செய்முறை பெயர் :-
மொச்சைக்கொட்டை குழம்பு
மூலப்பொருள் :-
1. மொச்சைக்கொட்டை - ஒன்றரை கப்
2. பெரிய வெங்காயம் - 1
3. தக்காளி - ஒன்று
4. சோம்பு - அரை டீஸ்பூன்
5. தேங்காய் துருவல் - கால் கப்
6. புளி - நெல்லிக்காய் அளவு
7. மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
8. மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
9. நல்லெண்ணெய் - தேவைக்கேற்ப
10. கடுகு - கால் டீஸ்பூன்
11. கறிவேப்பிலை - ஒரு கொத்து
12. உப்பு - தேவைக்கேற்ப
விளக்கம் :-
1. மொச்சையை லேசாக வறுத்து வேகவைத்து எடுக்கவும். புளிக்கரைசலில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.
2. வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கி வைக்கவும். தேங்காய் துருவல், சோம்பு சேர்த்து அரைத்து வைக்கவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
3. வெங்காயம் சிவந்ததும் தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கவும். பிறகு புளி கரைசல் சேர்த்து கொதிக்க விடவும். ஒரு கொதி வந்ததும் வேகவைத்த மொச்சையை சேர்த்து கொதிக்க விடவும்.
4. பிறகு அரைத்து வைத்த விழுது சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும். எண்ணெய் மேலே வந்து மிளகாய் தூள் வாசம் அடங்கியதும் அடுப்பை அணைக்கவும்.
No comments:
Post a Comment