Breakfast😋
*மாலினி மாமியின்*
சென்னா மசாலா
*🔰தே பொருட்கள்:-*
கசூரி மேத்தி சிறிதளவு
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை சிறிதளவு.
*Malini's🙎🏼♀️kitchen*
*செய்முறை:-*
முதலில் கொண்டை கடலையை முதல் நாள் இரவே ஊற வைத்துமறுநாள் நன்றாக கழுவி குக்கரில் மஞ்சள் தூள் உப்பு போட்டு ஒரு விசில் வரும் வரை வேக வைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
தக்காளி பழத்தை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்து வைக்கவும் .
பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்.
வெங்காயத்தையும் பொடியாக நறுக்கி தனியாக வைத்துக்கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் முதலில் சீரகத்தை போட்டு பொரிய விட்டு பெருங்காய பொடி ,பச்சை மிளகாய்,இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கி கடலை மாவையும் சேர்த்து வாசனை வரும் வரை சிவக்க வறுத்து அரைத்து வைத்துள்ள தக்காளி பழ விழுதையும் சேர்த்து நன்றாக வதக்கி அதில் அனைத்து வகை பொடிகள்,உப்பு போட்டு கலந்து மூடி போட்டு எண்ணெய் பிரிந்து வரும் வரை மிதமான தீயில் வேக விடவும்.
மசாலா நன்றாக வெந்ததும் அதில் முன்பே உப்பு போட்டு வேக வைத்துள்ள கொண்டை கடலையை கரண்டியால் கொஞ்சமாக மசித்துவிட்டு சேர்த்து நன்றாக கலந்து மீண்டும் ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு கொத்தமல்லி தழை,கசூரி மேத்தி சிறிதளவு தூவி அடுப்பை அணைத்து விடவும்.
சுவையான சென்னா மசாலா சப்பாத்தி , பூரி மற்றும் நெய் சாதத்துடன் சேர்த்து சாப்பிட தயார்.
சென்னா மசாலாவை சப்பாத்தி, பூரியுடன் பரிமாறும் போது அதன் மேலே பொடியாக நறுக்கி வைத்துள்ள பச்சை வெங்காயத்தை தூவி பரிமாறினால் சுவை அபாரமாக இருக்கும்.
குறிப்பு :- கொண்டை கடலையுடன் சிறிது உப்பு சேர்த்து வேக வைத்திருப்பதால் மசாலாவில் உப்பு சேர்க்கும் போது பார்த்து சேர்த்து கொள்ளவும்.
No comments:
Post a Comment