கருணைக்கிழங்கு மசியல்
🌹🌹🌹🌹🌹🌹🌹
கல்யாண பந்தியில் வைக்கப்படும் ஒவ்வொரு உணவிற்கும் தனிப்பட்ட சுவை இருக்கும்.
பந்தியில் சாதம், குழம்பு, பொரியல், கூட்டு, அவியல், என்று பலவிதமான வகைகள் வைக்கப்படும். அதிலும் கல்யாண வீட்டு பந்தியில் வைக்கப்படும் சுவையான கருணைக்கிழங்கு மசியல் பற்றி தான் பார்க்கபோகிறோம்.
இவை வீட்டில் செய்யும் சுவையை விட சற்று வித்தியாசமான சுவையில் இருக்கும்.
எனவே கல்யாண வீட்டில் வைக்கப்படும் அதே சுவையில் எப்படி கருணைக்கிழங்கு மசியல் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
*தேவையான பொருட்கள்*
*தாளிக்க*
*செய்முறை*
முதலில் நாம் எடுத்து கொண்ட கருணைக் கிழங்கின் தோல் பகுதியை சீவி எடுத்து கொள்ளவும். பின் அரிசி களைந்த நீரை குக்கரில் சேர்த்து அதில் கருணைக்கிழங்கை வேக வைக்கவும்.
பின் கருனைக்கிழங்கு நன்கு வெந்ததும் கிழங்கை குளிர வைத்து பின் கிழங்கு நன்கு ஆறியதும் கையால் நன்கு மசித்து கொள்ளுங்கள். பினா புளியை நன்கு கரைத்து வடிகட்டி புளி கரைசல் தயார் செய்து கொள்ளவும்.
அதன் பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் ஒரு டீஸ்பூன் கடுகு, ஒரு வர மிளகாய், அரை டீ ஸ்பூன் வெந்தயம், ஒரு டீஸ்பூன் சீரகம், பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும்
பின் இந்த தாளிப்புடன் புளி கரைசலை சேர்த்து ஒரு கொதி வந்ததும் மசித்த கருனைக்கிழங்கு, உப்பு, மஞ்சள் தூள், மிளகாயத் தூள் சேர்த்து நன்கு கிளறி விட்டு கொதிக்க வையுங்கள்.
பின் நன்கு கொதித்ததும் குழம்புப் பதத்தில் இறக்கினால் பத்து நிமிடங்களில், கூட்டுக்கும் குழம்புக்கும் இடைப்பட்ட பதத்தில் இறுகிவிடும். மேலே கொத்தமல்லித் தழை தூவி பரிமாறலாம். அவ்வளவு தான் கருணைக் கிழங்கு மசியல் தயார்.
🌷🌷🌷🌷
No comments:
Post a Comment