Sunday, April 2, 2023

மூன்று தலைமுறை -15

 மூன்று தலைமுறை  -15

பஞ்சு முதல் சம்பளம் வாங்கியவுடன் பரசுராமன் சாரைப்  பார்க்கச் சென்றார்.வெறும் கையுடன் போக விரும்பவில்லை. அவருக்கு வேஷ்டி, அங்கவஸ்திரம் மற்றும் மாமிக்கு புடவை வாங்கிக் கொண்டு சென்றார். பரசுராமன் 'இதெல்லாம் வேண்டாம்பா. நீ ஒழுங்காக வேலை செஞ்சாலே போறும். என்னுட பேர நீ காப்பாத்து.அதுவே நீ எனக்கு செய்யும் பிரதி உபகாரம்' என்று சொல்லி அவன் கொடுத்ததை வாங்க மறுத்துவிட்டார். விசாலிக்கு ஒரு புடவையும், விசுவுக்கு டிரஸ்ஸும் விளையாட்டு சாமான்களும் வாங்கிகொண்டார் பஞ்சு. ராஜகோபாலனையும், மங்களத்தையும் பஞ்சுவும்,விசாலியும் நமஸ்காரம் செய்து முதல் மாசம் வாங்கின சம்பளத்தில் வாங்கிய வேஷ்டி, அங்கவஸ்திரம், புடவையையும் அவர்களுக்கு கொடுத்தார்கள். 'எதுக்குடா இதெல்லாம்' என்று கூறிய அவர்கள்'நோய் நொடி இல்லாமா தீர்க்காய்சா இருங்கோ' என  வாழ்த்தினார்கள்.

பின்பு பஞ்சு மீதி இருந்த சம்பள பணத்தை ராஜகோபாலனிடம் கொடுத்தார். ராஜகோபாலன் அதை அவனிடமே கொடுத்து 'சுவாமி படத்துக்கு முன் வைச்சு நமஸ்காரம் பண்ணீட்டதக்கப்புறம் அம்மாவிடம் கொடுத்துடு' என்றார்.

அந்த பணத்தை வாங்கிக் கொண்டு போய் சாமி படம் முன் வைத்து நமஸ்காரம் செய்த பஞ்சுவும், விசாலியும் பணத்தை மங்களித்திடம் கொடுத்தார்கள். மங்களம்   இந்த பணத்தை பத்திரமாக ஒரு பித்தளை சம்படத்தில்  உள்ளே வைத்தாள். பஞ்சு வாங்கிய முதல் சம்பளத்தில் இருந்து வைத்தீஸ்வரன் கோவிலுக்கு கொஞ்சமும்,திருப்பதி ஏழுமலையானுக்கு கொஞ்சமும் மஞ்சள் துணியில் முணிந்து வைக்க  வேண்டும் என்று தீர்மானித்தாள்.

இப்போதெல்லாம் கும்போணத்திலுள்ள டென்ட் கொட்டாய் அருகில் உள்ள எல்லா ஊருக்கும் சென்று மார்க்கெட்டிங் செய்ய ஆரம்பித்தார்கள்.

மாட்டு வண்டி யின் இருபுறமும்  படத்தின் போஸ்டரை ஒட்டி விடுவார்கள். படத்தின் பெயரையும் அதில்  நடிப்பவர்கள் பற்றியும் சின்ன நோட் நோட்டீஸ் அடித்து அதை வண்டியில் உட்கார்ந்து இருப்பவர் ஊர் பூராவும் போட்டு விடுவார் கள்.இதனை ஊரிலுள்ள சிறுவர்கள் பொறுக்கி செல்வது வழக்கம்.

இதனால் பல ஊர்களில் இருந்து கும்போணத்திற்கு சினிமா பார்க்க பலர் சென்றார்கள்.

1947, மாசி மாதத்தில்,ஏழு வயது நடந்து கொண்டிருந்த  விசுவுக்கு உபநயனம் செய்ய முடிவு செய்தார் ராஜ கோபலன்.ஆத்து வாத்யாரை வர வழித்து  நாள் குறிக்கப்பட்டது.

என்னென்ன பாத்திரங்கள்,துணிமணிகள் வாங்க வேண்டும்,என்ன சீர் செய்ய வேண்டுமென்பதையெல்லாம் வாத்யார் விவரமாக சொன்னார்.முதலில் சுந்தரேசனுக்கு செய்தி தெரிவிக்கப்பட்டது.

பின்பு எல்லா பந்துக்களையும் அழைத்தார்கள்.விசு பள்ளியில் நண்பர்களிடம் இது பற்றி கூறி விசேஷத்திற்கு வருமாறு அழைத்தான். பஞ்சு  அவன் பள்ளிக்கு சென்று ஆசிரியர்களை அழைத்தார்.ஒரு வாரம் முன்பே பூணல் கல்யாணம் களை கட்டியது. வீட்டை சுற்றி பந்தல் போடப்பட்டது.

No comments:

Post a Comment