பச்சை நாயகி GREEN TARA
இவளின் எண் வடிவம் 517
இவளின் மந்திரம் ஓம் தாரே துத்தாரே துரே ஸ்வாஹா.
வியாபார அபிவிருத்தி தரும் பச்சை நிறத்தி புதனின் அம்சம் மீனாட்சியின் அம்சம்.இவளை வணங்கி வியாபாரம் செய்பவர்கள் வாடிக்கையாளர்களை அதிகம் பெறுவார்கள்.இவளின் மந்திரத்தையும் எண்களையும் சொல்லிக் கொண்டே இருப்பவர்களுக்கு இவளின் தரிசனம் கிடைக்கும்.உங்களை தேடி நிறைய பச்சை வர்ணங்களை பார்க்க முடியும்.பச்சைக்கிளிகளின் தரிசனம் கிடைக்கும்.பறவைகளில் மிகவும் சாத்வீகமான காதல் பறவைகள் தரிசனம் கிடைக்கும்.புதனின் அம்சமாக விளங்கும் GREEN TARA கடைக்கண் பார்வையால் உங்களின் பணவரவு பெருக்கம் அதிகரிக்கும்.
இவளிடம் உங்களுக்கு ஒரு விஷயம் நடக்க வேண்டும் என்று சொன்னால் கண்டிப்பாக நடத்திக் கொடுப்பாள்.பச்சை வர்ண நாயகி அம்மன் போற்றி.அவள் காட்டும் முத்திரைகளை நம் கையில் வைத்து அவளின் மந்திரத்தையும் எண்களையும் சொன்னால் பச்சை நாயகி தரிசனம் கிடைக்கும்.திருமணம் ஆகாத கன்னியர்களும் காளையர்களும் இவளை வணங்கினால் திருமண வரம் அருள்வாள்.குழந்தை பாக்கியத்திற்கு ஏங்குபவர்களுக்கு குழந்தை வரம் அருள்பவள்.தேவதைகளின் தலைவி.இவளை அழைத்தால் வருவாள்.தெய்வீக சக்தி நிறைந்த தேவதைகளின் அம்சம் பச்சை நாயகி.
வடநாட்டவர்கள் தங்களின் வியாபாரம் சிறக்க புதன்கிழமை தோறும் இவளுக்கு பச்சை கலர் இனிப்புகள் செய்து மந்திங்களையும் எண்களையும் சொல்லி வியாபாரத்தில் பல வெற்றிகள் பெறுவதுண்டு.இந்த படத்தை நீங்கள் அனைவரும் பிரிண்ட் அவுட் எடுத்து உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள்.எந்த ஒரு புதிய காரியங்களை தொடங்குவதாக இருந்தாலும் இவளிடம் சொல்லி ஆரம்பியுங்கள்.வெற்றி கிடைக்கும்.பிரம்மாண்டமான வெற்றியை தருபவள் இந்த பச்சை நாயகி.மரகதவல்லி என்று இவளுக்கு மற்றுமொரு பெயரும் உண்டு.கடை வைத்திருப்பவர்கள் அலுவலகம் வைத்திருப்பவர்கள் தொழில் செய்பவர்கள் வியாபாரம் செய்பவர்கள் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த வேலை செய்பவர்கள் சினிமா கலைஞர்கள் இவளிடம் சரணடைந்தால் உங்களின் வெற்றியை அவள் பார்த்துக் கொள்வாள்.குழந்தைகள் இவளை வணங்கும் பொழுது நன்கு படிக்கும் திறமையை வளர்த்து விடுவாள்.நேர்முக தேர்விற்கு செல்லும் பொழுது இவள் கூட இருந்தால் வெற்றி கிடைக்கும்.மகாலட்சுமியின் மற்றொரு அம்சம்தான் இந்த பச்சை நாயகி.பேச்சு சம்பந்தப்பட்ட குறைபாடுகள் உள்ள குழந்தைகள் யாருக்கு வேண்டுமானாலும் இவளின் பிரார்த்தனை மூலமாகவே நிறைய நல்ல மாற்றங்களை காண முடியும்.பச்சை நாயகி துணை.🙏
No comments:
Post a Comment