golden Tip 1:
சிலசமயம் என்னதான் சூப்பராக மாவு அரைத்து இருந்தாலும், தோசை வார்த்தால், கல்லில் தோசை சரியாக வராது. கிழிந்து போகும் அல்லது மொறுமொறுப்பாக இல்லாமல் இருக்கும். சிறிதளவு ரவையை எடுத்து கடாயில் போட்டு லேசாக வறுத்து அந்த ரவையில் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி, 10 நிமிடங்கள் ஊறவைத்து, ஊறவைத்த ரவையை அப்படியே தோசை மாவில் ஊற்றி கரைத்து தோசை வார்த்தால் தோசை மொறுமொறுப்பாக கிழியாமல் கிடைக்கும். (பத்து தோசை சுடும் அளவு மாவிற்கு, 2 டேபிள்ஸ்பூன் ரவை போதுமானதாக இருக்கும்)
golden Tip 2:
உங்களுடைய வீட்டில் நான்ஸ்டிக் பாத்திரங்கள் இருந்தால் அதில் இரும்பு கரண்டியை போட்டு பயன்படுத்தாதீர்கள். மரக் கரண்டியை மட்டும்தான் அந்த பாத்திரத்தில் பயன்படுத்தவேண்டும்.


No comments:
Post a Comment