Saturday, April 29, 2023

காலிப்ளவர் கிரேவி

 **********************************


 *🥗தினம் ஒரு சமையல் குறிப்பு🫕* 

 காலிப்ளவர் கிரேவி

  தேவையான பொருள்கள்

 காலிப்ளவர் - சிறியது, பட்டாணி - ஒரு கப், தக்காளி - 2, பெரிய வெங்காயம் - 1, பச்சை மிளகாய் - 5, கரம் மசாலா, மிளகாய் தூள், தனியா தூள், தயிர் - ஒரு கப், அரைக்க:, பெரிய வெங்காயம் - 1, பச்சை மிளகாய் - 6, சீரகம் - சிறிதளவு, மிளகு - சிறிதளவு, பட்டை - 1, கிராம்பு - 3, இஞ்சி - சிறுத் துண்டு, பூண்டு - 5       

  செய்முறை

அரைக்க தந்துள்ள பொருட்களை அரைத்து வைத்து கொள்ளவும்.கடாயில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி போட்டு நன்கு வதக்கவும். அதனுடன் பொடி வகைகள் சேர்த்து நன்கு கலக்கவும். அதன் பின் பச்சை மிளகாய் சேர்க்கவும்.பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்னர் அரைத்து வைத்துள்ள கலவையை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.

அதனுள் காலிப்ளவர், பட்டாணி சேர்க்கவும். பத்து நிமிடம் கழித்து தயிர் சேர்த்து இறக்கவும். தயிர் புளிப்பு சுவைக்கு தகுந்த மாதிரி சேர்க்கலாம். 

தயிருக்கு பதிலாக எலுமிச்சை சாறும் சேர்க்கலாம்.காலிப்ளவர் வெந்தபின், இறக்கி கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.


🌷🌷

Wednesday, April 26, 2023

கோதண்டராம ஆலயம்

 இன்று நாம் பார்க்க போகும் திருத்தலம்....

கோதண்டராமர்....

பல நூற்றாண்டுகளைக் கடந்த அரிய பழமையான ஆலயமான அருள்மிகு கோதண்டராம ஆலயம் உள்ளது.  

#குடும்ப_ஒற்றுமை_காக்கும்_கோதண்டராமர்_கோவில்....

முள்ளங்குடி ஒரு சின்னஞ்சிறு கிராமம்.

பச்சை பசேல் வயல் வெளிகளும் கரும்பு சோலைகளும் நிறைந்த அழகான ஊர் இது. பல நூற்றாண்டுகளைக் கடந்த அரிய பழமையான ஆலயமான அருள்மிகு கோதண்டராம ஆலயம் இங்குதான் உள்ளது.

ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. நுழைவுவாயிலைத் தாண்டியதும் கருடாழ்வார் சன்னிதி உள்ளது. 

அடுத்துள்ளது மகாமண்டபம். அடுத்துள்ள அர்த்த மண்டப நுழைவுவாயிலின் முன்பு இடது புறம் தும்பிக்கை ஆழ்வாரும் வலதுபுறம் ஆஞ்சேநயரும் அருள்பாலிக்கின்றனர்.

கருவறையில் கோதண்டராமர் தனது மடியில் சீதாப்பிராட்டியை அமர்த்திக் கொண்டு சங்கு சக்கரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 

இங்குள்ள கருடாழ்வாருக்கு வியாழன் தோறும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

ராமநவமி, அனுமன் ஜெயந்தி, நவராத்திரி ஆகிய நாட்களில் இறைவன், இறைவி மற்றும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு ஆராதனைகள் நடை பெறுகின்றன.

பிள்ளைப் பேறு வேண்டுவோர், திருமணம் நடைபெற வேண்டுவோர் இங்குள்ள ஆஞ்சேநயரை பிரார்த்தனை செய்ய அவர்கள் பிரார்த்தனை பலிப்பது நிஜம் என்கின்றனர் பக்தர்கள். 

தங்கள் பிரார்த்தனை பலித்ததும் ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாத்தி புளி சாதம், எள்ளு சாதம், நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு வினியோகம் செய்து தங்கள் நன்றிக்கடனை நிறைவேற்றி கொள்கின்றனர்.

இங்குள்ள ராமபிரானை பிரார்த்தனை செய்வதால் தோஷ நிவர்த்தி ஏற்படுவதாக சொல்கின்றனர் பக்தர்கள்.

இத்தலத்தின் புராணம் என்ன ?

திவ்ய தேசமான திருவெள்ளியங்குடியில் மூலவர் கோல வில்லிராமர். இங்கு ராமபிரான் சங்கு சக்கரமின்றி, சீதை, லட்சுமணர் இல்லாமல் தனிமையாக சயனக் கோலத்தில் காட்சி தருகிறார்.

ராமபிரானை இங்கு தரிசித்த கருடாழ்வாரின் மனம் சங்கடபட்டது. சங்கு சக்கரமில்லாமல் சீதாப்பிராட்டி இல்லாமல் ராமரை தரிசனம் செய்ததில் அவர் மன நிறைவு கொள்ளவில்லை. 

ராமபிரானை தனித்து பார்த்த தன் கண்களால் அவரை சீதாப்பிராட்டியுடன் இணைத்து பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. தனது ஆவலை கயிலாச நாதரிடம் தெரிவித்தார் கருடாழ்வார்.

கயிலாசநாதர் அவரை முள்ளங்குடிக்குச் சென்று தியானம் செய்யும்படி பணித்தார். அதன்படி முள்ளங்குடி வந்த கருடாழ்வார் ராமபிரானை வேண்டி தியானத்தில் ஆழ்ந்தார். 

அவர் தியானம் செய்வதைக் கண்டு மனம் இறங்கிய ராமபிரான் சங்கு சக்கரத்துடன் சீதாபிராட்டியை மடியில் வைத்துக் கொண்டு தரிசனம் தந்தார்.

கருடாழ்வார் மெய்மறந்து ராமபிரானை தரிசித்தார். ‘புள்’ளாகிய கருடனுக்கு அவர் விரும்பிய அமர்ந்த கோலத்தில் தன் மடிமீது சீதா தேவியை அணைத்துக் கொண்டு ராமபிரான் காட்சி தந்ததால் இந்த ஊர் புள்ளங்குடி என்ற பெயர் பெற்றது. அதற்கு பிறகு முள்ளங்குடி என்று அழைக்கப்படலாயிற்று.

இந்த ஆலயத்தில் ஆஞ்சநேயர் தலையில் கிரீடம் இல்லாமல் இரு கரங்களையும் கூப்பி கண்களை மூடி தியான நிலையில் காட்சி தருகிறார். 

கருடன் இந்த தலத்தில் தியானத்தில் இருந்த போது அனுமனும் தியானம் செய்து ராமபிரானின் தாம்பத்ய கோல தரிசனம் பெற்றார்.

இந்த தலத்தில் ராமபிரான், சீதா தேவியை தன் மடி மீது அமர்த்திய கோலத்தில் அபூர்வமாக சேவை சாதிப்பதால் குடும்ப ஒற்றுமை, இல்லற மகிழ்ச்சி, தாம்பத்ய உறவு ஆகியவைகளை அருளும் தலமாக இத்தலம் விளங்குவது உண்மையே!

சென்னை - கும்பகோணம் நெடுஞ்சாலையில் உள்ள அணைக்கரை என்ற ஊரில் இருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது முள்ளங்குடி.

ஶ்ரீரங்கநாயக சுவாமி திருக்கோயில்

 தெலுங்கானா மாநில ரங்காபுர அருள்மிகு ஶ்ரீரங்கநாயக சுவாமி திருக்கோயில்

இத்தலம் தெலுங்கானா மாநிலத்தில் மகபூப்நகர்  மாவட்டத்தில் ஶ்ரீரங்காபூர் எனும் இடத்தில் அமைந்துள்ளது.

இத்திருத்தலம் பெப்பர் 10 கி.மீ. வானாபார்தி 25 கி.மீ. கொல்லாபூர் 25 கி.மீ.   ஹைதராபாத் 160 கி.மீ. கர்நூல் 63 கி.மீ.  நந்தியால் 140 கி.மீ.  மற்றும் மகபூப்நகர் 100 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.  கட்வால் எனும் ரயில்வே நிலையத்திலிருந்து 40 கி.மீ. தூரம் பேரூந்து தனியார் வாகன வசதி உள்ளது. 

மகாநந்தி தரிசனம் காண வருவோர் இக்கோயிலை தரிசனம் காணலாம்.

18ம் நூற்றாண்டில் கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்டது.

கிருஷ்ணதேவராயர் கனவில் ஶ்ரீமஹா விஷ்ணு கழுகு காண்பிக்கும் இடத்தில் சிலை கிடைக்கும் அதனை பிரதிஷ்டை செய்து கோயில் கட்டுமாறு பணித்தார். அதன்படியே கோதகோடா கன்வையபள்ளி மலைகளுக்கு இடையில் உள்ள ரத்னா புஷ்கரிணி எனும் ஏரியில் இக்கோயில் நிர்மாணிக்ககப்பபட்டது.

விஜயநகர சாம்ராஜ்ய கட்டிடக் கலை சிற்பக் கலை கோயில் முழுவதும் காணலாம். கோயில் அமைந்துள்ள இடம் மிகவும் அருமையாக இயற்கை சூழ்நிலையில் இருக்கிறது.  

இத்திருத்தலத்தில் கோடை உற்சவமாக சங்ராந்தி  ஒரு முழு மாதமும் கொண்டாடப் படுகிறது.  ரதோற்சவம் மார்ச் மாதம் 15 நாட்கள் கொண்டாடப்படுகிறது. சிரவண மாதத்தில் பக்தர்கள் அதிக அளவு தரிசனம் காண வருகிறார்கள். 

தரிசன நேரம் 6 மணி முதல் 1 மணி வரை மாலை 4 மணி முதல் 8 மணி வரை 

ஸ்ரீநாராயண ஹ்ருதயம்
நாராயணம் பரம் தாம த்யாதா நாராயண பர
நாராயண பரோ தர்மோ நாராயண நமோஸ்துதே!
நாராயணனே சிறந்த ஸ்தானமாகத் திகழ்பவன், த்யானம் 
பண்ணுகிறவனும் பரம் பொருளான அந்த நாராயணனே,
நாராயணனே ஞானத்தை அளிக்கும் தர்மவான் ஓ நாராயணா
தங்களுக்கு நமஸ்காரம்
ஓம் நமோ நாராயணாய 
ஓம் ஶ்ரீ ரங்கநாயகசுவாமி நமோ நமோ 
நன்றி கூகுள்

கோஸ் குருமா

 *#கோஸ்_குருமா_செய்வது_ எப்படி?*

*பகிர்வு:அம்மு

  தோசை, சப்பாத்தி, சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும் கோஸ் குருமா. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

முட்டைகோஸ் - கால் கிலோ,
வெங்காயம் - 1,
தக்காளி - 2,
தேங்காய்த் துருவல் - 1 கப்,
பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன்,
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவைக்கு.

#தாளிக்க:

பட்டை, ஏலக்காய், லவங்கம் - தலா 1,
கறிவேப்பிலை - சிறிதளவு,
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்.

#அரைக்க:

பச்சை மிளகாய் - 4,
சோம்பு - 1 டீஸ்பூன்,
தனியா தூள் - 1 டீஸ்பூன்,
பூண்டு - 1 பல்.

#செய்முறை :

முட்டைகோஸ் இலைகளைக் கழுவி, பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.


தேங்காய்த் துருவலையும் பொட்டுக் கடலையையும் அரைத்துத் தனியே வைத்து கொள்ளவும்.


ப.மிளகாய், சோம்பு, தனியா தூள், பூண்டை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்கும் பொருள்களைச் சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்கு வதங்கியதும், முட்டைகோஸ், சிறிது உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்குங்கள்.

இதனுடன் அரைத்த ப.மிளகாய், சோம்பு விழுதைச் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை கிளறுங்கள்.

பின்னர் தக்காளி சேர்த்து, 2 நிமிடம் வதக்கவும்.

தக்காளி குழைய வதங்கியதும் அத்துடன் அரைத்த தேங்காய் விழுது, தேவையான தண்ணீர் சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்குங்கள்.

சுவையான கோஸ் குருமா ரெடி.

வாழைக்காய் புளிக்கூட்டு

 வாழைக்காய் புளிக்கூட்டு

*பகிர்வு:*

*🎖️அம்மு*🌟🌟

*தேவையான பொருட்கள்

1.  வாழைக்காய் 2 கப்
2.  வேக வைத்த
     கடலைப்பருப்பு கால் கப் 
3.  வேகவைத்ததுவரம்
     பருப்பு கால் கப்
4.  புளி 100 கிராம்
5.  மஞ்சள்தூள் அரை கப்
6.  கொத்தமல்லித்தழை
     சிறிதளவு
7.  கறிவேப்பிலை
     சிறிதளவு
8.  எண்ணெய் /உப்பு
     தேவையான அளவு

*செய்முறை*

✦ வாழைக்காய் புளிக்கூட்டு செய்வதற்கு முதலில் வாழைக்காயை சதுர சதுர துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

✦ பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் கடலைப்பருப்பு, வெந்தயம், காய்ந்த மிளகாய், தனியா, ஆகியவற்றை ஒவ்வொன்றாக போட்டு வறுத்து ஆற வைத்து, அதனுடன் தேங்காய்த்துருவலை சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்து வைத்துக்கொள்ளவும். 

✦ அடுத்து ஒரு பாத்திரத்தில் புளியைப்போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஊறவைத்து, கரைத்து வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.

✦ பின்னர் ஒரு அடி கனமான பாத்திரத்தில் வடிகட்டி வைத்துள்ள புளிக்கரைசலை ஊற்றி, அதனுடன் வாழைக்காய் துண்டுகள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மிதமான தீயில் வேக வைக்கவும்.

 அடுத்து கொதித்துக் கொண்டிருக்கும் புளிக் கரைசலில், வறுத்து அரைத்த பொருட்களை சேர்த்து, 2 நிமிடம் கொதித்ததும், அதனுடன் வேக வைத்த கடலைப்பருப்பு, துவரம் பருப்பை சேர்த்து மீண்டும் 5 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். 

✦ பின்பு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, கொதிக்க வைத்துள்ள வாழைக்காய் கலவையை ஊற்றி கொத்தமல்லித்தழைகளை தூவி இறக்கினால் சுவையான வாழைக்காய் புளிக்கூட்டு தயார்

🟩🟨🟩🟨🟩🟨🟩🟨

பாக‌ற்கா‌ய் எ‌ண்ணெ‌ய் வறுவ‌ல்

பாக‌ற்கா‌ய் எ‌ண்ணெ‌ய் வறுவ‌ல்

 .·´  ☞பகிர்வு☜ ·.·

          *☞𝐒𝐫𝐢𝐑𝐚𝐦☜*   

          *☞𝐄𝐝𝐢𝐭𝐬☜*      

தேவையானவை

பாக‌ற்கா‌ய் - 2
‌மிளகா‌ய் பொடி - 2 தே‌க்கர‌ண்டி
ம‌ஞ்ச‌ள் தூ‌ள் - ‌சி‌றிது
எ‌ண்ணெ‌ய் - 3 தே‌க்கர‌ண்டி
அ‌ரி‌சி மாவு - கா‌ல் க‌ப்
உ‌ப்பு - ‌சி‌றிது
பு‌ளி‌த்த த‌யி‌ர் - கா‌ல் க‌ப்
பெரு‌ங்காய‌ப்பொடி - ‌சி‌றிது

செ‌ய்யு‌ம் முறை

பாக‌ற்காயை மெ‌ல்‌லிய ‌வி‌ல்லைகளாக நறு‌க்‌கி, ‌விதை ‌நீ‌க்‌கி ‌சி‌றிது த‌ண்‌ணீ‌ர் சே‌ர்‌த்து ‌சி‌றிது நேர‌ம் வேகவை‌த்து எடு‌க்கவு‌ம்.

வெ‌ந்த கா‌யி‌ல் த‌ண்‌ணீ‌ர் ‌மி‌ச்ச‌‌மிரு‌ந்தா‌ல் அதனை வடி க‌ட்டி‌ விடவு‌ம்.

