#ரகோபதேஸம்
எழுதியது பாஸ்கர் சத்யா
#ரகோபதேஸம்_10
ஸ்வாமி பிரசாதங்களையும் பழங்களையும் சாப்பிட்டு இருவருமே தெம்பானோம்.
'எதுல விட்டேன் பாஸு?'
'இந்த மந்திர புஷ்பம் மந்திரம் லோக க்ஷேமத்திற்கான மந்திரம் அப்படின்னேள். அப்பறம் ஜீவராசிகளுக்கு முக்கியமான தேவையா இருக்கிற ஜலத்த பத்தி இந்த மந்திரம் இருக்கிறதா சொன்னேள். அப்பறம் இந்த மந்திரத்தோட உட்பொருள் ஆச்சரியமானது அப்படின்னும் சொன்னேள்...'
'பரவாயில்லையே நான் கொஞ்சமா சொன்னதையும் இன்னும் ரத்தின சுருக்கமா சொல்லிட்டியே!!'
'நீரின்றி அமையாது உலகம். ஒன்னோட ஸ்கூல்ல கூட இதை சொல்லி கொடுத்திருப்பாள் இல்லையா? எனவே எங்கும் நீர் வளம் பெறுகணும். தங்கு தடையின்றி அது கிடைக்கணும் அப்படிங்கறது ஊர்ஜிதம் ஆகிறது இல்லையா? ஜலம் ஒண்ணுதான் சுபிக்ஷத்தின் அறிகுறி இல்லையா?'
'சரி, இப்ப பத்தி பத்தியா இந்த ஸ்லோகங்களை பிரிச்சி அதற்கு உண்டான அர்த்தங்களையும் சொல்றேன் கவனமா கேட்டுக்கோ.'
'யோ பாம் புஷ்பம் வேத’ புஷ்ப’வான் ப்ரஜாவா”ன் பஶுமான் ப’வதி |
சம்த்ரமா வா அபாம் புஷ்பம்” | புஷ்ப’வான் ப்ரஜாவா”ன் பஶுமான் ப’வதி |
ய ஏவம் வேத’ | யோஉபாமாயத’னம் வேத’ | ஆயதன’வான் பவதி|
'இது முதல் பத்தி. இதோட அர்த்தம் சொல்றேன் கேட்டுக்கோ:
நீர் என்பது ஒரு புஷ்பம். ஜலபுஷ்பம். இதைப் புரிந்து கொண்டவனிடம் புஷ்பங்கள் சேர்கிறது, பூக்களாகிய குழந்தைகள் சேர்கிறது. சுபிக்ஷத்தின் சின்னமாகிய ஆநிரை, ஆடு என்று செல்வம் சேர்கிறது. சந்திரன் எனும் நிலவு, நீரின் குளுமையில் பூவாகிறது. பனிநீரை சுரக்க வைக்கறது. இதை அறிந்தவன் மேற்கண்டவாறு நன்மை பெறுகிறான். நீரின் ஆதாரம் புரிந்தவன் நீரின் சுவையோடு இனிமையோடு வளத்தோடு கலந்த தன்னையே அறிந்த புண்யசாலி.'
'இப்ப நாம அடுத்த ஸ்டான்ஸாவுக்கு போகலாம்.'
'அக்னிர்வா அபாமாயத’னம் | ஆயத’னவான் பவதி | யோ”க்னேராயத’னம் வேத’ | ஆயத’னவான் பவதி | ஆபோவா அக்னேராயத’னம் | ஆயத’னவான் பவதி | ய ஏவம் வேத’ | யோ’உபாமாயத’னம் வேத’ | ஆயத’னவான் பவதி |'
'இப்ப இதுக்கான அர்த்தம்:
நிறைய பேருக்கு நெருப்பிலிருந்து தான் நீர் கிடைக்கிறது அப்படிங்கிறதே தெரியாது. ஹைட்ரஜன் வாயுவுடன், ஆக்சிஜன் எனும் உஷ்ணத்தின் சேர்க்கை தான் நீர். கொதிக்கும் சூரியன் ஒளியில் கடல் நீர் ஆவியாகி மேகமாகி குளிர்ந்து மழையாகி நீராகிறது. இதை அறிந்தவன் நீரை புரிந்தவன். நீரின் ஆதாரம் புரிந்தவன் நீரின் சுவையோடு இனிமையோடு வளத்தோடு கலந்த தன்னையே அறிந்த புண்யசாலி.'
