Thursday, May 12, 2022

அவமானம்

அவமானம்

பாலகுமாரன்.

வாழ்க்கையில் உயர்வும் தாழ்வும் வெகு சகஜம். நல்லதொரு உயர்வின் மகிமையை அறிந்து கொள்ள தோல்வி என்கிற அனுபவத்தையும் பெறுவது நல்லது. 

வெற்றி என்றதும் பிறரால் அவமானப்படுத்துவது என்பதும் வரும். 

இது மிகப்பெரிய பாடங்களை நமக்கு சொல்லிக்கொடுத்துவிடும்.

அடுத்தவரின் உண்மையான முகம் நாம் அவமானப்படும்போது தெரியும்.

யார் நண்பர் யார் நண்பர் அல்லாதார். யார் நல்லவர், யார் கெட்டவர், அவருடைய உண்மையான முகம் எது? என்ற விஷயங்களெல்லாம் மிகத் தெள்ளத்தெளிவாகத்  தெரியும்.

நமக்கு ஏற்பட்ட நிறைய அவமான படுத்துதலுக்கு நமது வெற்றிகளே காரணமாக இருக்கும். வெற்றிகளை பொறுக்க முடியாதவர்களே நம்மை வெகு வேகமாக அவமானப்படுத்த முயற்சிப்பது தெரியவரும்.

நம்மை அவமானப்படுத்த செயல்படும் பலபேர் இவைகளை மிக ரகசியமாகவே செய்கிறார்கள். வேறு யாரையாவது முன்னிறுத்தி பின்னால் நின்று இயக்குகிறார்கள்.

இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால் நம்மோடு வாழ்ந்த மனிதர்கள் நம்முடைய உயர்வு கண்டு பொறாமை படத் தொடங்குகிறார்கள்.

ஆனால் வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம். இம்மாதிரியான மனிதர்களை நாம் எதிர்கொள்ளத்தான் வேண்டும். ஆனால் இந்த அவமானத்திற்கு பயந்து விடக் கூடாது

என்ன செய்ய வேண்டும் ?

கோபப்படவேண்டும் 

நிதானமாகக் கோபப்பட வேண்டும்.

பழி  வாங்குதலில் மிகச் சிறந்த விஷயம் நீங்கள் திரும்ப  திரும்ப வெற்றி காண்பதே. 

வாழ்வில் வெற்றி வேண்டுமெனில் அவமானப்படுங்கள் அவமானத்திற்கு அஞ்சாதீர்கள்.  

அவமானம் ஒரு  உரம், கடுமையான உரம், காரமான உரம். அதனாலென்ன உரம் தானே ?

  பாதகம் செய்பவரைக் கண்டால்  
நீ பயம் கொள்ளலாகாது பாப்பா 
மோதி மிதித்துவிடு பாப்பா "

பாலகுமாரன்.

No comments:

Post a Comment