இன்றைய கோபுர தரிசனம்
அருள்மிகு ஸ்ரீ. பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
பழமை : 500 வருடங்களுக்குள்
பாடியவர்கள் : அருணகிரிநாதர்
திருவிழா :
தைப்பூசம், பங்குனி உத்திரம், நவராத்திரி, திருக்கார்த்திகை.
முருகனைத் தவிர அனைத்து தெய்வங்களும் மரகதத்தால் ஆனது.
கோயில் ஐந்து நிலை ராஜகோபுரம் உடையது.
திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி என்பது போல, சிறுவாபுரி முருகனை நினைத்தாலே, வேண்டியது கிடைக்கும் என்பது நம்பிக்கை.
புதிதாக வீடு கட்ட விரும்புபவர்கள் இங்கு வழிபாடு செய்வது சிறப்பு.
மரகதக்கல்லால் ஆன மயில் இங்கு விசேஷம். மூலவர் பாலசுப்பிரமணியர் நாலரை அடி உயரத்தில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
அவர் எதிரே அருணகிரிநாதர் சன்னதி உள்ளது.
வள்ளியும் முருகப் பெருமானும் கைகோர்த்து நின்ற நிலையில் திருமணக்கோலத்துடன் அருள்பாலிப்பது மிகவும் சிறப்பு.
இத்தகைய திருக்கோலத்தினை காண்பது அரிது.
ராமனிடம் லவனும் குசனும் சண்டை போட்டதாகவும், அந்த இடமே சிறுவாபுரி என்ற சின்னம்பேடு என்றும் இத்தல வரலாறு கூறுகிறது.
சிறுவர்+அம்பு+எடு என்பது சின்னம்பேடு ஆனது. பேடு என்பது அம்பு வைக்கும் கூடு ஆகும்.
ஊர் : சிறுவாபுரி , சின்னம்பேடு.
திருவள்ளூர் மாவட்டம் .

No comments:
Post a Comment