ஒரு ‌கி‌ண்ண‌த்‌தி‌ல் த‌யிரை‌க் கொ‌ட்டி அ‌தி‌ல் உ‌ப்பு, ‌மிளகா‌ய் தூ‌ள், ம‌ஞ்ச‌ள் தூ‌ள், அ‌ரி‌சி மாவு, பெரு‌ங்காய‌ம் என அனை‌த்தையு‌ம் போட்டு ந‌ன்கு ‌கிள‌றி அ‌தி‌ல் பாக‌ற்காயை‌ப் போட்டு புர‌ட்டவு‌ம்.

இதனை 10 ‌நி‌மிட‌ம் ஊற ‌விடவு‌ம்.

‌பிறகு ஒரு வாண‌லி‌யி‌ல் எ‌ண்‌ணெய் ஊ‌ற்‌றி கா‌ய்‌ந்தது‌ம் பாக‌ற்கா‌ய் கலவையை‌க் கொ‌ட்டி ந‌ன்கு வத‌க்‌கி, ‌சிவ‌ந்து வரு‌ம் போது இற‌க்‌கி‌‌க் கொள்ளவு‌ம்.

*★·.·´  ☞பகிர்வு☜ ·.·★*

          *☞𝐒𝐫𝐢𝐑𝐚𝐦☜*   

          *☞𝐄𝐝𝐢𝐭𝐬☜*      

                 🪀

வெங்காய கார சட்னி

 வெங்காய கார சட்னி        

தேவையான பொருள்கள்         சின்ன வெங்காயம் – கால் கிலோ, காய்ந்த மிளகாய் – 10, பூண்டு – 2 பல், நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி + 1 தேக்கரண்டி, உப்பு – 1 தேக்கரண்டி, புளி – சிறிதளவு, கடுகு – 1 தேக்கரண்டி, கறிவேப்பிலை – 5 இலை, பெருங்காயம் – அரைத் தேக்கரண்டி          

செய்முறை            வெங்காயத்தை தோல் உரித்து வைத்துக் கொள்ளவும். மற்ற அனைத்து தேவையான பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து காய்ந்த மிளகாயை போட்டு வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். அதே கடாயில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி வெங்காயத்தினை போட்டு வதக்கி எடுத்துக் கொள்ளவும்.வெங்காயத்தினை சிறிது நேரம் ஆற வைக்கவும். அதன் பிறகு மிக்ஸியில் வெங்காயம், காய்ந்த மிளகாய், பூண்டு, புளி மற்றும் உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.ஒரு கடாயில் 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து தாளித்து அதில் கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் சேர்க்கவும்.இதனை அரைத்து வைத்துள்ள வெங்காயத்துடன் சேர்த்து கிளறி விடவும்.சுவையான வெங்காய கார சட்னி ரெடி.இந்த சட்னியை இட்லி, தோசையுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

மூன்று தலைமுறை -35

 மூன்று தலைமுறை -35

By N Krishnamurthy 

இப்படி பஞ்சுவும் விசுவும்,விசு அமெரிக்கா செல்ல மும்முரமாக இருந்தபோது விசாலிக்கு அந்த திட்டம்  பிடிக்கவேயில்லை. அதற்கு அவளுக்கு மூன்று முக்கிய காரணங்கள் இருந்தன. முதல் காரணம் குழந்தையிலிருந்தே அவள் விசுவை விட்டு அதிகம் பிரிந்ததே இல்லை.

ஐந்து வருடங்கள் பிரிந்து இருக்க வேண்டுமென்பது அவளுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அதை அவள் ஐந்து வருட சிறை தண்டனை என்றே நினைத்தாள். ராமன் தன்னை விட்டுப் பிரிந்த போது தசரதன் உயிர் போனது போல தன் உயிரும் போய்விடுமோ என்ற அவள் அதீதமாக கற்பனை பண்ணிக்கொண்டாள்.  விசுவுக்கு 22 வயது முடியப்போகிறது. நிச்சயம் அவனுக்கு  அவனுடைய வயதை ஒத்தவர்களுக்குண்டான ஆசாபாசங்கள் அவனுக்கும்  இருக்கும்.ஐந்து வருடங்கள் கழிந்ததும் அவன் வயது 27 ஆகிவிடும். நல்ல பையன் தான்,ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையால் திடீர்னு ஒரு நாள் ஒரு வெள்ளைக்காரியை கூப்பிட்டுக் கொண்டு வந்து "அம்மா. இதுதான் உன் மாட்டுப் பெண்" என்று சொன்னால் அவள் என்ன செய்வாள்?

இது இரண்டாவது காரணம். மூன்றாவதாக அவளால் வெளிப்படையாக சொல்ல முடியாத  ஒரு காரணம் அவள் உள்ளுணர்வில் இருந்தது.விசு அமெரிக்கா சென்று படிப்பதின் விளைவுகள் நன்றாக இருக்காது என்று ஏதோ ஒன்று உறுத்திக்கொண்டே இருந்தது.இதைத்தான் Intuition என்கிறோமோ? 


தனிமையில் பஞ்சுவுடன் இருக்கும்போது தன்னுடைய முதல் இரண்டு காரணங்களைக் கூறி அழுதாள்.

கல்யாணம் ஆனதிலிருந்து  இதுவரை  குரலை உயர்த்தி பஞ்சுவிடம் பேசாத விசாலி இந்த ஒரு விஷயத்தில் மட்டும் குரலை உயர்த்திப் பேசினாள். ஆனால் அதை பஞ்சு கண்டு கொள்வதாகவே இல்லை.

'ஐந்து வருடங்கள் கண்ணை மூடி திறப்பதற்குள் போய்விடும்' என்று பஞ்சு பேசி முடித்து விட்டு 'எஞ்சினீயரிங் படித்த ஐந்து வருடங்கள் எவ்வளவு சீக்கிரம் ஓடிவிட்டது.அது போலதான் இதுவும். எப்படியும் ஐந்து வருடத்தில் விசு திரும்பி விடுவான்.அவன் எதிர்காலத்தை உன் சுயநலத்துக்காக  கெடுக்காதே"என்றார். மேலும் பஞ்சு கடகடவென்று சிரித்துவிட்டு "உம்பையன்  மேல உனக்கு நம்பிக்கை இல்லை என்றால் நான் என்ன செய்வது. நிலை தடுமாறி போகக்கூடியவன் இல்லை விசு. எல்லாம் நல்லபடியாக நடக்கும்.

கடவுள் மேல் பாரத்தை போடு.அவர்  பார்த்துக்கொள்வார்"என்றார் பஞ்சு.

 'ஏழை சொல் அம்பலம் ஏறாது' என்று விசாலிக்கு புரிந்தது.

ராஜகோபால அய்யரும்  இதில் ஒன்றும் தீர்மானமாக முடிவு எடுக்க முடியவில்லை. நாம் ஏதாவது சொல்லப் போக அது பஞ்சுவுக்கோ விசாலிக்கோ எதிராக போய்விடும் என்பதால் அவர் மௌனமாகவே இருந்தார்.

.விசாலி சொன்னபடி பஞ்சு கேட்டிருந்தால் எல்லாம் நல்லபடியாகவே முடிந்திருக்குமோ என்னமோ?

பெண்புத்தி பின் புத்தி என்ற தவறான பழமொழி தவறாக போய்விட்டிருக்கலாம்.

விதி வலிது.அது யாரை விட்டது?

கவிமணி தேசிய வினாயகம் பிள்ளை மொழி பெயர்த்த உமர்கய்யாமின் அழகான கவிதை தான் நினைவுக்கு வருகிறது.

"எழுதிச் செல்லும் விதியின் கை
எழுதி எழுதி மேற்செல்லும்,
தொழுது கெஞ்சி நின்றாலும்,சூழ்ச்சி பலவும் செய்தாலும்,
வழுவிப் பின்னாய் நீங்கியொரு
வார்த்தை யேனும் மாற்றிடுமோ,
அழுத கண்ணீர் ஆறெல்லாம்
அதிலோர் எழுத்தை அழித்திடுமோ"

மூன்று தலைமுறை -34

 மூன்று தலைமுறை  -34

By N Krishnamurthy 

முதல் இரண்டு வருடங்கள் கடந்து விட்டன.

இரண்டாம் வருட ஆண்டு விடுமுறை முடிந்து மூன்றாவது வருடம் ஆரம்பிக்கும் சமயம் இரண்டாம் வருட தேர்வு முடிவு வந்திருந்தது.

விசு நல்ல மார்க் எடுத்திருந்தான்.முதல் 5 ரேங்க்குக்குள் வந்திருந்ததால், அவன் விருப்பப்படியே பிரான்ச்சை முடிவு செய்யலாம் என்று தெரிவித்து இருந்தார்கள். அந்த வருடம் Telecommunication என்ற புது பிரான்ச் தொடங்கப்பட்டு இருந்தது.இதைப்படித்தால் நல்ல எதிர்காலம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

விசு Telecommunication பிரான்ச்சையே தேர்ந்தெடுத்தான். மெக்கானிக்கல் பிரான்ச்சை பிரண்ட் கணேசன் எடுத்துக் கொண்டான்.விசு படிப்பிற்காக விசாலியும், பஞ்சுவும் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.காலச்சக்கரம் யாருக்கும் காத்திராமல் மகாபாரதம் சீரியலில் வருகிற மாதிரி அதி வேகமாக சுழன்றது. கண்ணை மூடி கண்ணைத் திறப்பதற்குள் ஐந்து வருடங்கள் ஓடிவிட்டன. விசுவின் பைனல் இயர் பரிட்சைகள் 1962 ஏப்ரலில் தொடங்கி மே மாதம் வரை நடந்தன.

விசு மிகவும் கஷ்டப்பட்டு இரவு பகல் பாராமல் படித்துக்கொண்டிருந்தான். கல்லூரி லைப்ரரிக்கும், கன்னிமரா லைப்ரரிக்கும் வேண்டும்போதெல்லாம் சென்று வந்தான்.

விசு பரிட்சையை நன்றாக எழுதி இருந்தான்.லேப்(பிராக்டிகல்)பும் நன்றாக பண்ணியிருந்தான். ஜூலை முடிவில் ரிசல்ட்டு வரும் என தெரிந்தது. அப்போது CEG மெட்ராஸ் யூனிவர்சிட்டியை சேர்ந்ததாக இருந்தது. ரிசல்ட் வருவதற்கு முதல் நாள் பேப்பரில் மறுநாள் B.E ரிசல்ட் வருவதாக தெரிவித்து இருந்தபடியால் விசுவும் கணேசனும் சேப்பாக்கில் உள்ள மெட்ராஸ் யூனிவர்சிட்டியில் வைக்கப்பட்டிருந்த ரிசல்ட் போர்டை பார்க்க சென்றார்கள்.இருவரும் பஸ்ட் கிளாஸ் வாங்கி இருந்தது தெரியவந்தது. இரண்டு நாட்கள் கழித்து விசு கல்லூரிக்கு சென்றான். பிரின்சிபால் அழைப்பதாக அறிந்து அவர் அறைக்கு சென்றான்.இவனை பார்த்ததும் "கார்த்திகேயன்.கங்கிராட்ஸ் இம்மானிலத்திலேயே இந்த வருட B.E யில் நீ தான் முதல் ரேங்க் வாங்கி இருக்கிறாய். உனக்கு கோல்ட் மெடல் கிடைக்கப் போகிறது' என்றார். 'நன்றி சார்' என்று சொல்லி விட்டு வெளியே வந்த அவன் ஆகாயத்தில் பறக்க ஆரம்பித்தான். மொத்தத்தில் எப்படி வீட்டுக்கு போனான் என்று அவனுக்கே புரியவில்லை. வீட்டுக்கு போய் தாத்தா பாட்டி,அம்மாவிடம் விஷயத்தை கூறி விட்டு அப்பாவிற்கு சொல்லிவிட்டு வருகிறேன் என்று கூறி சைக்கிளை எடுத்துக்கொண்டு பஞ்சுவின் ஆபீஸுக்கு சென்றான் விசு. தீடிரன விசுவை பார்த்தவுடன் பஞ்சுவுக்கு பயம் வந்து விட்டது "என்னடா விசு திடீர்னு வந்து இருக்கே"என்று கேட்டார். "அப்பா.ஒரு நல்ல விஷயம் சொல்ல வந்தேன்" என்றான். விஷயத்தை கேட்டவுடன் பஞ்சுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. பட்ட கஷ்டத்துக்கெல்லாம் கடவுள் கைமாறு செய்துவிட்டார் என்று புரிந்தது. மேலதிகாரியிடம் சொல்லிவிட்டு பர்மிஷன் வாங்கிக்கொண்டு விசுவும், பஞ்சவும் புது மாம்பலம் சிவா விஷ்ணு கோவிலுக்கு சென்று ஸ்வாமி கும்பிட்டபின் வீடு வந்து சேர்ந்தார்கள். வந்தவுடன் இருவருக்கும் விசாலி அவல் பாயசம் கொடுத்தாள்.ராஜகோபல அய்யர் விசுவை தட்டி கொடுத்தார்.மேலும் 'டே விசு.நான் ஒரு கிராமத்தான். இப்படியெல்லாம் திட்டம் போட்டு குழந்தையை படிக்க வைக்க வேண்டும் என எனக்கு தெரியாமல் போயிடுத்து. தெரிஞ்சிருந்தால் அந்த காலத்தல பஞ்சுவையும் கிராஜுவேட் ஆக்கியிருப்பேன்'என்றார்.

அவரது பேச்சு தான் அவ்வாறு செய்ய முடியவில்லையே என்ற கழிவிரக்கத்தை விட பஞ்சு விசுவுக்கு செய்திருப்பதை பாராட்டும் விதமாகவே இருந்தது. விஷயத்தை கேள்விப்பட்ட ராமனாத சாஸ்திரிகள் நேரில் வந்து விசுவை மிகவும் பாராட்டினார். இந்த சந்தோஷத்திலே இரண்டு நாட்கள் சென்று விட்டன. காலையில் பஞ்சு ஆபிஸ் கிளம்புவதற்கு முன் விசுவைப்பார்த்து "மேற்கொண்டு என்ன செய்யப்போற" என்று கேட்டார். 'ஏதாவது ஒரு நல்ல கம்பெனியாக பார்த்து அப்ளை செய்யவேண்டும்.

I.S.R.O, பாரத் எலெக்ட்ரானிக்ஸ் போன்ற கம்பெனிகளில் பிரஷ்ஷாக இன்ஜினியர்களை எடுக்கிறார்களாம். அதற்கும் அப்ளிகேஷன் போடலாம் என்று இருக்கிறேன்' என்றான் விசு. "ஏன் இப்பொழுது வேலையை பற்றி நினைக்கிறாய்.உனக்கு வேலைக்குப் போகும் வயசாயிட்த்தா என்ன? நீ ஏன் மேல்கொண்டு படிக்க கூடாது?" என்றார் 'படிக்கலாம் அப்பா.P.G படிக்கலாம். அது தேவையா என்று பார்க்கிறேன்" என்றான் விசு.பஞ்சு கூறினார் "நீ P.G யோடு ஏன் நிறுத்த வேண்டும்? படிப்பின் உச்சத்தைத் நீ தொட வேண்டும் என்று தான் நான் உன் சிறுவயது முதல் எண்ணிக் கொண்டிருக்கிறேன். என்னையும் அதற்காகவே நான் தயார் படுத்திக் கொண்டிருக்கிறேன்.

நான் படிக்க முடியாத படிப்புகள் எல்லாம் என் மகன் படிக்க வேண்டும் என்று நான் நினைக்க கூடாதா?" என்றார் பஞ்சு.அவர் சொன்னதை கேட்டு மனம் நெகிழ்ந்த விசு

"நிச்சயம் அப்பா.உங்கள் ஆசையையும், லட்சியத்தையும் நான் நிறைவேத்துவேன்" என்றான் உணர்ச்சி பெருக்குடன். அப்போது பஞ்சு கூறினார் 

"நீ பிறந்த உடன் கும்பகோணத்தில் உன் ஜாதகத்தை கணித்து பலனை கேட்டபோது ஜோசியர் இரண்டு விஷயங்களை கூறினார். ஒன்று நீ நன்றாக படிப்பாய் என்றார். இன்றுவரை நீ மிகவும் நன்றாக படித்துக் கொண்டு வருகிறாய். இரண்டாவது விஷயம் நீ படிக்க கடல் கடந்து போவாய் என்றார்.

