Sunday, November 6, 2022

மின் பாதுகாப்பு வழி முறைகள்

 வீட்டில் மின் பாதுகாப்பு வழி முறைகள் 

i)எர்த் லீக்கேஜ் சர்குட் பிரேக்கர் ஒவ்வொரு வீட்டிற்கும் அவசியம்; செலவு பாராமல் வைக்க வேண்டும்.

ii)வீட்டிலுள்ள வீனாய் போயுள்ள, பழைய சுவிச்சுகளை அவசியம் மாற்றிவிட வேண்டும்.தரமான சுவிச்களை வாங்கிப் பொருத்த வேண்டும்.

iii)தண்ணீர் ஏற்ற வைத்துள்ள மோட்டர் சுவிச் போர்ட்,வாஷிங் மிஷின்,ஃபிரிட்ஜ் கீழே ரப்பர் மேட் போட்டுக் கொள்வது பாதுகாப்பானது.

iv)எந்த சுவிட்சை இயக்கும் போதும் இடது கையை பின்புறத்தில் கட்டிக் கொண்டு, வலது கை சுட்டு விரலால் மட்டுமே இயக்க வேண்டும்,இதயம் இடது புறத்தில் உள்ளதால்.

v)பாத் ரூம் சுவிச் போர்டின் மேல் ஒரு பழைய டூத் பிரஷ் வைத்துக் கொண்டு,அதனால் சுவிட்சைப் போடுவதே பாதுகாப்பானது.

vi)மழைக் காலம் வாட்டர் ஹீட்டர் அடிக்கடி பயன்படுத்த வேண்டியிருப்பதால்,

 அதன் விஷயத்தில் மிகவும் சாக்கிரதையாக இருக்க வேண்டும். மும்பையில், ஒரு நடிகை ஹீட்டர் நீரில் குளிக்கும் போது, மின் ஷாக் அடித்து இறந்து போனது அறிந்திருப்போம்.

தண்ணீர் இல்லாததால்,ஹீட்டர் எலிமெண்ட் உருகி, மின்சாரம் பாய்ந்து,அந்த நடிகை  இறந்து  போயிருக்கிறார்.

ஹீட்டருக்கு கொடுக்க கூடிய இன்லெட், அவுட்லெட் ஏதும் மாறவே கூடாது. எதிலும் கண்ட்ரோல் வால்வ் வைத்துவிடக் கூடாது.

அவுட்லெட் ,ஹாட் வாட்டர் டேப் வழியாக தண்ணீர் வருவதை உறுதி செய்து கொண்ட பின்னரே, ஹீட்டர் சுவிட்சை ஆன் பண்ண வேண்டும்.

ELCB இம்மாதிரி சமயங்களில் நம்மைக் காப்பாற்றும்.

ஹீட்டர் சுவிச்சை டவல்/துடைக்கும் துண்டை வைத்து ஆஃப் செய்தால் ஈரக்கையோடு சுவிச்சை தொடுவதிலிருந்து தப்பித்து விடலாம்.

vii)பொதுவாக வாட்டர் ஹீட்டருக்கு சாதாரண சுவிட்ச் தான் வைத்திருப்பார்கள்.

அதற்குப்பதிலாக எம்சிபி வைத்தால்,ஹீட்டரில் ஏதாவது ஷார்ட் சர்குட் ஆகும் போது ட்ரிப் ஆகி நம்மை காக்கும்.

எப்போதும்,சுடு நீர் தயார் பண்ணிவிட்டு, MCB ஐ ட்ரிப் பண்ணிவிட்டு குளிக்கப்போவதே நல்லது.இதே போல,வெட் கிரைண்டருக்கும் எம்சிபி பொருத்திக்கொள்வதே நல்லது.

viii)ஈர மின் சாதனங்களான வாஷிங் மெஷின்,கிரைண்டர் போன்றவற்றைக் கையாளும் போது,சுவிச்சை ஆஃப் பண்ணாமல் ஈரத் துணிகளை எடுப்பதோ,மாவை அள்ளுவதோ கூடவே கூடாது.

பகிர்வு

No comments:

Post a Comment