Friday, May 13, 2022

மோரீஸ் குட்மேன்

 1981 ஆம் ஆண்டில் அமெரிக்க விமானத்தை இயக்கிக் கொண்டிருந்த மோரீஸ் விபத்தில் சிக்கிக் கொண்டார். 

விமானம் வெடித்ததில் அதில் பயணம் செய்து கொண்டிருந்த பயணிகளில் பலர் மரணமடைந்தனர். கடும் காயங்களுடன் சுய நினைவின்றி கண்டெடுக்கப்பட்ட பைலட் மோரீஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.

அவருடைய முதுகெலும்பு, கழுத்தெலும்புகள் முறிந்திருந்தன. 

உதரவிதானம் பாதிக்கப்பட்டிருந்ததால் அவரால் சுவாசிக்க முடியவில்லை. தொண்டை கடுமையான காயங்களுக்கு ஆளானதால் தண்ணீர் குடிக்கவும், விழுங்கவும் முடியவில்லை. 

உடல் முழுதும் எலும்புகள் முறிந்தும், தசைகள் செயல் இழந்தும் இருந்தன. 

சுயமாக கண் விழிகளை இமைக்க மட்டுமே முடிந்த அவருடைய உடல் இனி உயிர் வாழத் தகுதியற்றது என்று மருத்துவர்கள் முடிவு செய்தார்கள்.

ஏராளமான கருவிகள் அவர் உடல் முழுவதும் பொருத்தப்பட்டு ”இப்படியே தொடரலாம், ஆனால் இமைப்பதைத் தவிர அவரால் வேறொன்றும் செய்ய முடியாது” என்று கூறி மருத்துவம் அவரைக் கைவிட்டது.

இப்போது எல்லோரையும் போல ஆரோக்கியமாக வாழ்ந்து கொண்டிருக்கும் மோரீஸின் பெயர் மோரீஸ் குட்மேன். 

மரணத்திலிருந்து மருத்துவத்தின் உதவியின்றி தப்பிவந்த அதிசய மனிதர் என்று அழைக்கப்படுகிறார்.

இப்போது அவருடைய முழுநேர வேலை தான் உணர்ந்த மனதி ரகசியங்களை அனைவருக்கும் கற்றுத் தருவது தான். 

உடலை இயக்குவதில் மனம் பெரும் பங்கு வகிப்பதை உணர்ந்து கொண்ட மோரீஸ் குட்மேன் தன் மன இயக்கத்தை உணர்ந்து கொண்டதன் மூலம் உடல் இயக்கத்தை சீராக்க உதவினார். 

மருத்துவர்களால் தேற்ற முடியாது என்று கூறப்பட்ட சில மாதங்களிலேயே முழு ஆரோக்கியத்திற்குத் திரும்பினார்.

அவர் சொல்கிறார் ”என்னை மருத்துவர்கள் கைவிட்டார்கள். ஆனால் மனம் என் வசம் இருந்தது. என்னால் மனதை தாண்டி சிந்திக்க முடிந்தது. 

என்னைப் பற்றி மருத்துவம் என்ன நினைத்தது என்பதை விட என்னைப் பற்றி நான் என்ன நினைத்தேன் என்பது தான் முக்கியமானது. 

உங்கள் மனம் உங்கள் கைவசம் இருந்தால் நீங்கள் செய்ய முடியாதது எதுவுமில்லை.” என்று கூறும் மோரீஸ் குட்மேன் இப்போது உலகின் மிக முக்கியமான தன்னம்பிக்கை உரையாளர்களில் ஒருவர்.

மனதின் இயல்பை புரிந்து கொள்வதன் மூலம் உடலின் முழு சக்தியையும் நாம் பயன்படுத்திக் கொள்ள முடியும். 

மனம் , உங்களை கைவசம் வைத்திருந்தால் ,

எதையுமே மாற்ற இயலாது.

இதனை அமெரிக்க மரபியல் விஞ்ஞானி டாக்டர். புரூஸ் லிப்டனின் சமீபத்திய கண்டுபிடிப்புகள் நிரூபித்து வருகின்றன. 

நம் உடலின் செல்கள் மட்டுமல்ல அதற்குள் உருவாகும் ஜீன்களும் கூட நம் மன இயல்புக்கு கட்டுப்பட்டவை என்பது தான் மரபியலின் இன்றைய கண்டுபிடிப்பாகும்.

No comments:

Post a Comment