அதற்கு இப்போ வேளை கூடி வறதோ என்னமோ. அவர் கூறிய இரண்டாவது விஷயத்தை நான் யாருக்கும் இதுவரை சொன்னதில்லை. இப்போதுதான் உனக்கு சொல்கிறேன்"என்றார்.

பஞ்சுவுக்கு இப்பொழுது ஜோசியர் சொன்ன அடுத்த விஷயம் ஞாபகம் வந்து தொலைத்து விட்டது .

எதை நினைத்து மனதை அலை பாயவிடக்கூடாது என்று நினைத்தாரோ அது இப்போதுதான ஞாபகம் வர வேண்டும்.

அதை நினைத்தவுடன் அவருக்கு மனம் சங்கடமாகிவிட்டது. வெளியே சொல்ல முடியாத நிலைமை. அப்படி ஒரு நிலமை வருவதாக விதி இருந்தால் அதை அனுபவித்து தான் தீர வேண்டும் என்று பஞ்சு மனதிற்குள் தீர்மானித்துக் கொண்டார்.

"நீ போஸ்ட் கிராஜுவேஷன் வெளிநாட்டில் தான் செய்ய வேண்டும்" என்று கூறினார் "அப்படி எல்லாம் போய் படிக்க ரொம்ப செலவாகுமே அப்பா" என்றான் பஞ்சு. 'செலவையெல்லாம் அப்புறம் பாத்துகலாம். அதுக்கு நான் ஒரு யோஜனை வைச்சிருக்கேன். Foreign யுனிவர்சிட்டிகளில் உன்னைப்போன்ற புத்திசாலிகளுக்கு ஸ்காலர்ஷிப் நிச்சயம் கிடைக்கும் முதலில் கொஞ்சம் செலவழிக்க வேண்டியது தான். பின்பு ஈசியாய் விடும். முடித்தவுடன் அங்கே ஒரு வருடம் இரண்டு வருடம் வேலை செய்தால் மேல் கொண்டே P.hD யும் பண்ண வசதியா இருக்கும்" என்றார். அப்பாவின் தொலைநோக்குப் பார்வையை எண்ணி விசு ஆச்சரியப்பட்டான். இதே போன்ற ஒரு தந்தையும், எனக்காக உயிரையும் கொடுக்க கூடய தாயாக விசாலியும் கொடுத்ததற்காக கடவுளுக்கு மனதிற் குள் நன்றி கூறினான்.

Tuesday, April 25, 2023

வெண்டைக்காய் மோர்க் குழம்பு

 வெண்டைக்காய் மோர்க் குழம்பு

பகிர்வு:

அம்மு

தேவையான பொருட்கள் :

வெண்டைக்காய் கால் கிலோ 
தயிர் 2 கப்
மஞ்சள் தூள் அரை டீஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் 1
மிளகாய் வற்றல் 4 
கறிவேப்பிலை ஒரு கொத்து
சீரகம் அரை டீஸ்பூன்
எண்ணெய் தேவைக்கேற்ப

அரைக்க

அரிசி - அரை கப்
துவரம்பருப்பு - 1 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 10
பச்சை மிளகாய் - 2 

செய்முறை :

  அரைக்கக் கொடுத்துள்ளவற்றை முதலில் அரைத்து வைத்துக் கொள்ளவும். தயிரைத் தேவையான நீர் விட்டு மோராக்கிக் கொள்ளவும்.

  வெங்காயம், வெண்டைக்காய் ஆகியவற்றைப் நறுக்கிக் கொள்ளவும். கனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் மிளகாய் வற்றல், கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், கறிவேப்பிலை போட்டு, பொரிந்ததும் வெங்காயம், வெண்டைக்காய் ஆகியவற்றைப் போட்டு வதக்கவும்.

  பிறகு, அதில் தண்ணீர் விட்டு வேக வைக்கவும். பாதியளவு வெந்த பிறகு அரைத்த விழுது, மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றைப் போட்டுக் கிளற வேண்டும்.

  காய் நன்கு வெந்ததும், மோரை அதில் கலந்து, 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். பின்னர், சிறிது கறிவேப்பிலை போட்டு, இறக்கி வைத்து ஆற விடவும். சுவையான வெண்டைக்காய் மோர்க்குழம்பு தயார்.

வெள்ளை வெஜிடபிள் புலாவ்

 வெள்ளை வெஜிடபிள் புலாவ் உதிரி உதிரியாக

பகிர்வு

*𝓜𝓪𝓵𝓵𝓲𝓴𝓪*

 தேவையான பொருட்கள்:

பாஸ்மதி அரிசி – ஒரு கப், சமையல் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், பட்டை – 1, கிராம்பு – 4, பிரிஞ்சி இலை – 1, ஏலக்காய் – 1, அன்னாசிப்பூ – 1, பெரிய வெங்காயம் -1, பச்சை மிளகாய் – 2, கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணி – தலா அரை கப், தக்காளி – 1, இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன், தண்ணீர் – ஒரு கப், தேங்காய் பால் – ஒரு கப், உப்பு தேவையான அளவிற்கு.

 செய்முறை

வெள்ளை வெஜிடபிள் புலாவ் செய்ய முதலில் பாஸ்மதி அரிசியை ஒரு கப் அளவிற்கு எடுத்து நன்கு களைந்து ஒன்றிரண்டு முறை அலசி தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள். அதற்குள் தேவையான காய்கறிகளை வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு குக்கர் அல்லது மூடியுள்ள ஏதாவது ஒரு அடி கனமான பாத்திரத்தை வைத்துக் கொள்ளுங்கள். பாத்திரம் சூடானதும் அதில் தேவையான அளவிற்கு நெய் மற்றும் எண்ணெயை ஊற்றி கொள்ளுங்கள்.

எண்ணெய் காய்ந்ததும் அதில் சீரகம், பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, அன்னாசி பூ, ஏலக்காய் போன்ற மசாலா பொருட்களை சேர்த்து லேசாக வதக்கவும். பின்னர் மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். அதனுடன் பச்சை மிளகாயை கீறி சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் நறுக்கி வைத்துள்ள கேரட், பீன்ஸ், பட்டாணி, உருளைக்கிழங்கு போன்றவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

நீங்கள் பச்சைப் பட்டாணி சேர்ப்பதாக இருந்தால் மற்ற காய்கறிகள் பாதி அளவிற்கு வெந்ததும் சேர்த்தால் போதும்.

🌹🌹

Monday, April 24, 2023

மூன்று தலைமுறை -33

 மூன்று தலைமுறை  -33

By N Krishnamurthy 

அந்த வருடம்

 அக்டோபர், நவம்பரில் சென்னையில் பெரும் மழை கொட்டியது.பழைய மாம்பலம் நீரில் மிதந்தது. வீட்டை விட்டு வெளியே வந்தால் எதாவது ஒரு இடத்தில் வழிக்கி விழ வேண்டி இருந்தது.  மாம்பலம் வீடுகளே ஏரியின்  மேல் கட்டியவைகள் தாமே.

மழைக்காலங்களில் கல்லூரி செல்ல விசு மிகவும் சிரமப்பட்டான். துணிகள் காய்வது வேறு மிகவும் கஷ்டமாக இருந்தது. இருந்த போதிலும்  மெட்ராசுக்கு மழை சீசன் மிகவும் வேண்டியதாக இருந்தது. ஏற்கனவே தண்ணீர் கஷ்டத்தில் இருந்த ஊர், இரண்டு மாத மழையால் தான் கொஞ்சம் தாக்குப் பிடிக்க முடிந்தது. ஆனுவல் வகேஷனில் சொந்த ஊர் சென்று பத்து,பதினைந்து நாட்கள் இருந்துவிட்டு வரலாம் என்று தீர்மானம் செய்தார்கள். பஞ்சுவிற்கு தொடர்ச்சியாக  லீவு கிடைக்காது போலிருந்தது. எல்லோரையும் அழைத்துக் கொண்டு சொந்த ஊருக்கு சென்று 2 நாட்கள் இருந்துவிட்டு, பஞ்சு மட்டும்  மெட்ராஸ்  திரும்பி வர வேண்டி இருந்தது. விசாலி சொந்த ஊர் சென்றதும் முதல் வேலையாக லக்ஷ்மியை பார்க்க வீட்டின் பின்புறம் சென்றாள்.அவளை கண்டவுடன் லக்ஷ்மி உரத்த குரலில் "ம்மா' என்று கத்தியது. விசாலி அதன் கழுத்தை கட்டிக்கொண்டு முதுகை தடவிக் கொடுத்தாள்.அவள் கண்களில் நீர் முட்டியது.

வெகு நாள் பிரிந்த குழந்தையுடன் மீண்டும் சேர்ந்தது போல உணர்ந்தாள்.‌பத்து நிமிடங்களுக்கு மேல் லக்ஷ்மியை கட்டியவாறு இருந்தாள்.

பின்பு தான் வீட்டின் உள்ளே வந்தாள். விசு முதல் இரண்டு நாட்கள் தன்னுடைய அக்ரஹார நண்பர்களுடன் செலவிட்டான். ஒரு பையன் மட்டும் கும்போணம்  காலேஜில் பி.எஸ்சி மேக்ஸ் பண்ணிக் கொண்டு  இருந்தான். இரண்டு பையன்கள் எஸ்.எஸ்.எல்.சி யுடன் படிப்பை நிறுத்தி

விட்டிருந்தார்கள். அதில் ஒருவன் மட்டும் தன்னுடைய அப்பாவுக்கு   உதவியாக சிவன் கோவில் பூஜையை பார்த்துக்கொண்டிருந்தான். மற்றவன் கும்பகோணத்தில் ஒரு கம்பெனியில் குமாஸ்தாவாக வேலைக்குச் சேர்ந்திருந்தான். இரண்டு நாளானதும்   விசுவுக்கு போரடிக்க ஆரம்பித்துவிட்டது. விசாலியிடம் வந்து தான் நல்லூர் சென்று வரட்டுமா என்று கேட்டான்.அதற்கு விசாலி 'பேஷா போய்ட்டு வா.இப்போதாவது அந்த தாத்தா,பாட்டியின் ஞாபகம் வந்ததே. இந்த  தாத்தாவிடம்   சொல்லி உத்தரவு வாங்கிண்டு போ' என்றாள்.  ராஜகோபால அய்யரின்  அனுமதி கிடைத்தவுடன்  விசு நல்லூருக்கு சென்றான். விசுவை கண்டவுடன் சுந்தரேச னுக்கும் ஜானகிக்கும் சந்தோஷம் பொங்கியது.விசுவுடன்   தொடர்ச்சியாக இருக்க முடியாததால் அவர்கள்

அவன் வளர்ச்சி கண்டு  வியந்தார்கள். அப்போதுதான் விசு  விசாலியின் சித்தி ராஜேஸ்வரியின் பேத்தி லலிதா அங்கிருப்பதை கவனித்தான். விசுவை விட ஐந்து வயது சின்னவள். அவளை விசு கடைசியாக 5 வருடங்களுக்கு முன்னால் தான் பார்த்திருந்தான். இப்போது லலிதா பெரியவளாக  வளர்ந்திருந்தாள்.முதலில்  கொஞ்சம் வெட்கப்பட்ட லலிதா பின்பு விசுவுடன் சரளமாக பேச ஆரம்பித்தாள்.

"என்ன லல்லி. பொழுது எப்படி போகிறது" என்றான் விசு. 'பொழுதுக்கென்ன அது பாட்டுக்கு போய்ண்டிருக்கு" என்றாள் லலிதா. "நாங்கள் உங்களைப் போல ஆண் பிள்ளைகளாக பிறந்து இருந்தால் மேற்கொண்டு படித்திருக்கலாம். எட்டாவதோடு அப்பா என் படிப்பை நிறுத்தூட்டா. ஈ.எஸ்.எல் சி( E.S.L.C, அதாவது Elementary School Leaving Certificate) யில் நல்ல மார்க் வாங்கி இருந்தும் மேற்கொண்டு படிக்க வைக்கவில்லை. அவ்ளோதான் நான் கொடுத்து வைத்தது" என்றாள். "இங்கு எவ்வளவு நாளா இருக்கே" இது விசு. "கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆறது.ஜானகி பாட்டி எனக்கு நிறைய விஷயங்களை கத்து

கொடுக்றா.இப்போ நான்  சமையலில் பாட்டியின் உதவியால் எக்ஸ்பர்ட் ஆயிட்டேன். ஸ்லோகங்களும்  கத்துகிறேன்"என்றாள் லலிதா. இருவரும் சேர்ந்து நெடுநேரம் பல்லாங்குழி, தாயகட்டம், கல்லா? மண்ணா? ஆடினார்கள். தினமும்  சாயங்காலத்தில் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவிலுக்கும், அஷ்டபுஜ காளி கோவிலுக்கு சென்று வந்தார்கள். இரண்டு நாட்கள் கழிக்க வேண்டும் என்று வந்த விசு அங்கே  5 நாட்கள் இருந்து விட்டான். பின்பு பாட்டி,தாத்தா,லல்லியிடம் பிரியா விடை பெற்று சொந்த ஊருக்கு கிளம்பினான்.

ஜானகி ஒரு பை நிறைய பட்சணங்கள், வீட்டிலே காய்த்த நார்தங்காய், நெல்லிக்காய், கடலைக்காய் (மணிலா கொட்டை) போன்றவற்றை அடைத்து விசுவிடம் கொடுத்தாள்.விசு கிளம்பு முன் தாத்தா,பாட்டிக்கு நமஸ்காரம் செய்தான்.

"போய்ட்டு வரேன்" என்ற விசுவை உச்சி முகர்ந்த ஜானகி "பத்திரமா போய்ட்டு வாடா என் பட்டே" என்றாள்.

சுந்தரேச அய்யர் விசுவை ஆர தழுவிக் கொண்டு' சமர்த்தா இரு. அப்பா,அம்மா, தாத்தா, பாட்டி சொல் கேட்டு நட.அம்மா உம்மேல உசுரையே வைச்சிருக்கா.அவ முகம் கோணும்படியான எந்த காரியமும் பண்ணாதே.சிரேயஸ்ஸா இரு'என்றார்.

ஊரிலிருந்த வந்த வண்டியில் விசு ஏறி உட்கார வண்டி கிளம்பியது.பேரனை பிரியும் துன்பத்தால் கண்ணில் பொங்கிய கண்ணீரை  புடவைத்தலைப்பால் மறைத்தாள் ஜானகி.

எங்கே தான் கண் கலங்குவதை ஜானகி பார்த்துவிடுவாளோ என்று எண்ணி சுந்தரேசன் வேறு புறம் முகத்தை திருப்பிக்கொண்டார்.

இந்த கால குழந்தைகளின் பெரும் நஷ்டம் தாத்தா,பாட்டி அரவணைப்பு இல்லாததுதான். தாத்தா,பாட்டியிடம் கிடைப்பது Un Conditional love. பேரக் குழந்தைகளின் அன்பை அணு அணுவாக ரசித்த ஒரு மேலை நாட்டு அறிஞர் மிகவும் வேடிக்கையாக 'பேரக்குழந்தைகளால் நான்  பெறும் ஆனந்தத்தை பார்க்கும் போது, எனக்கு என் சொந்த குழந்தைகளுக்கு பதில் முதலில் பேரக்குழந்தைகளே பிறந்திருக்கலாம் என்று தோன்றுகிறது' என்றார்.

இவரது கூற்றில் லாஜிக் இடித்தாலும் பேரக்குழந்தைகளால் நாம் பெறும் மகா சந்தோஷத்தை இதைவிட அருமையாக எடுத்துரைக்க முடியாது என நான் நினைக்கிறேன்.சரிதானே?

