Tuesday, April 4, 2023

பீர்க்கங்காய் கடையல்

 பீர்க்கங்காய் கடையல்

மூலப்பொருள் :-

1. பீர்க்கங்காய்  -  கால் கிலோ
2. பால்  -  2 கப்
3. வெங்காயம்  -  1
4. காய்ந்த மிளகாய்  -  4
5. உப்பு  -  தேவைக்கேற்ப

தாளிக்க

1. எண்ணெய் - தேவைக்கேற்ப
2. கடுகு - அரை டீஸ்பூன்
3. உளுத்தம் பருப்பு - அரை டீஸ்பூன் 
4. சீரகம் - அரை டீஸ்பு+ன்
5. கறிவேப்பிலை - 1 கொத்து 

விளக்கம் :-

1. முதலில் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சி ஆறவைத்துக் கொள்ள வேண்டும். பிறகு பீர்க்கங்காயை கழுவி, தோல் சீவி, சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். பின்னர் வெங்காயத்தை நறுக்கி வைத்துக் கொள்ளவும். 

2. பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் போட்டு தாளிக்கவும். பின்னர் அதில் வெங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

3. பின்னர் அதில் நறுக்கிய பீர்க்கங்காயை சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் இதனுடன் உப்பு சேர்த்து வதக்கி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வேகவிடவும்.

4. பிறகு வேகவைத்த காயை மத்தால் நன்றாக மசித்துக் கொள்ளவும். இதனுடன் காய்ச்சி ஆறவைத்த பாலை ஆடையுடன் ஊற்றி, நன்கு கிளறி 2 நிமிடங்கள் கழித்து இறக்கவும். இப்போது பீர்க்கங்காய் கடையல் ரெடி.

No comments:

Post a Comment