Monday, May 9, 2022

அரிசி பருப்பு சாதம்

அரிசி பருப்பு சாதம்

 தேவையான பொருட்கள்: 

அரிசி – இரண்டு டம்ளர், துவரம்பருப்பு – ஒன்றரை டம்ளர், பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 5, பூண்டு – 10 பல், பெருங்காயத் தூள் – அரை ஸ்பூன், பச்சை மிளகாய் – 5, வறமிளகாய் – 5, மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், உப்பு – ஒன்றரை ஸ்பூன், எண்ணெய் – 7 ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், வெந்தயம் – கால் ஸ்பூன், வரமிளகாய் தூள் – அரை ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி. - 

 செய்முறை: 

முதலில் 2 டம்ளர் அரிசி மற்றும் ஒரு டம்ளர் துவரம்பருப்பை ஒரு கிண்ணத்தில் சேர்க்கவேண்டும். இவற்றுடன் தண்ணீர் ஊற்றி இரண்டு, மூன்று முறை நன்றாக கழுவிக் கொள்ள வேண்டும். பிறகு இவற்றுடன் மறுபடியும் தண்ணீர் ஊற்றி ஊறவைக்க வேண்டும். பிறகு தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய் இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். 

பின்னர் அடுப்பை பற்றவைத்து 7 ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் கடுகு, சீரகம், வெந்தயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு இவற்றுடன் பச்சை மிளகாய், வரமிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். -  பிறகு நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

 பின்னர் தக்காளியையும் சேர்த்து குழையும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.

 பின்னர் இவற்றுடன் அரை ஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் பெருங்காயத்தூள், அரை ஸ்பூன் மிளகாய்த் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.

 பின்னர் இவற்றுடன் எட்டிலிருந்து பத்து டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி, தட்டு போட்டு மூடி கொதிக்க விடவேண்டும். தண்ணீர் நன்றாக கொதித்ததும் அரிசி மற்றும் பருப்பு சேர்த்து கலந்து விட்டு, மறுபடியும் தட்டு போட்டு மூடி வேக வைக்கவேண்டும். சிறிது நேரத்திற்குப் பிறகு கொத்தமல்லி தழை தூவி, அடுப்பை சிம்மில் வைத்து, சாதம் வேகும் வரை அப்படியே விட வேண்டும். சிறிது நேரத்தில் சுவையான பருப்பு சாதம் தயாராகிவிடும். -





No comments:

Post a Comment