மூன்று தலைமுறை -32

 மூன்று தலைமுறை  -32

By N Krishnamurthy 

விசு ரெகுலராக கல்லூரிக்கு சென்று வர ஆரம்பித்தான். அவனும் கணேசனும் மாம்பலம் பஸ் ஸ்டாண்ட் வரை சென்று அங்கிருந்து 

5 B பஸ்சில் ஏறி, காலேஜ் வாசலில் இறங்கி கொள்வார்கள். மதியம் லஞ்ச் எடுத்து செல்வதற்காக ஒரு சிறிய எவர்சில்வர் டிபன் பாக்ஸ் வாங்கப்பட்டது. விசு இன்ஜினியரிங்  படிப்பதால் அதற்கேற்ப விசுவின் மதிய உணவு வெறும் தயிர் சாதத்திலிருந்து கொஞ்சம் வித்யாசமாக மாற்றினாள்  விசாலி. எள் சாதம், எலுமிச்சை சாதம்,தேங்காய் சாதம், சாம்பார் சாதம் இவற்றில் ஏதாவது ஒன்று தினமும் இடம் பெறும்.

விசு  சௌகரியமாக படிப்பதிற்கு ஒரு ஸ்டீல் மடக்கு நாற்காலி,சிறு மர மேஜை,டேபிள் லேம்ப் ஆகியவற்றை பஞ்சு வாங்கி வந்தார்.

வீட்டு ஓனர் போர்ஷனுக்கும் இவர்கள் போர்ஷனுக்கும் இடையில் உள்ள காலி இடத்தில் ஒரு தென்னை மரம் இருந்தது.விசு அதில் ஒரு ஆணியை அடித்தான்.

காலேஜிலிருந்து வந்ததும் சந்தி பண்ணி விட்டு சாப்பிட்டுவிடுவான்.

பின்பு கெரசினில் எரியும் லாந்தர் விளக்கை ஏற்றி தென்னை மர ஆணியில் மாட்டி விடுவான்.மேஜையும் நாற்காலியும் வீட்டிலிருந்து தென்னை மரத்தின் அடிக்கு இடம் பெயரும்.

கிட்டத்தட்ட இரவு 8 மணியிலிருந்து 11 வரை விசு தென்னை மரத்தடியில் அப்போதைக்கப்போது அடிக்கும் காற்றை அனுபவித்திக்கொண்டு மேத்ஸ் மற்றும் அப்ளைடு மெக்கானிக்ஸ் பிராபளங்களை சால்வ் செய்ய முயற்ச்சிப்பான்.

காற்று நிற்க்கும் இடைவெளியில் கொசு கடித்து பிராணனை வாங்கும். (அந்த காலத்து மாம்பலம்,கோடம்பாக்கம், வில்லிவாக்கம் கொசுக்கள் உலக பிரசித்தம். கொசுவை விரட்ட கொசு வத்தி சுருளோ,குட் நைட்டோ வராத காலம் அது).

பஞ்சு ஒரு மாதம் சம்பளம் வாங்கியவுடன் கொஞ்சம் லேட்டாக வீட்டிற்கு வந்தார். கையில் ஒரு பெட்டி.அதை அவர் திறந்து உள்ளிருந்த பொருளை வெளியில் எடுத்ததும்  எல்லோர் கண்களும் விரிந்தன. ஆச்சரியப்பட்டார்கள். அது வேறொன்றுமில்லை Gentlemen.5 valve,3 band, 'Murphy' ரேடியோதான் அது.

அந்த வார ஞாயிற்றுக்கிழமை, மாடியில் ஆன்டனாவை விசுவும், பஞ்சுவும் சேர்ந்து கட்டினார்கள்(வீட்டு ஓனர் அனுமதி வாங்கியபின்தான்.

அவர் போட்ட ஒரே கண்டிஷன் நல்ல பாட்டு கச்சேரி இருந்தால் அதை கேட்க அவரை அழைக்கப்பட வேண்டும் என்பதே).

என்னப்பா ஒரு ரேடியோவிற்கு இத்தனை பில்டப்பா என்று நீங்கள் முணுமுணுப்பது என் காதில் விழுகிறது.அந்த காலத்தில் ஒரு ரேடியோவோ,சைகிளோ வாங்குவது இந்த காலத்தில் ஆடி கார் வாங்குவதற்கு சமம்.இந்த ரேடியோவை மாத தவணையில் கொடுத்து செல்வம் ஈட்டிய பன்னீர்தாஸ் ஞாபகம் வர வில்லையா? 

அடுத்த நாள் பஞ்சு மாம்பலம் போஸ்ட் ஆபிசுக்கு சென்று ரேடியோவுக்கான ஒரு வருட லைசன்ஸ் பணத்தை கட்டினார்.

காலைப்பொழுது முழுவதும் ரேடியோ விசாலியின் ஆளுமையில் இருந்தது.

AIR ன் 'பக்தி  ரஞ்சனி' மேலும் பக்தி பாடல்கள் என அவளுக்கு பிடித்தது காலை நேரங்களில் ஒலி பரப்பாகும்.

ராஜகோபலய்யரும், மங்களமும் சேங்காலிபுரம் அனந்த ராம தீக்ஷதர்,எம்பார் விஜயராகவாச்சாரியார்,கிருபானந்த வாரியார் மற்றும் T.S.பாலகிருஷ்ண சாஸ்திரிகள் ஆகியோரின் கதா காலட்சேபங்கள் ஒலிபரப்பப்பட்ட போதெல்லாம் கேட்டு மகிழ்ந்தனர். சாயங்காலத்தில் விசு ஹிந்தியில் "ஜெயமாலா" விரும்பி கேட்பான்.வட இந்திய இசை அமைப்பாளர்கள் கொடி கட்டி பறந்த காலம் அது.ஹிந்தி எதிர்ப்பு ஆரம்பிக்காத நேரம் அது.

ஹிந்தி பாஷை புரியாவிட்டாலும் பாடல்களில் உள்ள இசை நயத்தை கோடானகோடி ரசிகர்கள் ரசிப்பார்கள். நல்லது எது, கெட்டது எது என பகுத்தறியும் உண்மையான பகுத்தறிவாளர்களாக தமிழக மக்கள் அக்காலத்தில் இருந்தார்கள். போலி பகுத்தறிவு வாதம் என்ற விஷ விதை விதைக்கப்படாத காலம் அது.

காலேஜுக்கு போட்டுக்கொள்ள வேண்டிய பேன்ட்,சர்ட்டை முதல் நாள் இரவே விசு அயர்ன் செய்துகொண்டு விடுவான்.அயர்ன் பாக்ஸ் இல்லாத காலம் அது.பெரிய ஏனத்தில்(பாத்திரத்ததில்) அடுப்பு கரி தணலை போட்டு பாத்திரத்திதை (சூடு கையில் படாமல் இருக்க)

துணியால் பிடித்ததுகொண்டு அயர்ன் செய்யும் டெக்னிக்கில் விசு கை தேர்ந்தவனானான்.

தேவைப்பட்டால் அப்படி அயர்ன் செய்த துணியை தூங்கப்போகு முன் தலைகாணிக்கு அடியில் வைத்து காலையில் எடுத்துக்கொள்வான்

வாழைத்தண்டு மோர்க்குழம்பு

 வாழைத்தண்டு மோர்க்குழம்பு

வாழைத்தண்டை வாரம் ஒருமுறை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. வாழைத்தண்டில் நீர்ச்சத்து அதிக அளவில் உள்ளது. இப்போது வாழைத் தண்டை வைத்து எளிமையான முறையில் சுவையான வாழைத்தண்டு மோர்க்குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

 *தேவையான* *பொருட்கள்:-* 

நறுக்கிய வாழைத்தண்டு - 2 கப் 
கடைந்த தயிர் - 4 கப் 
பச்சை மிளகாய் - 2 
சீரகம் - 1 டீஸ்பு ன்
​தனியாத்தூள் - 1 டீஸ்பு ன்
கடலைப்பருப்பு - 1 கப்
இஞ்சி - சிறிய துண்டு 
கடுகு - கால் டீஸ்பு ன் 
பெருங்காயத்தூள் - சிறிதளவு
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:-* 

வாழைத்தண்டு மோர்க்குழம்பு செய்வதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வாழைத்தண்டை போட்டு, அதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்துக்கொள்ளவும். அதேபோல் கடலைப்பருப்பையும் வேகவைத்து தனியே  எடுத்து வைத்துக் கொள்ளவும். அடுத்து பச்சை மிளகாய், ​தனியாத் தூள், சீரகம், கொத்தமல்லித்தழை, இஞ்சி ஆகிய அனைத்தையும் மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து வேக வைத்துள்ள வாழைத்தண்டுடன் சேர்த்து கலக்கவும். பின்பு அதனுடன் தயிர், உப்பு, வேக வைத்துள்ள கடலைப்பருப்பு ஆகியவற்றை சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி வைத்துக்கொள்ளவும். 

👉 பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டு தாளித்து, அதனுடன் வாழைத்தண்டு கலவையை சேர்த்து கொத்தமல்லித்தழை தூவி இறக்கினால் சுவையான வாழைத்தண்டு மோர்க்குழம்பு தயார்.

Sunday, April 23, 2023

மூன்று தலைமுறை -31

 மூன்று  தலைமுறை  -31

By N Krishnamurthy 

அடுத்த புதன் கிழமையிலிருந்து விசு கல்லூரிக்கு செல்ல ஆரம்பித்தான். முதல் நாள் ராகிங் என்ற பெயரில் சில சீனியர் மாணவர்கள் அவனைக் கூப்பிட்டு  மிகவும் சாஃப்ட்டாக சில கேள்விகள் கேட்டார்கள்.கிரவுண்டை ரவுண்ட் அடிக்க சொன்னார்கள். கடைசியா பார்த்த சினிமாவில் இருந்து சில பாட்டுக்கள் பாட வேண்டும் என்றும் வற்புறுத்தினார்கள்.

மற்றபடி ஒரு இணக்கமான சூழ்நிலையே இருந்தது. பிரின்சிபால் ராஜகோபால் பிள்ளை புதிதாக சேர்ந்த அனைவரையும் கூப்பிடுவதாக அறிந்து எல்லோரும் ஒன்று சேர்ந்தார்கள். ஒரு பெரிய ஹாலில் மேடையின் மேல் பிரின்சிபால் அமர்ந்திருந்தார்.

எல்லோரும் வந்து சேர்ந்தவுடன் அவர் தன் கம்பீரமான குரலில் ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தார். முதலில் எல்லாம் புதிய மாணவர்களையும் வரவேற்றார். "நீங்கள் எல்லோரும் இந்த கல்லூரியில் சேர்வதற்கு மிகவும் பாக்கியம் செய்திருக்க வேண்டும்.இது பெரும் பழமையான கல்லூரி.

நீங்கள் என்ஜினியரிங் பாடத்தை மட்டும் படிக்கப் போவதில்லை. வாழ்க்கைக்கு தேவையான மற்ற விஷயங்களையும் இங்கு கற்றுக் கொள்வீர்கள். உங்களுக்கு எந்த நேரத்தில் எந்த குறை இருந்தாலும் என்னுடைய ரூமிற்கு வந்து என்னை சந்தித்து முறையிடலாம்" என்று கூறினார். பின்பு P.U.C மார்க் மற்றும் இண்டர்வ்யூ மார்க்கும் சேர்த்து  முதல் மூன்று ரேங்க் எடுத்த மாணவர்களை நான் உங்களுக்கு அறிமுகப்படுத்த போகிறேன்" என்று கூறினார் எல்லோரும் இந்த மூவர்  யார் என்று தெரிந்து கொள்ள ஆவலாக காத்திருந்தார்கள்.

விசுவுக்கும்  அந்த ஆவல் இருந்தது. பிரின்சிபல் உரத்த குரலில் P.கார்த்திகேயன் என்று கூப்பிட்டார். உங்களுக்கெல்லாம் ஞாபகமிருக்குமோ, இருக்காதோ விசுவின் ஒரு பெயரான கார்த்திகேயன் தான் அவனது சர்டிபிகேட்களில் இடம்பெற்றிருந்தது என்று.

முதலில் விசு இதை நம்பவில்லை.வேறு கார்த்திகேயனாக இருக்கக்கூடும் என்று எண்ணி உட்கார்ந்திருந்தான்.

பக்கத்திலிருந்த கணேசன் அவனை உலுக்கினான்.அப்போதுதான் விசு எழுந்திருந்தான். மேடைக்குப் போவதற்குள் அவனுக்கு வெட்கம் பிடுங்கித்தின்றது.ஒரு வழியாக மேடை ஏறி நின்றான். கைகள் எல்லாம் நடுங்க ஆரம்பித்தன. அவனைப் பார்த்து பிரின்சிபால் "ஏதாவது ஒன்றிரண்டு வார்த்தைகள் நீ பேச வேண்டும்" என்றார். விசுவுக்கு நா குழறியது. அவனுக்கு இந்த அளவு பெரும் கூட்டத்தில்  பேசி பழக்கமே இல்லை.

பள்ளியில் படிக்கும்போது கலந்து கொண்ட தமிழ் பேச்சுப்போட்டிகள் நினைவுக்கு வர விசு சுதாரித்துக்கொண்டு தமிழில்

"இங்குள்ள எல்லா நண்பர்களுக்கும் எனது வணக்கம்.பிரின்சிபால் சாருக்கும் நான் நன்றியையும்,வணக்கத்தையும்  தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மாபெரும் கல்லூரியில் படிப்பது பெரும் பாக்கியமாக நான் நினைக்கிறேன். கல்லூரியில் இனி படிக்கப்போகும் ஐந்து வருடங்களும் நமக்கு நன்மை தரக்கூடிய நாட்களாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன்" என்று கூறி கீழே இறங்கினான். எல்லோரும் கைதட்டினார்கள். பின்பு இரண்டாவது மூன்றாவது ரேங்க் எடுத்த மாணவர்கள் பேசினார்கள். அப்போதுதான் அங்கிருந்த எல்லா மாணவர்களுக்கும் விசு முதல் ரேங்க் எடுத்திருந்தது தெரியவந்தது.  விசுவை பல சக மாணவர்கள் ஆச்சர்யமாக பார்க்க,விசு  மிகவும் சங்கோஜத்துடன் நெளிந்தான். அன்றிலிருந்து வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டன.

முதல் வருடமாக இருந்ததால் பொதுவான சப்ஜெக்ட்டுகளான  பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, இன்ஜினியரிங் டிராயிங், இன்ஜினியரிங் மேத்ஸ்,அப்ளைடு மெக்கானிக்ஸ் போன்ற சப்ஜட்டுக்கள்  கையாளப்பட்டன.

காலேஜ் கோ ஆபரேட்டிவ் ஸ்டோரில் நோட்புக்ஸ்,செட் ஸ்கொயர் ஆகியவை கிடைத்தன.

அங்கு வேலைக்கிருந்த பெரியவர் வாங்க வந்திருந்த மாணவர்களைப் பார்த்து 'அண்ணாவுக்கு என்ன வேணும்' என்று கேட்பதை முதலில் பலர் அவர் நக்கல் செய்வதாக நினத்தாலும் நாளடைவில் அவர் எல்லோரையும் மரியாதை நிமித்தமாகவே அப்படி கூப்பிடுகிறார் என்று தெரிந்த கொண்டபோது அவர் மீது பெருமதிப்பும்,மரியாதையும் உண்டாயிற்று. இதற்கிடையில் விசுவின்  படிப்பிற்கு உண்டான செலவை எப்படி சரி செய்வது என்று யோசிக்க ஆரம்பித்தார் பஞ்சு.ராமனாத சாஸ்திரிகள் மனைவி காமாட்சி மாமி,தெரிந்த இடங்களில் விசாலியை பற்றி கூறி இருந்ததால் சில மாமிகள் விசாலியிடம் வந்து குழந்தைகளுக்கு பாட்டும் ஸ்லோகம் கற்றுத் தர முடியுமா என்று கேட்டார்கள். இது விசாலிக்கு கடவுள் தந்த ஒரு வழியாகவே பட்டது.இரண்டு பெண்களுடன் ஆரம்பித்த பாட்டு மற்றும்  ஸ்லோக கிளாஸ் ஒரு மாதத்தில் சூடுபிடித்து 10 பேர் கொண்டதாக மாறியது. காலையில் 10 லிருந்து 11 வரை பாட்டு கிளாஸ்,

மாலை 4 லிலிருந்து 5 வரை ஸ்லோக  கிளாஸ் என்று  விசாலி பாடம் எடுக்க ஆரம்பித்தாள். விசாலி சீக்கிரத்தில் மிகவும் பிரபலமாகி 'ஸ்லோக மாமி' என்று  அழைக்கப்பட்டாள்.

