நச்சுப்பொய்கை - சுஜாதா சிறுகதை (1982)
(மஹாபாரதத்தில் நடந்த ஒரு நிகழ்வு. அதற்கு தன்னுடைய ட்ரேட்மார்க் ட்விஸ்ட் வைத்து சுஜாதா எழுதிய சிறுகதை).
பாண்டவர்களுடைய பன்னிரண்டு வருஷ வனவாசம் முடியும் காலம் நெருங்கிக் கொண்டிருந்தது.
இன்னும் கொஞ்ச நாள் இன்னும் கொஞ்ச நாள் என்று மறைந்து மறைந்து, மறுகி, மறுகி சீற்ற மெல்லாம் வெடிக்கும் நேரம் வரக் காத்திருக்க அந்தக் கடைசி நாட்களில் இது நிகழ்ந்தது.
காட்டில் வசித்து வந்த ஓர் ஏழைப் பிராமணன் அவருடைய அரளிக் கட்டையின் மேல் ஒரு மான் உடலை உராய்ந்துவிட்டுச் செல்லும் போது அதன் சிக்கலான கொம்பில் கட்டை மாட்டிக்கொண்டு விட்டது. மான் ஓடிப்போய்விட்டது.
அரனிக்கட்டையால்தான் அந்தக் காலங்களில் நெருப்பு உண்டாக்க முடியும் நெருப்பு இல்லாமல் அக்னி ஹோத்திரம் இல்லை.
அக்னி ஹோத்திர மில்லாமல் பிராமணனுக்கு சாப்பாடு இல்லை -
அந்த பிராமண ருக்கு ஒரு சின்ன மானைத் துரத்திப் பிடிக்க தெரியாது.
எனவே அந்தப் பிராமணன் பக்கத்துக் குடிசையில் வசித்து வந்த பாண்டவர் களிடம் ஓடிப்போய் முறையிட்டான்.
வேறு வேலை அதிகமில்லாத பாண்டவர்கள் ஐவரும் மானைப் பிடிக்க ஓடினார்கள்.
அந்த மான் இவர்களுக்குத் தண்ணி காட்டி விட்டது. மேலும் சமீபத்திய வன வாசத்தில் அதிகம் மான் துரத்தும் பயிற்சி இல்லா ததால் அதைப் பிடிக்க மிகவும் சிரமப்பட்டார்கள்.
ஏதோ மாயமான் போலும். துள்ளிக் குதித்து அவர் களைக் காட்டில் வெகு தூரத்திற்கு அழைத்துக் கொண்டு போய் காணாமற்போய் விட்டது.
இரைக்க இரைக்க ஓடியது தான் மிச்சம்
ஐந்து பேருக்கும் ஏகக் களைப்பு ஒரே தாகம். ஒரு ஆல மரத்தடியில் உடகார்ந்தார்கள் நாக்கு வறட்சி.
நகுலன் நொந்து கொண்டார்
"சே, அற்பம் ஒரு மானைக் கூட பிடிக்கமுடியாத நிலைக்கு வந்தது என்ன ஒரு தாழ்வு நிலை!" என்றான்.
இதைக் கேட்ட பீமன் "திரௌபதியைச் சபைக்கு இழுத்து வந்து துகிலுரித்த போது நீசர்களைக் கொல்லாமல் பார்த்துக் கொண்டே நின்றோம். அதை விடவா இது தாழ்வு?
கௌரவர்கள் சொன்ன சொற்களை கேட்டுக் கொண்டு சும்மா நின்றோம் அதை விட இது பெரிய கேவலமா? " என்று மூச்சிரைப் புகளுக்கு இடையே சொன்னான்.
எல்லாரும் களைப்பினால் பொறுமை தைரியம் எல்லாம் இழப்பதைப் பார்த்த யுதிஷ்டிரன் பேச்சை மாற்றுவதற்காக, நகுலனை பார்த்து, "சும்மா பேசிக் கொண்டே இருக்காதீர்கள் இப்போது நம் எல்லோருக்கும் தாகம், அந்த மரத்தின் மேல் ஏறி பாவது ஜலம் தெரிகிறதா பார்' என்று ஆணை யிட்டான்.