'வாயுர்வா அபாமாயத’னம் | ஆயத’னவான் பவதி | யோ வாயோராயத’னம் வேத’ | ஆயத’னவான் பவதி | ஆபோ வை வாயோராயத’னம் | ஆயத’னவான் பவதி | ய ஏவம் வேத’ | யோ’உபாமாயத’னம் வேத’ | ஆயத’னவான் பவதி |
'இப்ப பொருளை பார்க்கலாம்:
வாயு எனும் காற்றும் நீருக்கான ஆதாரம். காற்று தான் நீராவியாக மேலே மிதந்து சென்று மழை பொழியும் மேகமாகி நீரை அளிக்கிறது. இதை அறிந்தவன் மேற்கண்டவாறு நன்மை பெறுகிறான். நீரின் ஆதாரம் புரிந்தவன் நீரின் சுவையோடு இனிமையோடு வளத்தோடு கலந்த தன்னையே அறிந்த புண்யசாலி.'
'அடுத்ததுக்கு போகலாமா இப்ப?'
'அஸௌ வை தப’ன்னபாமாயத’னம் ஆயத’னவான் பவதி |
யோ’உமுஷ்யதப’த ஆயத’னம் வேத’ | ஆயத’னவான் பவதி |
ஆபோ’ வா அமுஷ்யதப’த ஆயத’னம் |ஆயத’னவான் பவதி |
ய ஏவம் வேத’ | யோ’உபாமாயத’னம் வேத’ | ஆயத’னவான் பவதி|
'சுட்டெரிக்கும் சூரியனே நீரின் ஆதாரம். நீரே சுட்டெரிக்கும் சூரியனின் ஆதாரம். இதுவே உண்மை. இதை அறிபவன் தன்னைத் தானே அறிகிறான். நீரின் ஆதாரம் புரிந்தவன் நீரின் சுவையோடு இனிமையோடு வளத்தோடு கலந்த தன்னையே அறிந்த புண்யசாலி.'
'இதில் என்ன ஆச்சரியமா சொல்லப்பட்டிருக்கு பாத்தியா? நீர் சூரியனுக்கு ஆதாரம். அப்பேர்ப்பட்ட சூரியனுக்கே நீர் தான் ஆதாரம்.'
'முதல்ல அர்த்தங்கள புரியவைச்சுறேன். அப்பறமா விளக்கமா சொல்றேன். அடுத்ததுக்கு போகலாமா?'
சந்த்ரமா வா அபாமாயத’னம் | ஆயத’னவான் பவதி
| ய சந்த்ர ம்த்ரம’ஸ ஆயத’னம் வேத’ | ஆயத’னவான் பவதி |
ஆபோ வை சந்த்ரம’ஸ ஆயத’னம் | ஆயத’னவான் பவதி |
ய ஏவம் வேத’ | யோ’உபாமாயத’னம் வேத’ | ஆயத’னவான்பவதி|
'சந்திரன் தான் நீருக்கு ஆதாரம். நீர் தான் சந்திரன் உருவாக காரணம். இதுவே உண்மை. இதை அறிபவன் தன்னைத் தானே அறிந்தவன் ஆகிறான். நீரின் ஆதாரம் புரிந்தவன் நீரின் சுவையோடு இனிமையோடு வளத்தோடு கலந்த தன்னையே அறிந்த புண்யசாலி.'
இப்படி முடித்தவுடன் அடுத்த பத்திக்கு செல்கிறார்.
'நக்ஷ்த்ர’த்ராணி வா அபாமாயத’னம் | ஆயத’னவான் பவதி |
யோ நக்ஷ்த்ர’த்ராணாமாயத’னம் வேத’ | ஆயத’னவான் பவதி |
ஆபோவை னக்ஷ’த்ராணாமாயத’னம் | ஆயத’னவான் பவதி |
ய ஏவம் வேத’ | யோ’உபாமாயத’னம் வேத’ | ஆயத’னவான் பவதி|
'நக்ஷத்ரம் எனும் விண்மீன்களே நீரின் ஆதாரம். இதுவே உண்மை. இதை அறிபவன் தன்னைத் தானே அறிகிறான். நீரின் ஆதாரம் இவ்வாறு புரிந்தவன் நீரின் சுவையோடு இனிமையோடு வளத்தோடு கலந்த தன்னையே அறிந்த புண்யசாலி.'