சில சமயம் மங்களமும் விசாலியும் ஊறுகாய்,வடாம்,உளுந்து மற்றும் அரிசி அப்பளாம் ஆகியவற்றை தயாரித்து வேண்டியவர்களுக்கு விற்க ஆரம்பித்தனர்.   நம்முடைய பலருடைய குடும்பங்களில் நம்முடைய அன்னைகளும் மற்றும் பிற உறவினர்களும் நம்முடைய படிப்பிற்கு உதவி செய்வதற்காக தங்களது பொன்னான நேரத்தை செலவழித்து,உடல் தேய உதவியிருக்கிறார்கள்.அப்படி எல்லாம் இல்லாவிட்டால் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பலருக்கு  இன்ஜினியரிங் படிப்பு என்பது எட்டாத கனியாகவே இருந்திருக்கும். இப்படிப்பட்ட தியாகங்கள் பல குடும்பங்களிள் நடந்திருக்கின்ற.ஆனால் அதை செய்தவர்கள் அதை தன்னுடைய கடமையாக செய்தார்களே தவிர அதை தியாகமாக நினைத்து செய்ததே இல்லை.

சிலர்,சில சமூகத்தை மிகவும்  முன்னேறிவிட்டார்கள் என்று மூர்க்கத்தனமாக,  கீழ்த்தரமான காழ்ப்புணர்ச்சியுடன் விமர்சனம் செய்பவர்கள் அச்சமூகம் அந்த இடத்துக்கு வர மேற்கொண்ட கடும் முயற்சிகளை எண்ணிப்பார்ப்பதே இல்லை.

பிறரை விமர்சிப்பதை விடுத்து அவர்களும் உழைத்தால், இட ஒதுக்கீடு என்ற *பிச்சையை* எதிர்பார்க்காமல் இல்லாமல், *சுய மரியாதையுடன்* முன்னேறலாம் என்பது உறைப்பதே இல்லை

சாம்பார் சாதம்

 🟨🟨🟨👇🟥🟥🟥

*👉 சமையல் குறிப்புகள் 👈*  

🟥🟥🟥👇🟨🟨🟨

*சாம்பார் சாதம் செய்வது எப்படி*?

சாம்பார் சாதம் என்பது கலவை சாத வகைகளுள் ஒன்று. இதனை சுவையாகவும், எளிதாகவும் செய்யலாம். இனி மணமான சாம்பார் சாதம் செய்முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

சாப்பாட்டு அரிசி – 500 கிராம் (1 பங்கு)
துவரம் பருப்பு – 200 கிராம்
கத்தரிக் காய் – 2 எண்ணம் (நடுத்தர அளவு)
கேரட் – 2 எண்ணம் (நடுத்தர அளவு)
முருங்கைக் காய் – 2 எண்ணம் (நடுத்தர அளவு)
சின்ன வெங்காயம் – 10 எண்ணம் (நடுத்தர அளவு)
தக்காளி – 3 எண்ணம் (நடுத்தர அளவு)
முருங்கைக் கீரை – ஒரு கைபிடி அளவு (சுத்தம் செய்தது)
பச்சை மிளகாய் – 2 எண்ணம்
கொத்தமல்லி இலை – 3 கொத்து
மசாலா பொடி – 3 ஸ்பூன்
பெருங்காயப் பொடி – சிறிதளவு
தண்ணீர் – 3½ பங்கு
நெய் – 3 ஸ்பூன்
தாளிக்க
நல்ல எண்ணெய் – 5 ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 2 எண்ணம் (நடுத்தர அளவு)
கடுகு – ½ ஸ்பூன்
உளுந்தம் பருப்பு – 1 ஸ்பூன்
வெந்தயம் – ½ ஸ்பூன்
சீரகம் – ½ ஸ்பூன்
கறிவேப்பிலை – 3 கீற்று

சாம்பார் சாதம் செய்முறை

சாப்பாட்டு அரிசியைக் கழுவிக் கொள்ளவும்.

அரிசியில் உள்ள தண்ணீரை வடித்துக் கொள்ளவும்.

கத்தரிக் காய், கேரட், தக்காளி, முருங்கைக் காய் ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும்.

சின்ன வெங்காயத்தை தோலுரித்துக் கொள்ளவும்.

பச்சை மிளகாயை காம்பு நீக்கி அலசி, நீளவாக்கில் கீறிக் கொள்ளவும்.

கொத்தமல்லி இலையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

தாளிக்க உள்ள சின்ன வெங்காயத்தை தோலுரித்து சதுரத் துண்டுகளாக வெட்டவும்.

துவரம் பருப்பை கழுவிக் கொள்ளவும். குக்கரில் 3½ தண்ணீர் ஊற்றி அதில் கழுவிய துவரம் பருப்பினைச் சேர்த்து அடுப்பில் வைக்கவும்.

கொதிக்க ஆரம்பித்ததும் மூன்று நிமிடம் கொதிக்க விடவும்.பின்னர் அதில் நறுக்கிய காய்கறிகளான கத்தரிக் காய், கேரட், தக்காளி, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், முருங்கைக் காய், முருங்கைக் கீரை, கொத்தமல்லி இலை சேர்க்கவும்.

பின்னர் அதனுடன் அரிசி, மசாலா பொடி, பெருங்காயப் பொடி, தேவையான உப்பு சேர்க்கவும்.வாணலியில் நல்ல எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் சதுரமாக்கிய சின்ன வெங்காயம், கடுகு, உளுந்தம் பருப்பு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிதம் செய்யவும்.கடுகு வெடித்ததும் தாளிதத்தை குக்கரில் உள்ள அரிசிக் கலவையில் சேர்க்கவும்.

பின்னர் அதனுடன் நெய் சேர்த்து ஒரு சேரக் கிளறி குக்கரினை மூடி விசில் போடவும். ஒரு விசில் வந்ததும் குக்கரினை சிம்மில் வைத்து மூன்று நிமிடங்கள் கழித்து அடுப்பினை அணைத்து விடவும்.

விசில் அடங்கியதும் குக்கரினைத் திறந்து வேறு ஒரு பாத்திரத்திற்கு சாதத்தினை மாற்றி ஒருசேர கிளறி விடவும்.சுவையான சாம்பார் சாதம் தயார். இதனை சூடாக உருளைக் கிழங்கு பொரியல், அப்பளத்துடன் பரிமாறலாம்

🟨🟨🟨❤️🟥🟥🟥

*அன்புடன்*

*நெல்லை மணித்தேவன்*

🟥🟥🟥👆🟨🟨🟨

தக்காளி சாதம்

 🟨🟨🟨👇🟥🟥🟥

*👉 சமையல் குறிப்புகள் 👈*  

🟥🟥🟥👇🟨🟨🟨

சுவையான தக்காளி சாதம்

தேவையான பொருட்கள் :

அரிசி - 2 கப்
தக்காளி - 5
வெங்காயம் - 3
பச்சை மிளகாய் - 3
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
சோம்புத் தூள் - 1/2 டீஸ்பூன்
பட்டை - 2
ஏலக்காய் - 2
கிராம்பு - 3
புதினா - 1/2 கட்டு
கொத்தமல்லி - 1/2 கட்டு
தண்ணீர் - 5 கப்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

முதலில் அரிசியை தண்ணீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்து, கழுவி வைத்துக் கொள்ளவும். பின் வெங்காயம், தக்காளியை நன்கு நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை நீளமாக கீறிக் கொள்ளவும்

கொத்தமல்லி மற்றும் புதினாவை நன்கு நீரில் அலசி, அதன் இலைகளை சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், இஞ்சி பூண்டு விழுது, சோம்புத் தூள், பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும். பின் அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளியை போட்டு நன்கு வதக்கி, சிறிது நேரம் கழித்து கரம் மசாலாத்தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும். பிறகு அதில் கொத்தமல்லி மற்றும் புதினாவை போட்டு வதக்கவும்.

பின்னர் கழுவி வைத்துள்ள அரிசியை அத்துடன் சேர்த்து 5 நிமிடம் கிளறி விட்டு, பின்னர் அதில் தண்ணீரை ஊற்றி வேண்டிய அளவு உப்பை சேர்த்து மூடி விட்டு, 3 விசில் வந்ததும் இறக்கவும். பின்னர் அதனை ஒரு முறை கிளறி விட்டு, பரிமாறவும். இப்போது சுவையான தக்காளி சாதம் ரெடி

🟨🟨🟨👇🟥🟥🟥

*👉 சமையல் குறிப்புகள் 👈*  


🟥🟥🟥👇🟨🟨🟨

Saturday, April 22, 2023

மூன்று தலை முறை -30

 . மூன்று  தலை முறை -30

By N Krishnamurthy 

பஞ்சுவும்,விசுவுடன் கிண்டி என்ஜினியரிங் கல்லூரிக்கு ( இனி இதை CEG என அழைப்போம்) சென்றார்.அப்போது புதிதாக பிரின்சிபாலாக பொறுப்பேற்றிருந்த ப்ரொபசர் ராஜகோபல் பிள்ளையை இருவரும் சந்தித்தனர்.நிறைய வேலைகள் இருந்த காரணத்தால் பிரின்சிபால்  அவல்களிடம் அதிக நேரம் செலவிட முடியவில்லை.

விசு கல்லூரியில் சேருவதை வரவேற்பதாக கூறிய பின் ஆபிசில் முதல் டெர்ம் பீஸை கட்டுமாறு கூறினார்.

முதல் டெர்ம் பீஸான 96 ரூபாயை( நம்பினால் நம்புங்கள்.நம்பாவிட்டால் போங்கள்.வெறும் 96 ரூபாய் தான். இன்றைக்கு சரவண பவனில் இந்த தொகைக்கு இரண்டு காபி தான் குடிக்க முடியும்). பஞ்சு CEG  ஆபிஸில் கட்டி ரசீது பெற்றார்.

அடுத்த புதன் கிழமை கல்லூரி திறக்கப்படும் என்று அறிவித்திருந்ததால் இருவரும் வீடு திரும்ப தீர்மானித்தனர். அதற்கு முன் பஞ்சு விசுவைப்பார்த்து "கல்லூரியை சுற்றி பார்க்கலாமா" என்றார்.

இருவரும் கல்லூரியை ஒரு ரவுண்ட் அடித்தனர்.பெரிய மைதானத்தில் சிலர் கிரிகட் ஆடிக்கொண்டிருந்தனர்.பஞ்சு கல்லூரியை சேர்ந்த சிலருடன் கேட்டு தெரிந்து கொண்ட முக்கியமான செய்தி,ஹாஸ்டலில் தங்கி படிக்க வேண்டியது கட்டாயமில்லை.வீட்டிலிருந்தே வந்து படிக்கலாம் என்பது.

முதல் இரண்டு வருடங்கள் பொதுவான சப்ஜட்டுக்கள் படிக்க வேண்டும் என்றும், இரண்டாம் வருட மார்க்குகள் அடிப்படையில் மூன்றாம் வருட ஆரம்பத்தில்  பிரான்ச் கொடுக்கப்படும் என்பது பஞ்சு தெரிந்து கொண்ட அடுத்த செய்தி.

விசு தன்னைப்போல சேர வந்திருந்தவர்கள் சிலருடன் பேசினான்.விசு பழைய மாம்பலத்திலிருந்து வரும்  கணேசன் என்ற மதுரையை சேர்ந்த மாணவனுடன் கொஞ்ச நேரம் செலவிட்டான். விசுவும்,பஞ்சுவும்  சாப்பாட்டிற்கு வீட்டுக்கு வந்தார்கள். மறுநாள் இருவரும் கவர்ன்மெண்ட் ஆர்ட்ஸ் காலேஜ் சென்று ஜனாப் மீர் ஷபீர் ஹுசனை சந்தித்து விஷயத்தை கூறினர்.

அவர்,ஒரு விதத்தில், விசு தங்கள் கல்லூரியில் தொடர முடியவில்லையே என்ற வருத்தம் இருந்தாலும் அவன் என்ஜினியரிங் படிக்கப்போவது தனக்கு ரொம்ப சந்தோஷம் அளிப்பதாக கூறினார்.விசு அவரை நமஸ்கரிக்க முற்பட்டபோது அவனை தடுத்து நிறுத்தி அவரது பேன்ட்டின் இடது பாக்கெட்டில் கை விட்டு இரண்டு நூறு ரூபாய் நோட்டுகளை எடுத்து விசுவிடம் கொடுத்தார்.விசு வாங்க மறுத்த போது விடாப்பிடியாக அவன் கைகளில் பணத்தை திணித்தார். பஞ்சுவிடம் பஞ்சு சார் 'எப்போது என்ன உதவி வேண்டுமானாலும் என்னை அணுகலாம்' என்றார்.

அவரது அன்பையும்,பரிவையும் பார்த்து விசுவுக்கும், பஞ்சுவுக்கும் கண்களில் நீர் தளும்பியது.நல்லவர்களுக்கு ஜாதி, மத, இன பேதம் கிடையாது.மேன் மக்கள் என்றும் மேன் மக்களே.

எத்தனையோ மீர் ஷபீர் ஹீசைன்கள் இவ்வுலகத்தில் உண்டு.நம் கண்ணுக்குத் தான் புலப்படுவதில்லை.

விசுவின் வாழ்வில் மீர் ஷபீர் ஹீசைன் ஒரு முக்கிய பங்கு வகித்தார் என்றால் அது மிகையாகாது.

வாழைப்பூ சாம்பார்

 வாழைப்பூவில் கால்சியம், பொட்டாசியம்,  மெக்னிஷியம், பாஸ்பரஸ், இரும்பு சத்துக்கள் உள்ளன. இந்நிலையில் இதில் காப்பர், வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, வைட்டமின் சி இருக்கிறது. இந்நிலையில் வெயில் காலத்தில் நாம் அதிகம் தண்ணீர் குடிக்காமல் இருந்தால், சிறுநீரகத்தில் கல் ஏற்படும் இதனால், வாழைப்பூ சாப்பிட்டல் சிறுநீரக கல்லை தடுக்க முடியும். இந்நிலையில் நாம் எப்படி வாழைப்பூ குழம்பை செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ள போகிறோம்.

தேவையான பொருட்கள்

வாழைப்பூ – 4 மடல்கள்
புளி- பெரிய நெல்லிக்காய் அளவு
சாம்பார் பொடி- 2 டேபிள் ஸ்பூன்                     துவரம்பருப்பு- 100 கிராம்                 எண்ணெய் – சிறிதளவு                                 உப்பு – தேவையான அளவு

செய்முறை: துவரம்பருப்பை வேகவைத்துக்கொள்ளவும். வாழைப்பூவை ஆய்ந்து நடுவில் உள்ள நரம்பை எடுத்து பொடியாக நறுக்கிகொள்ளவும்.  கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு வாழைப்பூவை வதக்கிக்கொள்ளவும்.  புளியைக் கரைத்து வாணலியில் ஊற்றி,  சாம்பார் பொடி,  உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும்.  இத்துடன் வதக்கிய வாழைப்பூ, வேகவத்த பருப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.  இத்துடன் வதக்கிய வாழைப்பூ, வேகவைத்த  பருப்பு சேர்த்து மேலும் கொதிக்கவிடவும். இதில்சேர்த்து இறக்கவும்.


Friday, April 21, 2023

இலை வடாம் ரெசிபி

 ரெசிபி  "இலை வடாம்" (தளி வடாம் என்றும் சொல்லலாம்)

 இலை வடாம்  ரெசிபி

பச்சரிசி நான்கு கப்
பச்சை மிளகாய்  6
பெருங்காயத்தூள்  சிறிதளவு
நல்லெண்ணெய் 
2 டீஸ்பூன்
சீரகம் 2 டீஸ்பூன்
கசகசா 1/2 டீஸ்பூன்
உப்பு சிறிதளவு. 

 செய்முறை

பச்சரிசியை  நன்கு நாலைந்து முறை தண்ணீர் விட்டு அலசி நான்கு மணி நேரம் ஊறவைத்து  வெண்ணெய் போல அரைத்து சிறிதளவு உப்பு போட்டு கலந்து இரண்டு நாட்கள் புளிக்க வைக்கவும். 

