மூன்று தலை முறை -21
பிரம்மோபதேசத்திற்கு முன்பு பஞ்சு குந்தியவாக்கில் உட்கார்ந்து கொண்டு தன் இரு கால்களையும் ஒரு தாம்பாளத்தின் மேல் வைத்திருந்தார். விசாலி ஒரு பாத்திரத்தில் நீர் எடுத்து கொடுக்க தாம்பாளத்தில் மேல் வைக்கப்பட்டிருந்த பஞ்சுவின் இருகால்களையும் விசு தண்ணீர் விட்டு அலம்பினான். இது பிரம்மோபதேசம் தரப்போகும் குருவுக்கு செய்யும் முதல் மரியாதை ஆகும். பின் மூடிய வேஷ்டிக்குள் நாகராஜ கனபாடிகள் முன்னிலையில் காயத்ரி மந்திரத்தை விசுவின் காதுகளில் பஞ்சு கூறினார். பின்பு வெளியில் அழைத்துச் செல்லப்பட்ட விசு சூரிய தரிசனம் செய்தான். இரண்டு உள்ளங்கைகளையும் ஒன்றின் மேல் ஒன்றாக வைத்து இடையே உள்ள இடுக்கு வழியாக சூரியனைப் பார்த்தான். பிரம்மச்சாரியான விசுவுக்கு வேண்டிய ஆத்ம பலமும்,உடல் பலமும் சூரியபகவான் தரவேண்டும் என்பதற்காக இந்த சூரிய தரிசனம் மற்றும் சூரிய வந்தனம். விசுவின் கையில் பலாச மரத்தினுடைய குச்சி 'தண்டமாக' இருந்தது.பின்பு பிக்ஷாகர்ணம் ஆரம்பித்தது. விசு வாத்தியார் கேட்டுக்கொண்டபடி விசாலிக்கு நமஸ்காரம் செய்து அபிவாதயே செய்தான். இதில் தன்னுடைய கோத்திரம் சூத்திரம் மற்றும் சர்மா அதாவது பெயரை கூறி முடித்தான். பஞ்சுவின் தாத்தா பெயரான ஸ்ரீதர ஐயர் நினைவாக விசு ஸ்ரீதர சர்மா ஆனான்.
சிலர் பெண்களுக்கு நமஸ்காரம் செய்யும்போது அபிவாதனம் செய்ய வேண்டியதில்லை என்று கூறுவார்கள்.உபநயனம் முடிந்த பிறகு தாய்க்கு தான் முதல் நமஸ்காரம் செய்யவேண்டும்.
தாய்தான் நம்மை முதலில் உலகுக்கு அறிமுகப்படுத்தியவள்.அவளே நமக்கு கண் கண்ட தெய்வம்.
இதையே மாதா,பிதா,குரு,தெய்வம் என்று கூறி தாயை முன்னிலைப்படுத்தியிருக்கிறது மூதோர் சொல். அவளுக்கு நமஸ்காரம் செய்யும் போது நிச்சயமாக அபிவாதனம்செய்ய வேண்டும் என்று ஒரு சாரார் வாதிடுகிறார்கள். அந்த காலத்தில் பிரம்மச்சாரியான பின்பு ஒருவன் பிக்ஷை எடுத்து அதை சமைத்து உண்ண வேண்டும். இதன்படி விசு பிக்ஷாகர்ணம் செய்தான்.
பிக்ஷாகரணத்தினுடைய தாத்பரியம் புரிந்தால் மிகவும் ஆச்சரியமாக இருக்கும். பூணல் போடப்பட்ட பிரம்மச்சாரி எத்தனை பணக்காரனாக இருந்தாலும் சரிஅல்லது ஏழையாக இருந்தாலும் சரி பிக்ஷாகரணம் செய்தாக வேண்டும். அவன் தன்னுடைய நிலைமையை குறித்து வீண் அகம்பாவம் கொண்டிராமல் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் பிக்ஷை எடுத்து தான் உண்ண வேண்டும் என்று வரும்போது அவனுக்கு பணிவு வந்துவிடுகிறது. அதன் அடிப்படையில் அவனது ஒழுக்கமும், கல்வியும் வளர்கிறது. இவை இரண்டுமே அவனை மிக உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்கிறது.சிலர் பிக்ஷையை பிச்சை என்று கொச்சைப்படுத்துவர்.யாரும் ஆரவு அற்ற நிலையில் உயிர் வாழ வேண்டி எடுப்பது பிச்சை.பிக்ஷை அப்படி அல்ல.பூணல் போடப்பட்ட பிரம்மச்சாரியை மேன்மேலும் உன்னத நிலைக்கு உயர்த்த உதவுவது பிக்ஷை.