நகுலன், சகா தேவனைக் காட்டி, "ஏன் இவன் ஏற மாட்டானோ, நான் தான் அகப் பட்டேனா' என்று முணுமுணுத்துக்கொண்டு மரமேறினான்.
பார்த்தான். சற்றுத் தூரத்தில் கொக்கு களும் ஜலத்தை அடுத்து வளரும் செடிகளும் தென்பட்டன.
"அண்ணா ! பக்கத்தில் தான் குளம் இருக்கிறது' என்றான் சற்று உற்சாகமாக
"உடனே போய் ஜலம் எடுத்துக் கொண்டு வா," என்று தருமன் சொன்னவுடன், நகுலன் தன் தாக மிகுதியினால் அங்கே விரைவாகச் சென்றான்.எதிர் பார்த்தபடி அங்கே ஓர் அழகான பொய்கை இருந்தது.
தன் தாகத்தைத் தணித்துக் கொண்டு அம்புறாத் துணியிலும் நீர் நிறைந்து கொள்ளலாம் என்ற உத்தேசத்துடன் நகுலன் அந்தப் பொய்கையில் இறங்கினான்.
நிர்மலமான ஜலத்தில் கையை வைத்ததும் "நில்" என்று ஓர் அசரீரி போல் கேட்டது.
நகுலன் சுற்று முற்றும் நோக்கினான்.
"சாகசம் செய்யாதே. அது என் வசமுள்ள குளம், மாதுரி புத்திரனே. நான் சில கேள்விகள் கேட்பேன். அதற்கு விடை அளித்து விட்டு நீரைக் குடி." என்றது அந்தக் குரல் -
ஆகாயத்திலிருந்து, மரங்களிலிருந்து எங்கிருந்து வருகிறது?
நகுலன் திடுக்கிட்டான். இருந்தும் ஒரே தாகம். தண்ணீர் குடித்து விட்டுப் பிறகு பதில் சொல்லிக் கொள்ளலாம் என்று குனிந்து கைகளில் அள்ளி அள்ளிக் குடித்தான்.
கரை ஏறியதும் ஒரு பக்கமாகக் கீழே மயங்கி விழுந்தான்!
தருமபுத்திரனுக்கு, 'என்ன இது! போனவன் திரும்பி வரவில்லை" என்று கவலை உண்டாகி, "சகாதேவா! போய்ப் பாாத்து வா" என்றான்.
சகா தேவன் சென்று சகோதரன் கீழே கிடப்பதைப் பார்த்து திடுக்கிட்டுத்.. திரும்பி அந்தப் பொய்கையை பார்த்தான் அதன் தண்ணீர் கவர்ச்சி,
அவன் அதிக தாகம் பொறுக்காமல் ஒரு மிடறு தண்ணீர் குடித்துவிட்டு ஓடிப் போய் செய்தி சொல்லி விடலாம் என்று பொய்கைக்கு அருகில் சென்றான்
மறுபடி அசரீரி "சகாதேவா, இது என் பொய்கை கேள்விககு விடை சொன்ன பிறகு தாகம் தீர்த்துக் கொள்ளலாம்" என்றது.
சகாதேவன் இந்த எச்சரிக்கையைப் புறக்கணித்து நீரெடுத்து குடிக்க, அவனும் உடனே மயங்கி விழுந்தான்
அடுத்து வந்த அர்ஜுனன், கீழே கிடந்த சகோதரர் களைப் பார்த்து விட்டு, அம்பு விட்டு போர் தொடுக்க ஆயத்தமானான்.
அப்போது அதே அசரீரி "அர்ஜூனா, என் கேள்வி களுக்குப் பதில் சொல்" என்றது.
அர்ஜுனன் அந்தக் குரல் வரும் திக்கில் போராட ஆயத்த மாவதற்கு முன் அவன் தாகம் அவனை கொண்டது.
