண்டு அவன் கதவைத்திறந்து பார்த்தால் வாசலில் உத்தவன்.!
"என்னய்யா, இந்த அகால வேளையில் வந்து கதவை தட்டுகிறாய்? வேறு வேலை இல்லையா உனக்கு?" என்று கத்தினான் அந்த மனிதன்.
"உங்களுக்கு சேர வேண்டிய பணம் திரட்ட நேரமாகிவிட்டதே அதால் இப்போது உடனே வந்தேன்"
"வரவேண்டிய நேரத்தில் வராதே. உனக்காக எப்போது தோணுகிறதோ அப்போது வந்து கழுத்தை அருக்கிறாயே! நாளைக்கு கொண்டுவந்து தந்தால் என்ன குடி முழுகியா போகும் ?
"அய்யா நாளை தருவதை விடுங்கள். நீங்கள் என்ன கண்டிஷன் போட்டீர்கள் அது மறந்து போனதா?"
"என்னய்யா கண்டிஷன் நான் போட்டேன்?"
"பணம் திருப்பித்தரும் வரை நீங்கள் உண்ணக்கூடாது என்று எங்கள் குரு தம்பதியருக்கு நீங்கள் சொன்னதால் அவர்கள் இன்னும் பட்டினியாகவே உள்ளனரே அவர்கள் பசி தீர வேண்டாமா? மஹா பாவமில்லையா இது?.
"சரி சரி" என்று அந்த மனிதன் வீட்டில் விளக்கேற்றி ரசீது புஸ்தகம் தேடி பணத்தை வரவு வைத்துக்கொண்டு இனி கடன் இல்லை" என்று பத்திரத்தில் எழுதி திருப்பிக்கொடுத்தான் .
உத்தவன் நன்றி தெரிவித்து திரும்பினான். அன்று இரவு கடன் கொடுத்தவனுக்கு தூக்கம் கெட்டுவிட்டது நினைத்து பார்த்தான். பாவம்! அந்த வயதான தம்பதியை பட்டினி போட்டோமே! .
எப்படியோ நாணயமாக பணத்தை திருப்பிவிட்டாரே! என்று மனது இறங்கியது. மறுநாள் பகலில் ஏக் நாத் வீட்டுக்கு வந்தான். வாடி நின்ற அவர் காலில் விழுந்தான்" என்னை மன்னிக்கணும் கொஞ்சம் கடுமையாக நடந்து கொண்டு விட்டேன்"
" விட்டலா இது என்ன அபசாரம். அய்யா நீங்கள் ஒன்றும் தவறே செய்யவில்லையே.
நான்தானே வார்த்தை மீறி இன்னும் சொன்ன கெடுவில் பணம் திருப்பித்தரவில்லை தவறு என்மீது தானே" நீங்கள் எதற்கு வருந்தவேண்டும். விரைவில் நான் கடனை திருப்புவிடுகிறேன்."
"சுவாமி என்னசொல்கிறீர்கள்.
இதோ நிற்கிறானே உத்தவன், இவனல்லவோ நேற்று இரவு என்வீட்டு கதவை தட்டி என் பாக்கி பணத்தை திருப்பியவன். ரசீது கூட பெற்று சென்றானே உங்களிடம் சொல்லவில்லையா இவன்?. இன்னுமா நீங்கள் சாப்பிடாமல் இருக்கிறீர்கள்?" என்று பதறினான் கடன் கொடுத்தவன்.
"அய்யா நான் எங்கே உங்கள் வீட்டுக்கு வந்தேன். இன்னும் பணத்துக்கு அலைந்துகொண்டுதான் இருக்கிறேன்" என்றான் உத்தவன்.
ஏக்நாத் தனது கணக்கு நோட்டை எடுத்து பார்த்தார் அதில் கடன் கணக்கு தீர்ந்ததாகவும் பணம் கட்டிய ரசீது ஜாக்ரதையாக செருகப்பட்டு வைத்திருப்பதையும் கண்டார்.
"இது தானா நீங்கள் கொடுத்த ரசீது" என்று காட்டினார்
"ஆமாம் அய்யா"
"இது விட்டலன் வேலை. அவன் தீன ரக்ஷகன்.அவன் இன்றி வேறு யார் இதை செய்வார்கள்?" என்று நன்றிக் கண்ணீரோடு நெகிழ்ந்து சொன்னார் ஏக்நாத்.
"என்ன சாக்ஷாத் பாண்டுரங்கனையா நான் கோபித்தேன்!! .
மகா பாபி, அவனருள் பெற்ற நீங்கள் தான் என்னை மன்னிக்க வேண்டும்" என்றான் பணக்காரன். அன்று முதல் ஏக்நாத்தின் சீடனானான்
இராம் க்ருஷ்ண ஹரி பாண்டு ரங்க ஹரி
No comments:
Post a Comment