Monday, May 9, 2022

காமாட்சி தாசன்

 மகாபெரியவா பட்டத்திற்கு வந்த பொழுது அவரை வழிநடத்த அவருடைய குருநாதரும் கிடையாது,

 மடத்தின் மேலாளர் கார்வார் வெங்கடராம ஐயர்  தான் மடத்தின் மொத்த நிர்வாகத்தையும் பல வருடங்களாக கவனித்துக் கொண்டிருந்தார்.

அவருக்கு ஒரே ஒரு கவலை. தன்னுடைய மகன் ஸ்ரீனிவாசன் சரியாக படிப்பதில்லை, எனவே பெரியவாள் இடத்தில் சொல்லி அவனை கண்டிக்க வைக்க வேண்டும் என்று விரும்பினார்.

சர்வசாதாரணமாக மடத்துக்கு  அடிக்கடி வந்து போய்க் கொண்டிருந்த சீனிவாசனை ,அன்றைக்கு பெரியவா வரச்சொல்லி உத்தரவு போட்டதும் அவர் முன் போய் நின்றான்.

 :ஏண்டா நீ படிக்கிறது இல்லையாமே ...இது பெரியவா.

இது நம்முடைய அப்பாவோட வேலைதான் வீட்டில் திட்டுவது போறாதுன்னு பெரியவா கிட்டயும் சொல்லி இருக்கார் போல இருக்கு என்று மனதில் கொஞ்சம் கோபத்துடன் ...

படிப்பு ஏறினால் நான் படிக்கப் போறேன்... படிக்க மாட்டேன்னு சொல்லலையே ..

படிப்பு தலையில ஏற மாட்டேங்குது ....நான் என்ன செய்ய ...

பெரியவா சீனிவாசனை உற்று பார்த்தார் ....

சரி நீ படிக்க வேண்டாம் ..படித்தது போதும் ....

இந்தா இந்த சிவனையும் அம்பாளையும் வைத்து தினந்தோறும் பூஜை பண்ணு ...

என்று சொல்லி ஒரு மட்ட தேங்காயையும் ,அம்பாளின் சொரூபமான மகாமேருவையும் சீனிவாசனிட ம் கொடுத்தார் ..

அய்யய்யோ ...நான் பள்ளிக்கூடமே போயிடுவேன் எனக்கு பூஜை  தெரியாது எந்த மந்திரமும்  சொன்னதில்லை ...

இதை எடுத்துட்டு போய் உங்க வீட்டு பூஜை அறையில் வைத்து நாளையிலிருந்து பூஜை பண்ண ஆரம்பி ...என்று பெரியவா சொல்லிவிட்டு எழுந்து கொண்டார் ..

சரி நாம சொன்னா இவங்க எல்லாம் கேட்க மாட்டாங்க ...

வீட்டின் பூஜை அறையில் வைத்துவிட்டு சீனிவாசன் நடையை கட்டினான் ....

இவ்வளவு வருஷம் இந்த மடத்துல நாம வேலை பண்றோம் ...இந்த மாதிரி பிரசாதம் நமக்கு கிடைச்சது இல்லையே என்று கார்வார் வெங்கட்ராமையர் மனதில் நினைத்துக்கொண்டு சரி பூஜை ஆவது பண்ணட்டும் படிப்புதான் வரல ...என்று மனதை சமாதானப்படுத்திக் கொண்டார். 

அவ்வப்போது  பெரியவாளை மடத்தின் பார்த்துவிட்டு வந்தாலும் அன்றைக்கு சீனிவாசனுக்கு ஒரு இனம் புரியாத உணர்வு உடம்புக்குள் சுழன்று கொண்டிருந்தது ..

நடுநிசி ...

தூக்கம் வரவில்லை ...மனதில் ஒரு உந்துதல் ...ஆத்மாவின் ஜோதி பிரகாசமாக மாறுகிறது. அந்த ஜோதியின்  வெளிச்சத்திலேயே அம்பாளின் ஆயிரம் நாமாக்களை எழுதி முடித்து மீண்டும் படுத்துக் கொள்கிறான் ஸ்ரீநிவாசன். 

மறுநாள் காலை

படிப்பு வரலைன்னுn

சொன்னா பெரியவா இனிமேல் படிக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார்  ....

மந்திரம் எல்லாம் தெரியாது ன்னு சொன்னா ...கேட்காம பூஜை பன்னனும்னு சொல்லி சிவனையும் அம்பாளையும் கையில குடுத்துட்டாரு ...நாம ராத்திரி உளறி எழுதி வச்சது அவர்கிட்ட  காட்டுவோம் என்று மனதில் நினைத்துக்கொண்டு மடத்துக்குள் சென்றார் .

நீயே படிச்சு காட்டு ..இது பெரியவா.

ஸ்ரீனிவாசன் என்ற இளைஞனுக்கு அம்பாளின் வர்ணனையை நாமாவளிகள் ஆக்கி சாட்சாத் பரமேஸ்வரனின் சொரூபமான ஸ்ரீ பெரியவாள் முன்னிலையில்  நாம் படித்துக் காட்டிக் கொண்டு இருக்கிறோம் என்ற உண்மை  அன்றைக்கு தெரியவில்லை.

