மூன்று தலைமுறை -29
By N Krishnamurthy
போஸ்ட்மேன் கொடுத்த கடிதத்தை
அவசர அவசரமாக பிரித்தான் விசு. கிண்டி என்ஜினீயரிங் கல்லூரியில் இருந்து அடுத்த புதன் கிழமை இன்டர்வியூக்கு வருமாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
பஞ்சு மத்யான்னம் சாப்பாட்டுக்கு வந்தபோது அவரிடம் அதை கொடுத்தான் விசு. பஞ்சு அதைப்படித்து மிகவும் சந்தோஷப்பட்டு விசுவிடம்
'இன்னும் ஒரு வாரம் டைம் இருக்கு. கொஞ்சம் நன்றாக பிரபேர் செய்து கொள்' என்றார். இன்டர்வியூ தினத்தன்று எழுந்து குளித்து சந்தியா வந்தனம் செய்து முடித்து விசாலி கொடுத்த உப்புமாவை சாப்பிட்டான் விசு.
மீண்டும் நன்றாக விபூதி இட்டுக்கொண்டு, ஸ்வாமிக்கு நமஸ்காரம் பண்ணிவிட்டு தாத்தா,பாட்டி அப்பா, அம்மாவை நமஸ்காரம் செய்துவிட்டு 'நான் போய்ட்டு வரேன்' என்று கிளம்பினான். பஞ்சு அன்று அரை நாள் லீவு எடுத்துக்கொண்டு அவனுடன் சென்றார். கிண்டி என்ஜினீயரிங் கல்லூரியை ஒட்டிய டைரக்டர் அப் டெக்னிகல் எஜூகேஷன் ஆபீசில் இன்டர்வியூ. இண்டர்வ்யூ செய்தவர் டெபுடி டைரக்டர் டேரக்டர். சம்ஸ்க்ருதத்தில் மிகப் புலமை பெற்றவர். ஆனால், அது என்னவோ ஒரு குறிப்பிட்ட, பார்வேர்ட் கம்யூனிட்டியை மட்டும் அவருக்கு பிடிக்காது.விசு அந்த கம்யூனிட்டியயை சேர்ந்தவன் என்று தெரிந்து கொண்டதால் அவர் எடக்கு மடக்கான கேள்விகளை கேட்டு விசுவை திணற அடித்தார். முடிந்த வரை தெரிந்ததையெல்லாம் பதில் சொன்னான் விசு.
"உன் அப்பா என்ன செய்கிறார். அவர் சம்பளத்தில் உன்னால் இன்ஜினியரிங் படிப்பு படிக்க முடியுமா.
இதையெல்லாம் எல்லாம் யோசித்தாயா. முன்பு படித்த கவர்ன்மென்ட் ஆர்ட்ஸ் காலேஜிலே டிகிரி கோர்ஸில் சேர்ந்து இருக்க வேண்டாமா?" என்றெல்லாம் கேள்விகளை கேட்டு விசுவை பாடாய்படுத்தினர். இருவரும் வீட்டுக்கு திரும்பினார்கள். 'எப்படி இருந்தது இண்டர்வ்யூ?'
என்றார் பஞ்சு. 'நன்றாக பண்ணியிருக்கிறேன் அப்பா. ஆனாலும் இண்டர்வ்யூ செய்தவர் செலக்ட் செய்வதுக்கு பதிலாக ரிஜக்ட் செய்ய வேண்டும் என்பதற்காகவே நிறைய கேள்விகளை கேட்டார் என்று நினைக்கிறேன்' என்றான். அதற்கு பஞ்சு 'அதையெல்லாம் பற்றி கவலைப்படாதே. மேலே ஒருவன் இருக்கிறான்.அவன் பார்த்துக் கொள்வான்' என்றான். அப்படி மேலே ஒருவன் பார்த்துக் கொண்டுதன் விளைவாக ஒரு வாரம் கழித்து விசுவுக்கு காலேஜ் ஆப் இன்ஜினியரிங் கிண்டியிலிருந்து சேர வருமாறு அழைப்பு வந்தது.
இதைக் கண்டதும் விசாலிக்கு தலைகால் புரியவில்லை. மங்களம்காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து விட்டு வந்தாள். வீட்டிலேயே அபிஷேகம் செய்து நிறைய ஸ்லோகங்களை சொல்லி முடித்தாள் விசாலி. விஷயத்தைக் கேள்விப்பட்ட ராமநாத சாஸ்திரிகள் பஞ்சுவின் வீட்டிற்கு வந்து விசுவை பாராட்டினார். அவருக்கு நமஸ்காரம் செய்து அபிவாதயே செய்தான் விசு. 'மேன்மேலும் நன்றாகப் படித்து ச்ரேயஸாக இருக்கவேண்டும்'என்று ஆசீர்வாதம் செய்தார் ராமநாத சாஸ்திரிகள். கல்லூரிக்குச் செல்லும் அந்த நாளும் வந்தது.
பின்குறிப்பு
நான் கிண்டி என்ஜினீயரிங் கல்லூரியில் படித்தவனாதலால் விசுவும் அந்த கல்லூரியில் படிப்பதாக காட்டியிருக்கிறேன் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். உள்ளதை உள்ளபடி எழுத வேண்டும் என்பதால் தான் விசு கிண்டி என்ஜினீயரிங் கல்லூரியில் படிக்க சேர்ந்தான் என்ற உண்மையை எழுதி இருக்கிறேன்.கிண்டி என்ஜினீயரிங் கல்லூரி போன்ற பழமையான,சிறப்பான கல்லூரியில் படிக்க மிகவும் பாக்கியம் செய்திருக்க வேண்டும்.இந்த கல்லூரியில் படித்தவர்களுக்கே இதன் அருமை புரியும்
No comments:
Post a Comment