இரண்டு நாட்கள் கழித்து  பெருங் காயதூள், சீரகம், கசகசா  2 டீஸ்பூன் நல்லெண்ணெய் கலந்து தோசை மாவை விட கொஞ்சம் நீர்க்க கரைத்து கொண்டு வடாம் ஸ்டாண்ட் அல்லது வாணலியில் தட்டு வைத்து வாழை இலையில் துளி எண்ணெய் தடவி மாவை இலையில் விட்டு தோசை போல  வார்த்து ஆவியில் இரண்டு நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும். 

இதற்கு வெயில் கூட அதிகம் தேவை இல்லை ஃபேன் காற்றில் துணியில் போட்டாலே நன்கு காயந்து விடும். 

அவ்வளவு தான்.  

படத்தில் காய்ந்த வடாம், 👆 உங்கள் பார்வைக்கு👆

Thursday, April 20, 2023

ரவா கார பொங்கல்

  சூப்பரான ரவா கார பொங்கல்

*தேவையான பொருட்கள்:

💫ரவா - 1 கப்
💫வேக வைத்த பாசிப்பருப்பு - கால் கப்
💫பெருங்காயப்பொடி - 1 சிட்டிகை
💫மிளகு - 1 தேக்கரண்டி
💫சீரகம் - 1 தேக்கரண்டி
💫பச்சைமிளகாய் - 1
💫கறிவேப்பிலை - சிறிதளவு
💫இஞ்சி - சிறிதளவு
💫நெய் - 3 தேக்கரண்டி
💫முந்திரிப்பருப்பு - 10
💫உப்பு - தேவையான அளவு

*செய்முறை:* 

💫இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

*💫ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.* 

💫ரவையை வெறும் கடாயில் போட்டு வறுத்து கொள்ளவும்.

💫அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 3 கப் தண்ணீர் ஊற்றி அது நன்கு கொதி வந்தவுடன், அதில் பெருங்காயப் பொடி, தேவையான அளவு உப்பு பொட்டுக் கொள்ளவும்.

💫அடுத்து இதில் நன்கு வறுத்த ரவாவை கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டுக் கிளறவும். கொதி வந்ததும் இளந்தீயில் வைத்து நன்றாக வேக விடவும்.

*💫அடுத்து அதில் வேக வைத்த பாசிப்பருப்பை சேர்த்து கலக்கவும்.* 

💫இன்னொரு வாணலியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் மிளகு, சீரகம், முந்திரிப்பருப்பு பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி போட்டு வாசம் வரும் வரை தாளித்து பொங்கலில் கலந்து இறக்கினால் சுவையான நறுமணம் நிறைந்த  சூப்பரான ரவா கார பொங்கல் ரெடி.

Wednesday, April 19, 2023

உளுத்தம் பருப்பு போண்டா

 செய்முறை பெயர்  :-

உளுத்தம் பருப்பு போண்டா

மூலப்பொருள் :-

1. உளுத்தம் பருப்பு  -  2 கப்
2. கடலைப் பருப்பு -  ஒன்றரை கப்
3. மிளகு -  1 டீஸ்பூன்
4. இஞ்சி -  சிறிய துண்டு 
5. பெருங்காயத்தூள்  -  2 சிட்டிகை
6. பொடிய வெங்காயம்  -  3 (பொடியாக நறுக்கியது)
7. பச்சை மிளகாய்  -  3 (பொடியாக நறுக்கியது)
8. உப்பு -  தேவைக்கேற்ப
9. எண்ணெய் -  தேவைக்கேற்ப 

விளக்கம் :-

1. உளுத்தம் பருப்பு மற்றும் கடலைப் பருப்பு இரண்டையும் ஊற வைத்து தனி தனியாக அரைக்கவும். இரண்டையும் மைய அரைத்துக் கொண்டு ஒன்றாக கலக்கவும். பிறகு அதில் மிளகு, இஞ்சி, பெருங்காயத்தூள், உப்பு, பொpய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.

2. கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் மாவை சிறுசிறு உருண்டை அளவிற்கு எடுத்து லேசாக உருட்டி எண்ணெயில் போடவும். மாவு வெந்து சிவந்தவுடன் எடுக்கவும். இப்போது சுவையான உளுத்தம் பருப்பு போண்டா தயார்.

Tuesday, April 18, 2023

மூன்று தலைமுறை -29

 மூன்று தலைமுறை -29

By N Krishnamurthy 

போஸ்ட்மேன் கொடுத்த கடிதத்தை 

அவசர அவசரமாக பிரித்தான் விசு. கிண்டி என்ஜினீயரிங் கல்லூரியில் இருந்து அடுத்த புதன் கிழமை இன்டர்வியூக்கு வருமாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பஞ்சு மத்யான்னம்  சாப்பாட்டுக்கு வந்தபோது அவரிடம் அதை கொடுத்தான் விசு. பஞ்சு அதைப்படித்து  மிகவும் சந்தோஷப்பட்டு விசுவிடம்

'இன்னும் ஒரு வாரம் டைம் இருக்கு. கொஞ்சம் நன்றாக பிரபேர் செய்து  கொள்' என்றார். இன்டர்வியூ தினத்தன்று எழுந்து குளித்து சந்தியா வந்தனம் செய்து முடித்து விசாலி கொடுத்த உப்புமாவை சாப்பிட்டான் விசு.

மீண்டும்  நன்றாக விபூதி இட்டுக்கொண்டு, ஸ்வாமிக்கு நமஸ்காரம் பண்ணிவிட்டு தாத்தா,பாட்டி அப்பா, அம்மாவை நமஸ்காரம் செய்துவிட்டு 'நான் போய்ட்டு  வரேன்' என்று கிளம்பினான். பஞ்சு அன்று அரை நாள் லீவு எடுத்துக்கொண்டு அவனுடன் சென்றார். கிண்டி என்ஜினீயரிங் கல்லூரியை ஒட்டிய டைரக்டர்  அப் டெக்னிகல் எஜூகேஷன் ஆபீசில் இன்டர்வியூ. இண்டர்வ்யூ செய்தவர் டெபுடி டைரக்டர்  டேரக்டர். சம்ஸ்க்ருதத்தில் மிகப் புலமை பெற்றவர். ஆனால், அது என்னவோ ஒரு குறிப்பிட்ட, பார்வேர்ட் கம்யூனிட்டியை மட்டும் அவருக்கு பிடிக்காது.விசு அந்த கம்யூனிட்டியயை சேர்ந்தவன் என்று தெரிந்து கொண்டதால் அவர் எடக்கு மடக்கான கேள்விகளை கேட்டு விசுவை திணற அடித்தார். முடிந்த வரை தெரிந்ததையெல்லாம் பதில் சொன்னான் விசு.

"உன் அப்பா என்ன செய்கிறார். அவர் சம்பளத்தில் உன்னால் இன்ஜினியரிங் படிப்பு படிக்க முடியுமா.

இதையெல்லாம் எல்லாம் யோசித்தாயா. முன்பு படித்த கவர்ன்மென்ட் ஆர்ட்ஸ் காலேஜிலே டிகிரி கோர்ஸில் சேர்ந்து இருக்க வேண்டாமா?" என்றெல்லாம் கேள்விகளை கேட்டு விசுவை பாடாய்படுத்தினர். இருவரும் வீட்டுக்கு திரும்பினார்கள். 'எப்படி இருந்தது இண்டர்வ்யூ?'

என்றார் பஞ்சு. 'நன்றாக பண்ணியிருக்கிறேன் அப்பா. ஆனாலும் இண்டர்வ்யூ செய்தவர் செலக்ட் செய்வதுக்கு பதிலாக ரிஜக்ட் செய்ய வேண்டும் என்பதற்காகவே நிறைய கேள்விகளை கேட்டார் என்று நினைக்கிறேன்' என்றான். அதற்கு பஞ்சு 'அதையெல்லாம்  பற்றி கவலைப்படாதே. மேலே ஒருவன் இருக்கிறான்.அவன் பார்த்துக் கொள்வான்' என்றான். அப்படி மேலே ஒருவன் பார்த்துக் கொண்டுதன் விளைவாக ஒரு வாரம் கழித்து விசுவுக்கு காலேஜ் ஆப் இன்ஜினியரிங் கிண்டியிலிருந்து சேர வருமாறு அழைப்பு வந்தது.

இதைக் கண்டதும் விசாலிக்கு தலைகால் புரியவில்லை. மங்களம்காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து விட்டு வந்தாள். வீட்டிலேயே அபிஷேகம் செய்து நிறைய ஸ்லோகங்களை சொல்லி முடித்தாள் விசாலி. விஷயத்தைக் கேள்விப்பட்ட ராமநாத சாஸ்திரிகள் பஞ்சுவின் வீட்டிற்கு வந்து விசுவை பாராட்டினார். அவருக்கு நமஸ்காரம் செய்து அபிவாதயே செய்தான் விசு. 'மேன்மேலும் நன்றாகப் படித்து ச்ரேயஸாக இருக்கவேண்டும்'என்று ஆசீர்வாதம் செய்தார் ராமநாத சாஸ்திரிகள்.  கல்லூரிக்குச் செல்லும் அந்த நாளும் வந்தது.

 பின்குறிப்பு

நான் கிண்டி என்ஜினீயரிங் கல்லூரியில் படித்தவனாதலால் விசுவும் அந்த கல்லூரியில் படிப்பதாக காட்டியிருக்கிறேன் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். உள்ளதை உள்ளபடி எழுத வேண்டும் என்பதால் தான் விசு கிண்டி என்ஜினீயரிங் கல்லூரியில் படிக்க சேர்ந்தான் என்ற உண்மையை எழுதி இருக்கிறேன்.கிண்டி என்ஜினீயரிங் கல்லூரி போன்ற பழமையான,சிறப்பான கல்லூரியில் படிக்க மிகவும் பாக்கியம் செய்திருக்க வேண்டும்.இந்த கல்லூரியில் படித்தவர்களுக்கே இதன் அருமை புரியும்

மூன்று தலைமுறை -28

 மூன்று தலைமுறை-28

By N Krishnamurthy 

விசு தினம்தோறும் சைக்கிளில் கல்லூரிக்கு சென்று வந்தான். மதிய சாப்பாட்டை அலுமினியம் டிபன் பாக்சில் எடுத்துக் கொண்டு செல்வான்.மதிய சாப்பாடு தயிர்சாதமும், தொட்டுக்கொள்ள மாவடுவோ,ஏதேனும் ஊறுகாயோ தான். காலேஜின் பின்புறம் ஒரு ஸ்டோர் ரூம் இருந்தது.அதை கடந்ததும் பெரிய விளையாட்டு மைதானம் உண்டு. மைதானத்தில் முடிவில் கூவம் நதி ஓடும்.ஓடும் என்றா சொன்னேன்.

மன்னிக்கவும். ஓடாது.

வெறுமனே நிற்கும். கல்லூரியில் சில நாட்கள் வகுப்பில்லாத போது மைதானத்தில் உள்ள மரத்தின் அடியில் அமர்ந்து பாடங்களை படிப்பான். விசுவுக்கு வாய்த்த லெச்சரர்கள் மிகவும் திறமை வாய்ந்தவர்களாக இருந்தார்கள்.  வைஸ் பிரின்சுபால் அவர்களிடம் விசுவின் மேல் தனி  கவனம் செலுத்துமாறு கூறியிருந்தார். அவர்களும் விசுவுக்கு எப்போது பாடத்தில் உதவி தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் உதவினார்கள். விசுவும் சிறப்பாக படிக்க ஆரம்பித்தான். ஆண்டு முடிவில் P.U.C எக்ஸாம் வந்தது. பரிட்சையை நன்றாக பண்ணியிருந்தான் விசு. சம்மர் வக்கேஷன் முடிந்தும் ஒரு நாள் விசுவும் பஞ்சவும் ரிசல்ட் தெரிந்து கொள்ள காலேஜ் சென்றிருந்தார்கள். இவர்களைப் பார்த்த ஜனாப் மீர் ஷபீர் ஹுசைன் அவர்கள் வாயெல்லாம்  பல்லாக 'வாங்க பஞ்சு சார். ரொம்ப சந்தோஷமான ந்யூஸ்'  என்றார் 'விசு கல்லூரியில் முதலாக வந்திருக்கிறான். கணிதத்தில் சென்டம்,

பிசிக்ஸ்,கெமிஸ்ட்ரியில் டிஸ்டிங்ஷன் பிளசும், காமர்சில் டிஸ்டிங்ஷனும் வாங்கியிருக்கிறான். கல்லூரியில் கடந்த இருபது வருடங்களில் இதே போன்ற ரேங்க் யாருமே வாங்கவில்லை' என்று வைஸ் பிரின்சிபால் கூறினார். விசுவை பார்ப்பதற்கு என்று ஒரு கூட்டமே இருந்தது.அந்த கல்லூரியை சேர்ந்த வேற டிபார்ட்மெண்ட் லெக்சரர்களும் மற்றும் மாணவர்களும் அக்கூட்டத்தில் இருந்தார்கள்.

ஜனாப் மீர் ஷபீர் ஹுசைன் விசுவை கட்டி தழுவிக்கொண்டார்.பஞ்சு மிகவும் சந்தோஷப்பட்டார்.பஞ்சு விசுவின் கிரேட் சர்டிபிகேட்டை வாங்கிக்கொண்டு அங்கு திரண்டிருந்த அனைவருக்கும் நன்றி சொன்னார். 'மேற்கொண்டு என்ன செய்வதாக உத்தேசம்' என்றார் வைஸ் பிரின்சிபால். 'தெரியவில்லை சார். யோசிக்கணும்' என்றார் பஞ்சு. 'உங்களுக்கு ஆட்சேபணை  இல்லை என்றால் நமது கல்லூரியில் பி.எஸ்.சி மேத்ஸ்ஸோ, பிசிக்ஸோ சேரலாமே' என்றார்.

'அதுவும் நல்ல ஐடியாதான்.கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்.நான் யோசித்து சொல்கிறேன்' என்றார் பஞ்சு.அவர் மனதில் வேறு ஒறு எண்ணம்  இருந்தது. இருவரும் வீட்டிற்கு வந்து சந்தோஷ சமாஜாரத்தை எல்லோரிடம் பகிர்ந்து கொண்டார்கள். அனைவரும் அக மகிழ்ந்தார்கள். விசுவின் ரிசல்ட்டை கொண்டாடும் விதமாக அன்று விசாலி தேங்காய் பர்பி பண்ணியிருந்தாள். விஷயத்தை கேள்விப்பட்ட ராமனாத சாஸ்திரிகள் அன்று சாயங்காலமே பஞ்சு வீட்டிற்கு வந்தார்.

விசாலி அவரிடமும் 'ஸ்வீட் எடுத்துக்கோங்க மாமா' என்று கூறி ஒரு தட்டில் நான்கு பர்பிகளை  கொடுத்தாள்.  'தாராளமா எடுத்துக்கறேம்மா. எனக்கு பரம திருப்தி.

என் பேச்சைக் கேட்டு பஞ்சு அந்தக் கல்லூரியில் சேர்த்த ற்கு நல்ல பலன் கிடைத்துவிட்டதால் பரம சந்தோஷம்' என்று கூறினார். விசாலி அவரிடம் ஒரு சம்படத்தை கொடுத்து

 "ஆத்துலே மாமிக்கும்,சபேசனுக்கும் கொடுங்கோ" என்றாள். அதனுள்  ஐந்து,ஆறு பர்பிகள் இருந்தன.  ராஜகோபாலனும், மங்களமும் தங்களுக்கு ஏற்படும் சிறு சிறு கஷ்டங்களைப் பற்றி கவலைப்படாமல் விசு நன்றாக படித்து மார்க் வாங்கி இருப்பது குறித்து பெருமிதப் பட்டனர்.

அவன் பேரில் காசி விச்வனாதருக்கு அர்ச்சனை செய்தனர். மேற்கொண்டு என்ன படிப்பது என்ற ஒரு கேள்வி எழுந்தது.  'அப்பா.