இரண்டு கைகளையும் தூக்கி ஆசிர்வதித்தார் பெரியவாள். கைநிறைய குங்குமத்தை அந்த நாமாவளி எழுதிய தாளில் போட்டு ஸ்ரீனிவாசன் ஐ அனுப்பி வைத்தார்.

உடல்முழுக்க ஒரு பரவசம் தான் எழுதிய நாமக்கள் மீண்டும் மீண்டும் மனதில் வலம் வந்து சீனிவாசனை அடிக்கடி பரவச நிலைக்கு அழைத்துச் சென்றது

.உலகின் நடப்புக்கள் அவரது மனதில் இருந்து அறவே நீங்கிவிட்டது. 

ஸ்ரீ புரத்து   நாயகியான காமாட்சி ஸ்ரீனிவாசனின் பரவச நிலையில் எழுதும் நாமக்களில் லயித்துப் போனாள்.

இங்கேயும் நான் இருக்கிறேன் என்று சொல்லுவது போல் சந்தன  மகாமேரு வளர்ந்துகொண்டே இருந்தது 

 காமாட்சியின் சொரூபத்தை உள்முகமாக காண ஆரம்பித்து ஸ்ரீனிவாசன் சிறிது சிறிதாக தன் நிலையிலிருந்து  காமாட்சி தாசனாக மாறிக் கொண்டிருந்தார்.

காமாட்சி அம்பாள் பரிபூரணமாக காமாட்சி தாசனை  ஆட்கொண்டு விட்டாள் என்பதை மகா பெரியவா  பல சந்தர்ப்பங்களில் முக்கியமான பக்தர்களை காமாட்சி தாசன் வீட்டு  அம்பாளை தரிசனம் செய்து வர அனுப்பிவைத்தார்  .

அதில் எம்.எஸ்  சுப்புலட்சுமி அம்மாவும்  ஒருவர். 

காமாட்சி தாசன் வீட்டுக்கு வந்த எம் எஸ் சுப்புலட்சுமி  பக்தி பரவசத்தில் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் பெருகி ஓட அம்பாள் மீது கீர்த்தனைகளை  பாடி இரண்டு மணி நேரத்திற்கு மேல் எழுந்து போக மனமில்லாமல் அங்கு அமர்ந்திருந்தார்.

காமாட்சி தாசன் மாமா மனிதர்களில் பேதம் கண்டதேயில்லை. அவர் ஒவ்வொருவருடைய ஆத்மாவையும் நோக்கித்தான் பேசுவாரே தவிர மனிதர்களுடைய  பணம் பதவி அந்தஸ்து இவைகளை கணக்கில் எடுத்துக் கொள்ளவே மாட்டார் ..

அன்று ஒரு வீட்டில் காமாட்சி கல்யாணம்.

காமாட்சி தாசன் மாமாவும் வந்திருந்தார்.

வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது.

ஒரு பெண்மணி காமாட்சி அம்பாள் மீது ஒரு 108 நாமாக்களை சொல்லுங்களேன்  என்று கேட்க, ..

அம்பாளின் திருமண வைபவத்தில் லயித்துப் போயிருந்த காமாட்சி தாசன் மாமா தன்னுடைய பரவச நிலையை தொட்டு வேகமாக சொல்ல ஆரம்பிக்க அதை அந்தப் பெண்மணி தன் கைப்பட எழுதிக் கொண்டார்.

108 நாமக்கள் முடியும் தருவாயில் கொளுத்திக்  கொண்டிருந்த வெயில் மறைந்து இடி மின்னலுடன் மழை கொட்டி தீர்த்தது.

இதுதான் காமாட்சி தாசன் மாமாவின் அம்பாளின் பரிபூரண அனுக்கிரகம்.

(அடியேனும்   அவர் பக்கத்திலேயே அமர்ந்து இருந்தேன்) 

தெய்வங்களே தானாக தேடி வந்து தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்ள விரும்பும் சில ஆத்மாக்களின் காமாட்சி தாசன் மாமாவும் ஒரு கலங்கரை விளக்கம். 

இன்று காமாட்சி தாசன் மாமாவின் ஜெயந்தி நாள்.

உடலில் நிழல் மறைந்தாலும் அவர் உடனே எப்பொழுதும்  சிஷ்யனாக வலம் வந்துகொண்டிருந்த ராதாகிருஷ்ணன் அவர்களையும் காமாட்சி யின் கடாட்சமும், காமாட்சி தாசன் மாமாவின் குருவருளும்  என்றும் அரணாக நின்று வழி நடத்தும் என்ப,து உறுதி.

காமாட்சி தாசன் மாமாவின் ஆன்மீக அனுபவங்களை நேரில் அவர் சொல்லக் கேட்கும் பாக்கியம் பெற்றவர்.

No comments:

Post a Comment