முதலில் விசாலியிடம் 'பவதி பிக்ஷாம் தேஹி' என்று கேட்க,விசாலியும் விசு வைத்திருந்த பாத்திரத்தில் அரிசியை இட்டாள்.
இதே மாதிரி மற்ற எல்லோரிடமும் விசு பிக்ஷை ஏற்றுக் கொண்டான். பின்பு சபையை நமஸ்கரித்து எல்லோருடைய ஆசீர்வாதமும் கேட்டான் விசு. கடைசியில் இரண்டு சுமங்கலிப் பெண்கள் ஆரத்தி எடுக்க ஆரத்தி தட்டில் பஞ்சு காசுகளைப் போட்டார்.விசுவுக்கு ஆர்த்தி இடப்பட்டது.அந்த இரு சுமங்கலிப் பெண்களுக்கும் ரவிக்கைத்துணி மற்றும் மஞ்சள் சேர்த்து கொடுத்தாள் விசாலி. விசேஷம் முடிந்தவுடன் நாகராஜ கனபாடிகள் பஞ்சுவையும் விசுவையும் வைத்துக்கொண்டு மேற்கொண்டு என்ன செய்யவேண்டும் என்று கூறினார் தினந்தோறும் சமிதாதானம் செய்து அக்னி வளர்க்க வேண்டியது முக்கியம் என்று கூறினார்.அக்னி பகவானை பிரம்மச்சாரி வேண்டுவதை கேட்க கேட்க ஆச்சர்யம் ஏற்படுகிறது.
"யத்தே அக்னே!தேஜஸ் தேநாஹம்!
தேஜஸ்வீ பூயாசம்"
ஹே.அக்னி பகவானே.நீங்கள் பொலிவுடன் இருப்பதை போல நானும் பொலிவுடன் இருக்க அனுக்கிரஹம் செய்யுங்கள்.
"யத்தே அக்னே!வர்ச்சஸ் தேனாஹம் !
வர்ச்சஸ்வீ பூயாசம்"
ஹே.அக்னி பகவானே.தீயவர்கள் அருகே வராமல் நீங்கள் வீர்யத்துடன் இருப்பதை போல நானும் வீர்யத்துடன் இருக்க அனுக்கிரஹம் செய்யுங்கள்.
"யத்தே அக்னி!ஹரஸ் தேநாஹம் !
ஹரஸ்வீ பூயாசம்"
உறங்கும் மக்களை எழுப்பும் சக்தி உள்ளவராக நீங்கள் இருப்பதுபோல என்னையும் சக்தி உள்ளவனாக ஆக்குங்கள்
"மயிமேதாம்!மயிப்ரஜாம் மய்யக்னிஹி!
தேஜோ ததாது"
ஹே.அக்னி பகவானே. மறதி இல்லாத நுண்ணறிவைத்தாருங்கள்.
இந்த்ரியம் ததாது"
அக்னி பகவானே.எனக்கும் என் சந்ததியருக்கும் பஞ்ச கர்ம இந்த்ரியங்கள், பஞ்ச ஞான இந்த்ரியங்கள் சக்தியுடன் இருக்க அனுக்கிரஹம் பண்ணவும்.
ப்ராஜோ ததாது'
அக்னி பகவானே.எனக்கும் என் சந்ததியருக்கும் ஞான வாழ்க்கை அனுக்கிரஹம் பண்ணவும்.
ரிக் வேதம் ஆரம்பத்திலும் முடிவிலும் அக்னியை ஸ்தோத்ரம் செய்கிறது.அது போல பிராமணனாய் பிறந்த ஒவ்வொருவரும் பிறப்பிலிருந்து அக்னி வளர்த்து அதே அக்னியை கொண்டுதான் இறந்ததும் உடலை சுட்டெரிக்க பயன்படுத்த வேண்டும் என்பது சாஸ்த்ரம்.
அக்னியுடன் எண் 7 தொடர்புடையது. அக்னி சப்தார்ச்சி என்றும் சப்தஜிஹ்வா என்றும் அழைக்கப்படுகிறார். (சப்தா என்பது 7). அவரது ஏழு நாக்குகளுக்கும் தனித்தனி பெயர்கள் உள்ளன.அக்னியின் மனைவி பெயர்"ஸ்வாஹா"
No comments:
Post a Comment