நான் பி.எஸ்.சி மேக்ஸ் படிக்கிறேன்' என்றான் விசு. அதற்கு பஞ்சு 'உன்னை வெறும் பி.எஸ்.சி படிக்க வைக்கத்தானா நாமெல்லாம்  மெட்ராசுக்கு வந்தோம்? என்ஜினீரிங் என்று ஒன்று இருப்பது உனக்கு தெரியாதா?" என்றார். 'எனக்கு தெரியும் அப்பா. ஆனால் அதற்கு செலவு அதிகமாகும். நம்மால் சமாளிக்க முடியுமா என்று தெரியவில்லை' என்றான். அதற்கு பஞ்சு 'செலவை பற்றி நீ கவலைப்படாதே. அதையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். படிப்பை மட்டும் நீ பார்த்துக்கொள்' என்றார். அப்போது சென்னையில் ஐ.ஐ. டி,காலேஜ் ஆப் இன்ஜினியரிங் கிண்டி, குரோம்பேட்டையில் உள்ள 

எம் ஐ டி,A.C tech  ஆகிய 4  என்ஜினியரிங் கல்லூரிகள் இருந்தன. எம் ஐ டி யில் பி.எஸ்.சி படித்தவர்களை மட்டும் எடுத்தார்கள். P.U.C முடித்தவர்கள் ஐ.ஐ.டி அல்லது  கிண்டியில் தான் சேர வேண்டும் என்று இருந்தது. இரண்டுக்கும் அப்ளிகேஷன்களை வாங்கி வந்தார்பஞ்சு.

பூர்த்தி செய்த பார்ம்களை தபால் மூலம் அனுப்பினார்கள் .

விசு தினந்தோறும் இன்டர்வ்யூ கார்டுக்காக போஸ்ட்மேன் வரவை வழி மேல் விழி வைத்து காத்திருந்தான். பத்து நாள் கழிந்தது.

அன்று காலை 11 மணி.'சார்.போஸ்ட்" என்ற குரல் கேட்டு கூடத்திலிருந்த விசு வாசலுக்கு ஓடினான்.

வெஜ் தம் பிரியாணி

 ஹோட்டல் ஸ்டைல் வெஜ் தம் பிரியாணி! வீட்டிலேயே எப்படி செய்யலாம்.

நீங்கள் ஒரு பிரியாணிப்பிரியராக இருந்தால் கண்டிப்பாக பல்வேறு வகையான பிரியாணி ஸ்டைல்களை ட்ரை செய்தே பார்க்கவேண்டும்.

பொதுவாக பிரியாணி என்றாலே அசைவம் தான் ஆனால் இந்த ஸடைலில் வெஜ் பிரியாணி செய்து பாருங்கள் அசைவப்பிரியர்களுக்குமே பிடிக்கும்.

1 தே.க சிவப்பு மிளகாய் தூள்
1 தே.க மிளகு
1 தே.க பிரியாணி மசாலா
ருசிக்கேற்ப உப்பு
1 காலிஃபிளவர்
1/2 கப் பட்டாணி
1 வெங்காயம்
2 கரட்
2 உருளைக்கிழங்கு
1 பிரியாணி இலை
1 இலவங்கப்பட்டை
1 ஸ்டார் சோம்பு
2 பச்சை ஏலக்காய்
1/2 கப் பாஸ்மதி அரிசி

ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் எண்ணெய் சேர்க்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு, மிருதுவாக வரும் வரை வதக்கவும்.பின் பிரியாணி இலை, இலவங்கப்பட்டை, ஜீரா, ஸ்டார் சோம்பு, ஏலக்காய் சேர்த்து வதக்கவும்.

அத்தோடு நறுக்கி எடுக்கப்பட்ட கரட், காலிஃபிளவர், பீன்ஸ், பட்டாணி, உருளைக்கிழங்கு போன்றவற்றை நன்றாக சேர்த்து வதக்குங்கள் இதனுடன் மேற்கூறப்பட்ட அளவுகளோடே சிவப்பு மிளகாய்த்தூள், மிளகுத்தூள், உப்பு மற்றும் பிரியாணி மசாலா சேர்த்துக் தாளித்து கொள்ளவும்.

அத்தோடு சிறிது தயிர் சேர்த்து சிறிது நேரம் வதக்கி வேகவிடவும். பின்னர், சமைத்த பாஸ்மதி சாதத்தை எடுத்து, ஒரு பாத்திரத்தில் ஒரு அடுக்கு போல வைக்கவும்.

அதன் மேல் காய்கறிகளைச் சேர்த்து, மீண்டும் பாஸ்மதி சாதத்தை போட்டு இறுதியாக, உலர் பழங்கள் மற்றும் பொறித்த வெங்காயத்தால் அலங்கரிக்கவும். ஹோட்டல் மேட் சுவையான வெஜ் தம் பிரியாணி ரெடி!

வீர பிரம்மேந்திரர் சுவாமிகள்

 எதிர்காலத்தை முன்னமே எழுதி வைத்த வீர பிரம்மேந்திரர் சுவாமிகள்.

நாஸ்ட்ரடாமஸ் என்ற பெயர் ஆரூட உலகில் புகழ்பெற்ற ஒன்று. தான் வாழ்ந்த காலத்திலேயே, எதிர் காலத்தில் உலகில் என்னென்ன சம்பவங்கள் எந்தெந்த ஆண்டுகளில் நடக்குமென்று ஆரூடம் கணித்து எழுதி வைத்துவிட்டுப் போனார் அவர்.

அவர் எழுதி வைத்த சம்பவங்கள் பலவும், அப்படியே அவர் சொன்ன விதமே நடப்பதைப் பார்த்து இன்று உலகம் திகைக்கிறது. அவரது புத்தகங்களில் அடுத்தடுத்து என்னென்ன எழுதப்பட்டுள்ளன என்பதை அறிய ஒரு தனி ஆராய்ச்சியே நடக்கிறது.

உலகம் போற்றும் பாரத சித்தர் உலகிலும் ஒரு நாஸ்ட்ரடாமஸ் உண்டு.

ஆந்திர நாட்டைச் சேர்ந்த வீர பிரம்மேந்திரர் என்ற சித்த புருஷர் கி.பி. 1604-ல் பிறந்தவர். மண வாழ்வு மேற்கொண்டு மனைவியுடனும் குழந்தைகளுடனும் வாழ்ந்தவர். “காலக் ஞானம்’ என்ற அரிய நூலை எழுதியவர். அந்த நூலிலில் எதிர்காலத்தில் உலகில் என்னென்னவெல்லாம் நடக்குமென்று தெளிவாக எழுதப் பட்டுள்ளது தான் ஆச்சரியம்.

விஸ்வகர்மா பொற்கொல்லர் மரபில் வந்த பரிபூரண ஆசாரி, பிரகதாம்பாள் என்ற தம்பதிகளுக்கு மகனாய்ப் பிறந்தார் வீர பிரம்மேந்திரர். அவர் பிறந்த அன்றே அவர் தந்தை இறந்து விட்டார். அதனால் மிகுந்த கலக்கமெய்தினாள் பிரகதாம்பாள். ஒரு முனிவரிடம் குழந்தையை ஒப்படைத்த அவள், தான் வாழ விரும்பாமல் தன் உயிரை மாய்த்துக் கொண்டாள்.

முனிவர் அந்த அழகிய குழந்தையைக் கனிவோடு பார்த்தார். எவ்விதம் அந்த தெய்வீகக் குழந்தையை வளர்ப்பது என சிந்தனையில் ஆழ்ந்தார். இறைவன் கட்டளையே போல, அவரைத் தேடி வந்தார்கள் இருவர். வீர போஜர், வீர பாப்பம்மா என்ற அவ்விருவரும் அந்தக் குழந்தையைத் தாங்கள் வளர்ப்பதாக உறுதி கூறி வாங்கிச் சென்றார்கள்.

வீரபிரம்மத்தைப் பதினான்கு வருடம் மிகப் பாசத்துடன் வளர்த்தார்கள் அவர்கள். அப்போது தான் அந்த சங்கடமான சம்பவம் நிகழ்ந்தது. வீரபிரம்மத்தின் வளர்ப்புத் தந்தை காலமாகி விட்டார்.

பிறந்த போதே தந்தையையும் பின் தாயையும் இழந்தது, இப்போது வளர்ப்புத் தந்தையையும் இழந்தது வீரபிரம்மேந்திரரை சிந்தனையில் ஆழ்த்தின. தத்துவ ஞானத்தில் தோய்ந்தது அவர் மனம். தம் வளர்ப்புத் தாயிடம், தமக்கு வற்றாத ஆன்மிகத் தேடல் இருப்பதால் அந்த வழியில் வாழ்க்கை நடத்தப் போவதாகக் கூறி, பிரியாவிடை பெற்று வீட்டை விட்டு வெளியேறினார்.

கால்போன போக்கில் நடந்தார். எங்கெல்லாம் கோவில்கள் இருக்கின்றனவோ அங்கெல்லாம் அமைதியாக நெடுநேரம் தியானம் செய்தார். இந்த வாழ்வின் பொருள் என்ன என்றறியும் தீராத ஆவல் அவருக்கிருந்தது. அவர் போகாத கோவில் இல்லை.

ஒரு நாள் இரவு… நடந்து நடந்து கால்கள் வலிலித்தன. வீரபிரம்மேந்திரர் பனகானபள்ளி என்ற அழகிய சிறு கிராமத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கே அச்சம்மா என்பவளின் வீட்டுத் திண்ணை காலியாக இருந்தது. அதில் படுத்து ஆனந்தமாக உறங்கினார்.

காலை கதவைத் திறந்து வெளியே வந்து திண்ணையைப் பார்த்தாள் அச்சம்மா. யாரோ ஒரு பையன் உறங்குகிறானே? உறங்கும் போதும் அவன் முகத்தில் தென்பட்ட ஒளி அச்சம்மாவை வசீகரித்தது. அந்தப் பையன் மேல் அவளுக்குத் தாயன்பு பெருகியது.

அவன் எழுந்ததும் “யாரப்பா நீ’ என்று விசாரித்தாள் அவள். அவன் தான் ஓர் அநாதை என்றும், ஊர் ஊராகச் சுற்றி வருவதாகவும் தெரிவித்தான். “எனக்கு நான் வளர்க்கும் மாடுகளை மேய்க்க ஒருவன் தேவை. கண்ட இடங்களில் சுற்றுவானேன்?

இனி இங்கேயே இரு!’ என்று கண்டிப்பு கலந்த பிரியத்தோடு சொல்லி அவனுக்கு உணவளித்தாள் அச்சம்மா. இப்படியாக வீரபிரம்மேந்திரர் அச்சம்மாவின் மாடுகளை மேய்க்கும் தொழிலிலில் ஈடுபடுத்தப்பட்டார்.

வீரபிரம்மேந்திரர் மாடுகளைச் சுற்றி ஒரு மிகப்பெரிய வட்டக் கோடு வரைந்து விடுவார். மாடுகள் அந்தக் கோட்டுக்குள்ளிருந்து புல் மேய்ந்து கொண்டிருக்கும். அதைக் கடந்து செல்லாது. மாடுகள் அவரைப் பெரிதும் நேசித்தன. மாடுகள் புல்மேயும் தருணத்தில் வீரபிரம்மேந்திரர் காலக் ஞானம் என்ற எதிர்காலத்தைப் பற்றிச் சொல்லும் நூலை எழுதலானார். பனையோலையில் முட்களால் எழுதப்பட்டதே அந்த நூல். ஒவ்வொரு நாளும் சிறிது சிறிதாக அந்த நூலை எழுதி வந்தார் அவர்.

இப்படியாகக் காலம் போய்க் கொண்டிருந்த போது, ஒருநாள் மாடுகளை அடித்துச் சாப்பிடும் எண்ணத்தில் காட்டிலிலிருந்து ஒரு புலி அங்கு வந்தது. ஆனால் வீரபிரம்மம் கிழித்த கோட்டினுள்ளே செல்ல இயலாமல் புலி தத்தளித்துத் திரும்பிச் சென்றது.

இதைப் பார்த்தார்கள் சில இடையர்கள். அவர்கள் அச்சம்மாவிடம் சென்று இந்தத் தகவலைச் சொன்னார்கள். அச்சம்மா வியப்படைந்தாள். ஏற்கெனவே வீரபிரம்மேந்திரரின் முகத்தில் தென்பட்ட தெய்வீக ஒளி அவளை ஆச்சரியத்தில் ஆழ்த்திக் கொண்டிருந்தது. தவிர அவர் ஏதோ தொடர்ந்து எழுதி வருவதையும் அவள் அறிவாள்.

அன்று வீரபிரம்மேந்திரர் வீடு திரும்பியதும், அச்சம்மா அவரிடம் தன்னை மன்னிக்குமாறு வேண்டினாள். அவர் பெரிய மகான் என்பதைத் தாம் இப்போதுதான் அறிந்ததாகவும், அவரை மாடு மேய்க்கும் தொழிலிலில் ஈடுபடுத்தியது பெரும் தவறு என்றும் அவள் உகுத்தாள்.

“ஏதோ ஒரு தொழில் செய்து எல்லாரும் வாழவேண்டியதுதான். கண்ணனே மாடு மேய்த்தவன் தான். அது ஒன்றும் இழிவான தொழில் அல்ல!’ என்று கூறி அவளை சமாதானப் படுத்தினார் வீரபிரம்மேந்திரர்.

அச்சம்மா அவர் எழுதி வரும் நூல் என்னவென்று விசாரித்தாள். எதிர்காலத்தில் நடக்கப்போவதைத் தான் கணித்து எழுதி வருவதாக அவர் தெரிவித்தார். “எதிர்காலத்தில் என்னென்ன நடக்குமென்று எனக்கு ஓரளவாவது சொல்ல இயலுமா’ என்று அச்சம்மா கேட்டாள். வீரபிரம்மம் நகைத்துக்கொண்டே சில விஷயங்களைச் சொன்னார். 

அவற்றில் சில:

“புண்ணிய நதிகள் வற்றிவிடும். கடல் பொங்கி நகருக்குள் நுழையும். அதனால் அதிகம் பேர் உயிரிழப்பார்கள். கணவனை மட்டுமே மணந்து வாழும் பத்தினிப் பெண்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கும். ஆண்கள்- பெண்கள் இரு தரப்பாரிடமும் ஒழுக்கம் கெடும்.

இந்தியா இரண்டாகவும் பின்னர் மூன்றாகவும் பிரியும். இந்தியாவில் ஜனத்தொகைப் பெருக்கம் அதிகமாவதால் குழந்தை பிறப்பதை செயற்கை முறையில் தடுக்கப் பார்ப்பார்கள். பெரியோருக்கு அடங்கி சிறியோர் நடந்ததுபோக, சிறியோருக்கு அடங்கி பெரியோர் நடக்க நேரிடும். புண்ணியத் தலங்களில் வாழ்பவர்கள் ஆண்டவனுக்கு அஞ்சி வாழாமல், ஆண்டவன் பெயரால் மோசடி செய்து வஞ்சித்து வாழ்வார்கள்.’

இதையெல்லாம் கேட்ட அச்சம்மா மிகுந்த வியப்படைந்தாள். அவரையே தன் குருவாக ஏற்றாள் அச்சம்மா. தனக்கு உபதேசம் வழங்குமாறு வேண்டினாள்.

வீரபிரம்மேந்திரர் அவளுக்குச் சிவ மந்திரத்தை உபதேசித்து, அதை ஓயாமல் ஜெபித்து வருமாறு பணித்தார். பொருள் மேல் உள்ள ஆசையை விட்டு விட்டு ஆன்மிகப் பணிகளில் நாட்டம் கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

அச்சம்மாவின் மனம் வீரபிரம்மேந்திரரின் உபதேசங்களால் ஞானம் அடைந்தது. மெல்ல மெல்லப் பற்றுகள் அவளை விட்டு விலகத் தொடங்கின. இல்லறத்தைத் துறந்து துறவியானாள் அவள். தன் சொத்தையெல்லாம் செலவிட்டு ஏகாந்த மடம் என்றொரு மடம் நிறுவினாள். அதில் வாழ்ந்தபடி வீரபிரம்மேந்திரரின் கொள்கைகளை மக்களிடையே பரப்பிவரலானாள்.

அச்சம்மாவின் வாழ்க்கை இனி அவ்விதமே தொடரும் என அறிவித்த வீரபிரம்மேந்திரர், அவளிடம் விடை பெற்று மீண்டும் பல்வேறு தலங்களுக்கு யாத்திரை செல்லலானார்.

