Thursday, May 12, 2022

சமையல் டிப்ஸ்

 *சமையல் டிப்ஸ் !!* 

👉 காலை உணவிற்கு முன்பு தினமும் ஒரு தக்காளி பழத்தை சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

👉 உணவுக்கு பிறகு தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடித்தால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்.

👉 பிரியாணி செய்யும்போது, உணவு அடி பிடித்து விட்டால் அதன்மீது ஒரு பிரெட் துண்டினை வையுங்கள், தீய்ந்த வாசனை வராது.

👉 பாகற்காயுடன் உப்பு, மஞ்சள் தூள், வெல்லம், எலுமிச்சை சாறு ஆகியவை சேர்த்து, கலந்து அரை மணி நேரம் வைத்திருந்தால், கசப்பு தன்மை இருக்காது.

👉 துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்தால் தொண்டைப் புண் வராது.

👉 பாயசத்திற்கு திராட்சைக்கு பதிலாக பேரிச்சம் பழத்தை பொடியாக நறுக்கி நெய்யில் பொரித்து போட்டால் சுவையாக இருக்கும்.

👉 அரை தேக்கரண்டி கரு மிளகுத்தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கப் நீரில் ஒரு தேக்கரண்டி தேன் இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டால் உடல் எடை குறையும்.

👉 தக்காளி குருமா செய்யும் போது சிறிது வெங்காயத்தை பச்சையாக அரைத்து ஊற்றினால் குருமா வாசனையுடன் சுவையாக இருக்கும்.

👉 கேரட் மற்றும் தக்காளிச்சாறு உடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் நல்லது .

*பகிர்வு*

No comments:

Post a Comment