பெரிய யுத்தத்தில் இறங்கு முன் தீர்த்துக் கொள்ளலாம் என்று நீரில் இறங்கித் தண்ணீர் குடிக்க, அவனும் கீழே விழுந்தான்.
யுதிஷ்டிரனுக்கு மூன்று தம்பிகளின் நிலை என்ன வென்று தெரிய வில்லை.
"பீமசேனா, போய் சகோதரர்கள் என்ன ஆனார்கள் என்று பார். தண்ணீர் கொண்டு வா. எல்லாமே நமக்கு விரோதமாக இருக்கிறது". என்ற அனுப்ப, பீமனுக்கும் ஏறக்குறைய அதே தான் நிகழ்ந்தது.
அசரீரி....... தாகத்தின்வேகம்......., தண்ணீர் குடித்தலில் மயக்கம்.
தனியான தருமன் கவலை பல மடங்கு கொண்டான். "என்ன காரணம்? நால்வரையும் காணோம்.
ஏதேனும் சாபமா காணாமல் நாலு பேரும் பிரிந்து திரிந்து எங்கே யாவது போய் விட்டார்களா?" என்று தானே போய்ப் பார்க்கத் தீர்மானித்து சென்றான்.
சந்தடியற்ற பிரதேசம். அழகான புள்ளிமான்கள் பறவைகளின் இனிய குரல், வசீகரமான பொய்கை.......அதன் கரையில்....
'அய்யோ என்ன இது? தம்பிமார்கள் நால்வரும் வெட்டிச் சாய்ந்த மரங்களை போல் கிடக் கிறார்களே? இறந்து போய்விட்டார்களா? பீமா, உன் சபதம் என்ன ஆயிற்று? நம் வனவாசம் முடியும் சமயத்தில் இந்த சோதனையா?
எந்தப் பகைவனால் இப்படி நால்வரையும் கொல்ல முடியும்?' கிட்டப் போய் பார்த்தான்.
உடல்களில் காயம் ஏதும் இல்லை, உறங்குகிறார்கள் போல் எவ்வித மாறுபாடும் இன்றிக் கிடக்கிறார்கள்.
அருகே விரோதிகள் காலடிகளும் எதுவும் காண வில்லை, இது துரியோதனுடைய சதியாக இருக்கலாம். பார்க்கலாம்.
ஜலத்தைப் பார்த்தான்.
அதன் துல்லிய நீல நடனம். அந்தத் தாகம் தருமனை 'வா...வா....தம்பிகளை அப்புறம் கவனிக்கலாம்...
உன் தாகத்தை முதலில் கவனி....' என்று வரவேற்றது.
செலுத்தப்பட்டவன் போல பொய்கை யில் கால் வைக்க,
உடனே அசரீரி, "உன் தம்பிகள் என் பேச்சைக் கேளாமல் தண்ணீரைப் பருகி, இதோ கீழே கிடக்கிறார்கள். நீயும் அப்படி செய்யாதே தருமா. !!
அவர்களைப் போல அல்லாமல், நீர் அருந்துவதற்கு முன் நீ என் வினாக்களுக்கு விடை கொடுத்த பிறகு குடி இது என் குளம்" என்று சொன்னது.
யுதிஷ்டிரன் தன் தாகத்தைப் பொருட் படுத்தாமல் "சரி கேள்" என்றான்.
அந்த அசரீரி கனைத்துக் கொண்டு. கேட்டது:
"எது தினமும் சூரியனை உதிக்கச் செய்கிறது?
"பிரம்மம்."
"மனிதனுக்கு எப்போதும் துணை எது?"
"தைரியம்"
"எதைப் படித்து மனிதன் புத்திசாலி யாகிறான்:?"
"எதையும் படித்தல்ல, சான்றோர்களைப் பின்பற்றியே"
"பூமியைக் காட்டிலும் கனமானது எது?"
."மக்களைத் தாங்கும் தாய்"
"ஆகாயத்தைக் காட்டிலும் உயர்ந்தது?"