'மேல போகலாமா?'
தலை அசைக்கிறேன்.
'பர்ஜன்யோ வா அபாமாயத’னம் | ஆயத’னவான் பவதி |
ய பர்ஜன்ய’ஸ்யாயத’னம் வேத’ | ஆயத’னவான் பவதி |
ஆபோ வை பர்ஜன்யஸ்யாயத’னம் | ஆயத’னவான் பவதி |
ய ஏவம் வேத’ | யோ’உபாமாயத’னம் வேத’ | ஆயத’னவான் பவதி|
'மேகங்களே நீரின் ஆதாரம். நீரே முகில்களின் ஆதாரம். இது எல்லோரும் அறிந்த உண்மை. நீர் உஷ்ணத்தால் ஆவியாகி மேகமாகி மீண்டும் மழையாக மாறி நீராகிறது. இரண்டுமே ஒன்றுக்கு ஒன்று ஆதாரம். இதை அறிபவன் தன்னைத் தானே அறிகிறான். நீரின் ஆதாரம் இவ்வாறு புரிந்தவன் நீரின் சுவையோடு இனிமையோடு வளத்தோடு கலந்த தன்னையே அறிந்த புண்யசாலி.'
'இன்னும் ஒரு ஸ்டன்சா பாக்கி இருக்கு. அதையும் சொல்றேன்.'
ஸம்வத்ஸரோ வா அபாமாயத’னம் | ஆயத’னவான் பவதி
| யஃ ஸம்’வத்ஸரஸ்யாயத’னம் வேத’ | ஆயத’னவான் பவதி |
ஆபோ வை ஸம்’வத்ஸரஸ்யாயத’னம் வேத’ | ஆயத’னவான் பவதி |
ய ஏவம் வேத’ | யோ”உப்ஸு னாவம் ப்ரதி’ஷ்டிதாம் வேத’ | ப்ரத்யேவ தி’ஷ்டதி |
'மாரிகாலமே அதாவது மழைக்காலமே நீரின் ஆதாரம்.வாழ்வின் ஜீவாதாரம் அது தான். ஆகவே தான் நீரே மாரிகாலத்தின் ஆதாரம். மாரிகாலத்தின் விளைவே நீர் மழையாக, ஆறாக, கடலாக பெருகுவது. இதுவே உண்மை. இதை அறிபவன் தன்னைத் தானே அறிகிறான். நீரின் ஆதாரம் இவ்வாறு புரிந்தவன் நீரின் சுவையோடு இனிமையோடு வளத்தோடு கலந்த தன்னையே அறிந்த புண்யசாலி.'
'நான் இப்ப பத்தி பத்தியா பிரிச்சு அர்த்தம் சொன்னேனே. அந்த அர்த்தங்களை மேலோட்டமாக பார்த்தா இது எப்படி லோக க்ஷேம மந்திரங்களா இருக்க முடியும்? எல்லோருக்கும் தெரிந்த நீருக்கான ஆதாரங்களை லிஸ்ட் பண்ணின மாதிரி இருக்கு. நீரையும் அதற்கான ஆதாரங்களையும் லிஸ்ட் பண்ணியிருக்கா இந்த மந்திரங்கள்ல. இத புரிஞ்சிகிண்டவா எல்லாரும் புத்திசாலிகள் புண்ணிய சாலிகள் அப்படின்னு இந்த மந்திரங்கள் சொல்றது.'
'அதானே மாமா. இது பிரார்த்தனை மந்திரமாகவே தெரியலையே மாமா?'
'நீயே கொஞ்சம் யோஜனை பண்ணி பாரேன். எதுக்காக இந்த மந்திரங்கள குறிப்பா ஹாரத்தி காமிக்கும்போது சொல்லப்படறது அப்படிங்கறத பத்தி முடிஞ்சவரைக்கும் யோஜனையா ஆராய்ச்சி பண்ணேன்?'
அவர் இப்படி சொன்னவுடன் அங்கு சிறிது நேரம் அமைதி சூழ்கிறது. அவருடைய கேள்விக்கு உண்டான பதிலுக்காக என் சிந்தனைகள் துவங்குகின்றன.
தொடரும்...
No comments:
Post a Comment