ரெசிபி "இலை வடாம்" (தளி வடாம் என்றும் சொல்லலாம்)
இலை வடாம் ரெசிபி
பச்சரிசி நான்கு கப்
பச்சை மிளகாய் 6
பெருங்காயத்தூள் சிறிதளவு
நல்லெண்ணெய்
2 டீஸ்பூன்
சீரகம் 2 டீஸ்பூன்
கசகசா 1/2 டீஸ்பூன்
உப்பு சிறிதளவு.
செய்முறை
பச்சரிசியை நன்கு நாலைந்து முறை தண்ணீர் விட்டு அலசி நான்கு மணி நேரம் ஊறவைத்து வெண்ணெய் போல அரைத்து சிறிதளவு உப்பு போட்டு கலந்து இரண்டு நாட்கள் புளிக்க வைக்கவும்.
இரண்டு நாட்கள் கழித்து பெருங் காயதூள், சீரகம், கசகசா 2 டீஸ்பூன் நல்லெண்ணெய் கலந்து தோசை மாவை விட கொஞ்சம் நீர்க்க கரைத்து கொண்டு வடாம் ஸ்டாண்ட் அல்லது வாணலியில் தட்டு வைத்து வாழை இலையில் துளி எண்ணெய் தடவி மாவை இலையில் விட்டு தோசை போல வார்த்து ஆவியில் இரண்டு நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.
இதற்கு வெயில் கூட அதிகம் தேவை இல்லை ஃபேன் காற்றில் துணியில் போட்டாலே நன்கு காயந்து விடும்.
அவ்வளவு தான்.
படத்தில் காய்ந்த வடாம், 👆 உங்கள் பார்வைக்கு👆
No comments:
Post a Comment