போலேரம்மா என்ற புகழ் பெற்ற அம்மன் கோவில் ஆந்திரத்தில் உண்டு. அந்தக் கோவிலுக்குச் சென்றார் அவர். அங்கு சிலர் போலேரம்மா தொடர்பான புனித யாத்திரைக்கு அவரிடம் நன்கொடை கேட்டனர். நன்கொடை தருவது கட்டாயமென்று அவரை அச்சுறுத்தினர். இந்த மிரட்டலுக்கெல்லாம் அஞ்சுபவரா பிரம்மேந்திரர்? அவர் நகைத்துக் கொண்டார். “இப்போது என்னிடம் பணம் எதுவுமில்லையே, பிறகு கிடைத்தால் தருகிறேன்’ என்றார்.

பின் தன் சுருட்டுக்கு நெருப்புக் கேட்டார் அவர்களிடம். அவர்கள் நன்கொடை தராத அவருக்கு நெருப்புத் தர மறுத்தனர். அவர் போலேரம்மா கோவிலுக்கு வெளியே வந்துநின்றார். உள்ளே சந்நிதியை உற்றுப் பார்த்தார். “போலேரம்மா, என் சுருட்டுக்குக் கொஞ்சம் நெருப்பு கொடு’ என்று கேட்டார். மறு நிமிடம் போலேரம்மா சந்நிதியிலிருந்து ஒரு தணல் காற்று வெளியில் புறப்பட்டு வந்தது! அவரது சுருட்டைக் கொளுத்தியது! “சரி சரி நெருப்பு போதும்’ என்று அவர் சொன்னதும் மீண்டும் கருவறைக்கே சென்று மறைந்தது அந்தத் தணல்!

இந்த அதிசயத்தைப் பார்த்தவர்கள் வியப்பின் உச்சிக்கே சென்றார்கள். அவரது காலில் விழுந்து மன்னிப்பு வேண்டினார்கள்.

அவர்கள் அனைவருமே அவரின் அடிய வர்களானார்கள். இப்படி மெல்ல மெல்ல வீரபிரம்மேந்திரரின் அடியவர் எண்ணிக்கை நாள் தோறும் பெருகத் தொடங்கியது.

காலப்போக்கில் அவர் தமது பொற்கொல்லர் மரபில் தோன்றிய கோவிந்தம்மா என்ற பெண்ணை மணந்தார். இல்லறம், துறவறம் இரண்டும் சம மதிப்புடையவை தான் என்று அவர் அடிக்கடிச் சொல்வது வழக்கம். தம் இல்லற வாழ்வில் ஐந்து மகன்களையும் ஒரு மகளையும் பெற்றார். தம் குடும்ப உறுப்பினர் அனைவரையும் ஆன்மிகவாதிகளாக மாற்றினார். அனைவருடனும் இணைந்து ஆன்மிகப் பணியாற்றி வந்தார்.

தாம் ஜீவசமாதி அடைய எண்ணி குடும்பத்தாரிடம் அறிவித்தார் வீரபிரம்மேந்திரர். குடும்பத்தார் கண்கலங்கினர். “யாக்கை நிலையற்றது; இதன் மேல் பற்று வைக்காதீர்கள்’ என்று போதித்தார். பின் சமாதிக்குழியில் இறங்கி நிஷ்டையில் அமர்ந்தார். “எனக்கு இறப்பில்லை என்பதால், என் மனைவி தன் சுமங்கலிக் கோலத்தை மாற்றத் தேவையில்லை’ என்று அறிவித்தார். சமாதியின் மேலே பலகை போட்டு சமாதி மூடப்பட்டது.

பத்து மாதங்கள் சுழன்றோடின. “இன்னுமா அவர் உயிரோடிருப்பார்? அவர் மனைவிக்கேன் சுமங்கலிக் கோலம்?’ என்று சிலர் விமர்சித்தனர். இத்தகைய விமர்சனங்கள் அந்தக் காலத்தில் எழுவது சகஜம்தானே?

மூத்த பிள்ளை மனம் நொந்து தாயிடம் விளக்கம் கேட்டார். “மக்களுக்கு அறிவில்லை. அவர்களின் அழிவுக்காலம் நெருங்கி விட்டதால் இப்படியெல்லாம் பேசுகிறார்கள். என் கணவர் எனக்கிட்ட கட்டளைப்படியே நான் சுமங்கலிக் கோலத்தில் இருந்து வருகிறேன்’ என்றார் தாயார்.

மூத்த பிள்ளை மனம் நொந்து தாயிடம் விளக்கம் கேட்டார். “மக்களுக்கு அறிவில்லை. அவர்களின் அழிவுக்காலம் நெருங்கிவிட்டதால் இப்படியெல்லாம் பேசுகிறார்கள். என் கணவர் எனக்கிட்ட கட்டளைப்படியே நான் சுமங்கலிலிக் கோலத்தில் இருந்து வருகிறேன்’ என்றார் தாயார்.

மகனுக்குச் சமாதானம் ஏற்படவில்லை.அவன் ஒரு கடப்பாரையை எடுத்துவந்து சமாதியை இடித்துத் திறந்து பார்த்தான். என்ன ஆச்சரியம்! 

அங்கே சலனமே இல்லாமல் யோக நிஷ்டையில் கம்பீரமாக வீற்றிருந்தார் வீரபிரம்மேந்திரர். 

சமாதியை இடித்த மூத்த மகனின் கைகள் நடுக்கத்தில் வெல வெலத்தன.அவனை கண் திறந்து பார்த்த வீரபிரம்மேந்திரர், சமாதியைத் திறந்த தோஷம் விலகப் பரிகாரம் செய்யச் சொல்லிலி, மீண்டும் சமாதியை மூடச் சொன்னார்.

இந்த அதிசயத்தைப் பார்த்த ஊர்க்காரர்கள் வீர பிரம்மேந்திரரின் மனைவியிடம் மன்னிப்புக் கேட்டனர். மனைவியையும் பக்தியோடு கும்பிடத் தொடங்கினார்கள்.

ஆந்திராவில் கடப்பை ரயில் நிலையத்திலிருந்து அறுபது கிலோமீட்டர் தொலைவில், கந்தி மல்லையபள்ளி என்ற இடத்தில் இருக்கிறது சித்த புருஷரான வீரபிரம்மேந்திரரின் ஜீவசமாதி. இன்றும் தன்னை நாடி வரும் அடியவர்களுக்கு அவர் சூட்சும உருவில் அருள் புரிந்து வருகிறார். நாள்தோறும் அந்த இடத்திற்குச் செல்வோர் எண்ணிக்கை பெருகி வருகிறது.

Sunday, April 16, 2023

Instant puliyodharai/Instant saambar.

Instant puliyodharai

.ingredients. tamarind, chilly powder,dhania powder,turmeric powder,methi powder,perungayam,gingelly oil and gram dal.cook one cup of raw rice..

Put the cooked rice in a widened vessel.add two 3 teaspoons tamarind pulp,one teaspoon dhania powder, three fourth spoon chillypowder,little turmeric and methi powder and பெருங்காயம் half spoon and salt.keep it aside.pour 5 டேபிள்ஸ்பூன oil,mustard seeds,peanuts ,soaked gram dal,curry leaves season it.put the rice kept in the vessel in the kadai mix nicely till every ingredient is mixed properly. Add coriander leaves for taste.Similar recipe can be used for puli aval also.provided aval is soaked before preparing.

≠=======≠=========================

Instant saambar. 

தனியா 1கப், கடலைப்பருப்பு,மிளகாய் வத்தல் ,புளி , உப்பு, பெருங்காயம், துவரம் பருப்பு, கறிவேப்பிலை,பச்சை கொத்தமல்லி,காய் , தக்காளி

பருப்புக்கள், தனியா, மிளகாய் வத்தல்,புளி சிவக்க வறுத்துக்கவும் ‌மிக்ஸியில் பெறும் ரவை மாதிரி பொடிக்கவும், சட்டியில் வறுத்த பொடி 3பங்குதண்ணீர் கலந்து உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைத்து பெருங்காயம், கறிவேப்பிலை, பச்சை கொத்தமல்லி சேர்த்து இறக்கவும் சாம்பார்க்கு காய் விருப்பம் போல்.


புதினா சட்னி

 புதினா சட்னி பிரியரா நீங்கள்..? குடல் நலனுக்கு மிகவும் நல்லது.. ரெசிபி இதோ..!

புதினா சட்னி

இந்தியர்களின் சமையலில் சட்னி வகைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. கொஞ்சம் கெட்டியாக அரைத்து விட்டால் துவையல். அதுவே கொஞ்சம் தண்ணீர் விட்டு கரைத்தால் சட்னி. இரண்டுக்கும் பெரிய அளவுக்கு வேறுபாடு கிடையாது. அதே சமயம், பழங்காலத்தில் நம் முன்னோர்கள் சாப்பிட்ட சிறு தானிய உணவுகள் தொடங்கி, தற்போது நாம் சாப்பிடும் இட்லி, தோசை, அரிசி சாப்பாடு வரையில் எல்லாவற்றிலும் தொட்டுக் கொள்ள துணையிருப்பது இந்த சட்னி, துவையல் வகைதான்.

சட்னியில் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி என்று பல வகை உண்டு என்றாலும் தனித்த மனமும், சுவையும் கொண்ட புதினா சட்னி எல்லோருக்கும் பிடித்தமானது. புதினா இலையை வெறுமனே கையில் எடுத்தாலே அதன் வாசம் நம் மூக்கு வரையிலும் ஏறும். அத்தகைய புதினாவை தற்போதைய கோடை காலத்தில் நம் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் அதன் மூலம் கிடைக்கின்ற பலன்கள் ஏராளம்.

நம் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும் பண்பு புதினாவில் உள்ளது. இது மட்டுமல்லாமல் செரிமானத் திறனை மேம்படுத்தும் மற்றும் அசிடிட்டியை குறைத்து குடல் நலனை மேம்படுத்தும்.

புதினாவில் கிடைக்கும் சத்துக்கள்:

நார்ச்சத்து, விட்டமின் சி மற்றும் ஆண்டிஆக்ஸிடண்ட்ஸ் போன்ற சத்துக்கள் புதினாவில் மிகுதியாக உள்ளன. இயற்கையாகவே ஆண்டி செப்டிக் மற்றும் ஆண்டி பாக்டீரியா பண்புகளை கொண்டது. இதனால் நம் குடலில் நன்மை பயக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை புதினா ஊக்குவிக்கும். இது மட்டுமல்லாமல் புதினா சட்னியில் நாம் சேர்த்துக் கொள்ளும் பிற மசாலா பொருட்கள் மற்றும் மூலிகைகள் அனைத்துமே செரிமானத்தை மேம்படுத்தி, மெடபாலிச நடவடிக்கைகளை ஊக்குவிக்கும்.

புதினா பச்சை சட்னி:

ஒரு கையளவு புதினா இலைகளை அலசி, தண்ணீரை வடித்துக் கொள்ளவும். இந்த புதினாவுடன், 3 பூண்டு பல், ஒரு சிட்டிகை அளவு இஞ்சி மற்றும் இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும். பின்னர் சாட் மசாலா, மிளகுத்தூள், உப்பு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து மீண்டும் அரைக்கவும். கெட்டியான பதத்தில் உள்ள இந்த பச்சையான சட்னியை பூரி, கிரில் வகைகள் போன்றவற்றுக்கு சைட் டிஷ்ஷாக பயன்படுத்தலாம்.

புதினா கெட்டி துவையல்:

உளுந்தம் பருப்பு இரண்டு டீ ஸ்பூன் அளவு, எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு, பூண்டு பல் - 4, மிளகாய் வத்தல் - 4, தக்காளி நறுக்கியது ஒரு கப் அளவு, பெரிய வெங்காயம் நறுக்கியது கால் கப் அளவு, சின்ன வெங்காயம் நறுக்கியது அரை கப் அளவு, உப்பு தேவையான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு கைப்பிடி அளவு புதினா இலையை அலசி வைத்துக் கொள்ளவும்.

முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடான பிறகு உளுந்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை போட்டு பொறிக்கவும். பின்னர் மிளகாய் வத்தல் சேர்த்து, நன்றாக சிவக்கும் வரை பொறிக்கவும்.

இப்போது பூண்டு பல் சேர்த்து வதக்கவும். பின்னர் பெரிய வெங்காயம் சேர்த்து செந்நிறமாக மாறும் வரை வதக்கவும்.

பிறகு சின்ன வெங்காயம் சேர்த்து அரை வேக்காடு வரை வதக்கிய நிலையில், தக்காளி மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.

இறுதியாக புதினா சேர்த்து பச்சை வாசம் போகும் வரையில் வதக்கிய பின் இறக்கி விடவும்.

இந்த மசாலா கலவை ஆறிய பிறகு, மிக்ஸியில் கெட்டியாக அரைத்து எடுத்தால் சுவையான, மனம் மிகுந்த புதினா துவையல் தயார் ஆகியிருக்கும்.

கொண்டைக்கடலை தோசை

 நார்ச்சத்து நிறைந்த கொண்டைக்கடலை தோசை.

இதில் கரையும் நார்ச்சத்துக்கள், அதிகப்படியான புரோட்டீன், இரும்புச்சத்து இருக்கிறது.

கருப்பு கொண்டக்கடலையில் வெள்ளை கொண்டக்கடலையை விட அதிகளவு சத்துக்கள் உள்ளன

தேவையான பொருட்கள்

கொண்டக்கடலை - 250 மி.லி
பச்சரிசி - 1/2 கப்
வெந்தயம் - 1 தேக்கரண்டி
இஞ்சி - 1 துண்டு நறுக்கியது
பச்சை மிளகாய் - 2 நறுக்கியது
உப்பு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 /2 தேக்கரண்டி
நெய் - தேவையான அளவு

செய்முறை:

* கொண்டைக்கடலையில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 8 மணிநேரம் ஊறவிடவும்.

* மற்றொரு பாத்திரத்தில் பச்சரிசி மற்றும் வெந்தயம் சேர்த்து தண்ணீர் ஊற்றி 8 மணிநேரம் ஊறவிடவும்.

* மிக்ஸி ஜாரில் ஊறவைத்த கொண்டைக் கடலை, பச்சரிசி+வெந்தயம், நறுக்கிய இஞ்சி, மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்து உப்பு சேர்த்து கரைத்து 12 மணிநேரம் புளிக்கவிடவும்.

* பின்பு சீரகம் சேர்த்து கலந்துவிடவும்.

* தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடு செய்து மாவை சிறிதளவு எடுத்து தோசையாக ஊற்றி சுற்றிலும் நெய் ஊற்றி பின்பு திருப்பி விட்டு வேகவிடவும்.

* சுவையான கொண்டைக்கடலை தோசை தயார்

வெந்தயக்கீரை புலாவ்.

 சத்துக்கள் நிறைந்த வெந்தயக்கீரை புலாவ்.

தினமும் ஒரு கீரையை சாப்பிடுவது உடலுக்கு நல்லது.

வெந்தயக்கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.

தேவையான பொருட்கள் :

பாசுமதி அரிசி - ஒரு கப்,
வெந்தயக்கீரை- ஒரு கப்,
வெங்காயம் - 1 பெரியது,
உருளைக்கிழங்கு - 2,
பச்சை மிளகாய் - 3,
பிரிஞ்சி இலை - 1,
இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,
நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.

உருளைக்கிழங்கை வேக வைத்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

வெந்தயக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அரிசியை ஒருமுறை கழுவி, 10 நிமிடம் ஊற வைத்து, நெய்யில் ஈரம் போக வறுத்துக் கொள்ளவும்.

குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் பிரிஞ்சி இலை போட்டு தாளித்த பின்னர் கீறிய பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

பிறகு, வெந்தயக்-கீரை போட்டு லேசாக வதக்கி, வேக வைத்து நறுக்கிய உருளைக்கிழங்கைச் சேர்த்து மேலும் வதக்கி, உப்பு சேர்க்கவும்.

அடுத்து அதில் அரிசியை சேர்த்துக் கலந்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு, ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.

இப்போது சூப்பரான வெந்தயக்கீரை புலாவ் ரெடி.