திவ்யதேசங்கள்
திவ்யதேசம்22
திருவெள்ளியங்குடி
கோலவில்லிராமர்கோவில்
திவ்ய தேசங்களான 108 திருப்பதிகளில் ஒன்று திருவெள்ளியங்குடி. இந்த ஒரு தலத்தைத் தரிசித்தால் 108 தலங்களையும் தரிசித்த புண்ணியம் கிடைத்துவிடும் என்பது ஐதீகம். ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்டது எனத் தல வரலாறு தெரிவிக்கிறது.
சோழ நாட்டு திவ்ய தேசங்களில் நடுநாயகமாய், மண்ணியாற்றின் நதிக்கரையில், 4 தீர்த்த புஷ்கரணிகளுடன் , புஷ்கலாவர்த்தக விமானத்தின் கீழ், ஸர்வ லோக சரண்யனான எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணன் ஸ்ரீ ஷீராப்தி நாதனாக, வரப்ரஸாதியாக காட்சி அளிக்கின்றார்.
திருவிக்கிரம அவதாரத்தின் போது தன் கண்ணை இழந்த சுக்ராச்சாரியார் இந்த பெருமாளை வழிபட்டு கண்ணொளியை மீண்டும் பெற்றார் என்பது இந்த ஸ்தலத்தின் பெருமை.
சயன கோல ராமர்: கிழக்கு நோக்கி புஜங்க சயனத்தில் பெருமாள் காட்சி தருகிறார். திருநாமம் கோலவில்லி ராமர். தாயார் மரகதவல்லி.
சங்கு சக்கர கருடன்: பெருமாளின் 108 திருப்பதிகளுள் இங்கு மட்டும் தான் கருடாழ்வார் இந்த ஒரு தலத்திலேதான் சங்கு சக்கரங்கள் ஏந்திக் காட்சி தருகிறார். மகாவிஷ்ணு சங்கு சக்கரங்களை கருடனிடம் தந்து விட்டு, கோலவில்லி ராமனாகக் காட்சி தருகிறார்.
கல்வாழை: தலவிருட்சம் செவ்வாழை. இது கடினமான கல்தரையில் பிராகாரத்திலேயே இருக்கிறது. ஆண்டுக்கு ஒரு முறை ஒரே ஒரு தார் மட்டும் தருகிறது என்பது அதிசயம்.
யுகங்கள் தோறும்: இத்தலம் ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு பெயரோடு விளங்கியதாக புராணச் செய்திகள் உண்டு. கிருதயுகம் பிரம்மபுத்திரம், துவாபரயுகம் சைந்திரநகரம், திரேதாயுகம் பராசரம், கலியுகம் பார்க்கவபுரம்.
திருவெள்ளியங்குடியானது மூர்த்தி, க்ஷேத்ரம் தீர்த்தம் என்னும் முப்பாங்கும் அமையப்பெற்ற ஸ்ரீவைகுணடம் மற்றும் திருவரங்கம் போல் ஒரு ஒப்பான உன்னத க்ஷேத்ரம்.
இந்த திவ்ய தேச எம்பெருமானை திருமங்கை ஆழ்வார் தனது தேனினும் இனிய பெரிய திருமொழியில் 10 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார். ( 4ஆம் பெரிய திருமொழி-10ஆம் திருவந்தாதி )
கண்ணில் குறைபாடு உள்ளவர்கள், திருமண தடை உள்ளவர்கள், புத்திர பாக்கியம் வேண்டுவோர் இங்கு வழிபட்டால் பலன் நிச்சயம் என்பது நம்பிக்கை.சுக்கிரனால் ஏற்படும் தோஷங்கள் நீங்க இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.
செல்லும் வழி: மார்க்கண்டேய மகரிஷிக்குக் காட்சி தந்து அருள்பாலித்த இத்தலம் குடந்தை அணைக்கரை சாலையில் உள்ளது. (குடந்தை -18 கி.மீ, சோழபுரம் - 6 கி.மீ, திருப்பணந்தாள் 6 கி.மீ.).கோயில் காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும் மாலை 4.00 மணி முதல் 7.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.
தொடர்புக்கு: (91-435, 2450118, 94433 96212)

No comments:
Post a Comment