தெலுங்கானா மாநில ரங்காபுர அருள்மிகு ஶ்ரீரங்கநாயக சுவாமி திருக்கோயில்
இத்தலம் தெலுங்கானா மாநிலத்தில் மகபூப்நகர் மாவட்டத்தில் ஶ்ரீரங்காபூர் எனும் இடத்தில் அமைந்துள்ளது.
இத்திருத்தலம் பெப்பர் 10 கி.மீ. வானாபார்தி 25 கி.மீ. கொல்லாபூர் 25 கி.மீ. ஹைதராபாத் 160 கி.மீ. கர்நூல் 63 கி.மீ. நந்தியால் 140 கி.மீ. மற்றும் மகபூப்நகர் 100 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. கட்வால் எனும் ரயில்வே நிலையத்திலிருந்து 40 கி.மீ. தூரம் பேரூந்து தனியார் வாகன வசதி உள்ளது.
மகாநந்தி தரிசனம் காண வருவோர் இக்கோயிலை தரிசனம் காணலாம்.
18ம் நூற்றாண்டில் கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்டது.
கிருஷ்ணதேவராயர் கனவில் ஶ்ரீமஹா விஷ்ணு கழுகு காண்பிக்கும் இடத்தில் சிலை கிடைக்கும் அதனை பிரதிஷ்டை செய்து கோயில் கட்டுமாறு பணித்தார். அதன்படியே கோதகோடா கன்வையபள்ளி மலைகளுக்கு இடையில் உள்ள ரத்னா புஷ்கரிணி எனும் ஏரியில் இக்கோயில் நிர்மாணிக்ககப்பபட்டது.
விஜயநகர சாம்ராஜ்ய கட்டிடக் கலை சிற்பக் கலை கோயில் முழுவதும் காணலாம். கோயில் அமைந்துள்ள இடம் மிகவும் அருமையாக இயற்கை சூழ்நிலையில் இருக்கிறது.
இத்திருத்தலத்தில் கோடை உற்சவமாக சங்ராந்தி ஒரு முழு மாதமும் கொண்டாடப் படுகிறது. ரதோற்சவம் மார்ச் மாதம் 15 நாட்கள் கொண்டாடப்படுகிறது. சிரவண மாதத்தில் பக்தர்கள் அதிக அளவு தரிசனம் காண வருகிறார்கள்.
தரிசன நேரம் 6 மணி முதல் 1 மணி வரை மாலை 4 மணி முதல் 8 மணி வரை
No comments:
Post a Comment