"தந்தை"
"அறிவைக் காட்டிலும் வேகமானது?"
"மனம்"
"புல்லினும் அற்பமானது?"
"கவலை .. "
"வெளி தேசம் போகிறவனுக்கு யார் தோழன் ?"
"வித்தை"
"வீட்டில் இருப்பவனுக்கு?'
"மனைவி"
"சாகப் போகிறவனுக்கு யார் நண்பன்?"
"தானம்"
"எது சுகம்?"
"நல்லொழுக்கம்"
"எதைப் பிரிய வேண்டும்?"'
"கர்வத்தை"
"எதை இழப்பதில் துயரம் இல்லை?"
"கோபத்தை"
"எதை இழப்பதில் மனிதன் செல்வந்த னாகிறான்?".
"ஆசையை"
"பிராமணன் யார்?"
"குலமும் படிப்பும் பிராமணியத்திற்கு காரணம் இல்லை. ஒழுக்கமே காரணம்
ஒழுக்கத்தில் குறைபட்டவன் பிராமணன் ஆக மாட்டான். எவ்வளவு படித்தவனானாலும், நான்கு வேதங்களை ஓதி யிருந்தாலும், கெட்ட நடத்தையுள்ளவன் இழிகுலத்தவன் ஆவான்".
"உலகத்தில் எது பெரிய ஆச்சரியம் ?"
"நாள்தோறும் மக்களும் மாக்களும் இறப்பதைப் பார்க்க கொண்டே இருந்தும் மிஞ்சி யுள்ள மனிதர்கள் தாம் சாஸ்வதமாக இருப்போம் என்று விரும்புகிறார்களே அதுதான்"
அசரீரி சற்றுத் தயங்கியது.
"தருமனே நீ எல்லாம் அறிவாய் என்பது தெரிகிறது. உனக்கு எதிர் காலமும் தெரியுமோ?"
"தெரியும்" என்றான் தருமன்.
"உன் பதில்கள் என்னைத் திருப்தி படுத்திவிட்டன,
சகோதரர்களில் ஒருவன் பிழைக்கக் கூடும். நீ எவனை விரும்புகிறானோ அவன் பிழைப்பான்" என்றது அசரீரி
தருமன் யோசித்தான். "அசரீரியே, யகஷனே! யாரும் பிழைக்க வேண்டாம்". என்றான்.
"என்னது” என்று திடுக்கிட்டது அந்தக் குரல்,
"யக்ஷனே! நான் எல்லாம் அறிவேன். எதிர்காலமும் விஞ்ஞானமும் ரசாயனமும் எனக்கு அத்துப்படி என் சகோதரர்கள் இறக்கவில்லை மயக்கத்தில் இருக்கிறார்கள்,
நான் சுனையில் இறங்கிய போதே தெரிந்து கொண்டேன். சுனையருகில் மிக லேசாக கார்பன் மானாக்ஸைட் (Carbon Monoxide) இருக்கிறது.
மேலும் சுனைத் தண்ணீரில் லேசாக தயோ மெண்ட்டோன் (Thio Mentone) கலந்திருக்கிறது.
இவை மிகக் குறைந்த அளவில் கலந்திருப்பதால் உயிருக்கு ஆபத்து இல்லை .
கரைக்கு வந்து நல்ல காற்றை சுவாசித்தால் போதுமானது. தேவையென்றால் டெக்ஸ்ட்ரோஸ் (Dextrose) அதிகப் படியாக உள்ள சில பழங்களைக் கொடுத்தால் குணமாகி விடுவார்கள். மரத்தில் ஒளிந்து கொண்டு வெவ்வேறு திசைகளில் குரல் கொடுக்கப் பழகிய அசரீரியே, உன் கேள்வி சுவார ஸ்யமாக இருந்தன. நன்றி" என்று தன் சகோதரர்களை கவனிக்கச் சென்றான்.
நன்றி: ராஜாஜியின் 'வியாசர் விருந்து
No comments:
Post a Comment