வெள்ளை வெஜிடபிள் புலாவ் உதிரி உதிரியாக
பகிர்வு
*𝓜𝓪𝓵𝓵𝓲𝓴𝓪*
தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி – ஒரு கப், சமையல் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், பட்டை – 1, கிராம்பு – 4, பிரிஞ்சி இலை – 1, ஏலக்காய் – 1, அன்னாசிப்பூ – 1, பெரிய வெங்காயம் -1, பச்சை மிளகாய் – 2, கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணி – தலா அரை கப், தக்காளி – 1, இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன், தண்ணீர் – ஒரு கப், தேங்காய் பால் – ஒரு கப், உப்பு தேவையான அளவிற்கு.
செய்முறை
வெள்ளை வெஜிடபிள் புலாவ் செய்ய முதலில் பாஸ்மதி அரிசியை ஒரு கப் அளவிற்கு எடுத்து நன்கு களைந்து ஒன்றிரண்டு முறை அலசி தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள். அதற்குள் தேவையான காய்கறிகளை வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு குக்கர் அல்லது மூடியுள்ள ஏதாவது ஒரு அடி கனமான பாத்திரத்தை வைத்துக் கொள்ளுங்கள். பாத்திரம் சூடானதும் அதில் தேவையான அளவிற்கு நெய் மற்றும் எண்ணெயை ஊற்றி கொள்ளுங்கள்.
எண்ணெய் காய்ந்ததும் அதில் சீரகம், பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, அன்னாசி பூ, ஏலக்காய் போன்ற மசாலா பொருட்களை சேர்த்து லேசாக வதக்கவும். பின்னர் மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். அதனுடன் பச்சை மிளகாயை கீறி சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் நறுக்கி வைத்துள்ள கேரட், பீன்ஸ், பட்டாணி, உருளைக்கிழங்கு போன்றவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
நீங்கள் பச்சைப் பட்டாணி சேர்ப்பதாக இருந்தால் மற்ற காய்கறிகள் பாதி அளவிற்கு வெந்ததும் சேர்த்தால் போதும்.
🌹🌹
No comments:
Post a Comment